Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, goshan_che said:

வந்தாரு…ஒரு ஒண்ரை நிமிசம், படம் நல்லா போகுதா, படம் எடுக்க வந்ததுக்கு நன்றி அப்டீன்னாரு. கிளம்பிட்டாரு. 

அண்ணே ஒரு போட்டோ எடுக்கவான்னு…கேட்டேன்.

இவன் ரொம்ப நல்லவண்டா…எடுத்துக்கட்டும்னு அவர் பாடிகாட்ஸ்கிட்ட சொன்னாரு.

இதுதான் பொன்ராசு நடந்தது. 

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 
  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 
அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

அவரின் உபசரிப்பு உலக பிரசித்தமானது.

ஆனால் அவர்களின் உபசரிப்பு வேறு, தலைவருடன் நேரம் செலவிடுவது என்பது வேறு.

அவர் எல்லாருடனும் மணிகணக்கில் உரையாடும் நிலையில் இருக்கவில்லை.

எனக்கு தெரிந்தவர்கள் சிலர் கூட அவர்கள் உபசரிப்பில் வன்னியில் வாரக் கணக்கில் இருந்து வேலை செய்து, ஓரிரு நிமிடங்கள் அவருடன் பேச கிடைத்தவர்கள் உள்ளார்கள். 

இதை யாரும் குறையாக கருதவில்லை.

ஏனென்றால் எல்லாருக்குமே அவரின் ஒவ்வொரு நிமிடத்தின் பெறுமதியும் தெரிந்திருந்தது.

ஆகவே இதில் அவமரியாதை ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது, ஆனால் - 

சீமான் தலைவரை சந்திக்க போனாரா? அல்லது படம் எடுக்க போன இடத்தில் சான்சாச சந்தித்தாரா என்பதே விவாதத்துக்குரிய விசயம்.

தலைவர் ஒருவரை சந்திப்பது, எவ்வளவு நேரம் அவருடன் செலவிடுவது என்பதெல்லாம் போராட்டத்துக்கு அந்த நபர்கள் செய்த செயல்களின் கனதியில் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

மிக நியாயமான கருத்து. நியாயமான கேள்விகள் 👍
இப்போ பிஜேபி பிரமுகருக்காக குரல் கொடுத்த சீமான் சிலநாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது Rollsroyce  காருக்கு வரி கட்டாமல் இருப்பதற்கு கேட்டதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் அந்நியன் வாய்சில் : சாதியை வைத்துத்தான் நீ தமிழனா இல்லையா என அடையாளம் காண்போம்.

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2021 at 01:56, தமிழ் சிறி said:

கே.டி.ராகவனின் காணொளி குறித்த...  சீமானின் கருத்தும், அதன் பின் நடந்த அரசியலும். 

அது வேற வாய் இது நாற வாய்

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ்
எம் பெண் போராளிக‌ளை உடுப்பில்லாம‌ காணொளி எடுத்து வெளியிடும் போது , இந்த‌ காங்கிர‌ஸ் சில்ல‌ரைக‌ள் அதை பார்த்து ர‌சித்த‌வ‌ர்க‌ள்.............ராக‌வ‌ன் விடைய‌த்தில் பெரிய‌ அர‌சிய‌ல் சூழ்ச்சி ந‌ட‌க்குது தாத்தா............காங்கிர‌ஸ் பெண் ஓவ‌ரா குரைக்கும் போதே தெரியுது இது பக்கா அர‌சிய‌ல் என்று.............இவை உண்மையும் நேர்மையுமாய் பெண்க‌ளுக்கு ந‌ட‌க்கு அநீட்கிக்கு குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளாய் இருந்தா த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌ அசிங்க‌மான‌ செய‌ல்க‌ளுக்கு எல்லாம் இவை பொங்கி எழுந்து இருக்க‌ வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேடி ராகவன் விசயத்தில் மேலே சொன்னதோடு நிறுத்திக்கொண்டால் சீமானை குறிவைத்து எவரும் எதுவும் பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

அதைவிடுத்து ....

இப்படி எல்லாம் பேசியிருந்தால் சீமான் கேடி ராகவனுக்கு வக்காலத்து வாங்குகிறார் என யார்தான் நினைக்கமாட்டார்கள்? 

கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு நாட்ல எவ்வளவு பிரச்சனையிருக்கு அதைபோய் பாருங்க என்று சொல்லி அந்த கேள்வியை தவிர்த்திருந்தால் இனமான போராளி என்று தன்னாலும் தனது ஆதரவாளர்களாலும் அடையாளபடுத்தும் சீமானுக்கு அழகூட்டியிருக்கும்.

உலகத்தில் பலகோடிபேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்தான், தனிப்பட்டவர்கள் இப்படி நடந்துகொண்டால் சபையேற்றி எவனும் இதுபற்றிகேட்கபோவதில்லை.

ஆனால் மக்கள் பிரதிநிதியென்று தம்மை சொல்லி கொள்பவர்கள் தனியொழுக்கமின்றி தனியறையில் இருந்து செயற்பட்டால்கூட அது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாகும், அதற்கு பில்கிளிண்டன்டலிருந்து கேடி ராகவன்வரை விதிவிலக்கல்ல, 

நான் சீமான் கட்சியின் ஆதரவாளன் இல்லை, அதேநேரம் சீமான் செய்யும் அரசியலை வேண்டாம் என்று சொல்பவனும் இல்லை. ஆனால் ராகவன் சார்ந்த கட்சிக்காரர்களே அவர் செயலை நியாயபடுத்தாத ஒரு நிலையில் சக அரசியல்வாதி செய்த தவறை எப்படியெல்லாம் நியாயபடுத்துகிறார் சீமான், சமூகத்தைகூட கேடுகெட்ட சமூகம் என்கிறார், எய்தவனை விடு அம்பை கைது செய் என்று முழங்குகிறார், இது எந்தவகை இனமான அரசியல்? 

சட்டசபையில் ஆபாச படம் பார்க்கவில்லையா என்று கேட்கிறார், அவர்கள் பார்த்தது தப்பு என்று சொல்லபடவில்லையா? சபை ஒழுங்குவிதிமுறைபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கபடவில்லையா?  அப்போ யாராவது சட்டசபை கமெராமேன் மேலதான் தப்பு என்று கொதித்தார்களா?

தனி அறையானாலும் சட்டசபை ஆனாலும் ஒழுக்கம் தவறும் மக்கள் பிரதிநிதிகள் விமர்சனத்திற்குள்ளாவார்கள்.

நீங்கள் கேட்டதையே திருப்பி உங்களை பலர் கேட்பார்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்க ராகவனை படம் பிடித்தவனை கைது செய்,கேடுகெட்ட சமூகம் என்று எதற்கு இந்த பிரச்சனையை தலையில் தூக்கி வைக்கிறீர்கள்?

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

த‌மிழ‌க‌த்தில் மிஞ்சி போனால் ராக‌வ‌னின் காணொளி செய்தியை மிஞ்சி போனால் இர‌ண்டு கிழ‌மை க‌தைப்பின‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு இதுவும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை போல் க‌ட‌ந்து போகும்

எதெல்லாம் தேர்த‌ல் நேர‌ம் அற‌வே  எதிர்ரொலிக்காது கொஞ்ச‌ நாளுக்கு சும்மா குரைச்சு போட்டு குப்பிற‌ ப‌டுக்க‌ ச‌ரி  😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

2 hours ago, zuma said:

அது வேற வாய் இது நாற வாய்

🤦

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

🤦

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

சாதி சான்றிதழ் என்பது ஒரு necessary evil என்பதை நானும் ஏற்று கொள்கிறேன்.

கொரோனாவை போல், சாதியையும் ஒழிக்க (eradicate) முடியாது ஆனால் சாதியால் தாழ்த்தபட்டவர்களை இட ஒதுக்கீடு மூலம் கைதூக்கி விடலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை  ஏனைய மாநிலங்களோடு ஒப்பிட்டால் - திராவிட சித்தாந்தம் இந்த பரப்பில் என்ன சாதித்தது என்பது புரியும். இதை நெருங்கி வரகூடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் யார் தமிழர்? என்பதற்கு இரெண்டு வரைமுறைதான் இருக்க முடியும்.

1. மொழிவாரி பிரிவினையின் போது தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்தோரும் அவர்தம் சந்ததிகளும்.

2. Ethnicity (சரியான தமிழ் பதம் தெரியவில்லை, இனத்தூய்மை?) அடிப்படையில் தமிழர் என அடையாளம் காணப்படுவோர்.

இரெண்டாம் பகுப்பை சாதியை தவிர வேறு ஒன்றை வைத்து தீர்மானிக்க முடியாது.

அதாவது தமிழ்நாட்டில் ethnic-Tamil யார் என்பதை தீர்மானிக்கும் ஒரே வழி யார் என்ன சாதி என பார்த்து, இன்ன இன்ன சாதியினர் தமிழர் என சொல்வது மட்டுமே.

அதிலும் கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்தோர், அவர்தம் சந்ததிகள் தமிழரா? என்பது இன்னொரு சிக்கல்.

 நடிகர் விஜை - ஒரு மலையாளிக்கும், தமிழருக்கும் பிறந்த பிள்ளை. சீமானே அவரை தமிழர் என்கிறார், ஆனால் அவர் பாதி மலையாளி. 

ஆகவே, யாரை தமிழர் என எப்படி அடையாளம் காண்பீர்கள்?

என்பது மிக நியாயமான கேள்வி.

இந்த கேள்விக்கு, தமிழன் என்று சொன்னால் யாருக்கு கோவம் வருகிறதோ அவன் தமிழன் இல்லை என்பது மேடை பேச்சுக்கு நல்லா இருக்கும் ஆனால் சரியான பதில் அல்ல.

இந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல் நாதக நழுவுகிறது. 

ஆனால் பாரிசாலன் நேர்மையாக, தமிழ் சாதியில் பிறந்தவர் மட்டுமே தமிழர் என்கிறார்.

இதுதான் மீசை எடுத்தல், வைத்தல் வித்தியாசம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.