Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் யார் பெத்த பிள்ளையோ… நல்லா முட்டு கொடுக்கின்றது.

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, MEERA said:

பாவம் யார் பெத்த பிள்ளையோ… நல்லா முட்டு கொடுக்கின்றது.

முட்டு கொடுப்பதற்கென்றே ஈழத்திலும் புலத்திலும் தீனி போட்டு வளர்த்து வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.

அந்த சிறிது சிறிது எவ்வளவு என்பதை விளக்கினால்  நல்லது ?

அய்ன்ஸ்ரினின்  நேர கொள்கை போல் உங்களுக்கு உள்ள தெரிவை முதலில் தெரிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்+

குணா கவியழகன் அவர்கள் நல்ல சிறப்பான நிகழ்படம் ஒன்று வெளியிட்டுள்ளார், இந்த கூத்து பற்றி. தமிழர்களே கவனமெடுக்கவும். பாம்பு காலைச் சுற்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

பாவம் யார் பெத்த பிள்ளையோ… நல்லா முட்டு கொடுக்கின்றது.

சிங்கள இணையதளம்களில்  இப்போ எல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு நன்றாக வேலைசெய்கிறது உதரணமாய் அரசியல் சம்பந்தப்பட்ட யூடுப் ஆக இருக்கலாம் எங்கடை ஆட்கள் அறிவுரை என்கிற பெயரில் சிங்களவனின் காலில் விழ  சொல்லுவது  எங்கடை இனத்தையே பழிப்பது  மட்டம் தட்டுவது எல்லாம் எங்கடை இனத்தில்  தான் அவர்களிடம் காணாவே கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 16:30, narathar said:

சிறி லங்கா வுடன் பேசி எதனையும் தமிழர் பெற முடியாது. சுரேன் GTF அறிக்கை கள் சிறிலங்கா வின் ஊடகங்கள் மூலமே வெளியிடப் படுகின்றன. மேலும் தடை செய்யப்பட்ட gtf இன் தலைவர் எவ்வாறு சிறிலங்காவில் வாழ்கிறார். சுரேன் பல சிறிலங்கா அரசியல் வாதிகளை பல முறை சந்தித்து உள்ளார். இவருக்கு இவ் அதிகாரத்தை எந்த அமைப்பு வழங்கியது ? GTF இல் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசுடனான பேச்சு வார்த்தைகள் தான் நடக்க இருக்கின்றன. அதற்காக ன அடிப்படைகளே வெளியிடப்பட்டது.

உங்களுடைய பதில்கள் நேரடியாக இல்லையே நாரதர்? 2012 இல் ஏனைய அமைப்புகள் விலக என்ன காரணமென்று தான் கேட்டேன். இம்மானுவேல் பாதர் தடை வர முதலே போய் விட்டார், இப்போது அவரை வெளியேற்ற காரணங்கள் இல்லையென பேசாமல் விட்டிருக்கலாம். இன்னும் clerical கொலர் அணிந்த படி வேறு இருக்கிறார், எனவே அரசு எதுவும் செய்யத் துணியாது.

ஆனால், உங்கள் உறுப்பினர் எண்ணிக்கை பற்றிய கேள்வியைத் திருப்பிக் கேட்டால், எத்தனை பேர் அந்த மாற்று அறிக்கை விட்ட 6 அமைப்புகளிலும் இருக்கிறார்கள்? 9 மாதங்கள் முன்பு RGTF இனை ஆரம்பித்து சுரேனை நீக்க வேண்டுமென ஆரம்பித்த கையெழுத்து வேட்டையில் 180 கையெழுத்துகள் சேர்ந்திருக்கின்றன என்றால் RGTF இன் மனித பலம், அல்லது மக்களாதரவு எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?
 
8 hours ago, Justin said:

https://www.colombotelegraph.com/index.php/gtf-has-lost-their-way-no-transparent-and-no-democratic-governance-british-tamils-breakaway/

மேற் குறிப்பிட்ட அறிக்கை வெளியிட்டது வந்து பல வருடங்களாகிறது. இதன் பின்னர் அனைத்து அமைப்புக்களும் வெளியேறி விட்டன.  GTF ஒரு கம்பனியாக பதிவு செய்யப்பட்டது. அது ஒரு பொது அமைப்பாக் கூட இல்லை. 

Despite some initial successes, GTF and its leadership have gradually lost their way – principally because they have turned their back on GTF’s founding values, such as collective decision-making, democratic governance, transparency, inclusiveness and grassroots activism.” says the British Tamils Forum

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, narathar said:

நன்றி, இந்த அறிக்கையில் இருந்து சில வசனங்களை எடுத்துத் தான் லதன் முத்துவின் அண்மைய அறிக்கையும் வந்திருக்கிறது! எனக்குப் புரிந்த வரையில், இது தலைமைக்கான சண்டையின் விளைவாக வந்த பிளவாகவே தெரிகிறது. இது தமிழ் அமைப்புகளின் பாரிய குறைபாடு தான். 

மேலும், எமக்குள் இருக்கும் பல புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பற்றி புலம் பெயர் தமிழர் பலருக்குத் தெரியாது, அக்கறைப் படுவதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஒரு சிறு குழுவே எல்லாவற்றையும் செய்கிறது என நினைக்கிறேன்.

நேரத்திற்கு நன்றி!

5 hours ago, Justin said:

பலர் அக்கறை அற்று இருப்பது உண்மை தான். ஏனெனில் இதனால் பலருக்கு பலன் எதுவும் இல்லை. அதையே சுரேன் போன்றவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். 

பல அமைப்புகள் செய்யப்பட்டாலும் ஒரு சில அமைப்புக்களே சனனாயகத்துடன் வெளிப்பாட்டுத் தன்மையுடன் இயங்குகின்றன. இவையே நிலைத்து நிற்கும். 

சிறந்த தலைமை உருவாகும் வரை எந்த இடத்திலும் தலைமைத்துவப் போட்டி இருக்கும். ஈற்றில் சிறந்த தலைமை/ அமைப்பு வெற்றி பெறும். சுரேன் போன்றவர்கள் ஒரங்கட்டப் படுவார்கள்.

தற்போது இருக்கும் அமைப்புக்களில் ஒன்றிணைந்த அமெரிக்கா செயற்பாட்டுக் குழு சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. 

அதன் தலைமை ஈழத்தில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.