Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

November 2, 2021

 

20211101192651 ogImage 13 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்


 

தமிழகம்:வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இவ்விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு பல இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்பட அரசுத்துறை உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதனை மாற்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.ilakku.org/sri-lankan-tamil-rehabilitation-camp-mk-stalin/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

spacer.png

இலங்கை அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்காக 317 கோடி ரூபாயில் புதிய நலத் திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று (நவம்பர் 2) நடைபெற்றது.

அப்போது, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக 3,510 புதிய குடியிருப்புகள் மற்றும் 30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பிற மாநில முதல்வர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பத்திரிகைகள் என பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதாகப் புகழாரம் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ ஒரு அடையாள சொல்லாகத்தான் இலங்கை தமிழர்கள் என்று நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் தான். தமிழக தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.

நாம் அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் இன்று நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம்தான் திமுக. 1983 முதல் ஈழத்திலிருந்து இங்கு வந்தவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியிலும் தங்கியிருந்தார்கள்.

இந்த முகாம்களுடைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்து பார்த்து கலைஞர் முதல்வராக இருந்தபோது 1997ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏராளமான திட்டங்களை அறிவித்து அதைச் செயல்படுத்தினார்.

அதனால், முழுமையாக இல்லாமல் ஓரளவுக்கு முகாம் வாழ் தமிழர்கள் தன்னிறைவு அடைந்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு அவர்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களைப் பற்றி கவலை படவே இல்லை.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு திட்டங்களை மீண்டும் நாம் தொடங்கி இருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம்.

அகதிகள் முகாம் என்று இனி அழைக்க மாட்டோம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைப்போம் என சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அதனைச் செயல்படுத்தும் நாள் தான் இந்நாள். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்.

spacer.png

கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் 1997-98 காலகட்டத்தில், முகாம்களில் வாழ்ந்தவர்களுக்காக 3,594 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1998-99ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3,826 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 2009ஆம் ஆண்டு முகாம் வாழ் தமிழர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தர 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7429 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

முதல்கட்டமாக 290 சதுர அடி பரப்பளவில் 3510 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இலங்கைத் தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். முகாமில் வாழும் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலவாழ்வு திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் வாழ்வாதாரம், அடிப்படை வசதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர் அவர்களது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.


 

https://minnambalam.com/politics/2021/11/02/20/cm-mk-stalin-speech-in-vellore-sri-lankan-tamil-rehabilitation-camp

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அறிக்கையில் குடியுரிமை என்ற வாதம் காணாமல் போயிட்டுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம்

தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

இலங்கை அரசாலும், புலம்பெயர் அமைபுக்களாலும், புலம்பெயர் தனி நபர்கள், புலம்பெயர் தனவந்தர்களாலும் முற்றிலும் புறக்கணிக்கபட்டுள்ள, கைவிடப்பட்டுள்ள இந்த மக்களுக்கு ஓரளவுக்காவது உங்கள் உதவிகள் பயன்கொடுக்கும். 

நாடு திரும்ப விரும்பாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க, உங்கள் அழுத்ததுக்கு அடிபடியகூடிய ஒரு மத்திய அரசு விரைவில் அமையட்டும் என பிரார்திக்கிறோம்.

இதை மட்டும் நீங்கள் சாதித்து விட்டால் - நாங்கள் பரம்பரை திமுக - என சொல்லும் மக்கள் கூட்டத்தில் இலங்கை ஏதிலிகளும் அவர்தம் சந்ததிகளும் சேர்ந்துகொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கல் நாட்டியதுடன், நிற்காது…

வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப் பட வேண்டும்.

தமிழக முதல்வருக்கு… அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நன்றி ஸ்டாலின். வெறுமனே அடிக்கல்லுடன் நிற்காமல், வீடுகள் நல்ல நிலையில் பூர்த்தி அடைந்தால் மகிழ்சி

1 hour ago, பெருமாள் said:

தேர்தல் அறிக்கையில் குடியுரிமை என்ற வாதம் காணாமல் போயிட்டுது 🤣

குடியுரிமைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை மட்டும் தான் மாநில அரசால் முன்வைக்க முடியும். மானில அரசுக்கு குடியுரிமை வழங்குவதற்கோ மறுப்பதற்கோ எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக வினர் கட்டிய மாடி வீடுகள் போல இல்லாவிட்டால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

குடியுரிமைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை மட்டும் தான் மாநில அரசால் முன்வைக்க முடியும். மானில அரசுக்கு குடியுரிமை வழங்குவதற்கோ மறுப்பதற்கோ எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

Just now, பெருமாள் said:

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

திமுக அறிக்கையிலும், பின்னர் சட்டசபைக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் நிகழ்ந்த கவர்னர் உரையிலும் தமிழக அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர மத்திய அரசிற்கு கோரிக்கையும் அழுத்தமும் கொடுக்கும் என்றே கூறப்பட்டது. நான் அறிந்தவரைக்கும் தமிழக அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் என்று குறிப்பிடவில்லை

திமுக அரசு மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சி புரிந்த அனேகமான அரசுகளின் அறிக்கைகளும், இலங்கை, பாகிஸ்தான் போன்ற தென்னாசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் பெரும்பாலும் சுத்துமாத்துக்கள் கொண்ட அறிக்கைகள் தான். வெல்ல வேண்டும் என்பதற்காக நிறைய உளறிக் கொட்டியிருப்பார்கள். இந்த விடயத்தில் கோத்தா தான் இப்போதைக்கு முன்னிலை வகிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

பெருமாள்,

திமுக தேர்தல் அறிக்கை “மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றுதான் இருக்கிறது. நிழலி சொன்னது போல் அதைதான் அவர்கள் செய்யமுடியும். 

large.4B5E5F37-A005-4CAF-84BA-BA12A7B0605B.jpeg.5174e71f2f565566f566d71bc250513b.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வீடுகள் கட்டி மீண்டும் திறந்தவெளி சிறைச்சாலையா?

ஏன் அவர்களை சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இத்தனை காலமாக மனிதர் வாழ இயலாத கொட்டகையில் இருந்தவர்களை கொஞ்சம் வசதியாக மூச்சுவிட வைப்பது சற்று சந்தோசமாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

தென்னாசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் பெரும்பாலும் சுத்துமாத்துக்கள் கொண்ட அறிக்கைகள் தான். வெல்ல வேண்டும் என்பதற்காக நிறைய உளறிக் கொட்டியிருப்பார்கள். இந்த விடயத்தில் கோத்தா தான் இப்போதைக்கு முன்னிலை வகிக்கின்றார்.

அது மோசமான  உண்மை.

ஸ்டாலின் சொன்ன மாதிரி இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டங்களை செய்து காட்டி தென் கிழக்கு ஆசியன் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் போல இல்லை நான் என்று காட்ட வேண்டும்.

இலங்கை அகதிகளுக்கு நாங்கள் குடியுரிமை தருவோம் என்று பொய் பேசி தமிழ்நாட்டு தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும்  ஏமாற்றாமல் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்று உண்மை சொல்லி உள்ளார்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

பூந்தமல்லி சிறப்பு முகாமை மூட வேண்டும் ; அதற்கு மேல் இஸ்கூல் புள்ளிங்கோ மாதிரி அட்னன்ஸ் முறையை ஒழிக்க வேண்டும் 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.