Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan

Representational image

Representational image ( pixabay )

ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையும். உலகளவில் சினிமாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தாலும் அதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் முத்தமிழை ரசித்து திரைத்துறையினரை ஆட்சிபீடத்திலும் அமர்த்தி உள்ளனர். இனி வரும் என் பதிவுகள் அனைத்தும் திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்கள், நம் நெஞ்சில் எவ்வாறு நீங்காத இடம் பிடித்தனர் என்பதை ஆராயும்!

கொடுந்தமிழ், செந்தமிழ், தனித்தமிழ்,நற்றமிழ், முத்தமிழ் என்று பற்பல வண்ணம் தமிழ் இருந்தாலும், இவற்றில் என்னை அள்ளி அணைத்து கருத்தைப் புகட்டி, கலைப்பில்லா பெருவாழ்வை கழிக்கச் செய்யும், கலை நிறைந்த ஒன்று முத்தமிழ்.

கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.

தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம்.

Representational image
 
Representational image

இந்த முத்தமிழை நான் ரசிக்க, நான் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள 6.7 கோடி பேரும் ரசிக்க சமகாலத்தில் பெரும்பங்கு தமிழ்த் திரைத்துறைக்கு உண்டு.

எடுத்த எடுப்பில் தமிழ்சினிமாவை நாகரீகம் அற்றது என்று ஏதோ ஒரு வெறுப்பில் நம்மில் பலர் சொன்னாலும், ஏதோ ஒரு மனநிலையில் உரைத்தாலும் அது தந்த அலாதி இன்பத்தைப் பலமுறை ஒவ்வொரு நாளும் நாம் உணர்வது உண்டு. ஏனெனில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றும் தமிழ் உணர்வாளர்களின் உள்ளுரே பொதிந்த ஒன்று இவை நமக்கு புரிந்த ஒன்றும் கூட.

அத்தியாயம் 1

1. இசைஞானி இளையராஜா

இளையராஜா - மோகன்

1976 மே 14 ஆம் ஆண்டு, அதுவரை தமிழர்களின் பொக்கிஷமாய் பேசப்பட்டு வந்த, இந்நாள் வரை பேசப்படும் எம்எஸ்வி அவர்களின் இசையோடு, இன்னொரு மணிமகுடம் தமிழ்த் திரையுலகில் வந்தது. இதனை எழுபதுகளின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்கள் நன்கு அறிவர், அவர்களில் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து வரலாறு இது.

மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட மோகனின் வருகை 1977இல் கன்னடப்படம் கோகிலா என்றாலும், 1980 இல் மூடுபனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் வருகை. 1981இல் வெளியான கிளிஞ்சல்கள் படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகம், இசை டி ராஜேந்தர்.

இதற்கு முன்னே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் இளையராஜா இசையில் மோகன் கைகோர்த்து இருந்தாலும், முதல் பாடலாய் பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் கிட்டார், வயலின் வைத்து கலக்கலாக இசைத்திருப்பார் இளையராஜா. இன்றிலிருந்து நாற்பத்தி ஒரு வருடம் முன்பு அமைந்த இசை அது. ஒரு முறை மீண்டும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'மைக்' மோகன்
 
'மைக்' மோகன்

பின் அந்தக் கூட்டணி தொடுத்த பல பாமாலை நிறைந்த திரைப்படங்கள் பற்பல. எல்லாம் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்.

பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், விதி, நூறாவது நாள், உதயகீதம், குங்குமச்சிமிழ், இதயக் கோவில், மௌனராகம், மெல்லதிறந்ததுகதவு, இரட்டைவால் குருவி, பாசப்பறவைகள் இப்படி இன்றளவும் நாம் பல மேடை கச்சேரி தொடங்கி, திருமண விழா, பாடகர் தேர்வு என்று எங்கும் நிறைந்த இசை அது. ராஜாவின் ராஜ கீதங்கள் அது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. இதை இசைப் பிரியர்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள், தொடுத்த இசையை மறக்கவும் மாட்டார்கள்.

எண்பதுகளில் காதல் வாய்ப்புப் பெற்ற 1960 இல் பிறந்தவர்கள் இந்தக் கூட்டணியை ரசிப்பதை அவ்வப்போது கேட்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன்.

காதலில் இணைந்த போதும், மோதலில் காதல் பிரிந்த போதும், இணைந்தவர் மணந்த போதும், பிரிந்தவர் இறந்தபோதும், இதுதான் கதி என, சதியால் மதிகெட, விதி பல புதிர்கள் இட்டபோதும், வாழ்வின் விடை அற்ற போதும், இந்தக் கூட்டணியின் இசை வெண்பா ஆறுதல் பூமாலையாய் என்றும் நம் மனதடியில் வாடாத மலராய் அழியாமல் இருக்கும்.

(நினைவலைகள் தொடரும்)

https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-tamil-cinema

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80-களின் காதல் மன்னர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்! - நீங்கா கலைஞன் 2 #MyVikatan

இளையராஜா - எஸ்.பி.பி...

இளையராஜா - எஸ்.பி.பி...

"காதலின் தீபமொன்று", காதல் அறியாதவன், புரியாதவன் கூட ஒருமுறை பாடலைக் கேட்டால் காதலின் மயக்கம் கொண்டு, காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைப்பான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.

தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம். நான் ரசித்த சினிமா கலைஞர்களை பற்றி இங்கே பகிர்கிறேன்..

நீங்கா கலைஞன் பாகம் 1 : இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..!

ராஜா, எஸ்.பி.பி
 
ராஜா, எஸ்.பி.பி

*இளையராஜா - எஸ்.பி.பி*

1966 ஆம் ஆண்டு சினிமாவில் ஒரு புதிய இசை ஒலித்தது. அதே வருடம், கன்னட சினிமாவும் அவரை வரவேற்று வாய்ப்பளித்தது. பின்பே, வந்தோரை வாழவைக்கும் சென்னை அவர் கரத்தைபிடித்து அரவணைத்தது. தன் முதல் பாடல், தமிழில் பாடி வெளிவராமலே சென்றது, இத்தனைக்கும் அது மெல்லிசை மன்னரின் இசையில்.

பின் கே.வி மகாதேவன் இசையில் மக்கள் திலகத்திற்கும் எம்.எஸ்.வி இசையில் காதல் மன்னனுக்கும் ஆக, "ஆயிரம் நிலவே வா" மற்றும் "இயற்கை என்னும் இளைய கன்னி" என்று 1969 ஆம் ஆண்டில் தமிழில் எஸ்.பி.பி சிப்பிக்குள் இருந்து முத்துக்களாய் வெளிவந்தார்.

கமலின் திரையுலக வரலாற்றிலேயே அவருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தது இந்த இசைச்சிற்பி தான். ஆம், கமலுக்கு சிப்பிக்குள் முத்து படத்தில் எஸ்.பி.பி. பின்னணி குரலாக ஒலித்தார்.

"நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலை பாடி வாய்ப்பு கேட்டு பின் எம்.எஸ்.வி இசையில் "ஆயிரம் நிலவே வா" என்று முதலில் ஒலித்து "வான் நிலா நிலா அல்ல" என்று மீண்டும் இணைந்து எம்எஸ்வி - எஸ்பிபி கூட்டணி நிலவை வர்ணித்தது.

அந்த நிலவை எஸ்பிபியும் விடவில்லை, நிலவும் எஸ்பிபி ஐயும் விடவில்லை. பின் இணைந்த இளையராஜா கூட்டணி நிலவை வர்ணிக்க ஒன்றா, இரண்டா? பல பாடல்கள். "இளைய நிலா" பொழிகிறதே என்று இசைஞானியின் இசையோடு முதலில் இசைந்து, பின் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என நிலவையும் சொக்க வைத்து, பின் "வா வெண்ணிலா என வெண்ணிலவையும் மயக்கி காதல் நிலவையும் மயக்கினார். "நிலாவே வா" என மனைவியின் பிரிவையும்,மன தடிசலனமும் வெளிப்படுத்தினார். "நிலவு தூங்கும் நேரம்" நிலவையும் நம் மனதையும் எத்தனை கவலைகள் இருந்தாலும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்தது. இப்படி நிலவுக்கும் தனக்கும் இருந்த பந்தத்தை "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" என்ற பாடலின் மூலம் அவர் இசையில் அழகாக இசைந்தார் இசைத்தார்.

‘பாடும் நிலா’ எஸ்.பி.பி
 
‘பாடும் நிலா’ எஸ்.பி.பி

இசைஞானி இந்த நவரச கலைஞனை பற்பல சூழலுக்கு பாடவைத்தார். ஒன்றா, இரண்டா? எஸ்பிபி ஆறு தேசிய விருது வாங்கினார், அதில் சாகர சங்கமம், ருத்ர வீணை போன்ற இளையராஜாவின் இசையில் அமைந்த படங்கள் உண்டு. ஒரு கலைஞனுக்கு இத்தனை முகங்களா என வியக்கும் வண்ணம் இருக்கும் எஸ் பி பி யின் பல பாடல்கள்.

"காதலின் தீபமொன்று", காதல் அறியாதவன், புரியாதவன் கூட ஒருமுறை பாடலைக் கேட்டால் காதலின் மயக்கம் கொண்டு, காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைப்பான். அத்தகைய தன்மை கொண்டது. எண்பதுகளில் வாழ்ந்த காதல் மன்னர்களின் தேசிய கீதமாக கூட இருந்திருக்கும் இந்தப் பாடல். கொடுத்த மயக்கத்திலும், காதல் தந்த இணக்கத்திலும் தன்னை மறந்தவர் பலர்.

காதல் இனிது, காதலில் தேடல் இனிது. கடைசி வரை காதலில் ஒரு தேடலை நம் மனதில் கொண்டு செல்லும் பாடல், "கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா" என்ற பாடல். மைக் மோகனின் வளர்ச்சியில், மிக முக்கியமான மூவரில், எஸ்பிபி ஒருவர் மற்ற இருவர் இளையராஜா, சுரேந்தர்.

மிக எதார்த்த வரிகள் கொண்டு பாடல் செல்கையில், மிக அழகான கர்நாடக சங்கீதத்தை நுழைத்திடுவர் இந்த கூட்டணி. கேட்கையிலே ஏதோ கோவில் திருவிழாவில் இசை கச்சேரி கேட்பது போல இருக்கும்.

கிராமத்துக்கு அப்படி ஒரு பாடல், புதுமையான நகரத்திற்கு எப்படி கொடுப்பது? இருக்கிறது, இந்த கூட்டணியின் இசைச்சரம் , "சங்கீத மேகம்". இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும், அப்பாடலின் வரிகள் போல, "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"என்று மலர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இவர் மூச்சும் இவர் பாட்டும் அணையா விளக்கு தான்.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்று ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு பொழுதும் மனதோடு ரீங்காரமிட அமைந்த "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே" இசைஞானியின் இசையை தட்டி எழுப்பும் அந்த சந்தங்கள் அடடா!!! ராஜாவா எஸ்பிபி? யார் சிறந்தவர் என்று எண்ணாமல், இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து பிறர்க்கு போட்டி தரும் கூட்டணி ஆகவே அமைந்தது!

தமிழக அளவில் அல்ல இந்திய அளவில் நவரசத் கலைஞன் தான், வாழ்ந்த வாழ்க்கைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பாடிய பாடல் , "ஆடி மாச காத்தடிக்க வாடி புள்ள" போன்ற பாடல்கள் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழும் கிராமியக் கலைஞர்களின் இசைக்கு மிகுந்த போட்டி தரும் பாடல். பிறர் குரல் மாற்றிப் பேசுவர், இவர் குரல் மாற்றிப் பாடுவதிலும் வல்லவராய் இசையின் மன்னவராய் ஆகியிருப்பது மிக சுலபமன்று அதீத பயிற்சியால் மட்டுமே முடியும்.

Folk பாடுவதிலும் வல்லவர், கிராமத்தில் "மாங்குயிலே பூங்குயிலே" சேதி ஒன்று என்று தாரை தப்பட்டை கிழிய நகரத்திலே "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ" என்று கால் நடனமாட செய்பவரும் இந்த இன்னிசை கலைஞன் தான். பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் சேர்ந்தால் தான் படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணியின் மகத்துவம் இதிலும் தனித்தன்மை வாய்ந்தது.

கர்நாடக இசை முறையாய் சிறுவயதில் பயிலவில்லை என்றாலும், பின் நாட்களில் பயின்றார். "சங்கீத ஜாதி முல்லை" எஸ்பிபியின் இசை வாழ்வில் ஒரு மணிமகுடம். இந்தப் பாடல் தரும் சோகம், தேடல், பரிதவிப்பு, எப்படி புனைவது எழுத்தில். "நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்" என்ற வரிகளின் போது எஸ்பிபி குரலுக்கும் மேலத்திற்கும் கடும் போட்டி நடக்கும். பாடல் முடியும் தருணம் "ஆஸ்கர் அவார்ட்" புண்ணியம் செய்யவில்லை என்றுதான் தோன்றும்.

எஸ்.ஜானகி, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி
 
எஸ்.ஜானகி, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி Photo: Vikatan

" மணியோசை கேட்டு எழுந்து" இருமிக்கொண்டே பாடவேண்டும்! இருப்பினும் பாடல் அழகான தான் இருக்கவேண்டும்!! இது சாத்தியமா? சாத்தியம்! பாடினார், பாடி முடித்தார் இசையை அடுத்த நிலைக்கு அழைத்து தொடுத்தார்.

" மண்ணில் இந்த காதல்" வைரமுத்துவின் வைர வரிகளில், இசைஞானியின் இசையில்,எஸ்பிபி இன் கந்தர்வக் குரலில், அதிலும் மூச்சுவிடாமல் பாடல் அழகுக்கு அழகு சேர்த்து திரைத்துறைக்கே அழகு சேர்த்தனர் இளையராஜா- எஸ்பிபி!!!

அமுதும் தேனும் போல், தமிழருக்கு மெல்லிசையில் அற்புத பாமாலைகள் பல தந்து இந்நாள்வரை இசையால் வசமாகா இதயம் எது என்று நாம் உணரும் படி நம்மை பல சந்தர்ப்பங்களிலும் மன ஓட்டத்திற்கு இணங்க இந்தப் பாடல்கள் நம் நெஞ்சை அள்ளி அணைத்து அரவணைக்கும் தன்மை உடையது. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு அற்புதம் தமிழ் திரையில் அமைவது சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.

-த.செங்கதிர் தாசன்

(இளையராஜா- எஸ்.பி.பி காம்போவில் உங்களுக்கு பிடித்த பாடலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...!)

https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-spb-and-ilayaraja-combo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா தமிழ் சினிமாவின் இமயம்.
இவரால் வாழ்ந்தவர்கள் அதிகம். அழிந்தவர்கள் இல்லை என்றே கூறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பாலு பாலு தான்.எவளவு திறமையோ அந்தளவுக்கு பணிவும் தன்னடக்கமும் கொன்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan

Representational image

Representational image ( pixabay )

ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையும். உலகளவில் சினிமாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தாலும் அதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் முத்தமிழை ரசித்து திரைத்துறையினரை ஆட்சிபீடத்திலும் அமர்த்தி உள்ளனர். இனி வரும் என் பதிவுகள் அனைத்தும் திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்கள், நம் நெஞ்சில் எவ்வாறு நீங்காத இடம் பிடித்தனர் என்பதை ஆராயும்!

கொடுந்தமிழ், செந்தமிழ், தனித்தமிழ்,நற்றமிழ், முத்தமிழ் என்று பற்பல வண்ணம் தமிழ் இருந்தாலும், இவற்றில் என்னை அள்ளி அணைத்து கருத்தைப் புகட்டி, கலைப்பில்லா பெருவாழ்வை கழிக்கச் செய்யும், கலை நிறைந்த ஒன்று முத்தமிழ்.

கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.

தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம்.

Representational image
 
Representational image

இந்த முத்தமிழை நான் ரசிக்க, நான் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள 6.7 கோடி பேரும் ரசிக்க சமகாலத்தில் பெரும்பங்கு தமிழ்த் திரைத்துறைக்கு உண்டு.

எடுத்த எடுப்பில் தமிழ்சினிமாவை நாகரீகம் அற்றது என்று ஏதோ ஒரு வெறுப்பில் நம்மில் பலர் சொன்னாலும், ஏதோ ஒரு மனநிலையில் உரைத்தாலும் அது தந்த அலாதி இன்பத்தைப் பலமுறை ஒவ்வொரு நாளும் நாம் உணர்வது உண்டு. ஏனெனில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றும் தமிழ் உணர்வாளர்களின் உள்ளுரே பொதிந்த ஒன்று இவை நமக்கு புரிந்த ஒன்றும் கூட.

அத்தியாயம் 1

1. இசைஞானி இளையராஜா

இளையராஜா - மோகன்

1976 மே 14 ஆம் ஆண்டு, அதுவரை தமிழர்களின் பொக்கிஷமாய் பேசப்பட்டு வந்த, இந்நாள் வரை பேசப்படும் எம்எஸ்வி அவர்களின் இசையோடு, இன்னொரு மணிமகுடம் தமிழ்த் திரையுலகில் வந்தது. இதனை எழுபதுகளின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்கள் நன்கு அறிவர், அவர்களில் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து வரலாறு இது.

மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட மோகனின் வருகை 1977இல் கன்னடப்படம் கோகிலா என்றாலும், 1980 இல் மூடுபனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் வருகை. 1981இல் வெளியான கிளிஞ்சல்கள் படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகம், இசை டி ராஜேந்தர்.

இதற்கு முன்னே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் இளையராஜா இசையில் மோகன் கைகோர்த்து இருந்தாலும், முதல் பாடலாய் பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் கிட்டார், வயலின் வைத்து கலக்கலாக இசைத்திருப்பார் இளையராஜா. இன்றிலிருந்து நாற்பத்தி ஒரு வருடம் முன்பு அமைந்த இசை அது. ஒரு முறை மீண்டும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'மைக்' மோகன்
 
'மைக்' மோகன்

பின் அந்தக் கூட்டணி தொடுத்த பல பாமாலை நிறைந்த திரைப்படங்கள் பற்பல. எல்லாம் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்.

பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், விதி, நூறாவது நாள், உதயகீதம், குங்குமச்சிமிழ், இதயக் கோவில், மௌனராகம், மெல்லதிறந்ததுகதவு, இரட்டைவால் குருவி, பாசப்பறவைகள் இப்படி இன்றளவும் நாம் பல மேடை கச்சேரி தொடங்கி, திருமண விழா, பாடகர் தேர்வு என்று எங்கும் நிறைந்த இசை அது. ராஜாவின் ராஜ கீதங்கள் அது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. இதை இசைப் பிரியர்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள், தொடுத்த இசையை மறக்கவும் மாட்டார்கள்.

எண்பதுகளில் காதல் வாய்ப்புப் பெற்ற 1960 இல் பிறந்தவர்கள் இந்தக் கூட்டணியை ரசிப்பதை அவ்வப்போது கேட்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன்.

காதலில் இணைந்த போதும், மோதலில் காதல் பிரிந்த போதும், இணைந்தவர் மணந்த போதும், பிரிந்தவர் இறந்தபோதும், இதுதான் கதி என, சதியால் மதிகெட, விதி பல புதிர்கள் இட்டபோதும், வாழ்வின் விடை அற்ற போதும், இந்தக் கூட்டணியின் இசை வெண்பா ஆறுதல் பூமாலையாய் என்றும் நம் மனதடியில் வாடாத மலராய் அழியாமல் இருக்கும்.

(நினைவலைகள் தொடரும்)

https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-tamil-cinema

நாங்களும் 70 கிட்ஸ் மறக்க முடியாத நாட்கள். ஆண் / பெண் கலவன் பாடசாலையில் படித்த எங்களுக்கு மோக‌னின் பாடல்கள் தான் காதலுக்கு ஒர் உத்வேகத்தை கொடுத்தது. அப்படி உருகி உருகி பாடுவோம். ஆனலும் ஒண்ணுமே செட் ஆகவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

நாங்களும் 70 கிட்ஸ் மறக்க முடியாத நாட்கள். ஆண் / பெண் கலவன் பாடசாலையில் படித்த எங்களுக்கு மோக‌னின் பாடல்கள் தான் காதலுக்கு ஒர் உத்வேகத்தை கொடுத்தது. அப்படி உருகி உருகி பாடுவோம். ஆனலும் ஒண்ணுமே செட் ஆகவில்லை.  

உருகி மட்டும் போதாது, கேட்க கூடியதாகவும் பாட வேணும் 🤣

உண்மையில் 80இஸ் கிட்ஸ் நாங்கள்தான் அதிஸ்டசாலிகள். நாம் கிட்சாக இருக்கும் போது ராஜாவையும், டீன் ஏஜில் ரஹ்மானையும் ஒரு சேர கொண்டாடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

விதி, நூறாவது நாள், உதயகீதம், குங்குமச்சிமிழ்,  இப்படி இன்றளவும் நாம் பல மேடை கச்சேரி தொடங்கி, திருமண விழா, பாடகர் தேர்வு என்று எங்கும் நிறைந்த இசை அது. ராஜாவின் ராஜ கீதங்கள் அது

விதிக்கு இசை இளையராஜா  இல்லை, சங்கர் கணேஷ்.

அதேபோல்..

1 hour ago, உடையார் said:

" மண்ணில் இந்த காதல்" வைரமுத்துவின் வைர வரிகளில், இசைஞானியின் இசையில்,எஸ்பிபி இன் கந்தர்வக் குரலில்

மண்ணில் இந்த காதலின்றி பாடலை எழுதியது வைரமுத்து அல்ல, கங்கை அமரன்..பாவலர் வரதராஜன் பெயரை போட்டுக்கொண்டார்கள்.

கல்யாண தேனிலா.... ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...சிறு பொன்மணி அசையும்...பூவரசம்பூ பூத்தாச்சு..போன்ற

கங்கைஅமரனின் பல பாடல்களை இன்று கேட்கும்போது இவரா எழுதியது என்று பிரமிப்பா இருக்கும், தனியே பாடல் எழுதும் தொழிலை தொடர்ந்திருந்தால் உச்சத்திற்கு சென்றிருக்கவேண்டியவர் எல்லாத்திலையும் கை வைச்சு எதிலும் உச்சம் தொடாமல் போனார்.

எஸ்பிபி மற்றைவர்களைப்போலவே ஒரு பாடகர்.

இளையராஜாவும் மற்றையவர்களைபோலவே ஒரு இசயமைப்பாளர்.

ஆனால் ஏனைய பாடகர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், அவர்கள் வெறும் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் ...

எஸ்பிபியும் இளையராஜாவும் அவதாரங்கள்.

அடுத்து அடுத்து பாடகர்கர்கள் இசையமைப்பாளர்கள் என்ற பேரில் மனிதர்கள் வருவார்கள்,

ஆனால் அவதாரங்கள் அடிக்கடி வரமாட்டார்கள் ஒரேயொரு தடவைதான், எதிர்காலமும் நிகழ்காலமும் இனிமேல் அவர்களை நினைத்து ஏங்குமே தவிர இன்னொருவரை கொண்டு வராது..சினிமா பகுதிக்குள் அரசியல் என்றாலும் இது எம் தேசிய தலைவருக்கும் பொருந்தும்.

3 hours ago, சுவைப்பிரியன் said:

பாலு பாலு தான்.எவளவு திறமையோ அந்தளவுக்கு பணிவும் தன்னடக்கமும் கொன்டவர்.

பாலு பாலு தான். எவளவு திறமையோ? அந்தளவுக்கு பணிவும் தன்னடக்கமும் கொன்டவர் போல் நடிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா + மலேஷியா வசுதேவன் அடிக்க முடியாது.

தண்ணீ கருத்திருச்சு அந்த த‌வள சத்தம் கேட்டடுடிச்சி. இப்பொழுது காதில் ஒலிக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.