Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் — நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் — நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

கனகராசா சரவணன்

கல்முனையில் தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

IMG_20210703_105324-300x169.jpg

அரச காணியில் சட்டவிரோதமாக மண் நிரப்பப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கை இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1 உ கிராம சேவகர் பிரிவிலே உள்ள அரச காணியொன்றில் இங்குள்ள முஸ்லீம் தனிநபரால் மண்போட்டு நிரப்பும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கையை கிராம சேவகர்; தமது கடமையை முன்னெடுத்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தை நாங்கள் பார்வையிட்ட போது அரச காணியொன்றை விளம்பரப்பலகை அகற்றப்பட்டு மண் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மீளவும் இவ்விடயம் இங்கு நடைபெற்றுள்ளது.

IMG_20210703_111431-300x169.jpg

தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுவதும், இங்குள்ள மக்களை சுதந்திரமாக வாழ முடியாத சூழலை உருவாக்குவதுமான செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியான ஒரு வன்முறையை உருவாக்குவததாகவே இருக்கின்றது.

தமிழ் மக்களின் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாமல் இழுத்தடித்து அந்தப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரச காணியை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கையை இந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக் கூடாது என்று எண்ணுகின்ற அரசியல்வாதியும், அவருடன் சேர்ந்த நபர்களுமே இவ்வாறான பணிகளைச் செய்கின்றார்கள்.

IMG_20210703_111934_1-300x169.jpg

கடந்த மாதம் பெரியநீலாவணையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்று அது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பு இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.

இங்கு வாழுகின்ற சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டுமானால் ஒரு சமத்துவமான, நடுநிலையான, நியாயமான வேலைத்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான ஆக்கிரமிப்புகள் இடம்பெறும் போது அது சமூகங்களுக்கிடையில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

இங்கிருக்கின்ற இரண்டு சமூகங்களையும் இணைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய சுதந்திரமான நீதியான நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இந்த நாட்டின் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

எனவே இவ்வாறான ஆக்கிரமிப்புப் பணிகள் இத்துடன் நிறத்தப்பட வேண்டும். சமூகங்களை ஒற்றமைப்படுத்த வேண்டும். அரச காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு பொதுவான சில மக்களுக்குத் தேவையான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்ற போது அரச காணிகள் இல்லையெனக் கூறப்படுகின்றது. எனவே இவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/125935

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இங்கிருக்கின்ற இரண்டு சமூகங்களையும் இணைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய சுதந்திரமான நீதியான நிருவாக நடைமுறையைக் கையாள்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இந்த நாட்டின் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்கின்றது

இப்படியான சம்பவங்களை கண்டும் காணாமல் இருந்து கொண்டு,  ஊக்குவித்தாற்தான்  சாட்டோடு சாட்டாய் தாமும் நில ஆக்கிரமிப்பு செய்யலாம். இவர்களை தடுத்துவிட்டு தாம் எப்படி நிலம் பிடி(பறி)க்கிறதாம்?     

  • கருத்துக்கள உறவுகள்

இதனுள் இனவாதம் பேசாமல், அரச காணியை சட்ட விரோதமாக அபகரிக்க முயன்ற நபர் தடுக்கப்பட்டார் என்று சொல்லலாம் அல்லவா.

ஏனெனில், சிங்களவர்கள் அபகரிக்கையில், இனவாதம் பேசி நடப்பது எதுவும் இல்லை. 🤗

  • கருத்துக்கள உறவுகள்

பசில் நானா வரப்போறாரில்லே ..இனி மூனாக்கள் மெல்ல மெல்ல மூச்செடுப்பினாம்..காணியல்ல வீட்டையும் பறித்தெடுபீனம்....இவ்வளவு நாளும் கோமாவில்..இருந்தவையள்...காத்தான்குடி இனி சகரான் சட்டாம்தான்..புல்லாதான் முடிசூடா மன்னன்...கல்முனையும் இனி கலகலக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் பல இடங்கள் மண் நிரப்பட்டு உறுதிகள் முடிக்கப்பட்டு உள்ளது அனைத்தும் முன்னாள் தமிழர்களது காணிகள் தற்போது மீதமுள்ள சதுப்பு காணிகளையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்  இதற்கு  ஒருவராலும் ஒன்றும் செய்திட முடியாது 

கலையரசன் என்ன செய்வார்  @அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இதனுள் இனவாதம் பேசாமல், அரச காணியை சட்ட விரோதமாக அபகரிக்க முயன்ற நபர் தடுக்கப்பட்டார் என்று சொல்லலாம் அல்லவா.

ஏனெனில், சிங்களவர்கள் அபகரிக்கையில், இனவாதம் பேசி நடப்பது எதுவும் இல்லை. 🤗

இதில் எங்கே வந்தது இனவாதம்?

சிங்களவகள் எமது காணியை அபகரித்ததை எதிர்க்கும் போதும் நாம் இனவாதம் பேசவில்லை. எமது மண்ணை ஆக்கிரமிக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையைதான் முன்வைத்தோம்.

இப்போ முஸ்லீம்களுக்கு கலையரசன் சொல்வதும் அதைதான்.

அடிப்படையில் எமது போராட்டமே ஒரு மண் மீட்பு போராட்டம். இப்போ கலையரசன் சொல்வது இனவாதம் என்றால் தந்தை செல்வாகாலத்தில் இருந்து நாம் போராடியதும் இனவாதமே என்று ஆகிவிடும்.

பிகு: கலையரசன் சொல்லுவதால் ஏதும் நன்மை வராது போகலாம். ஆனால் அவர் சொன்னதில் துளியும் இனவாதம் இல்லை.

வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் என்ற புரிதல் இருந்தால் - “அரச காணி” என்ற பிழையான புரிதல் வராது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆ....

நீங்கள் சொல்வது வேறு, நான் சொல்வது வேறு.

இன்று இஸ்லாமியத் தமிழர்களும், ஏனைய தமிழர்களும் சிங்களத்துக்கு எதிராக இணைய வேண்டிய தேவை உண்டு. அடிமைகளில், பெரிய அடிமை, சிறிய அடிமை என்று தரம் இல்லை.

ஓர், இருவர் சுஜ நல அடாவடியை, இவர்கள் (கலையரசன்) தடுப்பதற்கு, இனவாத முழக்கம் தேவை இல்லை. சட்ட நடவடிக்கை போதுமானது.

இதனை சொல்லும் அதேவேளை, ஹிஸ்புல்லா, ரிஷாட் போன்ற இனவாதிகளை இங்கே கடுமையாக கண்டித்து எழுதி இருக்கிறேன். அவர்கள் செய்தது, அரசியல் நோக்கம் கொண்ட இனவாதம். அது கட்டுப்படுத்த முடியாத அளவு நீண்டு, ரிஷாட் சிறைக்கும், ஹிஸ்புல்லா, தன் மேலான நடவடிக்கை தவிர்க்க, பெரும் தொகை பணம் மிஸ்டர் 10% க்கு கொடுக்க வேண்டி இருந்தது.

1 hour ago, goshan_che said:

வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் என்ற புரிதல் இருந்தால் - “அரச காணி” என்ற பிழையான புரிதல் வராது.

வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் என்பது நிதர்சனமானதோ அதேபோல அங்கே அரச காணி என்பதும் நிதர்சனமானது.

நீங்கள் சிங்கள அரசினை வைத்து குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழர் பாரம்பரிய நிலம் ஆளும் எந்த அரசாக இருந்தாலும், புலிகள் அரசாக இருந்தாலும், ஆளும் state க்கு என உள்ளவை: காடுகள், மலைகள், ஆறுகள், கடல்கள் யாருக்குமே உரிமை இல்லாத காணிகள். பிரித்தானிய காலத்தில், crown lands அல்லது முடிக்குரிய காணிகள் என்றார்கள்.  

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில், இந்த வகை 'அரச காணிகளை', தென் இந்தியாவில் இருந்து வந்து, மிளகாய், புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு இலவசமாக கொடுத்தார்கள். இதனை தெருப்பிள்ளையாருக்கு, வழித் தேங்காயை உடைப்பது போல என்று கூறுவார்கள். 🤗

**

நான் ஒரு பதிவில் சொன்னேன், பௌத்த சிங்களம், இஸ்லாமியர்களை மட்டுமல்ல, கிறிஸ்தவ சிங்களவர்களை கொம்பு சீவி எமக்கு எதிராக திருப்பியது. 1983ல் நெவில் பெர்னாண்டோ, சிறில் மத்தியூ செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா?

இன்று கிறிஸ்தவ சிங்களவர்களே புலம்புகிறார்கள். அதுதான் பௌத்தம்.

நம்மால் முடிந்தால், கண்டி சிங்களத்துக்கும், கரையோர சிங்களத்துக்கும் கொளுவல் வர பிராத்திப்போம்... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நாதம்,

1. இந்த தமிழ் இஸ்லாமியர் சகடை பல பேர் ஏறி சறுக்கி விழுந்த சகடைதான். அவர்களே தம்மை இன்னொரு இனமாக பலவருடமாக உணர்ந்த பின்னும் அவர்களளை தமிழ் இஸ்லாமியர் என ஒரு குடையின் கீழ் கொண்டு வர முடியாது.

அவர்களை சிங்களவர் போல் இன்னொரு stakeholder ஆக டீல் பண்ண மட்டுமே முடியும்.

அவர்களுக்கு எதிராக குறிப்பாக ஒரு ஆசிரியையின் அபாயாவை தமிழர்கள் எதிர்த்த போது நான் அதை தேவையில்லாத வேலை என்று கண்டித்து எழுதினேன். ஏனென்றால் அது இனவாதம். ஆனால் கலையரசன் பேசியது இனவாதம் அல்ல. 

2. அரச காணி என்பதே தவறு. சுயநிர்ணயம் உள்ள நாம்தான் அந்த நிலத்தின் பங்குதாரர்கள். நாம் எமகு சுயநிர்ணயத்தை நம்பினால், அந்த காணி அதிகாரம் எமக்குரியது என்பதையும் நம்ப வேண்டும். அப்படி என்றால் இலங்கை அரசுக்கு அங்கே ஏது காணி? ஆகவே தமிழர்களின் சுயநிர்ணயத்தை, பாரம்பரிய நில கோட்ட்ப்பாடை நம்பும் எவரும் “இலங்கை அரச காணி” என்பதை கையில் எடுக்க முடியாது. அப்படி செய்தால் அது தத்துவ வழுவாகும். போத்துகேயர் காலம் தொட்டு, காணி உரிமை எம்மகுதான். அது பறிக்கப்பட்டுள்ளது. அதைபற்றி போய் பறித்தவனிடமே முறையிட்டால், நாமே அவர்களின் மேலாண்மையை ஒத்து கொண்டதாக ஆகிவிடுமல்லவா?

27 minutes ago, Nathamuni said:

நம்மால் முடிந்தால், கண்டி சிங்களத்துக்கும், கரையோர சிங்களத்துக்கும் கொளுவல் வர பிராத்திப்போ

கனவு காணும் உரிமை போல் பிரார்திக்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு😎.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

நாதம்,

2. அரச காணி என்பதே தவறு. சுயநிர்ணயம் உள்ள நாம்தான் அந்த நிலத்தின் பங்குதாரர்கள். நாம் எமகு சுயநிர்ணயத்தை நம்பினால், அந்த காணி அதிகாரம் எமக்குரியது என்பதையும் நம்ப வேண்டும். அப்படி என்றால் இலங்கை அரசுக்கு அங்கே ஏது காணி? ஆகவே தமிழர்களின் சுயநிர்ணயத்தை, பாரம்பரிய நில கோட்ட்ப்பாடை நம்பும் எவரும் “இலங்கை அரச காணி” என்பதை கையில் எடுக்க முடியாது. அப்படி செய்தால் அது தத்துவ வழுவாகும். போத்துகேயர் காலம் தொட்டு, காணி உரிமை எம்மகுதான். அது பறிக்கப்பட்டுள்ளது. அதைபற்றி போய் பறித்தவனிடமே முறையிட்டால், நாமே அவர்களின் மேலாண்மையை ஒத்து கொண்டதாக ஆகிவிடுமல்லவா?

நான் சொன்னதை  ஒரு முறை மீண்டும் பாருங்கள்.

இலங்கை அரசை, இன்றைய நிலையினை, விடுங்கள். எந்த அரசானாலும், அரச காணி என்பது நிதர்சனம் என்றே சொன்னேன்.

48 minutes ago, goshan_che said:

1. இந்த தமிழ் இஸ்லாமியர் சகடை பல பேர் ஏறி சறுக்கி விழுந்த சகடைதான். அவர்களே தம்மை இன்னொரு இனமாக பலவருடமாக உணர்ந்த பின்னும் அவர்களளை தமிழ் இஸ்லாமியர் என ஒரு குடையின் கீழ் கொண்டு வர முடியாது.

அவர்களை சிங்களவர் போல் இன்னொரு stakeholder ஆக டீல் பண்ண மட்டுமே முடியும்.

தாம், இஸ்லாமியர் என்று, சிங்களவர் மடியில் இருந்து விளையாடிய போது, அருக்காணம் விட்டவர்கள் தான்.  

அவர்களுக்கும், சிங்களத்துக்கும் பகை 1915ல் இருந்தே இருக்கிறது. தமிழர், சிங்களவர் பிரச்சனை வந்ததும், கிரகணம் மறைத்தது போல, அது மறைந்து இருந்தது.

இன்று, எமக்கு அவர்கள் தேவையோ இல்லையோ, அவர்களுக்கு, நாம் தேவை. 

குண்டு வெடிப்புகளுக்கு பிறகு, அவர்களை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சீந்துவார் இல்லை. அதனால் தான், சொன்னேன், நமக்கு, இனவாதம் தேவை இல்லை. 

ஏனெனில், அதன் பெருவலியை அனுபவித்திருக்கிறோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதை  ஒரு முறை மீண்டும் பாருங்கள்.

இலங்கை அரசை, இன்றைய நிலையினை, விடுங்கள். எந்த அரசானாலும், அரச காணி என்பது நிதர்சனம் என்றே சொன்னேன்.

தாம், இஸ்லாமியர் என்று, சிங்களவர் மடியில் இருந்து விளையாடிய போது, அருக்காணம் விட்டவர்கள் தான்.  

அவர்களுக்கும், சிங்களத்துக்கும் பகை 1915ல் இருந்தே இருக்கிறது. தமிழர், சிங்களவர் பிரச்சனை வந்ததும், கிரகணம் மறைத்தது போல, அது மறைந்து இருந்தது.

இன்று, எமக்கு அவர்கள் தேவையோ இல்லையோ, அவர்களுக்கு, நாம் தேவை. 

குண்டு வெடிப்புகளுக்கு பிறகு, அவர்களை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சீந்துவார் இல்லை. அதனால் தான், சொன்னேன், நமக்கு, இனவாதம் தேவை இல்லை. 

ஏனெனில், அதன் பெருவலியை அனுபவித்திருக்கிறோம்.

1. நீங்கள் சொன்னதைதான் சொல்கிறேன். அரச காணி என்ற முறைப்பாட்டை தமிழர் சுயநிர்ணயத்தை பேசும் கலையரசன் பேச முடியாது. அப்படி என்றால் கிராந்துரு கோட்டையில் இருந்து நாயாறு வரை காணிகளை பட்டா போட்டு கொடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது என நாமே ஒத்துகொள்வதாக முடியும்.

2. முஸ்லீம்கள் தமக்கு நமது உதவி தேவை என்று உங்களிடம் கேட்டார்களா? அல்லது இணைந்த வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் பற்றியாவது பேசுகிறார்களா? அவர்களுக்கு தமிழரையும், சிங்களவரையும் எங்கே வைக்கவேண்டும் எப்படி டீல் பண்ண வேண்டும் என்ற தெளிவு உள்ளது.

நீங்கள் எப்போதும் பழியை ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் மீதும், ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதும் தூக்கி போட்டு, சிங்கள மக்களினது மஹாவம்ச இனவாதத்துக்கும். முஸ்லீம்களின் மதவாத்துக்கும் வெள்ளை அடிப்பதை கண்டுள்ளேன்.

இலங்கையின் பெரும்பாலான மக்கள் ரொம்ப நல்லவர்கள் ஆனால் அரசியல்வாதிகள்தான் மோசம் என்ற உங்கள் நிலைப்பாட்டின் வெளிப்பாடே இது.

ஆனால் நிலமை அப்படி அல்ல. இலங்கையில் சிங்கள மக்கள் மிக மோசமான இனவாதிகள். தலைவர்கள் சுயநலமாக அதை பயன்படுத்துகிறார்களே ஒழிய இலங்கையின் இனவாதத்தின் ஊற்றுக்கண் சிங்கள மக்களே. இதை நான் பலருக்கு முகத்துக்கு நேராகவே சொல்லியுள்ளேன். 

அதே போல் முஸ்லீம்களுக்கும் எமக்கும் பல வளங்களை பகிரும் பிராசனைகள் உண்டு. கல்முனை முதல் ஒவ்வொரு விடயமும் இப்படித்தான். ஆகவே அவர்களோடு டீல் பண்ணத்தான் முடியுமே ஒழிய “தமிழ் பேசும் இஸ்லாமியர்” என்று போய் தகடு வாங்க முடியாது. 

அவர்கள் ஒரு மறுக்க முடியாத சக்தி. அவர்களுக்கு உரிய வளப்பகிர்வு நிச்சயம் கொடுக்கபட வேண்டும். ஆனால் எம் வளபகிர்வை நாம்தான் போராடி உறுதி செய்யவும் வேண்டும். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

அரச காணி என்ற பதத்தினை, மீண்டும், மீண்டும், 'சிங்கள அரசின்' பார்வைக்குள் வைத்தே இன்னும் பார்க்கிறீர்கள்.

சிங்கள மக்கள் இனவாதிகள் என்பது மறைக்க முடியாது. வெள்ளைகளும் பெரும் இனவாதிகள் தான். ஆனாலும் நவீன பிரித்தானிய அரசின் நிலைப்பாடினால் நாமும், இங்கே வாழ்ந்தும் வேலை செய்ய கூடியதாக உள்ளது. 

வெள்ளை தோல், கிழக்கு ஐரோப்பியர்களினால், எதிர்காலத்தில் தமக்கு வரக்கூடிய ஆபத்து குறித்த இனவாதத்தின் விளைவே, ஜனநாயக பிரெக்ஸிட் முடிவு.

ஆனாலும், இங்கே வந்தவர்களுக்கு, வதிவிட உரிமை என்பது, அரசியல் தலைமைத்துவ முடிவு.

ஆகவே, தலைமை சரியாக இருக்கவேண்டும், அப்போதே மக்கள் சரியாக இருப்பார்கள் என்ற பொருள் படும் உங்கள் கருத்து சரியானது.

ஆனால் மறுபடியும் இதனையும் சொல்கிறீர்களே:

"நீங்கள் எப்போதும் பழியை ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் மீதும், ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதும் தூக்கி போட்டு, சிங்கள மக்களினது மஹாவம்ச இனவாதத்துக்கும். முஸ்லீம்களின் மதவாத்துக்கும் வெள்ளை அடிப்பதை கண்டுள்ளேன்."

சிங்கள அரசியல்வாதிகள், முக்கியமாக, பண்டா, ஜேஆர் சரியாக இருந்திருந்தால், நாடு இன்று இந்த அவலத்தில் இருக்காதே.

முஸ்லிம் அரசியல்வாதிகளில், மிகவும் மோசமான இனவாதிகள், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிஷாட்..... இன்று எங்கே அவர்கள்? 

மோசமான தலைமைத்துவத்தினால், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இன்று அவல நிலையில் உள்ளனர்.

தமிழர்களுக்கு, நிச்சயமாக விடிவு வெகுதூரத்தில் இல்லை.

சரி, உங்கள் சில கருத்துடன் எனக்கு சம்மதம் இல்லாவிடினும், கடந்து செல்வோம், வேறு ஒரு திரியில் சந்திப்போம்.

உங்கள் நேரத்துக்கு நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

அரச காணி என்ற பதத்தினை, மீண்டும், மீண்டும், 'சிங்கள அரசின்' பார்வைக்குள் வைத்தே இன்னும் பார்க்கிறீர்கள்.

எமெக்கென ஒர் அரசு இல்லாத போது அரச காணி, என்றால் அது எந்த அரசின் காணி? போர்த்துகேய, ஒல்லாந்த, ஆங்கிலேய அல்லது இலங்கை அரசகாணிதான். 

இது “தமிழர் அரசின் காணி” என்பதை  நேரடியாக சொல்ல முடியாமல்  குறியீட்டால் உணர்த்தும் சொல்தான் “தமிழர் பூர்வீக நிலம்” என்ற சொல்லாடல். இதில் நீங்கள் எங்கே “இனவாதத்தை” கண்டீர்கள் என இன்னமும் விளக்கவில்லை.

29 minutes ago, Nathamuni said:

வெள்ளை தோல், கிழக்கு ஐரோப்பியர்களினால், எதிர்காலத்தில் தமக்கு வரக்கூடிய ஆபத்து குறித்த இனவாதத்தின் விளைவே, ஜனநாயக பிரெக்ஸிட் முடிவு.

பிரெகெசிற்றை இலங்கை அரசின் செயல்பாடுடன் ஒப்பிடுவதை போல் ஒரு வெள்ளையடிப்பு இருக்க முடியாது. இதுவரை வந்தவர்கள் இருக்கலாம். இலவசமாக உங்களுக்கு வதிவிட வீசா தருகிறோம். இனி வருவதை கட்டுபடுத்துகிறோம் என்ற ஜனநாயக செயல்பாடு பிரெக்சிற். அதில் இனவாதமும் ஓர் அங்கம்.

ஆனால் இலங்கையில் நடப்பது வட கிழக்கின் பூர்வகுடிகளை, நூற்றாண்டுகள் வாழ்ந்த மலையக தமிழரை நாடற்றவர், சுயநிர்ணயம் அற்றவர் ஆக்கும் வன்கொடுமை, இனவழிப்பு. 

இரண்டையும் ஓப்பிடுவதே தமிழர் போராட்டத்துக்கு செய்யும் அவமரியாதை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

சிங்கள அரசியல்வாதிகள், முக்கியமாக, பண்டா, ஜேஆர் சரியாக இருந்திருந்தால், நாடு இன்று இந்த அவலத்தில் இருக்காதே

பண்டா, ஜே ஆருக்கு மாற்றாக கொத்தலாவல இருந்தாரே? Language parity தான் தனது கொள்கை என யாழில் சொல்லி போன அவரை தோற்கடித்து தனி சிங்கள சட்டம் தருவேன் என முழங்கிய பண்டாவை அமோக வெற்றி பெற வைத்தது, ஜப்பான் மக்களா?

சமகாலத்தில் விக்ரமபாகு சகோதரயாவுக்கு எத்தனை சிங்கள வாக்குகள் வீழ்ந்தன?

23 minutes ago, Nathamuni said:

மோசமான தலைமைத்துவத்தினால், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இன்று அவல நிலையில் உள்ளனர்.

நிச்சயமாக இல்லை. Every country gets a government it deserves என்கிறார் ஒரு அறிஞர். மீண்டும் மீண்டும் மோசமான தலைமைகளை சிங்கள மக்கள் தேர ஒரே காரணம் அவர்களிடம் உள்ள தமிழர் குரோத உணர்வு மட்டுமே.

உங்கள் இலங்கை அபிமான நிலைபாட்டில் இருந்து இதை ஏற்க முடியாவிட்டாலும், இதுதான் உண்மை.

இன்னொரு திரியில் சந்திப்போம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.