Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்”

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
 
வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி
 
படக்குறிப்பு,

வைகைப் புயலுக்கு ஏற்பட்ட இம்சை முடிவுக்கு வந்தது.

நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த பிரச்னை மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடிகர் வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. மேலும் நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

இயக்குநர் ஷங்கர்

பட மூலாதாரம்,TWITTER/SHANKAR

படக்குறிப்பு,

இயக்குநர் ஷங்கர்

இதனையடுத்து, 'Vadivelu Returns', 'Vadivelu For Life' என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகளின் வாழ்த்து செய்திகளால் பரபரப்பாக இருந்த வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.

"ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதல் முறையாக படங்களில் நடிக்க வந்தபோது இருந்த மகிழ்ச்சியை விட தற்போதுதான் அதிகம் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா குடும்பமும் என்னுடையதுதான். ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். இவர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் உற்சாகமாக.

இவ்வளவு நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தபோது மனநிலை எப்படி இருந்தது?

"இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தால் கூட, மீம் கிரியேட்டர்ஸ் என்னை தொடர்ந்து நடிப்பது போலவே, மக்களோடு மீம்கள் மூலம் இருக்க வைத்தார்கள். என்னுடைய எல்லா ரியாக்‌ஷனும் போட்டு, என்னை படங்களில் இருப்பது போல உயிரோட்டமாக வைத்திருந்தார்கள். மீம் கிரியேட்டர்கள் எனக்கு பெரிய கடவுள் மாதிரி. அவர்கள்தான் மக்களுக்கு என்னை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. அவர்களுக்கு எனது நன்றி".

அடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிக்க திட்டம்?

"'லைகா புரொடக்‌ஷன்' தயாரிப்பில் முதல் படம் நடிக்க இருக்கிறேன். அதோடு சேர்த்து அடுத்து ஐந்து படங்களும் அவர்கள் தயாரிப்புதான். மக்கள் ஆசையை நிறைவேற்றிய சுபாஷ்கரன் தற்போது 'சபாஷ்கரன்' ஆகிவிட்டார். படத்தின் பெயர் 'நாய் சேகர்'. இயக்குநர் சுராஜ்.

ஜூலை மாதம் நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாயை அளித்தார்.
 
படக்குறிப்பு,

ஜூலை மாதம் நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாயை அளித்தார்.

கதையின் நாயகனாகவும், காமெடி நாயகனாகவும் இந்த கதையில் நடிக்க இருக்கிறேன். கதாநாயகன் என்றால் ராஜா வேடம் எல்லாம் இல்லை. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யை தவிர்த்து விட்டேன். இனி எனக்கும் 'எஸ் பிக்சர்ஸ்'-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படம் நடிக்க போவதில்லை. அதுமட்டுமல்ல, இனி வரலாற்று படங்கள் எதிலுமே நடிப்பதாகவே இல்லை. அந்த படத்தை ஒத்து கொண்டதுதான் என்னுடைய கெட்ட நேரம். அதை விட்டு விலகியதுதான் என்னுடைய நல்ல நேரம்.

தமிழக முதல்வரை சந்தித்த நேரம் நன்றாக இருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன்".

திரையுலகில் இருந்து வாழ்த்துகள் வந்ததா?

"காலையில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன. நிறைய படங்கள் இனி வரும். தொடர்ந்து நடிப்பேன். மக்களை சிரிக்க வைப்பேன். முன்னணி கதாநாயகர்கள் கூட வாய்ப்பு வந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்."

https://www.bbc.com/tamil/arts-and-culture-58369526?at_custom1=[post+type]&at_custom2=facebook_page&at_custom4=6A5F87FA-0804-11EC-BC29-6E5516F31EAE&at_campaign=64&at_custom3=BBC+Tamil&at_medium=custom7&fbclid=IwAR3ndb9NLC1IsKajzitSkNyGrrsZXKZfFDoNR3Ut0dljunkb1FgGagEf0O4

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யை தவிர்த்து விட்டேன். இனி எனக்கும் 'எஸ் பிக்சர்ஸ்'-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படம் நடிக்க போவதில்லை.  அந்த படத்தை ஒத்து கொண்டதுதான் என்னுடைய கெட்ட நேரம். அதை விட்டு விலகியதுதான் என்னுடைய நல்ல நேரம்.

ஆக சுய குணத்தால் வடிவேலு திருந்தின மாதிரி இல்லை, தமிழக அரசின் நெருக்கு வாரத்தால்தான் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இம்சை அரசன் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டுவிட்டு கடைசி நேரத்தில் வடிவேலு காலை வாரியதால் பலகோடி நஷ்டமேற்பட்டு சங்கரின் S தயாரிப்பு நிறுவனமே இழுத்து மூடப்படும் நிலமைக்கு போனதாக சொல்கிறார்கள்.

விஜயகாந்த் மேல் உள்ள கோபத்தில் கருணாநிதிக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ணபோய் தனது சினிமா வாய்ப்பையே  ஒரு தசாப்தகாலமாக இழந்து நின்றார் வடிவேலு.

சும்மா வீட்டில் உக்காந்திருந்த வடிவேலுவுக்கு சங்கரின் பட நிறுவனம் கொடுத்த மிக பெரும் வாய்ப்பை பாழடித்தது மட்டுமில்லாம, அவர்களுக்கு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தினார். இப்போ என்னமோ இம்சை அரசனில் நடிக்கபோனதுதான் தன்னோட இவ்வளவு நாள் வீழ்ச்சிக்கு காரணம் என்பதுபோல் அடுக்குகிறார்.

திரையில் கண்ணீர் வரும் அளவிற்கு எல்லோரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு திரைக்கு பின்னால் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் என்பதைவிட வேறு எந்த பண்பான நாகரிகம் பழக்கவழக்கமும் இல்லாதவர் ,ஆணவங்களால் சூழப்பட்ட ஒருவர் என்றே திரைத்துறை சார்ந்த அனைவருமே பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர்.

சினிமாவின் பல பிரபலங்கள் அப்படித்தான், அதை ஒருபுறம் வைத்துவிட்டு நமக்கு தேவை சிரிப்பு, அந்த வகையில் வடிவேலு எனும் நகைச்சுவை பிரம்மா  இத்தனை வருசமா திரையுலகில் இல்லாமல் போனது மிக பெரும் வறட்சி.

நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவனின் பொறுமையையும் நேரத்தையும் படுகொலை செய்து கொண்டு கோடிகளை அள்ளிக்கொண்டிருக்கும் மொக்க நகைச்சுவை நடிகர்களுக்கு உங்களின் மீள் வரவு இடியாய் இறங்கியிருக்கும்.

பால் குடிக்கும் குழந்தையில் இருந்து பல்லுபோன கிழவி வரை குடும்பமாய் கூடியிருந்து  பயமில்லாமல் ரசிக்ககூடியது உன் அசுத்தமில்லாத நகைச்சுவையை மட்டுமே.

நீ வா தல வந்து மறுபடியும் கலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

திரையில், சிரிப்பு காட்டும், அடி வாங்கும் வடிவேலர், நிஜத்தில், நேர் எதிர்.

தன்னை அறிமுகப்படுத்திய ராஜ்கிரண் மேலே ஏதோ சொல்ல போக, ராஜ்கிரண் உயிர் நண்பர் எதிர்க்க, ஆள் வைத்து அடித்தார் என்று பயில்வான் ரங்கநாதன் அண்மையில் சொன்னார்.

வாய், நாக்கு காக்க தவறியதால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருந்தார். 

சினிமாவில் 10 வருடம் என்பது நீண்ட காலம். சந்தையினை இழந்தால் மீண்டும் பிடிப்பது கடினம்.

இடையே 'எலி'யாக வந்து சோபிக்கவில்லை. தன்னை மாத்தி, புதிய நகைச்சுவை நடிகர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, valavan said:

ஆக சுய குணத்தால் வடிவேலு திருந்தின மாதிரி இல்லை, தமிழக அரசின் நெருக்கு வாரத்தால்தான் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சினிமாவை விடுத்து ஒவ்வொரு மனிதனின் சுயகுணத்தை ஆராய வெளிக்கிட்டால் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் கெட்டவர்களாகவும் ஆணவம் பிடித்தவர்களாகவுமே இருப்பார்கள். நூறு வீதம் சரியான மனிதனை நீங்கள் எங்குமே கண்டு பிடிக்க முடியாது.😎

நானும் பயங்கர கெட்டவன். அகங்காரம் கொண்டவன். ஆனால் அது நான் சந்திக்கும் மனிதர்களை பொறுத்து அமையும்.😁

கண்ணுக்கெட்டிய தூரம் என்னை நல்லவன் என்று சொன்னவர்களும் இல்லை.🙃(கோதாரிவிழுவார்)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நீஙகள் (குமார)சாமியார்...

நீஙகள் மிகவும் நல்லவர். 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

நீஙகள் (குமார)சாமியார்...

நீஙகள் மிகவும் நல்லவர். 😜

இந்தா ரெக்கமெண்டு தந்துட்டாங்க......:cool:

அட்ரா....அட்ரா சிங்கம் கெளம்பிட்டுது....😁

Vadivelu Pichumani GIF - Vadivelu Pichumani Arasu GIFs

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நகைசுவை நடிகர்களின் வெற்றியில் கணிசமான பங்கு வகிப்பது அவர்களுக்கு டிராக் எழுதும் டீம்.

வடிவேலுவின் பழைய டீமில் சிலர் இப்போ உயிருடன் இல்லை. பலர் வேறு டீமில்.

மீண்டும் பிரகாசிப்பது சந்தேகம், ஆனால் அப்படி நடந்தால் நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

இப்போ நகைசுவை நடிகர்களின் வெற்றியில் கணிசமான பங்கு வகிப்பது அவர்களுக்கு டிராக் எழுதும் டீம்.

வடிவேலுவின் பழைய டீமில் சிலர் இப்போ உயிருடன் இல்லை. பலர் வேறு டீமில்.

மீண்டும் பிரகாசிப்பது சந்தேகம், ஆனால் அப்படி நடந்தால் நல்லம்.

வடிவேலுவுக்கு உடல்மொழி உணர்வு அதிகம். அதனாலேயே அவர் அதிகம் மொழி பேதமின்றி அனைவராலும் கவரப்பட்டார்.

மற்றும்படி நல்ல வசனகர்த்தாக்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமேயில்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மற்றும்படி நல்ல வசனகர்த்தாக்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமேயில்லை.🤣

அண்ணை உங்கட தூண்டில் எனக்கு வடிவா தெரியுது..

வேண்டாம்..

🤣 நான் பிறகு பந்தி பந்தியா எழுதி போடுவன்🤣

பிகு

வடிவேலு ஒரு பிறவி கலைஞன். உடல் மொழி, பாடும் திறன், டைமிங், மாடுலேசன் எல்லாம் அந்த லெவல்.

ஆனால் எல்லாருக்கும் பின்னால் ஒரு முகம் தெரியாத டீம் இருக்கும். வடிவேலுக்கு, அல்வா வாசு, விவேக்குக்கு செல் முருகன் இப்படி.

இப்படி ஒரு டீம் அமைவது, புதிய புதிய நகைசுவைகளை பிரசவிக்கும். இல்லாவிட்டால் ஒரு கட்டத்துக்கு மேல் சரக்கு தீர்ந்து விட, அரைத்த மாவை அரைப்பார்கள்.

ஆனானப்பட்ட பாலச்சந்தரே அனந்துவின் மறைவுக்கு பின் அதிகம் சோபிக்கவில்லை என்று சொல்வோரும் உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.