Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம்

A father and mother with their two daughters.

பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மீளவும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நிலைவரை சென்று, பின்னர் தடைமுகாமில் அடைக்கப்பட்டு வாழ்ந்துவந்த ஈழத் தமிழ் அகதிகளின் குடும்பத்திற்கு அவுஸ்த்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையினை வழங்கிட அவுஸ்த்திரேலிய அரசு இணங்கியிருப்பதாக ஆஸியின் பிரபல செய்திச் சேவையான ஏ பி ஸி   செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதன் தமிழாக்கம் கீழே,

"கிறிஸ்த்துமஸ் தீவுகளில் பல்லாண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் சுதந்திரமாக வாழும் அந்தஸ்த்தினைக் கொடுக்கும் அறிவிப்பினை ஆஸி அரசாங்கம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

இதுதொடர்பான முக்கிய விடயங்கள்,

ஆஸி குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் இதுதொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதோடு, அரசின் பல அமைச்சர்கள் இந்தத் தமிழ்க் குடும்பத்திற்கு சார்பான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இக்குடும்பத்தின் கடைசி மகள் இதுவரை மேற்கு அவுஸ்த்திரேலிய தலைநகரான பேர்த்தில் வைத்திய சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இக்குடும்பத்திற்கும் அரசிற்கும் இடையிலான நீண்ட, சிக்கலான வழக்கில் தலையிட்டு, அக்குடும்பத்திற்கான வதிவிட உரிமையினை வழங்கிட அமைச்சர் அலெக்ஸ் செயற்பட்டுவருவதாகத் தெரிகிறது.

Lawyer for Biloela family speaks to 7.30

அமைச்சர் எவ்வகையான முடிவினை எடுப்பார் என்று இதுவரை தெளிவில்லாத போதிலும்கூட, அரசின் மூத்த தலைவர்கள் மத்தியில் இக்குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் நிலையாக வாழவைக்கப்படவேண்டும் என்கிற கருத்து நிலவுவதை இந்தச் செய்திச் சேவை உறுதிப்படுத்துகிறது.

குடிவரவு அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் கடந்த சில வாரங்களாக நண்பர்கள், பலதரப்பட்ட அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகிய தரப்பிடமிருந்து Biloela's Tamil family lose high court bid to avoid deportation |  Australian immigration and asylum | The Guardianவந்திருக்கும் கடுமையான அழுத்தங்கள் மற்றும் வேண்டுகோளினையடுத்து அரசு இம்முடிவிற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

குறிப்பாக குடும்பத்தின் இரண்டாவது மகள் தர்ணிக்கா இரத்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவசர அவசரமாக தடைமுகாமிலிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் பலரது மனதையும் உறுத்தியிருந்த நிலையில், இக்குடும்பத்திற்கான மக்கள் ஆதரவு பல மட்டங்களிலிருந்து கிளம்பியிருந்தது.

Friends of Biloela Tamil asylum seekers question time it took for  authorities to evacuate sick Tharnicaa - ABC News
இளைய மகளின் வைத்திய செயன்முறையின்போது, தாயாரான பிரியாவுக்கும் தடைமுகாமிலிருந்து தற்காலிகமாக வெளியேறி, மகளுடன் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் இல்லை அரசியல்தான் மனித உரிமைகளைகூட தீர்மானிக்கிறது..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் தற்போது தங்கியிருக்கும் ஆஸி பிரதமர் இதுதொடர்பான முடிவுகள் அரசின் கொள்கைகள், மனிதாபிமான கோரிக்கைகள், இக்குடும்பத்தின் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படும் என்று கூறினார். 

"ஆனால், இக்க்டும்பத்திற்கான நிரந்தர வதிவிட உரிமையென்பது அரசின் கொள்கைகளுக்கு முரணானது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவரது அமைச்சரவையிலிருக்கும் இரு உறுப்பினர்களான ட்ரென்ட் ஸிம்மர்மான் மற்றும் கேடீ அலன் ஆகியோர் வெளிப்படையாக அரசின் முந்தைய நிலைப்பாட்டினைச் சாடியிருந்ததோடு, அக்குடும்பம் நிலையாக இங்கு தங்கவைக்கப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் தனது நிலைப்பாட்டினை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

Mother from detained Biloela Tamil family 'in distress' as she's returned  to Christmas Island

"நாங்கள் இப்பிரச்சினையினை நீண்ட காலமாக இழுபட அனுமதித்துவிட்டோம். உயிராபத்தான உடல்நிலைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இறப்பதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இதற்கான சரியான தீர்வினை மனிதாபிமான ரீதியில் நாம் வழங்கவேண்டும்" என்று கலாநிதி அலன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நான்கு பேரைக் கொண்ட இந்த தமிழ்க்  குடும்பம் 2018 வரை குயீன்ஸ்லாந்து பிலோஎலா பகுதியில் வாழ்ந்துவந்தது. பின்னர் குடிவரவு தடுப்பு முகாமிற்கும் அங்கிடுந்து கிறிஸ்த்துமஸ் தீவுகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தது. 

Sri Lanka still not safe for Tamils | Green Left

இலங்கைக்கு நாடுகடத்தும் முகமாக இக்குடும்பத்தை தாம் கட்டாயப்படுத்தியது காட்டுமிராண்டித்தனமானது என்று அரசின் உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கின்றனர். 

இக்குடும்பத்தின் பெற்றோரான நடேசனும் பிரியாவும் 2012 மற்றும் 2013 களில் படகுமூலம் அவுஸ்த்திரேலியாவுக்கு வந்திருந்தனர். அவர்களின் இரு குழந்தைகளும் அவுஸ்த்திரேலியாவிலேயே பிறந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கான வதிவிட அனுமதிக் கோரிக்கைகள் நீதிமன்றங்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டே வந்தன. 

இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் அரசில் இருக்கும் சில கடும்போக்காளர்கள், அரசின் கொள்களுக்கெதிராக, இக்குடும்பத்திற்கு விசேட கரிசணை வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்துவருவதோடு, 2012 இல் இவர்கள் நாட்டிற்குள் வந்ததனால் இவர்களை அகதிகள் என்று கருதமுடியாது என்றும் வாதாடி வருகின்றனர்.

https://www.abc.net.au/news/2021-06-14/biloela-tamil-family-asylum-seekers-settlement-decision/100214484

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களாக  கிறிஸ்மஸ்  தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இவர்கள்  இப்போது Perth  நகரில் வாழ அனுமதிக்கப் படுகிறார்கள். ( சமூக  தடுத்து வைத்தல் நிலைமையில்).

 அவர்களின் நிரந்தர வதிவிட உரிமை,  வேலை செய்யும் உரிமை என்பன இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டியதொன்று.
 எனக்கு தெரிந்த இன்னுமொரு குடும்பம் 6,7  வருடங்களாக வேலை செய்யும் உரிமை இன்றி மெல்பேர்ன் புற  நகர் பகுதியொன்றில் வாழ்ந்து வருகின்றனர்.

 ஏறத்தாழ 7 மில்லியன் டொலரை செலவழித்த பின்னர் ( பிரத்தியேக விமானத்தில் பாதுகாவலருடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு,  சிலமணித்தியால பறப்பின் பின் நடுவானில் வைத்து மீண்டு அவுசுக்கு திருப்பப்பட்ட சம்பவம் உட்பட)  வதிவிட உரிமையை அரசு இலகுவாக வழங்கப் போவதில்லை.

 இறையாண்மையுள்ள அரசு என்ற வகையில் அரசியல் ஆதாயத்திற்காக  பிள்ளைகளுக்கு அவர்கள் இங்கே பிறந்தவர்கள் என்ற அடிப்படியில் வதிவிட உரிமை விரைவில் கொடுப்பார்கள்.  ஆயினும் பெற்றோருக்கு வதிவிட உரிமை கொடுப்பது சந்தேகமே.
பிள்ளைகள் வயதுக்கு வரும் வரை பெற்றோரை பிள்ளைகளுடன் இருக்க அனுமதிப்பார்கள். அதன் பின் அவர்கள் வெளியேற வேண்டி வரும்.
 அந்த தருணத்தில் பிள்ளைகள் முடிவு செய்து கொள்ளலாம் , தாம் தொடர்ந்து இங்கேயே இருப்பதா, அல்லது இலங்கை செல்வதா என்று. பிள்ளைகள் பிறந்த நேரம் பெற்றோர் இலங்கைப் பிரஷை என்ற படியினால்  பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமை நிலைமை இருக்கிறது.

 அண்மையில்  நியூஸீலாந்திருந்து வந்து இங்கே பல தசாப்தங்களாக இருந்து வந்த பெண்மணி ஒருவர்  குற்றச்செயல்களில் ஈடுபட்டு  சிறை சென்று, அது முடிய, அவரை இங்கே இருக்க அனுமதிக்காமல் நாடு கடத்தி விட்டார்கள்- அவரின் வளர்ந்த பிள்ளைகள் பிரசா உரிமையுடன் இங்கே இருந்தும் கூட .

ஒட்டு மொத்தமாக மக்களின் 7 மில்லியன் வரிப் பணத்தில்  அரசியல் ஆதாயம் ஒன்று   சமைந்து  கொண்டிருக்கிறது,  ஒரு இளம் குடும்பத்தின் மனவுணர்ச்சிகளுடன் விளையாடிக் கொண்டு…….
 

Edited by சாமானியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அகதி குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை

 
1-50.jpg
 68 Views

தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பத்தினர் கூடிய விரைவில் விடுதலைச் செய்யப்பட இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த குடும்பத்தினர் ஒன்றாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். அங்கிருந்தவாறு தங்களுக்கு முறையான குடியுரிமை வழங்கக் கோரி அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்காட முடியும்.

பில்லோவீலா குடும்பம் என்று அழைக்கப்படும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது தாருணிகா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பெர்த் நகருக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடன் தாய் பிரியாவும் வர அனுமதிக்கப்பட்டிருந்தது.

தாருணிகாவின் உடல்நிலை பாதிப்படைந்ததால், பில்லோவீலா குடும்பத்தினரைப் பற்றிய கவலை பொதுவெளியில் மீண்டும் அதிகரித்தது.

தாருணிகாவின் தந்தை நடேஸ், மூத்த மகள் கோபிகா ஆகியோரும் பெர்த் நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார்.

இனி அவர்கள் பெர்த்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான “சமூக தடுப்பு முகாமில்” தங்க வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும் சுதந்திரமாக நடமாட அனுமதி உண்டு.

 

https://www.ilakku.org/?p=52414

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி

(நா.தனுஜா)

கிறிஸ்மஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்புநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத்தமிழ் அகதிகளான நடேசலிங்கம் குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதித்துள்ளது.

எனினும் அவர்கள் குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மாறாக மேற்குநகரான பேர்த்தில் சுமார் 2,485 மைல் தொலைவில் அமைந்துள்ள சமூகத்தடுப்புநிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

இலங்கைத் தமிழ் அகதிகளான நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் முறையே 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் புகலிடம்கோரி தனித்தனியாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தனர். அங்கு திருமணம் செய்துகொண்ட அவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள பிலோவீலா நகரில் குடியேறினர். அவர்களுக்கு கோபிகா, தருணிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

file-20210330-23-1an8dxp.jpg

இந்நிலையில் அந்தக் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லை எனத்தெரிவித்து, கடந்த 2018 ஆம் ஆண்டில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

எனினும் அவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக அந்நாட்டு உயர்நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டங்களையடுத்து, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்புநிலையத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

இதுகுறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகிவந்தபோதிலும், அண்மையில் அந்தக்குடும்பத்தைச் சேர்ந்த தருணிகா என்ற 3 வயதேயான சிறுமி (இரண்டாவது மகள்) கடந்த மேமாதம் 27 ஆம் திகதி கடும் காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், மயக்கம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான சுகவீனமடைந்தார். அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினரை விடுக்குமாறுகோரும் வலியுறுத்தல்களும் அவுஸ்திரேலிய அரசாங்க்ததின் மீதான அழுத்தங்களும் மீண்டும் வலுப்பெற்றன.

_118850561_tharnicaa.jpg

இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியில் அந்தக் குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூஸிலாந்தில் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி அறிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவித்து, பேர்த்திலுள்ள சமூகத்தடுப்புநிலையத்திற்கு அனுப்பிவைப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

அந்தக் குடும்பத்தின் பெயரைக் குறிப்பிடாமல், இதுபற்றிய அறிவிப்பை அவுஸ்திரேலியாவின் மீள்குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹவ்கே செய்திருக்கிறார். ஒருபுறம் தடுப்புக்காவலில் உள்ள சிறுவர்கள் தொடர்பான விடயங்களைக் கையாளும்போது, போதியளவான இரக்கத்துடன் செயற்படுவதற்கும் மறுபுறம் அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம் எல்லைப்பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இடையில் இயலுமானவரையில் சமநிலையைப் பேணமுற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 'கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பம் விடுவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒன்றிணையவுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும் அந்தக் குடும்பம் பிலோவீலாவிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்' என்று நடேசலிங்கத்தின் குடும்பம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை முன்நின்று நடத்திவந்த அஞ்செலா பிரெட்டெரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தடுப்பு நிலையத்தில் தடுத்துவைப்பதன் ஊடாக அந்தக் குடும்பத்தின் பாதுகாப்பையும் அமைதியான வாழ்வையும் உறுதிப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அஞ்செலா, '

No description available.

தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்காக மீண்டும் பிலோவீலாவில் பணிக்குச்செல்லவேண்டும் என்பதில் நடேசலிங்கம் முனைப்பாக இருக்கின்றார். அதேபோன்று பிரியாவும் அவரது பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிகாவை பாடசாலைக்குச் சேர்க்கவேண்டும் என்பதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றார். தருணிகா மீண்டும் அவர்களது வீட்டிற்குத் திரும்பியதும் பெரிய பிறந்தநாள் கொண்டாட்டமொன்றை ஒழுங்குசெய்வதாக நாங்கள் வாக்குறுதியளித்திருக்கிறோம். இந்தக் குழும்பத்தின் வீடு பிலோவீலா என்பதை அவுஸ்திரேலியா அறியும்' என்றும் அஞ்செலா கூறியிருக்கிறார்.

அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் அன்ரனி அல்பனிஸ்,

கடந்த 2019 ஆம் ஆண்டில் பிலோவீலாவிற்கு தான் விஜயம் செய்ததை நினைவுகூர்ந்திருக்கிறார். அங்குள்ள அனைவரும் நடேசலிங்கம் குடும்பத்தின்மீது கொண்டிருக்கும் அன்பு தொடர்பிலும் பகிர்ந்திருக்கும் அவர், அந்தக் குடும்பம் அவர்களது வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

நிம்மதியா வாழுங்கள் உறவே

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 03:32, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் 

நிம்மதியா வாழுங்கள் உறவே

அவர்களின் வழக்கு இன்னமும் முழுமையாக முடியவில்லை. இன்னமும் பல தடைகளை தாண்டவேண்டும்.. 

சிறுவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.. அது அரசாகட்டும் சாதரான மனிதர்கள் ஆகட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.