Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வாலி said:

நாம் அந்தக்காலத்தில விளையாடாத விளையாட்டுக்களே இல்லை😂

எவடம் எவடம் புளியடி புளியடி

1,2,3 பம்பலப்பிட்டி

கோழியும் பிராந்தும்

பசுவும் புலியும்

உருளைக்கிழங்குப் பிரட்டல்

ஒரு குடம் தண்ணி வாத்து ஒரு பூ பூத்தது 

இதுகளோட டப்பாங் கொட்டை 😎

கீச்சு மாச்சு தம்பளம்…

நாங்களே பட்டம் கட்டி சோழக்காத்து நேரம் ஏற்றுவது….

அயல் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து கோவில் கட்டி விளையாடுவது. ஒரு நாள் சாமி தூக்குவோம் மறுநாள் அதே தகரத்தில் சவ ஊர்வலம் தூக்குவோம்🤣.

  • Replies 220
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கீச்சு மாச்சு தம்பளம்…

நாங்களே பட்டம் கட்டி சோழக்காத்து நேரம் ஏற்றுவது….

அயல் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து கோவில் கட்டி விளையாடுவது. ஒரு நாள் சாமி தூக்குவோம் மறுநாள் அதே தகரத்தில் சவ ஊர்வலம் தூக்குவோம்🤣.

கீச்சு மாச்சு தம்பளம், கீயா மாயா தம்பளம்… எல்லாம், பொம்பிளை பிள்ளையள் விளையாடுற விளையாட்டு எல்லோ… 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

கீச்சு மாச்சு தம்பளம், கீயா மாயா தம்பளம்… எல்லாம், பொம்பிளை பிள்ளையள் விளையாடுற விளையாட்டு எல்லோ… 😜

எனக்கு பிரைமறி ஸ்கூலில அநேக கேர்ள் பிரெண்டஸ் கண்டியளே🤣.

ஒரு பிள்ளை கொப்பியை எல்லாம் ஒழுங்கா bagஇல அடுக்கி தரும். அசம்பிளியில இடம் பிடிச்சு வைக்கும். இன்னொரு பிள்ளை சுவிஸ்சில் இருந்து திரும்பி வந்தது - விதவிதமான வாச ரேசர், பென்சில் எண்டு தரும்.

#அது ஒரு அழகிய நிலாக்காலம்

Posted
3 hours ago, goshan_che said:

ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு சைக்கிள் திருத்தும் கடையாவது இருந்தது.  காத்தடிப்பது, ஒட்டு போடுவது, சேர்விஸ் எல்லாம் செய்வார்கள். ஆனால் வாடகை சைக்கிள் கடை இருந்த நியாபகம் இல்லை. 

எண்பது, தொண்ணூறுகளில் யாழில் இருந்த @வாலி @நிழலி உங்களுக்கு நியாபகம் இருக்கா?

அப்படி வாடகை சைக்கிள் என்ற விடயம் பற்றிய எந்த நினைவும் இல்லை. சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம் என்பதை ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி செந்தில் நடித்த கட்சியில் மட்டுமே அந்த காலத்தில் பார்த்து இருந்தேன்.

என் வீட்டுக்கு முன்பாக சுண்டிக்குளி / பாண்டியன்தாழ்வு பகுதியில் பிரசித்தி பெற்றிருந்த ஒரு சைக்கிள் கடை இருந்தது. அதனை வைத்து இருந்தவர் முடிகள் அற்று மொட்டையாகவே இருப்பார். அங்கு சைக்கிளை வாடகைக்கு கொடுத்ததான ஞாபகம் இல்லை.

-------

ஏனோ தெரியவில்லை சின்ன வயசில் இருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு அப்பா அம்மா விளையாட்டுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, நிழலி said:

நன்றி.

எனக்கும் கவுண்டர் பகிடி மூலம்தான் இப்படி ஒரு விசயம் இருப்பதே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, goshan_che said:

நன்றி.

எனக்கும் கவுண்டர் பகிடி மூலம்தான் இப்படி ஒரு விசயம் இருப்பதே தெரியும்.

எங்கடை ஊரில் என்னுடைய பெரியப்பா வைத்திருந்தவர் அதுவும் 1991 வரைக்கும் அதற்குப்பிறகு அவர் புலம்பெயர்ந்து வந்தபின் யாரும் வைத்திருந்ததாக ஞாபகம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, வாதவூரான் said:

எங்கடை ஊரில் என்னுடைய பெரியப்பா வைத்திருந்தவர் அதுவும் 1991 வரைக்கும் அதற்குப்பிறகு அவர் புலம்பெயர்ந்து வந்தபின் யாரும் வைத்திருந்ததாக ஞாபகம் இல்லை

நன்றி. நான் நினைகிறேன் எண்பதுகளின் நடுவில் இருந்து இவை வழக்கொழிந்திருக்கும் என. 78 தாராளமயமாக்கலின் பின் வாழ்க்கை தரம் உயர்ந்தாக சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, நிழலி said:

ஏனோ தெரியவில்லை சின்ன வயசில் இருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு அப்பா அம்மா விளையாட்டுத்தான்.

அதென்ன... அப்பா, அம்மா... விளையாட்டு?
எங்களுக்கும், விபரமாக... சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, goshan_che said:

எனக்கு பிரைமறி ஸ்கூலில அநேக கேர்ள் பிரெண்டஸ் கண்டியளே🤣.

ஒரு பிள்ளை கொப்பியை எல்லாம் ஒழுங்கா bagஇல அடுக்கி தரும். அசம்பிளியில இடம் பிடிச்சு வைக்கும். இன்னொரு பிள்ளை சுவிஸ்சில் இருந்து திரும்பி வந்தது - விதவிதமான வாச ரேசர், பென்சில் எண்டு தரும்.

#அது ஒரு அழகிய நிலாக்காலம்

May be a meme of 3 people and text that says 'foneindia® கடுப்பேத்துறார் மை லார்ட் 口 plHelo Helo'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைஞ்ச பம்பரம்..

6-35.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-09-15-15-54-20-266-com-a 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பால்வாடி - மணிசட்டம்

213274.jpg

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 4 weeks later...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.