Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா 💪

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ...

மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி

பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன.
பதிவு: செப்டம்பர் 27,  2017 15:45 PM
பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன.

இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றிற்கு ஏதேனும் ஒரு காரணத்துடன் தான் பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் “மாப்பிள்ளை சம்பா” விற்கு ஓர் பெயர் காரணம் உள்ளது.

முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே அந்த ஆண் மகன் இளவட்டகல்லை சுலபமாக தூக்கி விடுவானாம். அந்த அளவிற்கு உடலுக்கு பலத்தை தருவதில் மாப்பிள்ளை சம்பா தனித்து நிற்கிறது.
மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்

“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம். 
 
  • Replies 56
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிகப்பு பச்சை  அரிசியும் இதுவும் ஒன்றா........!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, suvy said:

சிகப்பு பச்சை  அரிசியும் இதுவும் ஒன்றா........!  🤔

எனக்கும் இது சரியாக தெரியவில்லை. யாரும் தமிழ்நாட்டில் இருப்பவர்களை விசாரித்தால் தான் தெரியும்.எதுக்கும் கவனமாய் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

சிகப்பு பச்சை  அரிசியும் இதுவும் ஒன்றா........!  🤔

பார்க்க பச்சை பெருமாள் அரிசியின் அண்ணனோ தம்பி போல இருக்கிறார் மாப்பிள்ளைச் சம்பா அரிசி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ஏராளன் said:

பார்க்க பச்சை பெருமாள் அரிசியின் அண்ணனோ தம்பி போல இருக்கிறார் மாப்பிள்ளைச் சம்பா அரிசி.

உங்கை ஊரிலை ஆரையும் விசாரிச்சால் தெரியும். அதுக்காக கடைக்காரரிட்டை விசாரிக்காதேங்கோ. பிறகு அதுதான் இது...இதுதான் அது எண்டு சொல்லுவாங்கள் 😎

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இருப்பதால் இதை நம்பிவிட வேண்டாம்.

100 கிராம் அரிசியில் ஆகக் கூடுதலாக 3-4 கிராம் புரதமே உள்ளது. கோதுமையில் இதைவிட 2-3 மடங்கு அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோற்றை விரோதமாக பார்ப்பவர்களுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே அந்த ஆண் மகன் இளவட்டகல்லை சுலபமாக தூக்கி விடுவானாம். அந்த அளவிற்கு உடலுக்கு பலத்தை தருவதில் மாப்பிள்ளை சம்பா தனித்து நிற்கிறது.

குமாராசாமி அண்ணே…. இந்த மாப்பிளை சம்பா அரிசியுடன்,

நாதமுனி இணைத்திருக்கும்… திருநெல்வேலி மாப்பிளை சொதியை கலந்து சாப்பிட்டால்… இரட்டிப்பு பலன் கிடைக்குமா?

அப்படி என்றால்… மாப்பிளை சம்பா அரிசியிலும், எனக்கு ஒரு சாக்கு வாங்கி அனுப்பி விடுங்கோ. 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணே…. இந்த மாப்பிளை சம்பா அரிசியுடன்,

நாதமுனி இணைத்திருக்கும்… திருநெல்வேலி மாப்பிளை சொதியை கலந்து சாப்பிட்டால்… இரட்டிப்பு பலன் கிடைக்குமா?

அப்படி என்றால்… மாப்பிளை சம்பா அரிசியிலும், எனக்கு ஒரு சாக்கு வாங்கி அனுப்பி விடுங்கோ. 🙏🏽

குமாரசாமி, எப்போதிருந்து அரிசிக்கடை மண்டி ஆரம்பித்தார்..? 

சொல்லவே இல்லை..? 😜

அதுவும் இணைவி(?) பெயரில் ஜெர்மனியில் கிளை ஒன்று..! 😍

rice.jpg

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

குமாரசாமி, எப்போதிருந்து அரிசிக்கடை மண்டி ஆரம்பித்தார்..? 

சொல்லவே இல்லை..? 😜

அதுவும் இணைவி(?) பெயரில் ஜெர்மனியில் கிளை ஒன்று..! 😍

rice.jpg

@குமாரசாமி அண்ணையின் அரிசிமண்டிக்கு ஒரு வெப்சைட் எடுப்பம் எண்டு பார்த்தா- விலையை பார்த்து தலை கிறுகிறுத்து போனேன். $99,999!

https://www.squadhelp.com/name/soru

#சோறு.காம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

குமாரசாமி, எப்போதிருந்து அரிசிக்கடை மண்டி ஆரம்பித்தார்..? 

சொல்லவே இல்லை..? 😜

அதுவும் இணைவி(?) பெயரில் ஜெர்மனியில் கிளை ஒன்று..! 😍

rice.jpg

குமாரசாமி அரிசி ஆலையின், பரிமளம் அரிசி மண்டி.
கிளைகள்: பிறேமன் (ஜெர்மனி), கரவெட்டி, கரணவாய், யாழ்ப்பாணம். 😂

ராஜ வன்னியன்.... இந்தப் படத்தை, நீங்கள் தயாரித்தீர்களா...
அல்லது,  கூகிளில் கிடைத்த படமா... :)

குமாரசாமி அண்ணையின் அனைத்து பொருத்தங்களையும் உள்ளடக்கிய... 
செமையான..  அருமையான படம். 👍

நம்ம ஊரிலை, மாட்டுத் தீவனத்தை... புண்ணாக்கு என்று சொல்வோம்.
புண்ணாக்கு... என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

@குமாரசாமி அண்ணையின் அரிசிமண்டிக்கு ஒரு வெப்சைட் எடுப்பம் எண்டு பார்த்தா- விலையை பார்த்து தலை கிறுகிறுத்து போனேன். $99,999!

https://www.squadhelp.com/name/soru

#சோறு.காம் 🤣

கோசான்...
"சோறு. காம்" க்கு,  100 $ டாலரை, கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம்.
ஒண்டும் யோசிக்காமல், வெப் சைட்டை  திறவுங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

குமாரசாமி, எப்போதிருந்து அரிசிக்கடை மண்டி ஆரம்பித்தார்..? 

சொல்லவே இல்லை..? 😜

அதுவும் இணைவி(?) பெயரில் ஜெர்மனியில் கிளை ஒன்று..! 😍

rice.jpg

கருக்கு மட்டை கிழிக்க காவோலை வேலிக்கால ஓடினவர் இண்டைக்கு செர்மனியில அரிசிமண்டி ஓனர்… இத கேள்விப்பட்டா லண்டன்மச்சாளுக்கு வெந்தபுண்ணில வேலபாச்சினமாதிரி இருக்கப்போவுது…

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்...
"சோறு. காம்" க்கு,  100 $ டாலரை, கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம்.
ஒண்டும் யோசிக்காமல், வெப் சைட்டை  திறவுங்கோ. 🤣

கார்டு மேல இருக்குற 16 நெம்பர் சொல்லு சாமி..🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கார்டு மேல இருக்குற 16 நெம்பர் சொல்லு சாமி..🤣

அந்த நெம்பர் எல்லாம்... இரண்டாய் தெரியுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அரிசி ஆலையின், பரிமளம் அரிசி மண்டி.
கிளைகள்: பிறேமன் (ஜெர்மனி), கரவெட்டி, கரணவாய், யாழ்ப்பாணம். 😂

ராஜ வன்னியன்.... இந்தப் படத்தை, நீங்கள் தயாரித்தீர்களா...
அல்லது,  கூகிளில் கிடைத்த படமா... :)

குமாரசாமி அண்ணையின் அனைத்து பொருத்தங்களையும் உள்ளடக்கிய... 
செமையான..  அருமையான படம். 👍

நம்ம ஊரிலை, மாட்டுத் தீவனத்தை... புண்ணாக்கு என்று சொல்வோம்.
புண்ணாக்கு... என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. 🤣

ஒருவேளை கு.சா., இணையத்தில் அவரின் அரிசிக்கடை மண்டியின் படத்தை விளம்பரத்திற்காக கசிய விட்டிருக்கலாமென நினைக்கிறேன், சிறீ.

அவரோட ஊர் பேர் எனக்கு தெரியாதே..! 🙄

எதற்கும் பரிமளத்தின் மணாளன், வந்து பொழிப்புரை சொல்லட்டுமே காத்திருப்போம்..!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அந்த நெம்பர் எல்லாம்... இரண்டாய் தெரியுது. 🤣

வெள்ளிக்கிழமை நைட்டு… பேய் உலாவுர நேரம்.. கார்டு நெம்பர் கேட்டது என்னோட தப்புதான்..😁

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கருக்கு மட்டை கிழிக்க காவோலை வேலிக்கால ஓடினவர் இண்டைக்கு செர்மனியில அரிசிமண்டி ஓனர்… இத கேள்விப்பட்டா லண்டன்மச்சாளுக்கு வெந்தபுண்ணில வேலபாச்சினமாதிரி இருக்கப்போவுது…

12 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவேளை கு.சா., இணையத்தில் அவரின் அரிசிக்கடை மண்டியின் படத்தை விளம்பரத்திற்காக கசிய விட்டிருக்கலாமென நினைக்கிறேன், சிறீ.

அவரோட ஊர் பேர் எனக்கு தெரியாதே..! 🙄

எதற்கும் பரிமளத்தின் மணாளன், வந்து பொழிப்புரை சொல்லட்டுமே காத்திருப்போம்..!

பால பத்திர ஓணாண்டியாரும்,  ராஜ வன்னியனும்....
எழுதிய கருத்துக்களை வாசித்த போது,
இருவரும்... திறமாக,  கலாய்த்திருக்கிறீர்கள். 😂

இப்போது... வேலையில்  நிற்கும், குமாரசாமி அண்ணர்...
யாழ். களத்திற்கு... வந்து பார்க்கும் போது,   
பயங்கர அதிர்ச்சி, காத்திருக்குது.. என்பது உறுதி. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவேளை கு.சா., இணையத்தில் அவரின் அரிசிக்கடை மண்டியின் படத்தை விளம்பரத்திற்காக கசிய விட்டிருக்கலாமென நினைக்கிறேன், சிறீ.

அவரோட ஊர் பேர் எனக்கு தெரியாதே..! 🙄

எதற்கும் பரிமளத்தின் மணாளன், வந்து பொழிப்புரை சொல்லட்டுமே காத்திருப்போம்..!

அவரு இன்னிக்கு வரமாட்டாரு.. கல்லாவில பரிமளம்... இவரு மண்டியில அரிசிமூட்டை தூக்கி ஒரு பக்கம் சைடு வாங்கிட்டு...

3 minutes ago, தமிழ் சிறி said:

பால பத்திர ஓணாண்டியாரும்,  ராஜ வன்னியனும்....
எழுதிய கருத்துக்களை வாசித்த போது,
இருவரும்... திறமாக கலாய்த்திருக்கிறீர்கள். 😂

இப்போது... வேலையில்  நிற்கும், குமாரசாமி அண்ணர்...
யாழ். களத்திற்கு... வந்து பார்க்கும் போது,   
பயங்கர அதிர்ச்சி, காத்திருக்குது.. என்பது உறுதி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவேளை கு.சா., இணையத்தில் அவரின் அரிசிக்கடை மண்டியின் படத்தை விளம்பரத்திற்காக கசிய விட்டிருக்கலாமென நினைக்கிறேன், சிறீ.

அவரோட ஊர் பேர் எனக்கு தெரியாதே..! 🙄

ராஜ வன்னியன்... நீங்கள், பயங்கரகாயப்பா....
குத்து மதிப்பாக எழுதினாலும், 
ஊரில்.. 5 கிலோ மீற்றர் தூரத்திலும், 
ஜேர்மனியில் 50 கிலோ மீற்றர் தூரத்திலும்,
இடங்களை கணித்துள்ளீர்கள். 😂

இதனை... நவீன சற்றலைட் கூட, கணிக்காது கண்டியளோ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கார்டு மேல இருக்குற 16 நெம்பர் சொல்லு சாமி..🤣

பின்னால இருக்கிற 3 நம்பரும் சேத்து சொல்லு சாமி🤣

  • கருத்துக்கள உறவுகள்

கார்டு பிளோக் ஆகிடும்... ரெண்டுபேரும் காலம்பர வரைக்கும் வெயிட்பண்ணுவம் சாமி… 🤣

9 minutes ago, goshan_che said:

பின்னால இருக்கிற 3 நம்பரும் சேத்து சொல்லு சாமி🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கார்டு மேல இருக்குற 16 நெம்பர் சொல்லு சாமி..🤣

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ளிக்கிழமை நைட்டு… பேய் உலாவுர நேரம்.. கார்டு நெம்பர் கேட்டது என்னோட தப்புதான்..😁

22 minutes ago, goshan_che said:

பின்னால இருக்கிற 3 நம்பரும் சேத்து சொல்லு சாமி🤣

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கார்டு பிளோக் ஆகிடும்... ரெண்டுபேரும் காலம்பர வரைக்கும் வெயிட்பண்ணுவம் சாமி… 🤣

மண்டை,  வெடிக்குது... 😂
கார்டு, எங்கை இருக்குது... எண்டாலும், சொல்லுங்கோவனப்பா... 🤣
உங்களுக்கு... புண்ணியமாக போகும். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

மண்டை வெடிக்குது...  😂
கார்டு, எங்கை இருக்குது எண்டாலும் சொல்லுங்கோவனப்பா...  🤣

சார் நம்பல் பேங்ல இருந்து பேசுது.. உங்க ஏடிஎம் கார்டு மேல இருக்க பத்னாறு நம்பர் சொல்லுது சார்... 🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சார் நம்பல் பேங்கல இருந்து பேசுது உங்க ஏடிஎம் கார்டு மேல இருக்க பத்னாறு நம்பர் சொல்லுது சார்... 🤣

அட... நம்ம,   "ஆப்கானிஸ்தான்" பேங்கில  இருந்தா கதைக்கிறீக... :grin:
அப்ப, நெம்பரை... சொல்லத் தான் வேணும். 😂

உங்களுக்கு,  பக்கத்தில...  பென்சிலும், பேப்பரும் இருக்கா... 🤣
 
Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.