Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

548196629_1521362318848832_7821129162771

கணேசன்

spSnoedotr326034h1mt0m8g3r,13eu:64is011p5mm3i4h15ieh1318eb   ·

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி.

கணைய புற்று நோயால் 56-ஆவது வயதிலேயே இறந்தார். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்து

ஏழு பில்லியன் டாலர்.

இந்திய மதிப்பில் சுமார்

61,130 கோடி ரூபாய்.

இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் மரண தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள் தான் ஆச்சரியம் மிக்கவை.

ஆம், அவர் கூறினார்:

"வாழ்க்கை என்றால் பணம் சம்பாதிப்பது என்று தான்

நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதோ என்னிடம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. செல்வம் வெறும் எண்ணிக்கையாக மாறிவிட்டது.

இதோ இப்போது நோயால் அவதியுற்று படுக்கையில் இருந்தவாறு என் வாழ்க்கை குறித்து சிந்திக்கிறேன். உடனடியாக மரணத்தை எதிர்கொள்ளும்போது

எனது நற்பெயரும் செல்வமும் அர்த்தமற்றதாக மாறிவிட்டன.

உங்கள் வாகனத்தை ஓட்டவும், அன்றாடப் பணிகளை செய்யவும், தொழிலை நிர்வகிக்கவும் பணியாளர்களை நீங்கள் நியமிக்கலாம்.

ஆனால்

உங்கள் வலியையோ

உங்கள் நோயையோ சுமக்க எந்த விலை கொடுத்தும் யாரையும் உங்களால்

நியமிக்க இயலாது.

எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் வாழ்க்கையை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாது.

30 டாலர் கடிகாரம்.. 3000 டாலர் கடிகாரம்.. இரண்டும்

ஒரே நேரத்தையும்

ஒரே நிமிடத்தையுமே காட்டுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன்.

வசிக்கும் வீடு 300 சதுர அடியாகவோ 3000 சதுர அடியாகவோ இருந்தாலும், ஒருசில மீட்டருக்கு மேல்

காலை நீட்டி உங்களால்

தூங்க முடியாது.

விமானத்தில் முதல் வகுப்பிலோ பொருளாதார வகுப்பிலோ எப்படிப் பயணித்தாலும், விமானம் விபத்துக்கு உள்ளானால் உங்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரு நொடியில் சாம்பல்தான்.

எனவே

வாழ்க்கையில் ஓர் உயரிய இலக்கை நீங்கள் வைத்திருந்தால், மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால் அதுதான் உண்மையான நிம்மதி என்பதை புரிந்துகொள்வீர்கள்''.👍"

Voir la traduction

  • Replies 732
  • Views 58.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    ஒரு   வகை குருவிக் கூடடம்,   நீரருந்தும்போது  ஒரு  குருவி நீருக்குள் ஆழ்ந்து விட்ட்து  அதைக் கண்ட கழுகார்   அதைக் கரையில் கொண்டு வந்த்தும் குருவிபறந்தோடி     ஒருமரப்பொந்தினுள் அடைக்கலம் புகுந்தது .கழு

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, suvy said:

548196629_1521362318848832_7821129162771

கணேசன்

spSnoedotr326034h1mt0m8g3r,13eu:64is011p5mm3i4h15ieh1318eb   ·

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி.

கணைய புற்று நோயால் 56-ஆவது வயதிலேயே இறந்தார். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்து

ஏழு பில்லியன் டாலர்.

இந்திய மதிப்பில் சுமார்

61,130 கோடி ரூபாய்.

இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் மரண தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள் தான் ஆச்சரியம் மிக்கவை.

ஆம், அவர் கூறினார்:

"வாழ்க்கை என்றால் பணம் சம்பாதிப்பது என்று தான்

நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதோ என்னிடம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. செல்வம் வெறும் எண்ணிக்கையாக மாறிவிட்டது.

இதோ இப்போது நோயால் அவதியுற்று படுக்கையில் இருந்தவாறு என் வாழ்க்கை குறித்து சிந்திக்கிறேன். உடனடியாக மரணத்தை எதிர்கொள்ளும்போது

எனது நற்பெயரும் செல்வமும் அர்த்தமற்றதாக மாறிவிட்டன.

உங்கள் வாகனத்தை ஓட்டவும், அன்றாடப் பணிகளை செய்யவும், தொழிலை நிர்வகிக்கவும் பணியாளர்களை நீங்கள் நியமிக்கலாம்.

ஆனால்

உங்கள் வலியையோ

உங்கள் நோயையோ சுமக்க எந்த விலை கொடுத்தும் யாரையும் உங்களால்

நியமிக்க இயலாது.

எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் வாழ்க்கையை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாது.

30 டாலர் கடிகாரம்.. 3000 டாலர் கடிகாரம்.. இரண்டும்

ஒரே நேரத்தையும்

ஒரே நிமிடத்தையுமே காட்டுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன்.

வசிக்கும் வீடு 300 சதுர அடியாகவோ 3000 சதுர அடியாகவோ இருந்தாலும், ஒருசில மீட்டருக்கு மேல்

காலை நீட்டி உங்களால்

தூங்க முடியாது.

விமானத்தில் முதல் வகுப்பிலோ பொருளாதார வகுப்பிலோ எப்படிப் பயணித்தாலும், விமானம் விபத்துக்கு உள்ளானால் உங்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரு நொடியில் சாம்பல்தான்.

எனவே

வாழ்க்கையில் ஓர் உயரிய இலக்கை நீங்கள் வைத்திருந்தால், மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால் அதுதான் உண்மையான நிம்மதி என்பதை புரிந்துகொள்வீர்கள்''.👍"

Voir la traduction

இந்த பிந்திய ஞானோதய பதிவை அடிக்கடி பல பொது ஊடகங்களில் படித்துள்ளேன்.உலகிற்கு முன்னுதாரண செய்தியாக/தகவலாக இருந்தாலும் யாருமே மனம் மாறப்போவதுமில்லை.திருந்த போவதுமில்லை. தம்மிடம் இருப்பதை ஏழை எளிய மக்களுக்கு பகிரப்போவதுமில்லை. ஏன் ஞானோதயகாரரின் குடும்பமும் சாதாரண வாழ்க்கை வாழப்போவதுமில்லை.😀

இணைப்பிற்கு நன்றி சுவியர்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......!

எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, suvy said:

கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......!

எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂

சுவியர்! எனக்கு பில்லியனும் வேண்டாம்.மில்லியனும் வேண்டாம்.😂

ரஜனி காட்டுற மாதிரி ஒன்று இருந்தால் போதும். தத்துவங்கள் அருவியாய் கொட்டும்.😍

18603443-rajiniilaiyaraja.webp

  • கருத்துக்கள உறவுகள்
No image preview

3.5M views · 81K reactions | சமூக வலைத்தளங்களில் வைரலாக ப...

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் காணொளி ..

  • கருத்துக்கள உறவுகள்

548378733_1145833214090438_7063279058871

  • கருத்துக்கள உறவுகள்

549995619_1263730745780893_6123466046795

ஆபிரிக்க அன்ரீஸின் ஆதித்ய அடுப்புச் சமையல் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

548212629_2449490518779869_5950470457217

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2025 at 08:05, குமாரசாமி said:

இந்த பிந்திய ஞானோதய பதிவை அடிக்கடி பல பொது ஊடகங்களில் படித்துள்ளேன்.உலகிற்கு முன்னுதாரண செய்தியாக/தகவலாக இருந்தாலும் யாருமே மனம் மாறப்போவதுமில்லை.திருந்த போவதுமில்லை. தம்மிடம் இருப்பதை ஏழை எளிய மக்களுக்கு பகிரப்போவதுமில்லை. ஏன் ஞானோதயகாரரின் குடும்பமும் சாதாரண வாழ்க்கை வாழப்போவதுமில்லை.😀

இணைப்பிற்கு நன்றி சுவியர்.🙏

சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.

இது .....இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு . ......! 👍

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ் ·dprsotSone c2919ucu711i1iulm1u6ga1a6cg6790803mt52tt45h15cufa ·

1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,

இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.

எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

படித்ததில் பிடித்தது....

Voir la traduction.....!

555394655_1816246365689513_8608265503831

  • கருத்துக்கள உறவுகள்

555578754_1756707015042433_2071304852172

  • கருத்துக்கள உறவுகள்

557267565_122181235550459621_67371833831

  • கருத்துக்கள உறவுகள்

557706342_2615565868783672_5067216027375

  • கருத்துக்கள உறவுகள்

557588152_2592849524391157_4060737606025

  • கருத்துக்கள உறவுகள்

557734850_122141568362927259_25309304534

  • கருத்துக்கள உறவுகள்

Prashantha Kumar  ·

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

-நெகிழ்ந்த நடிகர் நாசர்!

“தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள்.

எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தேன்.

திடீரென்று என் அருகில் வந்த சிவாஜி சார் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் “பாய் அப்பனை திட்டுற பாக்கியம் எந்தப் பிள்ளைக்கு கிடைக்கும்? யோசிச்சிட்டு நிக்காதய்யா…. என்னைத் திட்டய்யா….” என்று எனக்கு தைரியமூட்டி நடிக்க வைத்தார்.

அதன்பிறகு தேவர்மகன் ப்ரீவியூ காட்சிக்கு என்னை அழைத்தனர். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.

அன்று இரவு எனது அறையில் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பிரபு.

“அப்பா பேசணும்னு சொன்னார்” என்று சொல்ல எனக்கு படபடப்பானது.

அடுத்த நொடி சிம்மக்குரல் கர்ஜித்தது “பாய் இப்பதான்யா ‘தேவர்மகன்’ படத்தைப் பார்த்தேன்… சும்மா சொல்லக் கூடாதய்யா… படத்துல மாயத்தேவனாகவே வாழ்ந்துருக்கேயா…” என்று மனம் திறந்து பாராட்டினார்.

எனக்கு பேசவே முடியாமல் குரல் கட்டிக்கொண்டது...

இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?”

– 07.11.2018 ஆனந்த விகடன் இதழ்

முகநூலில் பதிவு: பிரசாந்த்!

Voir la traduction

557630014_3512103002266111_7260765126060

  • கருத்துக்கள உறவுகள்

Murugesan N  ·

ஒருகாலத்தில் நாம் கிராமத்தில் இப்படி குளித்து விட்டு ஈரத்துணியோட வீட்டிற்கே நடந்து வருவோம் ஆனால் அப்போ யாரும் தப்பா பார்த்ததோ இல்லை பெண்களை பாலியல் வன்முறை படுத்தவோ இல்லை

பொதுவான இடங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூட குளிப்பார்கள் வீதியில் அழகான பெண் போனால் கூட கிராமத்தில் பசங்க அதை ரசித்து பார்ப்பார்கள் தன்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் என்று பெருமை பட்டு உம்மையாகவே நேசிப்பார்கள்

ஆனால் இந்த காலத்தில் பாத்ரூம் என்று தனியறையில் மறைவாக குளித்தாலும் கூட வெளியில் சென்று வீட்டிற்கு வரும் வரை பெண்கள் எவ்வளோவோ இன்னல்கள் சந்திக்கிண்டார்கள்

காரணம் விஞ்சான முன்னேற்றம் கம்ப்யூட்டர் யுகம் மனத்தில் துய்மையான எண்ணங்களை அழித்து விட்டு தீய எண்ணங்கள் மனதில் பதிந்து விட்டன இன்றைய தலைமுறை யுகம்.......!

Voir la traduction

559359257_3641588959308049_2710544091947

  • கருத்துக்கள உறவுகள்

561792202_2800808963458057_7016889249240

வானவில் மாலையிட நயினை நாகபூசணி அம்மன் கோவிலின் அழகிய தோற்றம் ........! 🙏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

571102394_3742218842752095_6156303293552

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

571102394_3742218842752095_6156303293552

இந்தக் கால சிறுசுகள் வலு சீமாட்.

  • கருத்துக்கள உறவுகள்

571293086_122268861704228189_75521369809

  • கருத்துக்கள உறவுகள்

572804879_802766862583999_29042151317101

  • கருத்துக்கள உறவுகள்

571270988_807009702094698_32111181335060

ரகசியப்பொலிஸ் .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

577029041_122197305782307698_18728821263

நாம் வாழும் உலகில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே கிடையாது .........! 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.