Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~27,000

சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.)

எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும்.

(இதை நான் செய்வதற்கான முக்கிய காரணம், வயிற்றுப் பிழைப்பிற்காக மாவீரர் எண்ணிக்கையினை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனக் கூவித் திரிவோர் கொஞ்சமேனும் திருந்தட்டும் என்பதற்காகவே ஆகும். )

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38)

2006-1-886x1024.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

main-qimg-64f127a70ee8dbb7c753512c67435099.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது'

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:-

           "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்"

main-qimg-9ec39a2780af5d8058d5019bcb557263-mzj

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.)

Till 20th Nov, 2008.jpg

'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600'

main-qimg-e080a67544be3203d1ecf770bff61b86.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

(மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்)

  • இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள்

  • சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள்

  • ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள்

                --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள்

  • 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள்

  • 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள்   | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை

  • இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் மொத்தம் - 651 போராளிகள்   | ஆதாரம்: மாவீரர் பட்டியல்

மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம்.

இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அலுவல்சார் வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே. நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம்.

2009

killed ltte from defence.lk.png

 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:-

சரி இனி நாம் கணக்கெடுப்போம்.

சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால்,

(செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு) - (புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை)

  • 5953-2,239 = 3,714

2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714

  • 22,390+3,7149 = 26,104

சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக,

  • 26,104+358 = 26,462

ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்..

(சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.)

FEBRUARY 06, 2020.... No more than this no. of LTTE were killed.....  Show this to Diaspora 'Tiger Money Eaters' and tell them to stop spreading of Lies which says that 50,000 Tigers were kileld in combat..png

இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம்.

  • இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி:

graves.jpg

இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும்.  இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும்.

இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. 

இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. 

அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம்.  மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது,

முன்னிருந்து பின்னாக...

  1. முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160  (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை)

  2. இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276

  3. மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். 

கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை

மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். 

இந்த தோராயக் கணக்கின் அடிப்படையில் கணக்கப்போட்டுப் பார்த்தால்,

  1. மார்ச் 8 இலிருந்து ஏப்ரல் 20 வரை இதே அளவானோர் வீரச்சாவடைந்திருப்பராயின் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும்.

  2. இதே அளவில் போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் - நவம்பர் 20 முதல் மார்ச் 8 வரை  வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 2,009- 2,260 ஆகும்.

  3. இதே அளவில் ஏப்ரல் 20 இலிருந்து மே 16 வரை வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் 484 - 544 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம்.

இந்த ஐந்து தோராய மதிப்பீட்டினை கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 3,293 - 3704 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர், நவம்பர் 20 முதல் மே 16 வரை.

எனது இந்தத் தோராயக் கணக்கிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆகுதியான வான்கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் வன்னிவாழ் மக்களிற்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்த ஒரு வரியினை ஆதாரமாக எடுத்தாள்கிறேன். வரி பின்வருமாறு:

".................. அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். ......"

from first Sky Black Tiger 'Neelappuli' Col. Ruban's letter

எனது தோராயகக் கணக்கான 43 நாட்களில் வீரச்சாவடைந்தோர் 800- 900 பேர் என்பதைக் கொண்டு நவம்பர் 20 முதல் பெப்ரவரி 18 வரையான 92 நாட்களில் வீரச்சாவடைந்தோர் தொகை 1712. கிட்டத்தட்ட இதே அளவான தொகையையே இவ்வான்கரும்புலியும் (22,390- 24,000 = 1610) குறித்துள்ளார். நவம்பர் 20 முதல் இவர் இக்கடிதத்தை எழுதிய திகதியாக நான் கருதும் பெப் 18ம் திகதிக்கு முன்னர் வரைக்கும் ஏறக்குறைய 24,000 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் எனக் கருதும் பட்சத்தில், எனது தோராயக் கணக்கும் இதே அளவான போராளிகள் இறந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

மே 17 காலை ரட்ணம் மாஸ்டர் அவர்களுடன் சென்ற 250 வரையான போராளிகளில் "தோராயமாக" 80- 100 வரையானோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் என்றும் அச்சமரில் பங்குபற்றிய போராளிகளின் வாக்குமூலம் அறிகிறேன். அத்துடன் கட்டாங்கடைசியில் (18 அதிகாலை - 19 காலை) 700 வரையான போராளிகள் தாம் கொண்ட கொள்கையின் உறுதிப்பாட்டால் இறுதிவரை நின்று களமாடி வீரச்சாவடைந்தனர் என்று சிங்களத் தகவல்கள் மூலம் அறிகிறேன். 

தமிழர் தரப்பு மூலம் அறியப்பட்ட உச்ச எண்ணிக்கையினைக் கொண்டு மொத்த மாவீரர் தொகையினை கணக்கிட்டால்,

  • 22,390 + 3,704 + 700 + 100 = 26,894

இதை நாம் முழு எண்ணாக எடுக்கும் போது வருவது 27,000. இவ்வெண்ணிக்கையானது சிங்களவரின் கணக்கின் முழு எண்ணோடு பொருந்தி வருவதைக் காண்க.

இதையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே. இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.

"எங்கள் தோழர்களின் புதைகுழியில் 
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி - தமிழ்
ஈழம் மீட்பது உறுதி 😢"

- மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  • நன்னிச் சோழன் changed the title to மே-18, 2009 வரையிலான மொத்த மாவீரர் விரிப்பு - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி.

உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
29 minutes ago, goshan_che said:

கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி.

உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.

தங்கள் கருத்திற்கு நன்றி ஐயனே.

நான் இதை எழுதியதன் காரணங்களில் ஒன்று இந்த 50,000 என்ற கருத்தினை அகற்ற வேண்டும் என்பதுதான். ஏனெனில் அது மிகவும் பிழையான ஒன்றாகும்.

கருத்து சொல்ல ஒன்றும் இல்லை , எங்கள் செல்வங்கள் அவர்கள்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2021 at 05:27, நன்னிச் சோழன் said:

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர்:- 25,500 - 26,500

சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது.. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.)

எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும்.

thinakkathir - 20-6-2001.png

'தினக்கதிர்: 20-6-2001'

main-qimg-e080a67544be3203d1ecf770bff61b86.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

(மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்)

  • இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள்
  • சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள்
  • ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள்

                --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள்

  • 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள்
  • 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள்   | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38)

2006-1-886x1024.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

main-qimg-64f127a70ee8dbb7c753512c67435099.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது'

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:-

           "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்"

main-qimg-9ec39a2780af5d8058d5019bcb557263-mzj

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.)

Till 20th Nov, 2008.jpg

'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600'

மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம்.

இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அதிகாரநிறைவு வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே... நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம்.

2009

killed ltte from defence.lk.png

 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:-

சரி இனி நாம் கணக்கெடுப்போம்.

சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால்,

செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு - புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை

  • 5953-2,239 = 3,714

2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714

  • 22,390+3,7149 = 26,104

சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக,

  • 26,104+358 = 26,462

ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்..

(சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.)

FEBRUARY 06, 2020.... No more than this no. of LTTE were killed.....  Show this to Diaspora 'Tiger Money Eaters' and tell them to stop spreading of Lies which says that 50,000 Tigers were kileld in combat..png

இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம்.  அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம்.

  • இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி:

graves.jpg

இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும்.  இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும்.

இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. 

இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. 

அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம்.  மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது,

முன்னிருந்து பின்னாக...

  1. முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160  (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை)
  2. இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276
  3. மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். 

கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை

மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது.

ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கினடிப்படையில், சனவரியில் இருந்து மே 5 வரை கணக்கிட்டால் 2,550 - 2,700 வரையிலான போராளிகள் மாவீரர்கள் ஆகியிருக்கின்றனர். மேற்கொண்டு (மே 10-18) சமர் உச்சியில் இருந்ததால் இந்த கணக்கு சரிப்பட்டு வராது. சிங்களவரின் சரமாரியான எறிகணைகளில் எல்லா இடங்களிலும் வீரச்சாவுகள் நடந்துகொண்டேயிருந்தன. மேலும், எல்லா நாட்களிலும் மார்ச் 8 - ஏப்ரல் 20 வரை நடந்த சமர்கள் போன்ற சமர்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைத்தான்.

எனவே கடைசி ஐந்து மாதங்களில் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய துணிபு. நான் கொடுத்த கணக்கோடு சற்று கூடக் குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்கவும்.

அடுத்து 2008 டிசம்பர் மாதத்திற்கான மாவீரர் தொகையினைக் கணக்கெடுத்தால், நடந்த சமர்களின் அடிப்படையிலும் 2008 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின்(2,239) அடிப்படையிலும் பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 200 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்கும் தோராயமாக மொத்தம் 200 போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர். 

எனவே மொத்தத்தில் தாழ்ந்த மாவீரர் எண்ணிக்கையாக,

  • 22,390 + 200 + 3,000 = 25,590

25,590 ஐ வரையறுக்கலாம்.

ஆக, மொத்த மாவீரர் எண்ணிக்கையாக தமிழர் தரப்பினது கணக்கினை தாழ்ந்த கணக்காகவும் சிங்களத்தின் கணக்கினை உச்சக் கணக்காகவும் வைத்தால்,

 25,500 - 26,500

என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.

"எங்கள் தோழர்களின் புதைகுழியில் 
மண்போட்டுச் செல்கின்றோம்

இவர்கள் சிந்திய குருதி - தமிழ்
ஈழம் மீட்பது உறுதி 😢"

- மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

@goshan_che

யாழிலே புள்ளி விப‌ர‌ம் இருக்கு.........ஆனால் நான் 2006தான் பார்த்தேன் அப்போது 11000ஆயிர‌த்துக்கு குறைவா தான் அதில் இருந்த‌து 1983 தொட‌க்க‌ம் 2006வ‌ரை...........ஆனால் இதில் 2008வ‌ரை இருக்கு................

நான் சொன்ன‌ புள்ளி விப‌ர‌ம் த‌வ‌றாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌ன்னிப்பு கேட்கிறேன்🙏..............

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளுக்கு நன்றி நன்னி.

  • நன்னிச் சோழன் changed the title to மே-18, 2009 வரையிலான மொத்த மாவீரர் விரிப்பு - ஆவணம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எனது இந்தப் பதிவானது 2022ம் ஆண்டு தொடக்கம் கீழ்க்கண்ட வேசுபுக்கில் இருந்து புலிகளின் பெயரில் அதிகாரப்பூர்வ வெளியீடு போன்று (மாவீரர் பணிச்செயலகம் என்ற பெயரில்) அடித்து வெளியிடப்படுகிறது எனது கவனத்திற்கு சில நண்பர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

இக்கணக்கில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள எனது ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவேயொழிய எனக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை இத்தால் அறியத்தருகிறேன்...

"மறவன்புலவு பிரபாகரன்" என்ற பெயரில் வெளிவருகிறது.

  • மேற்கண்ட பதிவின் 2022ம் ஆண்டு காலத்திய விருத்திலிருந்து (version) இவை உருவாக்கப்பட்டுள்ளன:

large....(1).jpg.c3d43fae4f9b0bbc6b8e4ca

large....(2).jpg.58909baa5d6ffdca4fe26f0

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.