Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

AdminJune 15, 2021

பிரான்சில் ஜுன் 20ம் திகதி முதற்சுற்றும் 27ம் திகதி இரண்டாம் சுற்றுமாக மாவட்ட, மாகாணத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் தமிழீழத்தின் பிள்ளைகள் அடுத்தகட்ட அரசியற் பாய்ச்சலிற்குத் தயாராகி உள்ளனர்.

News-1.jpg?resize=319%2C201

நகரசபைகளிற்கான ஆலோசனை உறுப்பினர்களில் இருந்து மாவட்ட ரீதியில், பல நகரங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபை உறுப்பினர்களாகவும், கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் களமிறங்கி உள்ளனர்.

முக்கியமாக வல்-துவாசிலும் செய்ன் சன்-துனியிலும் தமிழீழத்தின் இளவல்கள் களமிறங்கி உள்ளனர்.

election-dep-et-reg-2021.jpg?resize=640%

இல்-து-பிரான்சிற்காக, வல்-துவாசில் வில்லியே-லு-பெல் மற்றும் ஆர்னோவில் நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை இரட்டை வேட்பாளர்களாக Bonneuil-en-France இன் புதிய நகரபிதா Abdellah Benouaret உடன் இணைந்து உமையாள் விஜயகுமார் (Umaiyal Vijayakumar) அவர்கள் களமிறங்கி உள்ளார்.

அதே போல் அதே மாவட்டம் மற்றும் மாகாணத்திற்காக சார்சல் நகரத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்த கட்சியின் சார்பில் இரட்டை வேட்பாளர்களாக  Michel NEDJAR உடன் இணைந்து பத்ரிசியா சீவரட்ணம் (Patricia SEEVARAT) களமிறங்கி உள்ளார்.

அதே போல் பொண்டி, பவியோன் சூ புவா மற்றும் பொபினி (Bobigny Bondy Les Pavillons-sous-Bois) நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Philippe Dallier,  Oldhynn Pierre ஆகியோர் குறிப்பிட்ட கட்சியின்  வேட்பாளர்களாக உள்ளனர்

f

இதில் Philippe Dallier இற்குப் பிரதி வேட்பாளராக அல்லது (remplaçant) பிரேமி பிரபாகரன் (Piremy PIRABAHARAN) களமிறங்கி உள்ளார்.

நகரசபைகளைக் கடந்து மாவட்ட ஆலோசணை சபையிலும் உறுப்பினர்களாகும் வாய்ப்பினை அந்தந்தப் பிராந்தியத் தமிழீழ மக்கள் வழங்கவேண்டும். இதன் மூலம் எங்களின் குரல்களை, எங்களிற்கான நீதியினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தினை நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும்.

அதே நேரம், மக்களின் வாக்குகளின் மூலம், மாவட்ட உறுப்பினர்களாகும் தமிழீழப் பிள்ளைகள், தங்கள் இனம் கடந்து வந்த வலிகளையும், இனவழிப்புகளையும்  ஓங்கி ஒலிக்கும் கடமையை ஏற்பதற்கு உறுதி கொள்ளல் வேண்டும்.

எனது இனத்தின் பிள்ளைகள் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், அதிகார மட்டங்களை அடைந்தாலும், எங்களின் தமிழினம் இன்னமும் சிங்களப் பேரினவாதத்தின் அழிப்பிற்குள்ளும் அடக்கு முறைக்குள்ளும் சிக்கி இருப்பதை பதிவு செய்வோம் என உங்களின் மனதில் உறுதி கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர், உங்கள் உறவுகள் கடந்து  வந்த வலிமிகுந்த பாதை உங்கள் உதிரங்களிலும் கலந்திருப்பதை தொடர்ந்து நினைவில் கொள்ளுங்கள்,

உங்களிற்காக தமிழீழப் புலம் பெயர் சமூகமும், எங்கள் இனத்தின் விடிவிற்காக நீங்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க, உங்கள் இலக்குகளில், தேர்தலில்,  இரண்டு சுற்றுக்களையும் கடந்து வெற்றி பெற் வாழ்த்துகின்றோம்.

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இளையோர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படியான புதிய சிந்தைனையொடைய young and vibrant சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

காலவதியான சித்தந்தங்களையும் / கறள் பிடித்த உறைந்த் எண்ணங்களையும் பற்றி படித்து தொங்கிக்கொண்டிருக்கும்   வயோதிப / போலி தேசிய நேசர்களை இளைய பிரான்ஸ் தலைமுறை புறக்கணிக்க வேண்டும்.   
 
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, colomban said:

இளையோர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படியான புதிய சிந்தைனையொடைய young and vibrant சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

காலவதியான சித்தந்தங்களையும் / கறள் பிடித்த உறைந்த் எண்ணங்களையும் பற்றி படித்து தொங்கிக்கொண்டிருக்கும்   வயோதிப / போலி தேசிய நேசர்களை இளைய பிரான்ஸ் தலைமுறை புறக்கணிக்க வேண்டும்.   
 
காலவதியான சித்தந்தங்களை

கறள் பிடித்த

உறைந்த் எண்ணங்களை

இப்ப இவர்கள்தான்  உலகில் புதிதாக அரசியலை கண்டு பிடித்து இருக்கிறார்களா?
நீங்கள் சொல்ல வருவது உண்மையிலேயே புரியவில்லை.

1970 களில் ஓடிய இ போ க பஸ்கள் இப்போது ஓடுவதில்லை 
எல்லாம் பழுதாகி பாழடைந்து போய்விட்டது 

அவற்றை புது பஸ்கள் நிரப்பி இருக்கின்றன 

அதனால் ........நீங்கள் கூற வருவது? 

மகிழ்ச்சியான செய்தி. 
பொருளாதார ரீதியிலு, கல்வி தகமைகள் பெறுவதிலும் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கும் புலம்பெயர் தமிழ் சமூகம் படிப்படியாக அரசியல் ரீதியிலும் தாம் இருக்கும் தேசங்களில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது, பல் இனக் குழுமங்களிடையே அதிகாரங்களை பெறும் போது ஒரு முக்கிய இனக் குழுமமாக எதிர்காலத்தில் இனங்காணப்படும் சூழ்நிலை உருவாகும்.

தீவிர வலதுசாரிகளும் பாசிஸ்ட்டுகளும் குடியேற்றவாசிகளை வந்தேறிகள் என்று குறிப்பிட்டு அதிகாரங்களை நோக்கி அவர்கள் நகர்வதை சகிக்காது தேசியவாத கொள்கைகளை தீவிரமாக பரப்பி இவர்களுக்கு எதிர்காலத்தில் சவாலாகவும் அமைவர். எனவே எம் இளைய சமூகம் இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்து பல்லின சமூகம் ஒன்றில் இருக்க கூடிய சவால்களை அதே பல்லின சமூக கட்டமைப்பில் இருக்கும் சனநாயக முறைகளின் மூலம் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

// நகரசபைகளைக் கடந்து மாவட்ட ஆலோசணை சபையிலும் உறுப்பினர்களாகும் வாய்ப்பினை அந்தந்தப் பிராந்தியத் தமிழீழ மக்கள் வழங்கவேண்டும். இதன் மூலம் எங்களின் குரல்களை, எங்களிற்கான நீதியினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தினை நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும். 

உங்கள் பெற்றோர், உங்கள் உறவுகள் கடந்து  வந்த வலிமிகுந்த பாதை உங்கள் உதிரங்களிலும் கலந்திருப்பதை தொடர்ந்து நினைவில் கொள்ளுங்கள்//. 

இவற்றை கருத்தில் கொண்டு, இன்றைய அரசியல் உலக ஒழுங்கிற்கேற்ப, இலக்குகளை தெரிவு செய்து அதை நோக்கி நகர இது ஒரு வாய்ப்பு/ஆரம்பம்.. 

உங்களது முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இளையோருக்கு வாழ்துக்கள்.

மேற்கு நாடுகள் எங்கினும் அனைத்து மட்டங்களிலும், அனைத்து அரசியல் சித்தாந்த வழி கட்சிகளிலும் நம் இருப்பு அவசியம்.

லண்டனில் இப்போ இருக்கும் 1ம் சந்ததி குடியேறி தமிழ் அரசியல்வாதிகள் போல கோமாளி அரசியல் செய்யாமல், 2ம் சந்ததி காத்திரமாக இருக்கும் என நம்புவோம்.

அவரவர் நாடுகளில் மக்களால் தேர்வு செய்யபட்ட 2ம் சந்ததி தமிழ் அரசியல்வாதிகள் உலகளாவிய அமைப்பு ஒன்றை அமைக்கும் போது அதற்கு தனி மரியாதை கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

மகிழ்ச்சியான செய்தி. 
பொருளாதார ரீதியிலு, கல்வி தகமைகள் பெறுவதிலும் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கும் புலம்பெயர் தமிழ் சமூகம் படிப்படியாக அரசியல் ரீதியிலும் தாம் இருக்கும் தேசங்களில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது, பல் இனக் குழுமங்களிடையே அதிகாரங்களை பெறும் போது ஒரு முக்கிய இனக் குழுமமாக எதிர்காலத்தில் இனங்காணப்படும் சூழ்நிலை உருவாகும்.

தீவிர வலதுசாரிகளும் பாசிஸ்ட்டுகளும் குடியேற்றவாசிகளை வந்தேறிகள் என்று குறிப்பிட்டு அதிகாரங்களை நோக்கி அவர்கள் நகர்வதை சகிக்காது தேசியவாத கொள்கைகளை தீவிரமாக பரப்பி இவர்களுக்கு எதிர்காலத்தில் சவாலாகவும் அமைவர். எனவே எம் இளைய சமூகம் இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்து பல்லின சமூகம் ஒன்றில் இருக்க கூடிய சவால்களை அதே பல்லின சமூக கட்டமைப்பில் இருக்கும் சனநாயக முறைகளின் மூலம் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

புலம்பெயர் தமிழ் சமூகம் படிப்படியாக அரசியல் ரீதியிலும்

பல் இனக் குழுமங்களிடையே அதிகாரங்களை பெறும் போது

தீவிர வலதுசாரிகளும் பாசிஸ்ட்டுகளும் குடியேற்றவாசிகளை வந்தேறிகள் என்று குறிப்பிட்டு

தேசியவாத கொள்கைகளை தீவிரமாக பரப்பி

பெண்கள் வேண்டுமானால் ஆடைகளின்றி கூட சுதந்திரமாகவும் 
அவர்களுக்கு பிடித்த உள்ளாடைகளுடனும் சுற்றுவதுக்கு பூரண 
சுதந்திரம் வேண்டும் என்று 

ஆண்கள் போராடுவது போலவும் 

சில பிற்போக்கு வாதிகள் காலச்சாரம் எனும் பெயரில் 
பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் 
என்று சாடுவதாகவுமே 

மேற்கூறிய கருத்துக்கள் இருக்கிறது. 

கனடா என்று ஒரு தேசம் இல்லாது இருப்பின் ..........
இந்த பல்லினம் மெல்லினம் எல்லாம் என்னாகும்? 

கனடா என்ற தேசம் எங்கிருந்து உருவாகியது?
எதன் அடிப்படை தளத்தில் இருந்து வளர்ந்தது? 

உலக வரலாற்றில் மனித ஆதிக்கம் என்பது குழுமங்களாகவும் சிற்றரசுகள் ஆகவும் 
பேரரசுகள் ஆகவும் நகர்ந்துகொண்டே இருக்கிறது.
அதில் வலது இடது எல்லாம் இல்லை .......வலது இடது என்பதே ஒரு போலி சிர்த்தார்த்தம்தான் 

இப்போ சீன ஆதிக்கம் இலங்கையில் பரவுவதையும் சீனர்கள் இலங்கை அரசியலை 
பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து ஆளுமை படுத்துவதையும் 
அதுக்கு வலதுசாரி தேசியவாத போக்குடைய மகிந்த அண்ட் கோ உடந்தையாக இருக்கிறது என்றும் 
இப்போதைய இலங்கை இடதுசாரி குழுக்கள் புறு புறுக்கிறார்கள். 

ஏன் இவர்கள் சீனர்களை இந்த பல்லின மெல்லின வாதத்துக்குள் வைத்துக்கொண்டு 
அவர்களை இருகரம் கூப்பி வரவேற்க பின்னடிக்கிறார்கள்?
அது செய்ய நேரமின்மை காரணமாக இருக்கலாம் ... ஏன் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் 
மகிந்த அண்ட் கோவை திட்டி தீர்க்கிறார்கள்? 

என்னை பொறுத்தவரை அதிகம் படித்தவன் கூமுடடைக்குள் வீழ்வதுபோல 
சும்மா சில மூளை சலவை சிரத்தார்த்தங்களை வாசித்துவிட்டு 
தமக்கு அரசியல் அறிவு உண்டு எனும் தோரணைக்கு தேசியவாதம்  வலதுசாரிகள் இடதுசாரிகள் 
வல்லினம் பல்லினம் மெல்லினம் என்று பீற்றிக்கொண்டு திரியாது 

அடிப்படை மனிதவாதம் மிருகவாதம் இயற்கை பூவியியல் கொள்கைகளுக்கு உட்பட்டே 
எமது அடுத்த சந்ததி முன்னேற வேண்டும் எமது முன்னோர்களின் சிந்தனைகளை அப்படியே 
உள்வாங்குவது என்பதுதான் எமது அடுத்த சந்ததியை தலைநிமிர செய்யும். 

நாம் சொந்த நாட்டில் கேட்ப்பாரற்று மிருகங்கள் போல குண்டுகள் வீசி கொல்லப்பட்டோம் 
அதில் இருந்து தப்பியே உலக நாடுகளுக்கு புலம்பெர்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு ஓடினோம் 
வந்த இடத்தில் எங்கள் சொந்த நாட்டில் இடது சாரி கும்பல்கள் என்று தம்மை கூறுவோர் தந்திராத அனைத்து சுதந்திரம் உரிமைகளை இங்கிருந்த அவ்வப்போது ஆட்ச்சி ஏறும் வலதுசாரி அரசுகள் எமக்கு தந்து எமது வாழ்வை மட்டும் அல்ல அடுத்த சந்ததியும் வாழ வழி வகுத்தார்கள் 

"உப்பிட்டோரை உள் அளவும் நினை" 
எமது அடுத்த சந்ததியின் அரசியல் என்பது நன்றிக்கடன் மிக்கதாகவே முதலில் இருக்கவேண்டும் 
அவர்கள் இன்று கல்வி பொருளாதார ரீதியாக வளர்க்கிறார்கள் என்றால் அதுக்கு அவர்கள் பெற்றோரை 
இவர்கள் ஆதரித்ததுதான் முதல் காரணம் என்ற அடிப்படையை புரியவேண்டும் 
இந்த நாடுகளுக்கு முதலில் நாம் செய்யவேண்டிய நன்றிக்கடன் பாக்கியம் இருக்கிறது 
அது விரும்பியோ விரும்பாமலோ தேசியவாத கொள்கை சார்ந்தே அமையும் 

நிறைய எழுத இருக்கு .......
நீட்டி விரிவாக இரண்டு பக்கமும் இருக்கும் சாதக பாதகங்களை போலி தன்மைகளை 
எழுதினால் ..... தமக்கு விளங்குவதில்லை என்று பலர் குற்றம் கூறுபவதால். இங்கு முற்று புள்ளி வைக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

நிறைய எழுத இருக்கு .......
நீட்டி விரிவாக இரண்டு பக்கமும் இருக்கும் சாதக பாதகங்களை போலி தன்மைகளை 
எழுதினால் ..... தமக்கு விளங்குவதில்லை என்று பலர் குற்றம் கூறுபவதால். இங்கு முற்று புள்ளி வைக்கிறேன்

வந்தேறி என்ற ஒரு சொல் போதும். மருதர் உடனேயே பெரிய பின்நவீனத்துவ கட்டுரை வரைந்திடுவார்☺️🤣

புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகள், பெற்றோர், பாடசாலை, பல்லின நண்பர்கள் என்று சகல வழிகளிலும் தம்மை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ளார்கள். புலம்பெயர் நாடுகள் எல்லைகளைத் திறந்து வாருங்கள் என்று வரவேற்றிருந்தால் நன்றிக்கடன் செலுத்தலாம். ஆனால் ஒரு சிறுபகுதியினரை சட்டரீதியாக தொழில்செய்யவும், படிக்கவும் மட்டும்தானே அனுமதித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

// நகரசபைகளைக் கடந்து மாவட்ட ஆலோசணை சபையிலும் உறுப்பினர்களாகும் வாய்ப்பினை அந்தந்தப் பிராந்தியத் தமிழீழ மக்கள் வழங்கவேண்டும். இதன் மூலம் எங்களின் குரல்களை, எங்களிற்கான நீதியினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தினை நாம் உருவாக்கிக் கொடுக்க  வேண்டும். 

உங்கள் பெற்றோர், உங்கள் உறவுகள் கடந்து  வந்த வலிமிகுந்த பாதை உங்கள் உதிரங்களிலும் கலந்திருப்பதை தொடர்ந்து நினைவில் கொள்ளுங்கள்//. 

இவற்றை கருத்தில் கொண்டு, இன்றைய அரசியல் உலக ஒழுங்கிற்கேற்ப, இலக்குகளை தெரிவு செய்து அதை நோக்கி நகர இது ஒரு வாய்ப்பு/ஆரம்பம்.. 

உங்களது முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

பிரபா... நீங்கள் இப்படி வாழ்த்துகிறீர்கள், அதைத்தான் கொழும்பான் கொழும்பு பாணியில் இப்படி சொல்கிறார். 👇

காலவதியான சித்தந்தங்களையும் / கறள் பிடித்த உறைந்த் எண்ணங்களையும் பற்றி படித்து தொங்கிக்கொண்டிருக்கும்   வயோதிப / போலி தேசிய நேசர்களை இளைய பிரான்ஸ் தலைமுறை புறக்கணிக்க வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

வந்தேறி என்ற ஒரு சொல் போதும். மருதர் உடனேயே பெரிய பின்நவீனத்துவ கட்டுரை வரைந்திடுவார்☺️🤣

புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகள், பெற்றோர், பாடசாலை, பல்லின நண்பர்கள் என்று சகல வழிகளிலும் தம்மை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ளார்கள். புலம்பெயர் நாடுகள் எல்லைகளைத் திறந்து வாருங்கள் என்று வரவேற்றிருந்தால் நன்றிக்கடன் செலுத்தலாம். ஆனால் ஒரு சிறுபகுதியினரை சட்டரீதியாக தொழில்செய்யவும், படிக்கவும் மட்டும்தானே அனுமதித்தார்கள்.

வந்தேறி 

 இதைவைத்து உங்களை போன்றவர்கள்தான் வர்ணம் அடித்து திரிய வேண்டிய 
ஒரு சில்லெடுத்த வேலையில் சிக்குண்டு கிடக்கிறீர்கள் 
நான் நினைக்கிறன் சீமானுக்கு எதிராக பேசுகிறோம் என்று எண்ணி ஒரு சாக்கடையில் கிடந்தது நீந்துகிறீர்கள். இந்த வில்லங்கம் எதுவும் எனக்கு இல்லை 

எனக்கு வந்தேறி வந்தேறிதான் ......
காட்டேறி காட்டேறிதான்.
குடியேறி குடியேறிதான்.

இருப்பதை இல்லை என்று கூறி உருண்டு புரளும் எந்த வில்லங்கமும் இல்லை 

பிரித்தானியாவின் பொருளாதார சுரண்டல் 
மனித படுகொலைகள் 
மூன்றாம் உலகின் கனிவள களவு எல்லாம் தெரிந்தால் 

ஆ அப்படியா என்றுவிட்டு பிரித்தானியா பிரஜாஉரிமையை ரத்து செய்துவிட்டு 
வெளியேற போகிறீர்களா?  ஏதோ ஒரு மாதிரி வாய்ப்பன் மாவை வைத்து இழுக்க தானே 
போகிறீர்கள்? ஐரோப்பிய மக்களை திட்டி தீர்த்த வலதுசாரிகளின் பிரெக்ஸிட் இற்கு 
சாதகமாக வாக்குபோட்டுவிட்டு வந்து பெருமையாக இங்கும் எழுதிதானே இருக்கிறீர்கள்?  

உங்களுக்கு வந்தால் பிரெக்ஸிட் 
சீமானுக்கு வந்தால் தக்காளி சட்னியா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை வாழ்த்துவதில் கூட இன்னும் ஒருவரை தூற்றும் அசிங்கம் 🤔
சரியை அடையாளம் காட்டுவதற்கு முன்னரே பிழையை பிடித்து ஊளையிடும் நாட்டம்  💩... 
இதை தான் தமிழ் தேசிய அரசியல் மாற்று சிந்தனையாளர் கையாள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

ஒருவரை வாழ்த்துவதில் கூட இன்னும் ஒருவரை தூற்றும் அசிங்கம் 🤔
சரியை அடையாளம் காட்டுவதற்கு முன்னரே பிழையை பிடித்து ஊளையிடும் நாட்டம்  💩... 
இதை தான் தமிழ் தேசிய அரசியல் மாற்று சிந்தனையாளர் கையாள்கிறார்கள்.

புலிவாலை பிடித்தவன் கதி என்று முன்னோர்கள் சொல்வார்கள் 

இந்த வில்லங்கம் செய்வதில் பெருமை வேறு 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

உப்பிட்டோரை உள் அளவும் நினை" 
எமது அடுத்த சந்ததியின் அரசியல் என்பது நன்றிக்கடன் மிக்கதாகவே முதலில் இருக்கவேண்டும் 
அவர்கள் இன்று கல்வி பொருளாதார ரீதியாக வளர்க்கிறார்கள் என்றால் அதுக்கு அவர்கள் பெற்றோரை 
இவர்கள் ஆதரித்ததுதான் முதல் காரணம் என்ற அடிப்படையை புரியவேண்டும் 
இந்த நாடுகளுக்கு முதலில் நாம் செய்யவேண்டிய நன்றிக்கடன் பாக்கியம் இருக்கிறது 
அது விரும்பியோ விரும்பாமலோ தேசியவாத கொள்கை சார்ந்தே அமையும் 

அடுத்த தலைமுறையின் முதல் கடமை அவர்களின் நாட்டுக்குத்தான் (அதாவது எமது புலம்பெயர் நாட்டுக்கு). 

ஆனால் அந்த கடமை தேச நலன் சார்ந்ததாக அமையுமே ஒழிய, தேசிய இன நலன் சார்ந்து அமையாது.

இதை பற்றி முன்பே நெடுக்கோடு விவாதித்துள்ளேன். நீங்களும் பங்கு எடுத்தீர்கள். சீமான் பேசுவது தமிழ் நாட்டினருக்கு முன்னுரிமை பற்றி அல்ல, சாதிவழியாக தமிழ் இனம் என்று வகைபடுத்த படுவோருக்கு மட்டும் முன்னுரிமை”. 

அதனால்தான் எத்தனை நூற்றாண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் அயலான், அயலாந்தான். எங்கு வாழ்ந்தாலும் தமிழன், தமிழந்தான் என்கிறது அவர் கோஷம்.

மேற்கு நாடுகளில் இருக்கும் தேசியவாதம் இதுவல்ல. ஸ்கொட்டிஸ் தேசியவாத கட்சி, அந்த தேசத்தில் இருக்கும் அத்தனை வேறுபட்ட இன, மத குழுவையும் “ஸ்கொட்டிஷ்” என்ற வரையறைக்குள் கொண்டு வந்து - ஒட்டு மொத்தமாக ஸ்கொட்லாண்டில் வாழும் அனைவருக்குமான தேசிய அரசியலாக Scottish Nationalism தை முந்தள்ளுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

எனக்கு வந்தேறி வந்தேறிதான் ......

நீங்கள், நான் எனப் பலர் மட்டுமல்ல பிரெஞ்சு மண்ணில் வந்தேறியர்வர்களின் அடுத்த தலைமுறையில் பிறந்து தேர்தலில் நிற்பவர்களும் வந்தேறிகள்தான்.  அதனால்தான் வந்தேறிகளுக்கு ஆதரவாக இருக்கமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சீமானை கையாண்டதால் நானும் எடுக்க வேண்டியதாகிற்று மருதர். @Maruthankerny

மற்றும்படி அவரை இதில் புகுத்தாமல் உரையாடுவதே எனது விருப்பமும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கோசன் ப்ளீஸ் ...
நான் விலகுகிறேன் நீட்டி முழக்க எனக்கு ஆர்வம் இல்லை அந்த ஒரு காரணம்தான்.

சீமானின் கொள்கை பற்றி சீமானை பேசவிடுங்கள் 
சீமானின் சார்பாக ஏன் நீங்கள் பேசுகிறீர்கள்?

எத்தனை தலைமுறையாக வாழ்ந்தாலும் தன்னை தெலுங்கன் என்று 
அவர்கள்தான் சொல்கிறார்கள் ... அதைத்தான் சீமான் சொல்கிறார் 

சீமான் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் வாழ்ந்தால் போதது 
மரம் செடி கொடி மிருகங்கள் பறவைகள் என்று எல்லோரும் 
கூடி வாழ வேண்டும் என்றுதான் சொல்கிறார்.

சீமானின் கொள்கைகளில் தவறு இருக்கலாம் 
அதை மேற்கோள் காட்டி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் 

நீங்கள் ஒன்றை புதிதாக எழுதி பொழிப்புரை எழுதாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கவில்லை எமது பிள்ளைகள் English Defence Legauge, British National Party, French National Party, ஜேர்மனியின் AFD போன்றவற்றில் சேர்வார்கள், முன்னுக்கு வருவார்கள், வர விடப்படுவார்கள் என. 

எனென்றால் இவை இனதூய்மை வாத கட்சிகள்.  

5 minutes ago, Maruthankerny said:

கோசன் ப்ளீஸ் ...
நான் விலகுகிறேன் நீட்டி முழக்க எனக்கு ஆர்வம் இல்லை அந்த ஒரு காரணம்தான்.

சீமானின் கொள்கை பற்றி சீமானை பேசவிடுங்கள் 
சீமானின் சார்பாக ஏன் நீங்கள் பேசுகிறீர்கள்?

எத்தனை தலைமுறையாக வாழ்ந்தாலும் தன்னை தெலுங்கன் என்று 
அவர்கள்தான் சொல்கிறார்கள் ... அதைத்தான் சீமான் சொல்கிறார் 

சீமான் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் வாழ்ந்தால் போதது 
மரம் செடி கொடி மிருகங்கள் பறவைகள் என்று எல்லோரும் 
கூடி வாழ வேண்டும் என்றுதான் சொல்கிறார்.

சீமானின் கொள்கைகளில் தவறு இருக்கலாம் 
அதை மேற்கோள் காட்டி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் 

நீங்கள் ஒன்றை புதிதாக எழுதி பொழிப்புரை எழுதாதீர்கள். 

நான் ஒரு பொழிப்புரையும் எழுதவில்லை மருதர். சீமானே மிக தெளிவாக சொல்லியுள்ளார். தெலுங்கு சாதிகளை சேர்ந்தோர் தமிழர் அல்ல எனவும், அவர்கள் நாடாள முடியாது என்றும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீங்கள் சீமானை கையாண்டதால் நானும் எடுக்க வேண்டியதாகிற்று மருதர். @Maruthankerny

மற்றும்படி அவரை இதில் புகுத்தாமல் உரையாடுவதே எனது விருப்பமும்.

நான் எங்கு கையாண்டேன் .... 
சீமானை துணைக்கு இழுத்து தர்க்கம் செய்வதும் எனக்கு என்ன வில்லங்கம் இருக்கிறது?

நான் எந்த வலது/இடது  தேசிய/ பூசிய  வல்லின/மெல்லினங்களில் 
நின்றும்  தொங்குவது இல்லை 

நிழலி முதல் கிருபன் வரை தான் வந்தேறி வந்தேறி என்று சீமானை சாடி 
தம்மை பெரும் பெருந்தகைகளாக நிறுவினார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

நான் எங்கு கையாண்டேன் .... 
சீமானை துணைக்கு இழுத்து தர்க்கம் செய்வதும் எனக்கு என்ன வில்லங்கம் இருக்கிறது?

நான் எந்த வலது/இடது  தேசிய/ பூசிய  வல்லின/மெல்லினங்களில் 
நின்றும்  தொங்குவது இல்லை 

நிழலி முதல் கிருபன் வரை தான் வந்தேறி வந்தேறி என்று சீமானை சாடி 
தம்மை பெரும் பெருந்தகைகளாக நிறுவினார்கள் 

மன்னிக்க வேண்டும்,

இந்த திரியில் சீமான் என்ற பதத்தை நீங்கள்தான் கையாண்டீர்கள்.

வந்தேறிகளிடம் இருந்து நாட்டை காப்போம் என்பது ஒன்றும் சீமான் கண்டு பிடித்த அரசியல் அல்ல. ஈனோக் பவல் என்பார் Rivers of Blood என்ற உரையை செய்தது, கிட்லரின் அரசியல், இவ்வாறு காலம் காலமாக உலகில் வழக்கத்தில் உள்ள ஒரு அரசியல்தான் “வந்தேறி-எதிர்ப்பு” அரசியல். 

ஆகவே வன்தேறி என்ற சொல்லை கண்டதுமே அது சீமானை குறிப்பது என கருத வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

தினம் தினம் யூகேயில் நாம் வந்தேறி-எதிர்ப்பு அரசியலை பார்த்து, அனுபவித்து கொண்டுதான் இருக்கிறோம். 

எமது நல்லகாலம் மூன்று பிரதான கட்சிகளும், இரெண்டு பிராந்திய கட்சிகளும் வந்தேறி அரசியலை கைகொள்ளவில்லை. அப்படி இருந்தும் பிரெக்சிற் நடந்து விட்டது.

ஆகவே வன்தேறி என்றதும் நேராக தமிழ்நாடு போக வேண்டியதில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய நாடுகளில் என்ன நிலையோ அறியேன், அமெரிக்காவிலும் , கனடாவிலும் வலது சாரிகள் "இன்னும்" தென்னாசியர்களை/இந்திய உபகண்டத்திலிருந்து வந்தோரை நோக்கி இனவாத ரீதியாகப் பாயவில்லையென்பதால் சிலருக்கு வலதுசாரிக்காதல் இருப்பது சகஜம்.

ஆனால் "இன்னும்" என்பது முக்கியமான சொல்!

சிங்கம்/புலி, முஸ்லிம், யூதர், கறுப்பர் ஆகிய  எல்லா இரைகளும் தீர்ந்த பிறகு தென்னாசியர்களை நோக்கித் தான் பாயும்! எங்களுக்கென்ன, நாம் அந்த நேரம் போய்சேர்ந்திருப்போம், அது எங்கள் குழந்தைகளின் பிரச்சினை!😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் நினைக்கவில்லை எமது பிள்ளைகள் English Defence Legauge, British National Party, French National Party, ஜேர்மனியின் AFD போன்றவற்றில் சேர்வார்கள், முன்னுக்கு வருவார்கள், வர விடப்படுவார்கள் என. 

எனென்றால் இவை இனதூய்மை வாத கட்டிகள்.  

நான் ஒரு பொழிப்புரையும் எழுதவில்லை மருதர். சீமானே மிக தெளிவாக சொல்லியுள்ளார். தெலுங்கு சாதிகளை சேர்ந்தோர் தமிழர் அல்ல எனவும், அவர்கள் நாடாள முடியாது என்றும்.

எங்களுக்கு என்று ஒரு ஆளுமை இல்லாது இருப்பின் 
நாங்கள் அடிமைகள்தான் இதுதான் அடிப்படை 

இந்த வலது/இடது எல்லாம் ஒரு தேர்தல் பரப்புரை தவிர்த்து 
நாம் உள்ளே கூர்ந்து பார்த்தால் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

வலதுசாரிகள் சொல்லிவிட்டு செய்கிறார்கள் அவர்களின் வாக்காளர்களுக்கு 
அந்த முறைமை விளங்குகிறது.

இடது சாரிகள் செய்வதை சொல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் வாக்காளர்களுக்கு 
விளங்காமல் இருப்பதே விளக்கமாக இருக்கிறது.

(இடது சாரி ஜனநாயக கட்சி) கிளிண்டனின் முழு சம்மதத்துடன்தான் எங்கள் வாழ்நாளில் 
நடந்த பெரும் மனித அவலமான ருவாண்டா படுகொலை நடந்தது.
அங்கு ஐ நா இராணுவத்துக்கு பொறுப்பாக இருந்தவர் ஒரு கனடிய ஜெனரல் 
அரேபிய கடலில் மூன்று அமெரிக்க போர்க்கப்பல்கள் நிற்கிறது 
கனடிய ஜெனரல்  கிளிண்டனிடம் கேட்டது ஒரே ஒரு கப்பலின் உதவி மட்டுமே 
கிளிண்டன் கூறியது அவர்களை உடனடியா வெளியேற சொல்லி ... அந்த ஜெனரல் மனிதாபினம் 
உள்ளவன் அன்றே வேலையை தூக்கி எறிந்துவிட்டு பயணிகள் விமானத்தில் கனடா வந்து இறங்கினார். 

ஒபாமாவின் கண்ணுக்கு முன்தான் அடுத்த பேரவலமான ஈழத்தமிழர்கள் படுகொலை நடந்தது 

நாங்கள் பல்லினம்/ புல்லினம் என்று இவர்களுக்கு மறைமுகமாக வெள்ளை அடிப்பதை தவிர 
வேறு என்ன செய்கிறோம்? அனைத்து பொருளாதார சுரண்டலும் மூன்றாம் உலகில் அவ்வாறே நடக்கிறது.
5ஜி நெட்வெர்க் லண்டனுக்கு வந்தபோது அது ஒரு சீன நிறுவனம் என்பதால் அடித்து துரத்தவில்லையா?
மேற்குக்கு என்றால் திறந்த சந்தை 
சீனாவுக்கு என்றால் மூடவில்லையா? 

நானும் நீங்களும் எவ்வளவு நல்லவர்கள் என்பதின் அடிப்படையில் இருந்து 
 எந்த அரசியலையும் நிலை நிறுத்த முடியாதது. இதுக்கு தமிழ் இனம்தான் 
உலகத்துக்கே உதாரணம். பெரிய மீன் உயிர்வாழ வேண்டுமெனில் சிறிய மீனை 
பிடித்து உண்டுதான் ஆகவேண்டும் 
எந்த மாற்று கருத்த்தும் இந்த இயற்கை விதியை மாற்றவே முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிண்டன் ருவாண்டா படுகொலைக்கு பச்சைக் கொடி காட்டி அனுமதித்தாரா தெரியாது, ஆனால் ஒபாமாவுக்கு எங்கள் தமிழினப் படுகொலையை தடுத்த நிறுத்த ஒரு தேவையும் கடமையும் இருக்கவில்லை!

ஏன்? உள்ளே மக்களைத் தடுத்து வைத்திருந்த நாமே அதைத் தடுப்பதில் அக்கறை காட்டவில்லையென்றால் , சிறிலங்கா பற்றி அன்று காலைக் கோப்பி நேரம் பிறீவிங் கேட்ட ஒபாமாவுக்கு என்ன கடமை ?

எனவே, நடந்ததைக் கதையுங்கள், பிறகு வந்து வாந்தி எடுத்தேன் என்று திட்டாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

நீங்கள், நான் எனப் பலர் மட்டுமல்ல பிரெஞ்சு மண்ணில் வந்தேறியர்வர்களின் அடுத்த தலைமுறையில் பிறந்து தேர்தலில் நிற்பவர்களும் வந்தேறிகள்தான்.  அதனால்தான் வந்தேறிகளுக்கு ஆதரவாக இருக்கமுடிகின்றது.

உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டு செய்வதை செய்யவேண்டும் 
வந்தேறினோம் எமது அடுத்த தலைமுறைக்கு முதலில் பிரான்சு 
பிரிடிஷ் என்ற "தேசிய'ங்கள்"  வாழ்ந்தாக வேண்டும் 
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் .. அதில் இருந்து எமது இனத்துக்கு மட்டுமல்ல 
ஏழை நாடுகளில் வாழும் எல்லா இனத்தின் ஏழ்மையையும் அகற்ற அவர்கள் உழைக்க வேண்டும்.

அதைவிடுத்து .....
பச்சை தமிழனாவது 
நீல பிரெஞ்சுக்காரன் ஆவது 
மஞ்சள் பிரிடிஷ் ஆவது போன்ற 
போலி வேலைகள் எதற்கு?? 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஆகவே வன்தேறி என்றதும் நேராக தமிழ்நாடு போக வேண்டியதில்லை.

Edited 7 minutes ago by goshan_che

ஒரு தொலுக்கன். தமிழ்நாட்டுகு.  இடம்பெயர்தால். வத்தேறியா?.  இல்லையோ?. எனக்கு. இது. புரியவில்லை.  தெரிந்தவர்கள்.  விளக்கம் தரவும்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

எங்களுக்கு என்று ஒரு ஆளுமை இல்லாது இருப்பின் 
நாங்கள் அடிமைகள்தான் இதுதான் அடிப்படை 

இந்த வலது/இடது எல்லாம் ஒரு தேர்தல் பரப்புரை தவிர்த்து 
நாம் உள்ளே கூர்ந்து பார்த்தால் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

வலதுசாரிகள் சொல்லிவிட்டு செய்கிறார்கள் அவர்களின் வாக்காளர்களுக்கு 
அந்த முறைமை விளங்குகிறது.

இடது சாரிகள் செய்வதை சொல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் வாக்காளர்களுக்கு 
விளங்காமல் இருப்பதே விளக்கமாக இருக்கிறது.

(இடது சாரி ஜனநாயக கட்சி) கிளிண்டனின் முழு சம்மதத்துடன்தான் எங்கள் வாழ்நாளில் 
நடந்த பெரும் மனித அவலமான ருவாண்டா படுகொலை நடந்தது.
அங்கு ஐ நா இராணுவத்துக்கு பொறுப்பாக இருந்தவர் ஒரு கனடிய ஜெனரல் 
அரேபிய கடலில் மூன்று அமெரிக்க போர்க்கப்பல்கள் நிற்கிறது 
கனடிய ஜெனரல்  கிளிண்டனிடம் கேட்டது ஒரே ஒரு கப்பலின் உதவி மட்டுமே 
கிளிண்டன் கூறியது அவர்களை உடனடியா வெளியேற சொல்லி ... அந்த ஜெனரல் மனிதாபினம் 
உள்ளவன் அன்றே வேலையை தூக்கி எறிந்துவிட்டு பயணிகள் விமானத்தில் கனடா வந்து இறங்கினார். 

ஒபாமாவின் கண்ணுக்கு முன்தான் அடுத்த பேரவலமான ஈழத்தமிழர்கள் படுகொலை நடந்தது 

நாங்கள் பல்லினம்/ புல்லினம் என்று இவர்களுக்கு மறைமுகமாக வெள்ளை அடிப்பதை தவிர 
வேறு என்ன செய்கிறோம்? அனைத்து பொருளாதார சுரண்டலும் மூன்றாம் உலகில் அவ்வாறே நடக்கிறது.
5ஜி நெட்வெர்க் லண்டனுக்கு வந்தபோது அது ஒரு சீன நிறுவனம் என்பதால் அடித்து துரத்தவில்லையா?
மேற்குக்கு என்றால் திறந்த சந்தை 
சீனாவுக்கு என்றால் மூடவில்லையா? 

நானும் நீங்களும் எவ்வளவு நல்லவர்கள் என்பதின் அடிப்படையில் இருந்து 
 எந்த அரசியலையும் நிலை நிறுத்த முடியாதது. இதுக்கு தமிழ் இனம்தான் 
உலகத்துக்கே உதாரணம். பெரிய மீன் உயிர்வாழ வேண்டுமெனில் சிறிய மீனை 
பிடித்து உண்டுதான் ஆகவேண்டும் 
எந்த மாற்று கருத்த்தும் இந்த இயற்கை விதியை மாற்றவே முடியாது. 

உங்கள் பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன்.

என் பார்வையில்:

1. மேற்கு நாடுகள் நாட்டுக்கு உள்ளும், வெளிநாட்டு அலுவல்களிலும் கைக்கொள்ளும் போக்கு 180 பாகை நேரெதிரானது.

2. வெளிநாட்டு கொள்கையில், நடைமுறையில் நீதி, நியாயம், கருத்துரிமை, ஜனநாயகம், சட்டத்தின் ஆளுமை, மனித உரிமை, பல்லினதன்மை எதுவும் பொருட்டல்ல. அங்கே நாட்டின் (இனத்தின் அல்ல) நலன் மட்டுமே ஒரே நோக்கம்.

3. ஆனால் உள்நாட்டில் அப்படி அல்ல. இங்கே கருத்து சுதந்திரம், ஜனநாயகம், பல்லினதுவம், சட்டத்தின் ஆளுமை எல்லாம் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளது.

ஆகவே இரெண்டையும் போட்டு குழப்பிகொள்ள கூடாது.

வெளிநாட்டு விவகாரங்களில் ஒரு போதும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் நாம் நிச்சயம் ஒரு ஒப்பீட்டளவில் மேம்பட்ட progressive நிலையிலேயே இருக்கிறோம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.