Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2021 at 23:55, பெருமாள் said:

முதலில் அங்கு உள்ள தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுங்க அதன்பின் எல்லாம் தானாகவே நடக்கும் .

தீர்வை கொடுக்க மாட்டார்களாம் அவசரகால தடை  சட்டத்தை எடுக்க மாட்டார்களாம் அங்கு ஏற்கனவே இருக்கும் தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் போல் நடாத்தப்படுகின்றனர் இவ்வளவு தடங்கல் இருக்கும்போது யார் அங்கு போவார் ?

இங்கு மேல் எழுதியதுக்கு எதிர்க்கருத்து எழுதுகிறேன்  என்று வேறு ஏதோ எழுதி தள்ளி இருக்கிறீர்கள் ஏன்  இப்படி ?

நோர்வேயிலிருந்து இலங்கை வந்த தமிழருக்கு ஏற்பட்ட நிலை! பொலிஸார் தீவிர விசாரணை

நோர்வே நாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் அவரது தனிப்பட்ட உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிலாபம் வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வென்னப்புவை - வைக்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோர்வே ட்ரிம்சோ பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான வேலாயுதம் நகுலேந்திரன் என்பவரின் பணமும், உடமைகளுமே கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது குறித்து அவர் வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னை அழைத்துச் சென்ற பேருந்தில் வைக்கப்பட்டிருந்த தனது பயணப் பொதியில் இருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் ,வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamilwin.com/article/the-situation-of-the-tamils-who-came-from-norway-1633613610?itm_source=parsely-detail

  • Replies 51
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை எல்லா நாடுகளிலும் உண்டு. இதற்கு இலங்கை விதி விலக்கு இல்லை.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் நடைபெறும் கிரைம்ஸ் நாம் அறியாதது அல்ல. ஆனால் இலங்கையில் நடைபெறும் தமிழர் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு குற்றவியல் சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது என பிரச்சாரம் செய்வது பலருக்கு வசதியாகிவிட்டது.

சிங்களவர்கள், முஸ்லீம்கள், பிற வெளி நாட்டவர்கள், சுற்றுலா பயணிகள் இலங்கையில் குற்றவியல் சம்பவங்களினால் பாதிக்கப்படுவது இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் சொல்வதில் உண்மைதான் ஆனால் அவசரகால தடை சட்டத்தை அரசு போட்டு விட்டு அந்த நாட்டில் திருட்டு வழிப்பறி கொள்ளை கொலை குண்டு வைத்தல் தேவாலயங்களுக்கு  அனைத்தும் செய்வது சிங்கள அரசும் அவர்கள் தோற்றுவித்த அமைப்புக்களும் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

நத்தார் குண்டுவெடிப்புடன் பணால் ஆகியிட்டுது .

ஈஸ்டர் குண்டு வெடிப்பை சொல்கிறீர்களா?

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்படித்தான் முன்பு யாழ்ப்பாணத்தில் கதை சொன்னார்கள் கொழும்புக்கு போகவேண்டாம் ஆமி, பொலிஸ் பிடிச்சு உள்ளே போட்டால் வெளியே வரமுடியாது என்று. கொழும்பு என்றாலே வாழ்க்கை தொலைந்து விடும் எனும் கணக்கில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

உண்மை! கொழும்புக்கு போன எத்தனையோ பிள்ளைகள் காணாமற் போய் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் இராணுவப் படையால் கொல்லப்பட்டு விட்டனர். நீதி தேடி கிடைக்கவில்லை. சிலர் தமக்கு நடக்காதபடியால் இலங்கை அரசும், இராணுவமும் ஒன்றும் அறியாத அப்பாவிகள் என்று பிரச்சாரம் செய்வது ஏன் என்று புரியவில்லை? கொழும்புக்கு போனவர்கள் மட்டுமல்ல தங்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டவர்களே எலும்புக்கூடுகளாக  பல வருடங்களின் பின் கண்டெடுக்கப்பட்டார்கள். எவ்வளவு வேதனை? நாம் பிறந்த நாடு, ஆனா  நமக்கு உரிமையில்லை. எல்லாம் பறிபோய் அடிமையாக இருக்கிறோம். நம் நாடு என்று போற்றுவோரும் வெளிநாடுகளில் இருந்து  பல வசதிகளை அனுபவித்துக்கொண்டே  போற்றுகிறார்கள். தாயகத்தில் இருப்போரோ தப்ப முடியாமல் தவிக்கின்றனர்!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

திருத்தலுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பாஸ்போட்டை பறிப்பாங்கள் என்றால் போக வேண்டாம், ஆனால் அங்கு பிரச்சனை இல்லை.

நல்ல கருத்து, முண்டு கொடுப்பதில் இப்படியும் ஒரு டிஷைன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மிகப்பெரிய பிரச்சணையே, கடத்தி கப்பம் வாங்குவது.

அதை செய்ய, இனப் பாகுபாடுகள் இன்றி சேர்ந்து கொள்வார்கள்.

சிங்கள போலீஸ் மாதிரி நடித்து, யாரை கடத்த வேண்டும் என்று தமிழர் இடம் இருந்து தகவல் எடுத்து, பின்னர் பஙகை பிரிப்பதெல்லாம் நடந்துள்ளது.

வசந்தா கருணாகொட என்னும் கடற்படை தளபதி, கப்பம் வாங்க, கடத்திய 11 பேரை இளவயதினரைகொலைகள் செய்து, தேசப்பற்றாளனாக காட்டப்பட்டு தப்பி இருக்கிறார்.

இவரது மணைவியை, இவர் வைத்திருந்த கடத்தல் குழுவில் இருந்த ஒருவரே, தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

இலங்கையில் வகை தொகை இல்லாமல் கைதாகி, வழக்கு, விபரம் இல்லாமல், சிறை உள்ளே வைக்கப்பட்ட பலர், சிறையதிகாரிகளுக்கு, அமைச்சர்களுக்கு கப்பம் கொடுத்து, வெளியே வந்திருக்கிறார்கள்.

கோத்தாவே, கப்பக் குழு இயக்கியுள்ளார்.

துருக்கியில், ஒரு பெண் நிருபரை, அரசியலுக்காக கைது செய்த இரகசிய போலிசார், அவரை நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் வெளியிட்ட அவரது புகழ் மிக்க, குறிப்புக்களில், இந்த மாதிரி கொடுமைகளை செய்பவர்கள், தமது வீடுகள் சென்று தமது குழந்தைகளுக்கு பாசமுள்ள தந்தையாக, மணைவிக்கு, உண்மையான அன்பான கணவணாக, பெற்றோருக்கு பாசமுள்ள மகனாக எப்படி இருக்க முடிகிறது என்று கேட்டிருந்தார்.

கோத்தா, தனது பேரப்பிள்ளையை கொஞ்சிய போது உடல் சிலிர்த்தார் என்று சொன்ன போது மேலுள்ள கதையே நிணைவுக்கு வந்தது.

அந்த மனிதர், அன்புடன் அழைக்கிறார்.... ம்...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

வசந்தா கருணாகொட என்னும் கடற்படை தளபதி, கப்பம் வாங்க, 11 கடத்திய பேரை கொலைகள் செய்து, தேசப்பற்றாளனாக காட்டப்பட்டு தப்பி இருக்கிறார்.

இவரது மணைவியை, இவர் வைத்திருந்த கடத்தல் குழுவில் இருந்த ஒருவரே, தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

“முற்பகல் செய்யின்… பிற்பகல் விளையும்” என்ற பழமொழிக்கு… இந்தச் சம்பவம் பொருத்தமாக இருக்கின்றது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

அங்கு பிரச்சனை இல்லை

அப்படிச் சொல்பவர்கள்: தாயகத்தில் வாழ்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து, இழப்புகளை சந்தித்திருக்காதவர், பிரச்சனை பற்றி எதுவுமே தெரியாதவர், பிரச்சனைகளை தோற்றுவிப்பவரோடு தோழமையில் உள்ளவர், தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டு எதுவுமே நடக்காதது போன்று வேஷம் போடுபவர். கோத்தா சர்வதேசத்துக்கு காட்ட புலம் பெயர்ந்தவர்களை அழைத்துக்கொண்டு மறுபுறம் தமிழர் பிரதேசத்தை விழுங்கி முடித்துவிடுவார். தாயகத்தில்  இழப்புகளை சந்தித்து அதனோடு போராடிக்கொண்டு இருப்பவர்களை சந்திக்க மறுத்து, புலம்பெயர்ந்தவர்களை, தானே தடை செய்தவர்களை அழைப்பதன் மர்மம் என்ன? புலம் பெயர்ந்த தேசங்களில் உள்ளவர்களின் குரலை அடக்க முடியாதபடியால் இப்படி ஒரு அழைப்பு விடுத்து அவர்களின் ஒருமித்த எதிர்ப்புக் குரலை குழப்பியடிப்பதே உண்மையான நோக்கம். அந்த தந்திரம் தாயகத்தில் வெற்றியளித்துள்ளது. இப்போ புலப்பெயர்ந்தவர்களிடம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எனக்கு இலங்கை குடியுரிமைக்கு விண்ணபித்து பெற்று கொண்ட சீனியர் தம்பதிகளை தெரியும்.இலங்கை சென்று மாத கணக்கில் தங்கி வருவார்கள். அங்கே வீடு கட்டியுள்ளார்கள். கடைசியாக போன வருடம் பெப்ருவரி தான் இலங்கையில் இருந்து திரும்பி வந்தவர்கள். அதன் பின்பு இலங்கை செல்லாததிற்கு காரணம் கோவிட் பிரச்சனை என்று சொன்னார்கள்.
நானே தற்சமயம் கோவிட் கட்டுப்பாட்டால்  எனது  ஊரில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வெளிநாடுகளில் எல்லா சுதந்திரத்தையும், சமதர்மத்தையும், சலுகைகளையும்  அனுபவித்துக்கொண்டு வயதான காலத்தில் சேமித்த பணத்தை உல்லாசமாக விடுமுறை கொண்டாட இலங்கை தேவைப்படுகிறது. அதற்கு சிங்களத்துக்கு வெள்ளை அடிப்பதும், தாய்நாட்டு பற்று பொங்கி வழிவதும் புதுமையல்ல. அவர்களால் அங்கும் இருக்க முடிவதில்லை, இங்கும் இருக்க முடிவதில்லை. வசதியை தேடி ஓடிக்கொண்டே இருப்பார்கள். காரணம் ஆயிரம் சொல்லி  கரணம் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு இலங்கை குடியுரிமைக்கு விண்ணபித்து பெற்று கொண்ட சீனியர் தம்பதிகளை தெரியும்.இலங்கை சென்று மாத கணக்கில் தங்கி வருவார்கள். அங்கே வீடு கட்டியுள்ளார்கள். கடைசியாக போன வருடம் பெப்ருவரி தான் இலங்கையில் இருந்து திரும்பி வந்தவர்கள். அதன் பின்பு இலங்கை செல்லாததிற்கு காரணம் கோவிட் பிரச்சனை என்று சொன்னார்கள்.
நானே தற்சமயம் கோவிட் கட்டுப்பாட்டால்  எனது  ஊரில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறேன்.

நான் அறிந்து பலர் இலங்கைக்கு நிர்ந்தரமாகவே சென்றுவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

***

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வயோதிபர்களின் நாடு திரும்பல் தொடர்பாக திரி திசை மாறி பயணிக்கின்றது. 

 ஆனால் சிறீலங்கா அரசோ முதலீடுகளையும் உழைப்பையும் புலம்பெயர் மக்களிடமிருந்து எதிர்பார்த்து கையை ஏந்தி நிற்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் அறிந்து பலர் இலங்கைக்கு நிர்ந்தரமாகவே சென்றுவிட்டார்கள். 

உயிரோட இருக்கிறார்களா ? உள்ளேயே அல்லது வெளியேயா ?

முதலில் மினக்கெட்டு சிலோனின் யதார்த்தத்தை எழுதியபோது அது பற்றி எந்த குற்ற உணர்வும் அன்றி நியாயமான  பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கு இல்லாதது போல் சொறிலங்காவின் தற்போதைய திமிர் பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள் போல் நீங்கள் கருத்துக்கள் இடுவதால் மேல் உள்ளவாறு கேள்வி கேட்க வேண்டி உள்ளது .

அதுசரி இனவாத சிங்களவர்களுக்கு தமிழன் தங்களின் அடிமை என்ற நினைப்பு எப்போதும் உள்ளத்தாக்கும் தங்களுக்கு வேண்டாம் என்றபோது அடித்து கலைப்பது தங்களுக்கு வேணும் என்றபோது திரும்பி வாருங்கள் என்றவுடன் ஓடிவந்து காலை பிடித்துக்கொண்டு நிற்பார்கள் என்று நினைக்க வைப்பது உங்களை போன்ற ஒரு சிலரால் என்பது தெள்ள தெளிவு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் உள்ளது தானே அகப்பையில் வருமாம். அவர்களின் பானையில் சிங்கள அடிமை விசுவாசம்

3 hours ago, பெருமாள் said:

உயிரோட இருக்கிறார்களா ? உள்ளேயே அல்லது வெளியேயா ?

முதலில் மினக்கெட்டு சிலோனின் யதார்த்தத்தை எழுதியபோது அது பற்றி எந்த குற்ற உணர்வும் அன்றி நியாயமான  பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கு இல்லாதது போல் சொறிலங்காவின் தற்போதைய திமிர் பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள் போல் நீங்கள் கருத்துக்கள் இடுவதால் மேல் உள்ளவாறு கேள்வி கேட்க வேண்டி உள்ளது .

அதுசரி இனவாத சிங்களவர்களுக்கு தமிழன் தங்களின் அடிமை என்ற நினைப்பு எப்போதும் உள்ளத்தாக்கும் தங்களுக்கு வேண்டாம் என்றபோது அடித்து கலைப்பது தங்களுக்கு வேணும் என்றபோது திரும்பி வாருங்கள் என்றவுடன் ஓடிவந்து காலை பிடித்துக்கொண்டு நிற்பார்கள் என்று நினைக்க வைப்பது உங்களை போன்ற ஒரு சிலரால் என்பது தெள்ள தெளிவு .

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்து, வளர்ந்த நாட்டின் மீது உள்ள பாசம், கரிசனை, அக்கறை.. உங்கள் பானையில் அது இல்லை போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பிறந்து, வளர்ந்த நாட்டின் மீது உள்ள பாசம், கரிசனை, அக்கறை.. உங்கள் பானையில் அது இல்லை போலும்.

ஆம் கரிசனை உண்டு ஆனபடியாலதான் தடக்கி விழுந்ததுக்கெல்லாம் அனுப்புகிறோம் பணத்தை அது தமிழரின் பூர்வீகவடகிழக்கு தாயகத்துக்கு .நீங்க என்னடான்னா பக்கத்து நாட்டு சிங்களவனுக்குக்கும் சேர்த்து அனுப்ப சொல்கிறிங்க .🤣

எந்த குற்ற உணர்வும் இன்றி சிங்களத்துக்கு வெள்ளையடிக்க கருத்துக்கள் நீங்களும் போடுவதால் நாங்களும் உங்க தரத்துக்கு இறங்கி  நிக்க வேண்டி உள்ளது  பாஸ்.

சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்டது வடகிழக்கு உலக நாடுகள் அனுப்பிய உதவி பக்கத்து நாட்டு சிங்களவன் சிங்கள அரசு மூலம்  விழுங்கிய கதை மறக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாதத்திற்கு இடமில்லை🤪

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையா ..கத்து கத்து என்று கத்தி..கடைசிப்புரட்டாதிச் சனிக்கிழமை ..நல்ல சாப்பாடு தாறன் என்று சொல்லியும் இன்னும் ஒருதரும் போகவில்லை.. கிறீன்லன்ட் கோட்டலிலையாம் சாப்பாடு..

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நாட்டுப்பற்று சிங்கள முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பிறந்து, வளர்ந்த நாட்டின் மீது உள்ள பாசம், கரிசனை, அக்கறை.. உங்கள் பானையில் அது இல்லை போலும்.

நீங்கள்  சொன்ன அனைத்தும் என் மண்ணின் மீது உண்டு. ஆனால் சிங்கள மண் மீது துவேசங்கள் என்றுமே இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 நீங்கள் வந்தேறு குடிகள். உங்களுக்கு உரிமையில்லை, இது சிங்கள, பவுத்த நாடு என்று விரட்டுகிறான். பிறந்து, வளர்ந்த ஊரை விட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகிறோம்.  தாங்கள் புலம் பெயர்ந்தபோது நாட்டுப்பற்று தெரியவில்லை, இன்னும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்துகொண்டு நாட்டுப்பற்று பாடம் எடுக்கிறார்கள். நாட்டுப்பற்று உள்ளவர்கள் புலம்பெயர்ந்ததன் நோக்கம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் அரசியலில் வரும்போது: தம் தாய்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளை, எதனால் தாம் புலம்பெயர்ந்தோம் என்கிற உண்மையை  அந்த நாட்டில் புரிய வைத்து தம் மக்களின் துயரத்தை துடைப்பார் என்கிற எதிர்பார்ப்பு  தாய் மண்ணின் மீது பற்றுள்ள எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இவர் அந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக கூடுதல் நலன். அவர் அதை விட்டு  பொதுவாக  கதைக்கும் போது வெறுப்பு, விரக்தி, கோபம் வருவது இயல்பு. ஆனால் நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு நிலையான இடத்தைப் பிடிக்குமட்டும் தமிழ் உணர்வோடு, தமிழுக்காகவே  உழைப்பார்கள் அல்லது தமக்கு தேவையான ஆதரவை அதை வைத்தே திரட்டுவார்கள். இலக்கை அடைந்ததும் வேறொன்றை நோக்கி ஓடுவார்கள், வேறெதையோ பேசுவார்கள், இது தான் நிஜம். எமது தாயக தமிழ் அரசியல்வாதிகளானாலும் சரி, வேறெந்த அரசியல்வாதிகளானாலும் சரி. உண்மையாய் உழைப்போரை யாரும் கண்டுகொள்வதில்லை, அவர்களை முன்னேற விடுவதுமில்லை. காலங்கள் மாறும்போது பலரின் கருத்துக்களும் மாறி வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.புலம் பெயர் நாட்டில் ஒரு நிலையான இடம் கிடைத்தவுடன் தாயகத்தை மறந்து, பிடித்த இடத்தை தக்கவைப்பதற்கே பாடுபடுவார்கள். தாயக கனவு மெல்ல மறைந்து, எதிர்கருத்துகளும் தோன்றி, அதைப்பற்றி கதைப்பவர்களை வெறுக்கவும், சிங்களத்தோடு கைகுலுக்கவும் முண்டியடிக்கிறார்கள்.  தாயக மக்கள் தம்மால் இயன்றதை முயன்று தம்மை பாதுகாப்பதே சரியானது. இப்போ புலம்பெயர் தேசங்களில் குரல் எழுப்புவோர் குரல் மறையும் போது தாயக, புலம்பெயர் தொடர்பும் மறைந்து போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 பிழையான தலைப்பில் இணைத்துவிட்டேன். இலங்கையின் யுத்தகுற்ற விசாரணைகளை ........ முன்னெடுக்கப்படவேண்டும் என்கிற தலைப்பில் வர வேண்டியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.