Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

Featured Replies

14 hours ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

கோஷான் நீங்கள் கூறிய இந்த விடயம் எகிப்திற்கு விடுமுறை சென்ற என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர்களிடம் 10 வருடங்களுக்கு முதல் அறிந்தேன். காதலனுடன் எகிப்து சென்றவரின் நேரடி அனுபவம். 

  • Replies 83
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மெட்டிரோ ரெயில்களில் 👇

https://egyptianstreets.com/2018/07/04/women-tell-distressing-stories-of-their-experiences-on-egypts-metro/

போராட போன பெண்கள் மீது👇

https://www.amnesty.org/en/latest/news/2012/06/egypt-investigate-attacks-women-protesters/

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

மீண்டும் தவறான புரிதல் - நான் சொல்லுவது கஸ்டம்ஸ், பாங்க் போன்ற இடங்களில். கஸ்டமராக வரும் அரபிக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர் பெண் என்றால் - கூப்பிடு ஆம்பிளையை என கேட்பவர் பலர் உள்ளனர். இந்த நாடுகளில் அந்த கோரிக்கை ஏற்கவும் படும்.

தல, அப்படி ஒரு பெண்ணின் அதிகாரத்தினை மறுப்பவர், ஒரு அதிகாரம், மேல்மட்ட செல்வாக்கு உள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம். சும்மா அரபி, அலம்பறை பண்ணினால்... உப்புக்கண்டம் போட்டு விடுவார்கள்.

உதாரணமாக, நீங்கள் யாழ்ப்பாணம் போனால், உங்கள் லெவலே வேறை... யாவாரம் எல்லாம் செய்யும்... உங்கடை செல்வாக்கு அப்படி... 😜

நான் போனால், இருக்கிற இடமே தெரியாது....  பம்மிக் கொண்டு இருந்து விட்டு ஓடி வந்துடுவேன்.... 😰

****

அடுத்த விசயம்.... உங்களுக்கே தெரியும்... இந்த முபாரக்கின் எகிப்து....சதாமின் இராக், கடாபியின் லிபியா குறித்து, மேல் நாட்டு ஊடகங்கள் செய்த விசம, விஷ பிரச்சாரங்கள்....

கேணல் கடாபி.... ஒரு பெண் பித்தர் போலவே காட்டி தொலைத்தார்களே.... அது உண்மையாகவா இருந்திருக்கும்?

டோனி பிளேயரின், சதாமின் WMD புலுடா பத்தி இன்றும் எழுதுகிறார்கள்.  😇

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பெண்களே அருவருக்கும், இந்த தலைப்பில், கருத்துக்களை அவ்வாறு தான் பகிர முடியும். வெறுமனே.... ஒரு டாக்டர் போல... சுகாதாரம் அது இது என்று பேசி, வாசிப்பவர் முகம் சுளிப்பை இன்னும், மோசமாக்க கூடாது அல்லவா

அப்படியாயின் நீங்கள் இங்கே இந்த தலைப்பை மட்டும் வாசித்துவிட்டு கருத்தை எழுதியிருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? இல்லையே!

1 hour ago, colomban said:

பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்ணின் கண்ணீர் வலிமையானது.
இதனால் பெண்கள் பிரச்சினகள் முதன்மை படுத்தப்படுகின்றான. 
ஆண்கள் அப்படியல்லவே

இந்த மாதிரி dialogue கேட்டு பெண்களுக்கே எரிச்சல் வரும்.. உண்மையிலேயே ஆண்கள் தமது பிரச்சனைகளை சரியான வழிமுறைகளை நாடி கூறுமிடத்து உதவிகள் கிடைப்பதை அறியலாம்.. மேலும் கீழே இணைத்துள்ள கட்டுரை ஆண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், அவை ஏன் அதிகம் வெளியே வருவதில்லை? அதற்கான காரணங்கள், உதவிகள் பற்றி கூறுகிறார்கள்.. வாசித்தால் உங்களுக்கும் விளங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தல, அப்படி ஒரு பெண்ணின் அதிகாரத்தினை மறுப்பவர், ஒரு அதிகாரம், மேல்மட்ட செல்வாக்கு உள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம். சும்மா அரபி, அலம்பறை பண்ணினால்... உப்புக்கண்டம் போட்டு விடுவார்கள்.

இல்லை. ஒரு அரபி என்பதற்காகவே அவர்கள் அதி மேலானவர்களாகவே நடத்தப்படுவர். 

பெண் அதிகாரியின் முகத்தில் கூட விழிக்காமல், நிலத்தில் துப்பி விட்டு (அவமானப்படுத்தலின் குறியீடு), அவரை விட பதவி குறைந்த ஆணிடம் - போய் என்னிடம் கேள்வி கேட்க ஒரு ஆணை அழைத்துவா என்று கேட்கும் சாதாரண அரபி குடிமகன்களே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கோஷான் நீங்கள் கூறிய இந்த விடயம் எகிப்திற்கு விடுமுறை சென்ற என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர்களிடம் 10 வருடங்களுக்கு முதல் அறிந்தேன். காதலனுடன் எகிப்து சென்றவரின் நேரடி அனுபவம். 

இது எகிப்தில் மட்டும் நடப்பது இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

காதலருடன், இலங்கை சென்ற ரசிய பெண்ணை, இதோ போல ஒரு அரசியல்வாதி ஆசைப்பட, அந்த காதலர் எதிர்க்க கொலையில் முடிந்தது.

ஆகவே நான் சொல்லவருவது.... நாம் வாழ்ந்த, வாழும் நாடுகளில் அதே பிரச்சனைகள் இருக்கும் போது, அடுத்த நாடுகளில் மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது என்பதை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அடுத்த நாடுகளில் மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது என்பதை. 

அப்படி எங்கேயும் கட்டுரையோ, கருத்தாளர்களோ சொல்லவில்லை.

மற்றைய நாடுகளில் இது நடப்பதை போல அன்றி brown/black skinned westernized women இந்த தொல்லைக்கு எகிப்தில் ஆளாகிறார்கள் என்பதே இங்கே சொல்லபடுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லை. ஒரு அரபி என்பதற்காகவே அவர்கள் அதி மேலானவர்களாகவே நடத்தப்படுவர். 

பெண் அதிகாரியின் முகத்தில் கூட விழிக்காமல், நிலத்தில் துப்பி விட்டு (அவமானப்படுத்தலின் குறியீடு), அவரை விட பதவி குறைந்த ஆணிடம் - போய் என்னிடம் கேள்வி கேட்க ஒரு ஆணை அழைத்துவா என்று கேட்கும் சாதாரண அரபி குடிமகன்களே இருக்கிறார்கள்.

தல...

எண்ணெய் சேக்குகள், தலைக்கனம் பிடித்தவர்கள். அவர்கள் தான் உலகின் மிக மோசமான இனத்துவேசிகள் என்று வாசித்து இருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ஒருவர், நிச்சயமாக பணம், செல்வாக்கு கொண்ட ஒருவராகவே இருப்பார்.

சாதாரண அரபி, அவ்வாறு செய்வது, எந்த மன்னரின் அல்லது அரசின் சார்பில் அந்த பெண் அதிகாரி இயங்குகிறாரோ அவருக்கே அவமரியாதை செய்ததாகவே இருக்கும்.

ஆகவே, பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக இந்தியா சென்றால், குடிவரவு அதிகாரிகளுடன் எக்காரணம் கொண்டும் விதண்டாவாதம் செய்யாதீர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார்கள், விடுமுறை செல்பவர்களுக்கு. அவ்வளவு சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல, ஒரு 5 கிராம் தூளை சொருகி விட்டு, அதை கடத்தியவர் என்று உங்கள் வாழ்வையே நாசமாக்குவார்கள் என்பதால்.

நீங்கள் சொல்வதை மறுக்க வில்லை, முன்பு நடந்திருக்கலாம், இப்போது நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

சட்டன் பகுதியில் இருந்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்த உடன், நம்மவர் கிளம்பி, துபாய் போயுள்ளார், குடும்பத்துடன்..... இலங்கை போக ட்ரான்சிட்.....

பெண் அதிகாரி, இவர்தானோ என்று செக் பண்ண நேரம் எடுத்து இருக்கிறார்.... இவர்.... borken இங்கிலீசிலை விட, பாஸ்போர்ட்டினை ட்ராயர் உள்ளே வைத்து விட்டு, இரு வாறேன் என்று அவர் போய் விட்டார்....

அவர் வீடு, போய்..... அடுத்தநாள் மாலை டியூட்டி வரும் வரை.... நம்மாளு குடும்பத்துடன் வாடி இருந்தார்.

அதுவே அதிகார பலம். 

9 minutes ago, goshan_che said:

அப்படி எங்கேயும் கட்டுரையோ, கருத்தாளர்களோ சொல்லவில்லை.

மற்றைய நாடுகளில் இது நடப்பதை போல அன்றி brown/black skinned westernized women இந்த தொல்லைக்கு எகிப்தில் ஆளாகிறார்கள் என்பதே இங்கே சொல்லபடுவது. 

தல, நான் எழுதினதை வாசியுங்கோ....இந்தியாவில், இலங்கையில்... நடக்காத நாசமறுப்புகளா, எகிப்தில் நடப்பதாக சொல்கிறார்கள் என்றே சொல்கிறேன்...

***

சரி... தல.... bbq ரெடி.... கூலிங் பீரும் ரெடி.... பிறகு சந்திப்போம்....

நீங்கள் என்ன மாதிரி?? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தல...

எண்ணெய் சேக்குகள், தலைக்கனம் பிடித்தவர்கள். அவர்கள் தான் உலகின் மிக மோசமான இனத்துவேசிகள் என்று வாசித்து இருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ஒருவர், நிச்சயமாக பணம், செல்வாக்கு கொண்ட ஒருவராகவே இருப்பார்.

சாதாரண அரபி, அவ்வாறு செய்வது, எந்த மன்னரின் அல்லது அரசின் சார்பில் அந்த பெண் அதிகாரி இயங்குகிறாரோ அவருக்கே அவமரியாதை செய்ததாகவே இருக்கும்.

ஆகவே, பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக இந்தியா சென்றால், குடிவரவு அதிகாரிகளுடன் எக்காரணம் கொண்டும் விதண்டாவாதம் செய்யாதீர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார்கள், விடுமுறை செல்பவர்களுக்கு. அவ்வளவு சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல, ஒரு 5 கிராம் தூளை சொருகி விட்டு, அதை கடத்தியவர் என்று உங்கள் வாழ்வையே நாசமாக்குவார்கள் என்பதால்.

நீங்கள் சொல்வதை மறுக்க வில்லை, முன்பு நடந்திருக்கலாம், இப்போது நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

சட்டன் பகுதியில் இருந்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்த உடன், நம்மவர் கிளம்பி, துபாய் போயுள்ளார், குடும்பத்துடன்..... இலங்கை போக ட்ரான்சிட்.....

பெண் அதிகாரி, இவர்தானோ என்று செக் பண்ண நேரம் எடுத்து இருக்கிறார்.... இவர்.... borken இங்கிலீசிலை விட, பாஸ்போர்ட்டினை ட்ராயர் உள்ளே வைத்து விட்டு, இரு வாறேன் என்று அவர் போய் விட்டார்....

அவர் வீடு, போய்..... அடுத்தநாள் மாலை டியூட்டி வரும் வரை.... நம்மாளு குடும்பத்துடன் வாடி இருந்தார்.

அதுவே அதிகார பலம். 

இல்லை. சாதாரண அரபிகளுக்கே இந்த அளவு அதிகாரம் இப்போதும் உண்டு. அதிகாரத்தின் மேல் நிலையில் இருப்பவர்கள் உங்கள் நிறுவனங்களுக்கே வரமாட்டார்கள். நீங்கள் அவர்களிடம் போக வேண்டி இருக்கும்.

நியாபகம் இருக்கலாம் - எமிரேட்சில் ஒரு ஆங்கில பெண் பயணம் செய்தார். எமிரேட்ஸ் குடுத்த இலவச குடிவகையை வானில் பறக்கும் போது அளவாக குடித்தார். டுபாய் மண்ணில் குடிக்கவில்லை.

இமிகிரேசனில் ஒரு அதிகாரியோடு முறுகல். குடித்துள்ளார் என கூறி சில நாட்கள் சிறைவாசம்.  

தெரிந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் - கேள்வி கேட்கும் இமிகிரேசன் உட்பட்ட வேலைகள் எல்லாவறிலும் எமிரேட்டிகள்தான் இருப்பார்கள் அதுவும் ஆண்கள் மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நியாபகம் இருக்கலாம் - எமிரேட்சில் ஒரு ஆங்கில பெண் பயணம் செய்தார். எமிரேட்ஸ் குடுத்த இலவச குடிவகையை வானில் பறக்கும் போது அளவாக குடித்தார். டுபாய் மண்ணில் குடிக்கவில்லை.

இமிகிரேசனில் ஒரு அதிகாரியோடு முறுகல். குடித்துள்ளார் என கூறி சில நாட்கள் சிறைவாசம்.  

நீங்கள் சொல்வது, ஒரு பெரிய ராஜதந்திர சிக்கலுடன் முடிவுக்கு வந்தது.

அந்த பெண், நான் சொன்ன அதே தவறினை செய்தார். குடிவரவு அதிகாரிகளுடன் விதண்டாவாதம் செய்தார். அவர்களும், அவர் குடித்திருந்ததால், தம்முடன் விதண்டாவாதம் செய்கிறார் என்று கைது செய்தார்கள்.

அந்த குடிபானத்தை கொடுத்தது, எமிரேட்ஸ் விமானம் தானே என்று பிரிட்டனில் பெரிய புகைச்சல் கிளம்ப, பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு தலையிட, துபாய் அமீரின் நேரடி உத்தரவில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

அதனால் தான் சொல்கிறேன், பெண்ணாயினும், ஆணாயினும், தமது அதிகாரபலத்தினை (collective power) விட்டு கொடுக்கவே மாட்டார்கள். 

எச்சி துப்பி விட்டு போனவர், செல்வாக்கு இல்லாத சாதாரண அரபி என்றால், அமீரை அல்லது அல்லாவை நிந்தித்தார் என்று சொல்லியாவது அவர் கதையை முடித்து விடுவார்கள். 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஒரு கேள்வி! எகிப்தில் நடந்தாலென்ன, அவுஸ்ரேலியாவிலோ அல்லது பிலீப்பீன்ஸிலோ நடந்தால் என்ன இந்த மாதிரி வன்முறைகளில் வேறுபாடு அல்லது முறைகளில் வேறுபாடு உள்ளதா?

இல்லையே பிறகு ஏன் இந்தளவு கருத்துக்கள். இந்த கட்டுரையின் தலைப்பை பிழையாக எழுதியிருந்தாலும் அது கூறுவது உண்மையான நிகழ்வுகளே.. பாதிக்கபடுவதும் மனிதர்களே.. 

விளங்காத மனித மனங்கள்!!!

உங்களுக்காக இன்மொரு கட்டுரை பற்றிய தகவல். இது ஆங்கில BBCஅயர் வெளியான ஒன்று யாழ் திரைகடலோடியில் இணைத்துள்ளேன். விரும்பினால் வாசியுங்கள். 

https://www.bbc.com/news/world-asia-57767067

In numbers: Life in Afghanistan after America leaves

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது, ஒரு பெரிய ராஜதந்திர சிக்கலுடன் முடிவுக்கு வந்தது.

அந்த பெண், நான் சொன்ன அதே தவறினை செய்தார். குடிவரவு அதிகாரிகளுடன் விதண்டாவாதம் செய்தார். அவர்களும், அவர் குடித்திருந்ததால், தம்முடன் விதண்டாவாதம் செய்கிறார் என்று கைது செய்தார்கள்.

அந்த குடிபானத்தை கொடுத்தது, எமிரேட்ஸ் விமானம் தானே என்று பிரிட்டனில் பெரிய புகைச்சல் கிளம்ப, பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு தலையிட, துபாய் அமீரின் நேரடி உத்தரவில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

அதனால் தான் சொல்கிறேன், பெண்ணாயினும், ஆணாயினும், தமது அதிகாரபலத்தினை விட்டு கொடுக்கவே மாட்டார்கள். 

மன்னிக்க வேண்டும் இதை இதற்கு மேல் எனக்கு விளங்கபடுத்த தெரியவில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

இலங்கையில் தமிழர்/முஸ்லீம்கள் என்ன அதிகாரிகள், அமைச்சர் ஆனாலும் தூசண பிக்கு ஏனைய பிக்குகள் முன் அடங்கிதான் போக முடியும். அதே போலதான் இதுவும்.

பிக்கு= சாதாரண எமிரேட்டி குடிமகன்.

தமிழர்/முஸ்லீம்கள் = எமிரேட்டி அல்லாதோர்.

சந்திப்பம் - தேவையில்லாமல் திரி நீளுது.

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னிடம் ஒரு கேள்வி! எகிப்தில் நடந்தாலென்ன, அவுஸ்ரேலியாவிலோ அல்லது பிலீப்பீன்ஸிலோ நடந்தால் என்ன இந்த மாதிரி வன்முறைகளில் வேறுபாடு அல்லது முறைகளில் வேறுபாடு உள்ளதா?

இல்லையே பிறகு ஏன் இந்தளவு கருத்துக்கள். இந்த கட்டுரையின் தலைப்பை பிழையாக எழுதியிருந்தாலும் அது கூறுவது உண்மையான நிகழ்வுகளே.. பாதிக்கபடுவதும் மனிதர்களே.. 

விளங்காத மனித மனங்கள்!!!

உங்களுக்காக இன்மொரு கட்டுரை பற்றிய தகவல். இது ஆங்கில BBCஅயர் வெளியான ஒன்று யாழ் திரைகடலோடியில் இணைத்துள்ளேன். விரும்பினால் வாசியுங்கள். 

https://www.bbc.com/news/world-asia-57767067

In numbers: Life in Afghanistan after America leaves

மிக சரியான கருத்து இது எங்கே நடந்தாலும் அலசபட வேண்டியதே. எகிப்தில் நடப்பதில் இருந்து எமது நாடுகளில், ஊர்களில், வீட்டில் இப்படி நடக்காமல் தடுக்க முடியுமா என்று பார்ப்பதே ஆக்கபூர்வமான சிந்தனை.

ஆனால் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகை - ஆகவே எகிப்தில் இது ஒரு “நோய் தொற்று போல” புரையோடி போயுள்ள பிரச்சனை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Endemic =புரையோடியுள்ள

எமக்குத்தான் சொற்கள் நினைவுக்கு வருவதில்லையே ஒழிய தமிழ் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்தான்❤️.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி 

நானும் உங்களைபோல ஒரு  Chartered Management Accountant பல வ‌ருடங்களாக இங்கு வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். நான் வேலை செய்த industry இல் எனக்கு மறக்க முடியாத இன்ஸ்ட்ரி, travel & tourism ஆடம்பர இரவு விடுதிகள் / ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். இதில் பல சந்தர்ப்பத்தில் நான் பலருடன் பழக வேண்டி ஏற்பட்டது. நைட் கிள‌ப்பில் பல‌ விலைமாதர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருக்கும். 

அரபு இனமானது பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கும் ஓர் இனம். பெல்லி டான்ஸ்ர்களை நோக்கி பணத்தி வீசுதல், தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை தனது அதிகாரம் மூலம் பாலியல் இச்சைகளுக்கு அடி பணியவைத்தல்.  பெண்களை வேலைக்கு என எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடத்தில், பாலியல் தேவைகளை மிருகத்தனமாக / வக்கிரமான விதத்தில் தீர்த்து கொள்ளால் என பல விடயங்கள் உண்டு. 
இப்படியும் மனிதன் பெண்களை வதைத்து இன்பம் காண்பார்களா? மிருகங்கள்...

இவர்களுக்கு பெண்களின் அருமை தெரியாது. சிறுவய‌திலிருந்தே  ஆண் , பெண் தனியான பாடசாலயில் படிப்பார்கள், பெண்களுளை எந்த விதத்திலும் மரியாதையாக பண்பாக நடத்த மாட்டர்கள். 
இவர்களுடய மதம்மும் இப்படியே போதிகின்றது. பல்தாரமணம், மெஸ்பர் திருமணம், அதிக இனப்பெறுக்கம் என இதேயேதான் போதிகின்றது. எனவேதான் இவர்க்கள் சிறுவயதில் இருந்தே இந்த இந்த மாதிரி மனவக்கிரம் உடையவர்களாக இருகின்றார்கள். இதை இவர்கள் தாங்கள் நாட்டு பெண்களுக்கோ அல்லது அரபி இனப் பெண்களுகோ செய்வதில்லை. ஆசிய / western   பெண்களுக்கே செய்வார்கள். 

லண்டனில் முன்னாள் உள்ள கட்டார் துதுவர் கூட இந்த மாதி ஒர் ஆள்தான்.  
https://www.thelondoneconomic.com/news/pa-at-qatari-embassy-subjected-to-campaign-of-sexual-harassment-drove-her-to-brink-of-suicide-167982/

துபாய் சேக்கின் மனைவி கூட இங்கிலந்தில் தான் அசைலம் அடித்துள்ளார். 

5 நாட்கள் லீவு வருகின்றது. நாளை மறு நாள் ஹ‌ஜ்ஜுப் பெருனாள் ஆடு வெட்டப்படும், இரத்தம் பார்க்பபடும்.  புரியாணி செய்யப்ப்டும். பின்பு பெல்லி டான்ஸர்கள் சுற்றி ஆடுவார்கள். மார்பில் பண நோட்டுக்களை சொறுகுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கொழும்பான்.... நல்லது....  கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு, எனக்கும் டிக்கெட் போடுங்கோ... கொரோனா முடிய, தமிழகம், கொழும்பு பக்கம் போனோம் எண்டால், நீங்கள் சொன்ன travel & tourism ஆடம்பர இரவு விடுதிகள் / ஹோட்டல் போன்ற இடங்களுக்கு போனால் அவ்வளவு வேலைகளும் அங்கு நடப்பதை பார்க்கலாம். 😁

*****

ஆங்கில படங்களை பார்த்து, வெள்ளை இன பெண்கள் என்றால், கூப்பிட்டவுடன் இணங்கி வருவார்கள் என்று நினைத்திருந்தேன் என்று சொன்ன நம்மவர்களையும் பார்த்திருக்கிறேன்.

மத்திய கிழக்கிலும், உலகம் எங்கும், தாயும், மனைவியும், ஆசிரியைகளும் உண்டு. நீங்கள் சொல்லும் பெண்களை யாரும் வலியுறுத்த வில்லை. அது அவர்கள் தெரிவு. அந்த வகையில் கூடுதலாக பணம் பெற தம்மை அறை குறையாக வெளிக்காட்டுகிறார்கள்.

***

*****

***

இலங்கையில் டொக்டர்களுக்கு போதாத காலம்...

ஒரு 15 வயது சிறுமியை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கிய 30 பேரில் ஒருவர் டாக்டர், கைதாகி உள்ளார்.

மேலும் சம்மாந்துறையை சேர்ந்த டாக்டர், ராகமை ஆஸ்பத்திரியில், பெண் டாக்டர் அறையினுள் ஒளிந்து இருந்து, பெண் டாக்டர் உடுப்பு மாத்துவதை படம் பிடித்து, சிக்கி, கைதாகி உள்ளார்.

ஆகவே.... இது மத்திய கிழக்கு மட்டுமேயான சிக்கல் இல்லை. உலகளாவிய பிரச்சனை.

Edited by நியானி
அநாவசியமான வரிகள் நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய பெண்களின் மீதான கட்டாய வன்புணர்வு திருமண இரவு அன்றே நடப்பதாக செய்தியில் உள்ளது. இது இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் கட்டாயத் திருமண பந்தத்துக்குள் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்பதைத்தான் குறிக்கிறது.  விருப்பமில்லாத திருமணமும், அந்நிய ஆடவன் ஆடை அவிழ்க்க முனைவதும் வன்புணர்வில் கொண்டுசெல்கின்றது. 

இதனை உலகம் எல்லாம் நடக்கும் சம்பவங்கள்தானே என்று பொதுமைப்படுத்திவிடமுடியாது. பிற்போக்கான சமூக சிந்தனைகள் தென்னாசிய, மத்திய-கிழக்கு நாடுகளில் மரபார்ந்த பண்பாடு என்று புனிதப்படுத்தப்படுவது, பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்படும் உத்தி.  ஆனால் சமூகவலை உலகமும், இணையமும் முற்போக்கான  மாற்றங்களை கொண்டுவருவதை நீண்ட காலத்திற்கு தடுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

வழுக்கையாறு ......!   😇

வீடியோ தகவலுக்கு நன்றி நான் கேள்விபட்டதை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது.

8 hours ago, goshan_che said:

எகிப்தில் ஒரு புரட்சி நடந்தது நினைவுண்டா? அதில் கூட பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடந்தது. ரோட்டுக்கு வந்து போராடாடும் பெண் எதுக்கும் தயாராயிருப்பார் என்ற மனநிலைதான் காரணம்.

பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் செய்த எகிப்திய புரட்சி 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வீடியோ தகவலுக்கு நன்றி நான் கேள்விபட்டதை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது.

இதை ஆறு என்பதை விட வெள்ள வாய்க்கால் என்று அழைப்பதே பொருத்தமாய் இருக்கும். ஆனால் யாழில் நிலகீழ் ஆறு ஒன்று ஓடுவதாக சிலர் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எகிப்திய பெண்களின் மீதான கட்டாய வன்புணர்வு திருமண இரவு அன்றே நடப்பதாக செய்தியில் உள்ளது. இது இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் கட்டாயத் திருமண பந்தத்துக்குள் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்பதைத்தான் குறிக்கிறது.  விருப்பமில்லாத திருமணமும், அந்நிய ஆடவன் ஆடை அவிழ்க்க முனைவதும் வன்புணர்வில் கொண்டுசெல்கின்றது. 

இதனை உலகம் எல்லாம் நடக்கும் சம்பவங்கள்தானே என்று பொதுமைப்படுத்திவிடமுடியாது. பிற்போக்கான சமூக சிந்தனைகள் தென்னாசிய, மத்திய-கிழக்கு நாடுகளில் மரபார்ந்த பண்பாடு என்று புனிதப்படுத்தப்படுவது, பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்படும் உத்தி.  ஆனால் சமூகவலை உலகமும், இணையமும் முற்போக்கான  மாற்றங்களை கொண்டுவருவதை நீண்ட காலத்திற்கு தடுக்கமுடியாது.

கிருபன் அய்யா.... இந்த முற்போக்கு, பிற்போக்கு கதையளை விடுங்கோ....

ஸ்ட்ராயிட்ஆ விசயத்துக்கு வாங்கோ....

பாலியல் கல்வி வழக்கப்படாத நாடுகள், முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் அனைத்திலுமே, கலியாண இரவு அன்று தான் ஏதோ ஒரு பலாத்காரத்துக்கு ஆட்படுவதாகவே மனதளவில், உடலளவில் தயாராகாத பெண்கள், குறிப்பாக சிறு பெண்கள் கருதுவார்கள்.... 

அதுவே யதார்த்தமும் கூட.

தமிழகத்தில், சாந்தி மூகூர்த்தம் என்று ஒரு சடங்காக, அரசல், புரசலாக பெண்ணுக்கு சொல்லி அனுப்புவார்கள்....

நமது ஊரில், கல்வி அறிவு கூடுதலாக இருந்தது, தனி பெண் பாடசாலைகள் பெண்கள் கல்வியில் பெரும் உதவி செய்தன.   

ஆகவே சாந்தி மூகூர்த்தம் விண்ணாணம், தேவையாக இருக்கவில்லை.

பாடசாலைக்கே பெண்கள் போக கூடாது என்று சொல்லும் நாடுகளில், இந்தவகை பிரச்சனைகள் மேலெலும், தவிர்க்க முடியாது.

இதனை சரியாக ஆராயாமல், ஒரு மஞ்சள் பத்திரிக்கை லெவலில் தலைப்பு இட்டு செய்தி ஆக்கிய பிபிசி தமிழ்  - டெல்லிக்கு கண்டனம்....
😳

***

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்.

இந்த லட்ஷணத்தில், ஓர் இன சேர்க்கை குறித்தும் சொல்லிக் கொடுக்க வேணும் என்று கல்வி அமைச்சு கிளம்ப, மக்களின் எதிர்ப்பு காரணமாக விட்டு விட்டார்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இதனை சரியாக ஆராயாமல், ஒரு மஞ்சள் பத்திரிக்கை லெவலில் தலைப்பு இட்டு செய்தி ஆக்கிய பிபிசி தமிழ்  - டெல்லிக்கு கண்டனம்....

நாதம்ஸ், நீங்கள் தலைப்புக்குள்ளேயே நிற்கின்றீர்கள்.

செய்திக் கட்டுரையில் இரண்டு பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களை சொன்னால் மிச்சக் கதையைத் தொடரலாம்😉

மற்றது, எகிப்து அரபி பெண்களை அடக்கி ஆளும் சமூகம் போன்ற மூடுண்ட பிற்போக்கான கூறுகளைக் கொண்டதுதான் தமிழ் சமூகமும்! 

நமது ஊரில் தனிப் பெண்கள், ஆண்கள் பாடசாலை வைத்துள்ளனர்தான். அதற்காக பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கின்றார்களா என்ன? பிரித்தானியாவில் ஆண்டு ஆறு கற்பவர்களுக்கு ஆண்-பெண் உறவுகள் பற்றி போதிக்கப்படுவதே அங்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்பது ஐமிச்சம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நீங்கள் சரியான அப்பாவியாக இருக்கிறீர்கள் அல்லது, எனது வாயை கிளறுகிறீர்கள். 

எது சரி? 😇

சரி விடுங்கோ.... 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்.

இந்த லட்ஷணத்தில், ஓர் இன சேர்க்கை குறித்தும் சொல்லிக் கொடுக்க வேணும் என்று கல்வி அமைச்சு கிளம்ப, மக்களின் எதிர்ப்பு காரணமாக விட்டு விட்டார்கள். 

ஐரோப்பாவை பற்றி தெரியாது ஆனால் குறைந்தது 5 பிள்ளைகளின் பிரைமறி ஸ்கூல் படிப்பில் முழு நேர ஈடுபாடு காட்டியவன்/காட்டுபவன் என்ற வகையில் யூகேயில் அப்படி மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் ஒன்றும் சொல்லி கொடுப்பதில்லை என அறுதியாக கூறமுடியும்.

இங்கே எழுதும் பலரும் பிள்ளைகளை இந்த வயதை தாண்டி யூகே, ஐரோப்பாவில் கூட்டி வந்தவர்கள் -

சும்மா அடிச்சு விடதிங்கப்பா. ஊரில இருந்து வாசிக்கிறவர்கள் இங்க ஏதோ 10 வயசு பிள்ளை பலான படம் பள்ளி கூடத்தில பாக்குது எண்டு நினைக்கப்போறகள்.

மிகவும் நாசூக்காக relationships என்ற அடிப்படையில் இது ஆண்டு 3 இல் இருந்து படிப்படியாக அறிமுகமாகும். ஆண்டு 6 இல் இனப்பெருக்கத்தின், பருவமைடதலின் அடிப்படையை மேம்போக்காக சொல்லுவர்.

அதேபோல் ஓரின உறவுகளும் சாதாரணமாணவையே, ஒரு குடும்பத்தில் இரெண்டு அப்பா அல்லது இரெண்டு அம்மா இருப்பது ஒன்றும் தவறில்லை, பாலியல் சிறுபான்மையை ஒதுக்கல் ஆகாது போன்ற விடயங்கள் சொல்லி கொடுக்கப்படும்.

சில அடிப்படை மதவாத இஸ்லாமியர்கள் காலத்துக்கு காலம் கூச்சல் போடுவார்கள். அண்மையில் பர்மிங்ஹாமில் நடந்தது. ஆனால் படிப்பிப்பதை தடுக்க முடியாது.

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பழமைவாதம் கொண்ட உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பலவாதிகள் உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

அதுதான் ஐரோப்பாவை பற்றி எனக்கு தெரியாது என எழுதினேன். 

5 பிள்ளை - ஊரான் பிள்ளையை (கல்வி) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற நம்பிக்கைதான் - பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

நீங்கள் சரியான அப்பாவியாக இருக்கிறீர்கள் அல்லது, எனது வாயை கிளறுகிறீர்கள். 

குறைந்த பட்சம் உரையாடப்படும் செய்தியையாவது வாசிக்கவேண்டும்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.