Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளித்த உறுதியிலிருந்து பின்வாங்கும் தலிபான்கள்... ஆப்கன் பெண்களின் நிலை இனி?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த சம்பவங்களால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாக்கியுள்ளன.

"முழு நகரமும் கிட்டத்தட்ட ஒரே இரவில் பெண்களுக்கு எதிராக மாறிவிட்டது போல் தோன்றுகிறது. தெருவில் நடப்பது கூட வித்தியாசமாக உணர வைக்கிறது. வாழ்க்கை இத்தோடு நின்றுவிட்டது போல் நினைக்கிறேன்" - இந்த வார்த்தைகள் 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கன் ஆட்சி அரியணையை கைப்பற்றி இருக்கும் தலிபான்கள் குறித்து காபூலைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் உதிர்த்தவை. ஜூலை ஆரம்பத்தில் தொடங்கிய தலிபான்கள் போர் நேற்று காபூலை கைப்பற்றிய பின் முடிவுக்கு வந்தது. தலிபான்களின் இந்த வெற்றி மற்றவர்களை விட குறிப்பாக பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.

image

Advertisement

இந்த அச்ச உணர்வுக்கு பின்னணியில் பல வலிகள் இருக்கின்றன. அமெரிக்க படைகளால் தலிபான்கள் வீழ்த்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பல உரிமைகளை போராடி வென்றுள்ளனர். வேலைக்குச் செல்வது, கல்வி பயில்வது, பொதுவெளியில் தனியாக செல்வது போன்ற பல்வேறு உரிமைகள் இதில் முக்கியமானவை. ஏனென்றால் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியின்போது, பெண்கள் வெளியே வேலைக்கு செல்லவோ அல்லது பள்ளியில் படிக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்கள் வெளியே செல்லும் வேண்டும் என்றால், அவர் தனது ஓர் ஆண் உறவினர் உடன் மட்டுமே வர வேண்டும். இந்த விதிகளை மீறிய பெண்களை இஸ்லாமிய சட்டத்தின் மிகக் கடுமையான விதிகளின் கீழ் தலிபான்கள் தண்டித்தனர். பொதுவெளியில் அந்தப் பெண்களை அவமானப்படுத்தினர். மேலும், பாலியல் தொழில் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்களை கல்லால் அடித்து கொடுமைப்படுத்தினார்கள் தலிபான்கள்.

இந்த செயல்கள் காரணமாக மீண்டும் தலிபான்கள் கோலோச்ச தொடங்கியுள்ளது, தங்களுக்கு எதிராக அமையும் என்று அஞ்சுகிறார்கள் அந்நாட்டு பெண்கள். இதற்கேற்ப கடந்த சில நாட்களாக சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. கந்தஹாரை கைப்பற்ற தொடங்கியபோது, நகரில் உள்ள அஸிஸி வங்கியின் அலுவலகங்களுக்குள் நுழைந்த தலிபான் வீரர்கள், அங்கு பணிபுரிந்த ஒன்பது பெண்களை வெளியேற்றி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் பெண்களை தங்களின் வீடுகளுக்கே அழைத்துச் சென்று விட்டுவிட்டு, இனி பணிக்கு வர வேண்டாம் என எச்சரித்து வந்துள்ளனர். இதற்கடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஹெராட்டில் உள்ள ஒரு வங்கியில் நுழைந்த துப்பாக்கி ஏந்திய மூன்று தலிபான்கள், பெண் ஊழியர்களை தங்கள் முகங்களை மறைக்க சொன்னதுடன் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என அச்சுறுத்தி இருக்கின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களை குறித்தும் கேட்டதற்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பதிலளிக்க மறுத்ததுடன் "பெண்களை இனி வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பிறகு, இது சட்டத்தின்படி முடிவு செய்யப்படும். மேலும் கடவுள் விரும்பினால், எந்த பிரச்னையும் இருக்காது" என்று மட்டும் தெரிவித்தார். அவர் மழுப்பலாக பேசினாலும் சமீபத்திய சம்பவங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உரிமைகள் தலைகீழாக மாறும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

பழைய விதிகள் மீண்டும் கொண்டுவரப்படும் என பயப்பட தொடங்கியிருக்கும் ஓர் ஆப்கன் பெண், "பெண்களாகிய எங்களுக்குள் சில நாட்களாக எழுந்துள்ள பேச்சு இதுதான். 1996-ல் தலிபான்கள் ஆட்சி காலத்தில் ஒரு பெண்ணாக எவ்வளவு கஷ்டத்தை தாங்கிக்கொண்டு வாழ்ந்தோம் என்று தினமும் பேசிக்கொண்டிருக்கிறோம். 1996 காலகட்டத்தில் காபூலில் வாழ்ந்தேன். அப்போது தலிபான்கள் புர்கா இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் சிறுமிகளை எப்படி அடித்தார்கள் என்பது இப்போது வரை எனக்கு நினைவிருக்கிறது" என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்களின் நிலை: தலிபான்கள் குறித்து பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலைகள் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். நேற்று காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண் பத்திரிகையாளர் ஒருவர் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் துப்பாக்கி முனையில் அவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தலிபான்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் அந்த பெண் பத்திரிகையாளர், "நான் விமான நிலையத்திற்கு டாக்ஸியில் சென்றபோது, தெருவில் குழுவாக நின்றுகொண்டிருந்த சில ஆண்கள், தாலிபான்களுக்காக கைதட்டிக் கொண்டிருந்தார்கள். `மாஷாஅல்லா', `கோ அமெரிக்கா' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பிய கொண்டிருந்தனர். என் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்களை பார்க்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு பத்திரிகையாளர், "தலிபான்களின் வருகை குறித்த அச்சம் காரணமாக ஏற்கெனவே பொது இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனக்கு தெரிந்தவர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கே வந்து, `தலிபான்கள் உங்களால்தான் வருகிறார்கள். தாலிபான்கள் உங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மீண்டும் வந்துள்ளார்கள்' என்று கூறி அச்சமூட்டுகின்றனர்" என்று கூறியிருக்கிறார். நாட்டை விட்டு வெளியேற முடியாத மற்றொரு பெண் பத்திரிகையாளர், "நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டோம். இனி இன்னும் கஷ்டப்பட போகிறோம்" என்று தலிபான்கள் வருகை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

உறுதியில் இருந்து பின்வாங்கும் தலிபான்கள்? - முன்னதாக, ஆட்சி பொறுப்பை கைப்பற்ற முயன்றபோது தலிபான் தலைவர்கள், "வேலை, கல்வி உள்ளிட்ட விஷயங்களில் "இஸ்லாமிய முறைப்படி" பெண்கள் சம உரிமை பெறுவார்கள்" என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவர்கள் அளித்து வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து வருகின்றன.

தலிபான்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறதா என்று அச்சம் தெரிவித்துள்ள அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களின் வாழ்வு நிலை 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதற்கான சூழல் ஏற்படும் என்றும், பெண்களின் கல்வி, பொருளாதாரம் மேம்பட்டு வந்துகொண்டிருந்த சூழலில் மீண்டும் அவை பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது.

https://www.puthiyathalaimurai.com/newsview/113079/3-Fall-Off-Plane-in-Afghanistan.html

  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்தப் பெண்களை நினைக்க கவலையாக உள்ளது...

சரி... எங்கட ஓட்டைபானையடியில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுமே, இதைக் கண்டவுடன்😉

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் பழியை சுமக்கப்போகிறார் பைடன்.

ஒபாமா காலத்திலேயே ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் பைடன்.

ஒரு முறை துணை ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு மேலதிகாரியிடம் “அமெரிக்க உயிர்களை பலி கொடுத்து, ஆப்கான் பெண்களை படிக்க வைக்க நான் தயாரில்லை” என்று சொல்லியுள்ளார்.

இப்போதே கடை தெருக்களில் எல்லாம், கடை உரிமையாளர்கள், பயத்தில் பெண்கள் தோன்றும் விளம்பரங்களை அழிக்கிறார்களாம்.

இனி ஆப்கானில் பெண்களின் நிலை கற்கால கொத்தடிமைகள் நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானை தலீபான்கள் மீள கைப்பற்றியதையிட்டு , சமூக வலை தளங்களில் தலீபான்களைவிட அதிகம் மகிழ்ச்சியடைவதும் துள்ளி குதிப்பதும் இலங்கை இந்திய முஸ்லீம்கள்தான்

* அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதாம் ஒட ஓட விரட்ட பட்டதாம் ,

இறைவன் அருளால் உலகத்திலேயே மிக சிறந்த இஸ்லாமிய ஆட்சி ஒன்று ஏற்பட போகிறதாம், 

இறைவன் அருளால் உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆளுகைகுள் வருவதற்கு இறைவன் தேதியை நிர்ணயித்துவிட்டானாம், அதாவது மறூபடியும் ஆப்கானிஸ்தானை தலைமையகமாக கொண்டு உலகம் முழுவதும் பழையபடி குண்டு குண்டா வைச்சிட்டு அதெல்லாம் அமெரிக்க யூத சதி எண்டு எடுத்துவிடபோகினம் போல,

சரி, அமெரிக்காவை ஓட ஓட விரட்டினீங்கள் எண்டால் அவன் ஆப்காணிஸ்தானிலிருந்து வெளியேறும்வரை ஏன் உங்கள் தலீபான்களால் ஆப்கானை கைபற்ற முடியவில்லை எண்டு கேட்டால்....

அது என்ன இஸ்ரேல் அவனாக போர் நிறுத்தம் செய்தால்,, அமெரிக்கா அவனாகவே வெளியேறினால் அவர்களை ஓட ஓட விரட்டினோம் என்கிறீர்களே எப்படி இதெல்லாம் முடியுது எண்டு கேட்டால்..

தலீபான்களின் ஆட்சியை தலைகீழாக நின்று கொண்டாடுகிறீர்களே அப்போ தலீபான்களின் கொள்கைகளை நீங்கள் வாழும் நாடுகளில் கடைபிடித்து,...

இஸ்லாமிய பெண்கள் கல்வியை கைவிட்டு, அமைச்சர்களில் அதிகாரிகள்வரை ,காவல்துறை அதிகாரிகளில் இருந்து இருந்து நடிகைகள் ஆசிரியைகள்வரை எல்லோரும் தங்கள் பதவிகள் தொழிலை கைவிட்டு நாளையிலிருந்து வீட்டோடு இருக்க சம்மதமா என்று கேட்டால்......

இனிமேல் இந்திய இலங்கை இஸ்லாமிய பெண்கள் திரையரங்குக்கு போககூடாது, டிவி பார்க்ககூடாது,கடை தெருவுக்கு கடற்கரைகளுக்கு செல்லகூடாது , கை தொலைபேசி இன்ரர்நெற் பயன்படுத்தகூடாது 

 இஸ்லாமிய ஆண்கள் இதுவரை பண்ணியதுபோல் முடா குடி குடிக்ககூடாது மேற்கத்திய இசை கேட்ககூடாது, பப் கிளப் போக கூடாது  அதெல்லாம் நீங்கள் லவ் பண்ணும் தலீபான்களின் அடிப்படை கொள்கைகள்,  நாளையிலிருந்து நீங்கள் எல்லோரும் இதை பண்ண தயாரா என்றெல்லாம் மினக்கெட்டு பல நிமிடங்களாய் செலவிட்டு பல கேள்விகள் கேட்டால் அவர்கள் அதுக்கெல்லாம் சுருக்கமாக ...........

ஒரேவரி பதில் மட்டுமே பதிலாக சொல்கிறார்கள்.

அது: ‘’போடா சங்கி’’!

அதாவது இந்திய இலங்கை இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் எல்லாம் நவீன உலகின் அனைத்து வசதிகளையும் அனுபவித்தபடியே வாழ்ந்துகொண்டு, ஆப்கானில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் 500/1000 வருசங்களுக்கு முற்பட்ட ஆதிகால வாழ்க்கை வாழவேண்டும் என்ப்தில் மிக உறுதியாக இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரினதும் வாயில் அடிக்கடி உதிப்பது தாம் வழிபடுவது உலகிற்கே  ஏக இறைவன்  என்றும் அவன் கட்டளைப்படி நடப்பதும், அஞ்சுவதும் அடிபணிவதும் அவனுக்கு மட்டுமே என்றும் பொங்குவார்கள்,

கணவனுக்கு மட்டும் காண்பிக்கவேண்டிய முகத்தை வெளியே காண்பிப்பவள் விலைமாது என்று மறைமுகமாக பிற மதத்தவரை சாடுவார்கள்   ஆனால் அகதியாக போன இடங்களில் இஸ்லாமிய பெண்கள் ஜீன்ஸ் ரி ஷேர்ட்டுக்குமாறி நடமாடுவார்கள்.

 தாம் வாழும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஏக இறைவனின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை வசதிகளை அனுபவித்துக்கொண்டு அவர்கள் இஸ்டப்படி வாழ்வார்கள்.

கவுண்டமணி சொன்னமாதிரி அடேங்கப்பா நான் எம்ஜிஆரை பாத்திருக்கன் சிவாஜி கமல் ரஜனியை பாத்திருக்கன், இவங்க நடிப்பில ஒரு சதவீதம் அவங்ககிட்ட இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பாடசாலை மாணவி ஒருவரை பேட்டி கண்டார்கள். தலபானகள் போன பின் பிறந்தவர். தனது கல்வி அவ்வளவு தான் என்பதோடு அரச பதவிகளில் இருக்கும் 30 வீதமான பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இனி ஆப்கானில் பெண்களின் நிலை கற்கால கொத்தடிமைகள் நிலைதான்.

 இனி தலிபான் பழைய விளையாட்டு விளையாடாது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

 இனி தலிபான் பழைய விளையாட்டு விளையாடாது என நினைக்கின்றேன்.

அப்படி நான் நினைக்கவில்லை அண்ணை.

தலிபான்கள் என்பது புலிகள் போன்ற ஒரு கட்டுப்பாடு மிக்க, ஒற்றைத்தலைமை கொண்ட இராணுவ அமைப்பு அல்ல.

அது பல குழுக்களின் சேர்வை. கந்தகார் பிரிவு, பேஷாவார் பிரிவு என பல பிரிவுகள் உண்டு.

நீங்கள் இன்னொரு திரியில் சொன்னது போல அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் டிரம்ப் காலத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதுதான். 

சில சமயம் அந்த ஒப்ப்ந்த படி அமெரிக்காவை சீண்டாமல், அமெரிக்க எதிரிகளுக்கு இடமளியாமல் விட்டாலும் (இப்படி நடக்காது என்பது என் எதிர்வுகூறல்) தலிபான் தமது அடிபடைவாத இஸ்லாமிய கொள்கைகளை ஆப்கானில் நடைமுறை படுத்தியே தீருவர்.

அப்படி செய்வதில் முக்கிய அங்கம் பெண்களை கால்நடை ரேஞ்சுக்கு இறக்குவது.

இப்படி செய்யாமல் விட்டால் அவர்கள் தலிபான் அல்ல. ஒரு தலைவர் கொஞ்சம் இளக்கமாக நடக்க முற்பட்டாலும் மற்றையோர் விட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்படி செய்வதில் முக்கிய அங்கம் பெண்களை கால்நடை ரேஞ்சுக்கு இறக்குவது.

சரியாக சொன்னீர்கள் அண்ணை 
இஸ்லாம் பெண்களை விளைநிலங்கள் என்றே அழைக்கிறது, அதாவது பிள்ளை பெறும் இயந்திரம் 
அதிலும் கொடுமை இந்த வில்லங்கங்களை அறியாமல் உங்கள் நாடு உட்பட முழு  ஐரோப்பாவிலும்  ஏகப்பட்ட கல்வியறிவு கொண்ட வெள்ளை பெண்கள் ஷஹாதா சொல்லி முக்காடு போட முண்டியடிப்பது, இங்கிலாந்து முக்கால்வாசி பாக்கிகளுக்கும், பங்களாதேசிகளுக்கும் விற்கப்பட்டுவிட்டதாக தகவல் உண்மையா  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

சரியாக சொன்னீர்கள் அண்ணை 
இஸ்லாம் பெண்களை விளைநிலங்கள் என்றே அழைக்கிறது, அதாவது பிள்ளை பெறும் இயந்திரம் 
அதிலும் கொடுமை இந்த வில்லங்கங்களை அறியாமல் உங்கள் நாடு உட்பட முழு  ஐரோப்பாவிலும்  ஏகப்பட்ட கல்வியறிவு கொண்ட வெள்ளை பெண்கள் ஷஹாதா சொல்லி முக்காடு போட முண்டியடிப்பது, இங்கிலாந்து முக்கால்வாசி பாக்கிகளுக்கும், பங்களாதேசிகளுக்கும் விற்கப்பட்டுவிட்டதாக தகவல் உண்மையா  

பலர் என்றில்லை ஆனால் கணிசமான வெள்ளை பெண்கள் மாறியுள்ளார்கள். 

இங்கே அடிப்படைவாதம் வெளியில் தெரியும் படி இல்லை.  இருந்த கொஞ்ச வெறுப்பு பிரச்சாரகர்களையும் பல்லை புடுங்கிவிட்டாகள்.

ஏனைய இனங்களை (இந்தியர்/தமிழர்) விட பாகிஸ்தானியர், பங்களதேசிகள் முன்னேற்றம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் நெருங்கி வாழ்வதால் அப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

இப்போ காபூலில் தப்பி ஓட விளைபவர்கள் போல, இந்த காட்டுமிராண்டிதனத்தை வெறுக்கும் பலர் அவர்களிலும் உள்ளனர்.

அப்படியான பலரும் இங்கே உள்ளனர். 

முன்னரை போல இல்லாமல் அரசு இப்போ விழித்து கொண்டு விட்டது. அடிப்படைவாத எதிர் கருத்துக்கள் பள்ளியிலேயே புகட்ட படுகிறது. சந்தேகம் வந்தால் டீச்சர், டாக்டர் போன்றோர் ஒரு குறித்த சேவைக்கு ஆட்களை ரிபர் பண்ணவும் முடியும்.

வரும் காலத்தில் உலகெங்கும் பெரும் தலைவலியாக இந்த அடிப்படைவாதம் இருக்கும். இப்படியாக இதை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.