Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

மதுக்கடையில் வாசிகசாலையை விட கூட்டம் அதிகம் இருப்பதும் உண்டு

இந்திய இலங்கை மதுக்கடையில்  கூட்டம் அதிகம் என்பதை செய்தி புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.    சீமானிடம் கூட்டம் என்ன என்பதை தேர்த்தல் முடிவுகளும் கடைசியாக உள்ளுர் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டனவே

  • Replies 78
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

உங்கள் அவதானிப்பை பகிர உங்களுக்கு முழு உரிமையுண்டு. 

அதே உரிமை அந்த அவதானிப்புகளை பற்றி தமது அவதானிப்பை பகிர ஏனையோருக்கும் உண்டு.

ஆனால் ஆனந்த விகடன் இந்த நேரம் இப்படி எழுதியது என்பது அவதானிப்பல்ல, அது ஒரு தரவு. அதை கொடுத்தால் ஆதாரம் கேட்பது வழமைதான். 

நான் யாழ் களத்திற்கு வருவது கருத்து பரிமாறவும் விவாதிக்கவுமே. விவாதம் தெளிவாக்கலின் அடிப்படை என்பதால். ஆனால் குறிப்பிட்ட தலைப்புகளை மட்டுமே. 

இராணி வகுப்புக்கு மட்டம் போட்டார் போன்ற திரிகளில் நான் விவாதிப்பதில்லை என்பதை கண்டிருப்பீர்கள்.

விவாதிக்க விருப்பம் இல்லாவிடில் விலகி போகலாம். ஆனால் கருத்து களத்யில் கருத்து என்று ஒன்றை எழுதினால், அது ஏனையோரால் கையாளப்படுவது தவிர்கவியலாது.

காலம் பதில் சொல்லும், சொல்லாமலும் போகும், எப்போ சொல்லும்? எதுவுமே தெரியாமல் இப்படி சொல்வது மழுப்பல் என்பது என் பார்வை.

என் பார்வை மட்டுமே.

இழுத்துப் பிடித்து விவாதிக்க அடம் பிடிக்கிறீர்கள்.....

சீமானை ஒரு பக்கம் வைத்து விடுங்கள்....

ஸ்ராலினை அதிகமாக நம்புகிறீர்கள் போலுள்ளது.....

அவர் கலைஞர் இல்லை...... கலைஞர் போட்ட ராஜபாட்டையில் நடந்து வந்தாலும்..... ஸ்ராலின் வெற்றி... வெறும் 3.5 வீதத்தால் தான்.....

7 % நாதக.... அதிமுகவுடன் சேர்ந்து இருந்தால்..... அதுவும் இல்லை..... அதுவே நிதர்சனம்.

அதே வேளை, கலைஞர் காலம் வேறு..... அவர் மகன் காலம் வேறு....

கவர்னர் ரவி..... போடும்..... கிடுக்குப்பிடியில்.... ஸ்ராலின் தவிப்பதை பலர் எழுதுகிறார்கள்.....

திமுக..... மிகவும்..... சிரமப்படும்.... அதை உடைத்து.... பாஜக ஆட்சி அமைக்கும்... பக்கத்தில் புதுசேரியில் நடந்தது.

அதுவும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும்....

இதில் உங்கள் சீமானுக்கு வகிபாகம் எதுவும் இல்லை.

அடுத்தது..... விகடன் ஆதாரம்.....

அதுதான் நிதர்சனமாக நடந்த பின்..... ஏன்? புரியவில்லை......

பல்கலைகழகம் போய் டிகிரி எடுத்தவனிடம்..... ஓஎல் படித்த ஆதாரம் கேட்பது போலுள்ளதே....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒரு சிலர் சீமானை தூற்றுவதன் மூலம் திராவிடத்திற்கு வெள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஸ்ராலினை அதிகமாக நம்புகிறீர்கள் போலுள்ளது.....

கருணாநிதி என்ற கயவனை கண்ட பின் ஸ்டாலினை எந்த ஈழத் தமிழனாவது நம்புவானா?

அதற்காக ஈழ ஏதிலிகள் விடயத்தில் அவர்கள் முன்னெடுப்பை வரவேற்காமல் இருக்க முடியாது. அப்படி செய்தால் அதன் மூலம் அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற நிலைப்பாடேதான் ஒழிய ஸ்டாலின் மீது அபிமானமும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய இலங்கை மதுக்கடையில்  கூட்டம் அதிகம் என்பதை செய்தி புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.    சீமானிடம் கூட்டம் என்ன என்பதை தேர்த்தல் முடிவுகளும் கடைசியாக உள்ளுர் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டனவே

தமிழ்நாட்டில் மதுவையும் சினிமாவையும் லஞ்சத்தையும் கட்டுப்படுத்திவிட்டு திராவிட கட்சிகள் வெற்றி பெறட்டும் பார்ப்போம்? 
வாக்குகளை லஞ்சம் கொடுத்து வாங்குகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தும் இன்னும் அந்த கட்சிகள் மேன்மைக்கட்சிகள் போல் உங்கள் கருத்து சூடு சுரணை இல்லாமல் இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இங்கு ஒரு சிலர் சீமானை தூற்றுவதன் மூலம் திராவிடத்திற்கு வெள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

திராவிடம்.... ஆரியத்தால் அழிக்கப்படும்.

எச்ச ராசா வை கைது செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டும்... தொடப் பயம்.....

இவர்கள்..... காசா கொடுத்து பதவியை வாங்கிய கொள்கையே அற்றவர்கள். 🥺

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அவர் கலைஞர் இல்லை...... கலைஞர் போட்ட ராஜபாட்டையில் நடந்து வந்தாலும்..... ஸ்ராலின் வெற்றி... வெறும் வீதத்தால் தான்.....

நாதக.... அதிமுகவுடன் சேர்ந்து இருந்தால்..... அதுவும் இல்லை..... அதுவே நிதர்சனம்.

அதே வேலை, கலைஞர் காலம் வேறு..... அவர் மகன் காலம் வேறு....

கவர்னர் ரவி..... போடும்..... கிடுக்குப்பிடியில்.... ஸ்ராலின் தவிப்பதை பலர் எழுதுகிறார்கள்.....

திமுக..... மிகவும்..... சிரமப்படும்.... அதை உடைத்து.... பாஜக ஆட்சி அமைக்கும்... பக்கத்தில் புதுசேரியில் நடந்தது.

அதுவும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும்..

இதுதான் அரசியல் நாதம். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெ காலத்திலும், குரானா, சென்னா ரெட்டி, இப்படி பல கவனர்களும் வந்தார்கள் அவர்களுக்கும் முதல்வருக்கு இடையே மோதல்களும் நடந்தன. இது இந்தியா எங்கும் மாநில-மத்திய அரசின் கட்சிகள் வேறு வேறாக இருந்தால் நடப்பதுதான். காலம் காலமாக.

எஸ் ஆர் பொம்மை வழக்கு வரும் வரைக்கும், மத்திய அரசு தன் விரும்பம் போல ஆட்சியை கலைக்கும் நிலை கூட இருந்தது. 

ஆகவே இதை வைத்து ஒரு சித்தாந்தத்யின் கதையே முடியும் என எனக்கு படவில்லை. ஆனால் அது உங்கள் பார்வை எனக்கு அதில் உடன்பாடில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கருணாநிதி என்ற கயவனை கண்ட பின் ஸ்டாலினை எந்த ஈழத் தமிழனாவது நம்புவானா?

அதற்காக ஈழ ஏதிலிகள் விடயத்தில் அவர்கள் முன்னெடுப்பை வரவேற்காமல் இருக்க முடியாது. அப்படி செய்தால் அதன் மூலம் அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற நிலைப்பாடேதான் ஒழிய ஸ்டாலின் மீது அபிமானமும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

இன்று..... மாலை ஆர்ப்பாட்டம்..... திமுக லோக்கல் ஆட்கள் ஒழுங்கு பண்ணி....

ஈழத்தமிழர்களுக்கு வீடு எதுக்கு.... எமக்கு கட்டி தாருங்கள்.....

உங்கள் மக்களை கொன்றொழித்த கயவர் கூட்டத்திடம்..... என்னத்தை எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

கருணாநிதி என்ற கயவனை கண்ட பின் ஸ்டாலினை எந்த ஈழத் தமிழனாவது நம்புவானா?

அதற்காக ஈழ ஏதிலிகள் விடயத்தில் அவர்கள் முன்னெடுப்பை வரவேற்காமல் இருக்க முடியாது. அப்படி செய்தால் அதன் மூலம் அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற நிலைப்பாடேதான் ஒழிய ஸ்டாலின் மீது அபிமானமும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

செயல் பற்றி எல்லாம் முடிந்த பின்னரே சொல்ல முடியும்.அகதி முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட விட்டாலே போதுமானது.அவர்கள் தங்கள் பாட்டை தாங்களே பார்த்துக்கொள்வார்கள். அடிக்கல் எல்லாம் தேவையில்லை.

இதெல்லாம் கொண்டையை மறைக்க எடுக்கப்படும் முயற்சிகள்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அடுத்தது..... விகடன் ஆதாரம்.....

அதுதான் நிதர்சனமாக நடந்த பின்..... ஏன்? புரியவில்லை......

பல்கலைகழகம் போய் டிகிரி எடுத்தவனிடம்..... ஓஎல் படித்த ஆதாரம் கேட்பது போலுள்ளதே....

நாதம் இதென்ன சின்ன புள்ளைதனமா இருக்கு?

நீங்கள் சொன்னீர்கள் எம்ஜியார் இறந்த போது இனி தமிழ்நாட்டு அரசியல் கருணாநிதி எதிர் ஜெதான் என ஆனந்த விகடன் எழுதியதாக.

நான் கேட்டது எம்ஜிஆர் இறந்த சமயம் ஆனந்த விகடன் அப்படி எழுதியமைக்காகன ஆதாரம்.

பின்னாளில் அப்படித்தான் நடந்தது என்பது வரலாறு ஆனால் அந்த வரலாறை 87 டிசம்பரில் ஆனந்த விகடன் கணித்ததாக நீங்கள் கூறினீர்கள். 

அதற்கு, அந்த ஆனந்த விகடன் கணிப்புக்குத்தான் ஆதாரம் கேட்கிறேன். 

3 minutes ago, Nathamuni said:

இன்று..... மாலை ஆர்ப்பாட்டம்..... திமுக லோக்கல் ஆட்கள் ஒழுங்கு பண்ணி....

ஈழத்தமிழர்களுக்கு வீடு எதுக்கு.... எமக்கு கட்டி தாருங்கள்.....

உங்கள் மக்களை கொன்றொழித்த கயவர் கூட்டத்திடம்..... என்னத்தை எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை.

மேலே பிஸ்மார்க் சொன்னதுதான் art of the possible. ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் வீடு கட்டி கொடுக்க, ஏதாவது ஒரு சிறு முன்னேற்றம் அவர்கள் வாழ்வில் ஏற்பட நாம் வரவேற்பது உதவும் எண்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இதுதான் அரசியல் நாதம். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெ காலத்திலும், குரானா, சென்னா ரெட்டி, இப்படி பல கவனர்களும் வந்தார்கள் அவர்களுக்கும் முதல்வருக்கு இடையே மோதல்களும் நடந்தன. இது இந்தியா எங்கும் மாநில-மத்திய அரசின் கட்சிகள் வேறு வேறாக இருந்தால் நடப்பதுதான். காலம் காலமாக.

எஸ் ஆர் பொம்மை வழக்கு வரும் வரைக்கும், மத்திய அரசு தன் விரும்பம் போல ஆட்சியை கலைக்கும் நிலை கூட இருந்தது. 

ஆகவே இதை வைத்து ஒரு சித்தாந்தத்யின் கதையே முடியும் என எனக்கு படவில்லை. ஆனால் அது உங்கள் பார்வை எனக்கு அதில் உடன்பாடில்லை

சட்டத்தை பயன்படுத்தி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பண்ணிய ஆட்சி டிஸ்மிஸ் ஓவர் அலம்பறை காரணமாக..... பாஜக பதவியில் இருந்து.... கொண்டு..... ஜனநாயக ஓட்டைகளை பயன்படுத்தி காங்கிரசை ஓட, ஓட விரட்டுகிறது...

வடக்கில் இருந்து..... ஓடி வந்து, கேரளத்தில் நின்று வெல்லும் நிலையில் கட்சி தலைமை...

திமுக..... பாஜகவுக்கு ஒரு பொருட்டே இல்லை..... காங்கிரசை துரத்தி அடிப்பதே பாஜக நோக்கம்.

தனது பதவியை காக்க, திமுக காங்கிரஸை கழட்டி விட்டு பாஜகவுடன் சேரும்..... இல்லாவிடில் பதவி இழக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் கொண்டையை மறைக்க எடுக்கப்படும் முயற்சிகள்.

நிச்சயமாக இது கொண்டையை மறைக்க எடுக்கப்படும் முயற்சிதான்.

இது மட்டும் அல்ல வைரமுத்து முள்ளிவாய்கால் போய் மாய் மாலம் போட்டது கூட அப்படியே.

ஆனால் அரசியல் என்பது சிலசமயம் நண்பர்களோடு மட்டும் அல்ல எதிரிகள், துரோகிகளோடும் டீல் பண்ண வேண்டிய விதத்தில் டீல் பண்ண வேண்டிய நிலைக்கு எம்மை இட்டு வரும். ஈழத்தமிழர்கள் திமுகவை அப்படித்தான் கையாள வேண்டும் என்பது என் பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நாதம் இதென்ன சின்ன புள்ளைதனமா இருக்கு?

நீங்கள் சொன்னீர்கள் எம்ஜியார் இறந்த போது இனி தமிழ்நாட்டு அரசியல் கருணாநிதி எதிர் ஜெதான் என ஆனந்த விகடன் எழுதியதாக.

நான் கேட்டது எம்ஜிஆர் இறந்த சமயம் ஆனந்த விகடன் அப்படி எழுதியமைக்காகன ஆதாரம்.

பின்னாளில் அப்படித்தான் நடந்தது என்பது வரலாறு ஆனால் அந்த வரலாறை 87 டிசம்பரில் ஆனந்த விகடன் கணித்ததாக நீங்கள் கூறினீர்கள். 

அதற்கு, அந்த ஆனந்த விகடன் கணிப்புக்குத்தான் ஆதாரம் கேட்கிறேன். 

ஆனந்த விகடன் வாராந்த தலையங்கம் எம்ஜியார் இறந்த காலத்தில் இருந்து..... வாசித்தால் அதை..... பிடிப்பீர்கள்.... நான் என்ன ..... எடுத்து பைல் போட்டே வைத்திருக்கிறன்? இதென்ன கரைச்சலாக் கிடக்குது ! 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சட்டத்தை பயன்படுத்தி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பண்ணிய ஆட்சி டிஸ்மிஸ் ஓவர் அலம்பறை காரணமாக..... பாஜக பதவியில் இருந்து.... கொண்டு..... ஜனநாயக ஓட்டைகளை பயன்படுத்தி காங்கிரசை ஓட, ஓட விரட்டுகிறது...

வடக்கில் இருந்து..... ஓடி வந்து, கேரளத்தில் நின்று வெல்லும் நிலையில் கட்சி தலைமை...

இதற்குதான் எஸ் ஆர் பொம்மை வழக்கை மேற்கோள் காட்டினேன். அந்த வழக்கின் பின்னான மாநில அரசு கவிழ்புகளை பார்த்தால் நான் சொன்னது புரியும். இப்போ ஆட்சி கவிழ்ப்பு இல்லை. குதிரை பேரம். பி டீம்களின் மூலம் உட்புகுதல்தான் உத்தி.

7 minutes ago, Nathamuni said:

திமுக..... பாஜகவுக்கு ஒரு பொருட்டே இல்லை..... காங்கிரசை துரத்தி அடிப்பதே பாஜக நோக்கம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் யாருக்கும் பொருட்டே இல்லை🤣

பாஜகவை முதலிரெண்டு கட்சியில் ஒன்றாக்குவயே நோக்கம்/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயம்...... நான் இப்ப சங்கி..... பிஜேபி....காரன்....

மோடி தான் நம்ம ஜி!

உங்க ஸ்ராலினை வைச்சு செய்யப்போறார்... ஆட்டுக்குட்டி அண்ணாமலை.... மலை....👍

அடுத்த முதல்வர், எச்ச ராசாவா, ஆட்டுக்குட்டியா, அதுதான் இப்ப என் கவலை....😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆனந்த விகடன் வாராந்த தலையங்கம் எம்ஜியார் இறந்த காலத்தில் இருந்து..... வாசித்தால் அதை..... பிடிப்பீர்கள்.... நான் என்ன ..... எடுத்து பைல் போட்டே வைத்திருக்கிறன்? இதென்ன கரைச்சலாக் கிடக்குது ! 😁

அப்படி வாராந்தம் விகடன்  வாசித்தபடியால்தான் கேட்கிறேன் -ஆதாரம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அப்படி வாராந்தம் விகடன்  வாசித்தபடியால்தான் கேட்கிறேன் -ஆதாரம். 

அப்ப... நீஙகள் வாசிக்கவல்லை... போன கிழமை என்ன சொன்னவயள் எண்டு சொல்லுங்க பாப்பம்?😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு விசயம்...... நான் இப்ப சங்கி..... பிஜேபி....காரன்....

மோடி தான் நம்ம ஜி!

உங்க ஸ்ராலினை வைச்சு செய்யப்போறார்... ஆட்டுக்குட்டி அண்ணாமலை.... மலை....👍

சீச்ச்சீ…நீங்களா கேட்டாலும் உங்கள சங்கியள் ஏற்காயினம்🤣. தாய்மதம் திரும்பினா சான்ஸ் உண்டு🤣.

Just now, Nathamuni said:

அப்ப... நீஙகள் வாசிக்கவல்லை... போன கிழமை என்ன சொன்னவயள் எண்டு சொல்லுங்க பாப்பம்?😁

நான் ஆனந்த விகடன் போன கிழமை இப்படி சொன்னது எண்டு எங்கும் எழுதவில்லை.

நீங்கள்தான் எம்ஜிஆர் இறந்த நேரம் எழுதினதா சொன்னனியள். 

ஒரு விசயத்தை சொன்னவைதான் ஆதாரம் தரோணும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சீச்ச்சீ…நீங்களா கேட்டாலும் உங்கள சங்கியள் ஏற்காயினம்🤣. தாய்மதம் திரும்பினா சான்ஸ் உண்டு🤣.

சரி... சந்திப்பம் .... நித்திரை வருது....

மறக்கப்படாது..... மோடிஜி !

சென்னையை விட்டு, டெல்லி பக்கம் வாங்க...... ஜாலியா இருக்கும்....

உங்கண்ட பேர் விபரத்தை தனிமடலில் அனுப்பி விடுங்க..... சேர்த்து விடுறேன்....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சரி... சந்திப்பம் .... நித்திரை வருது....

மறக்கப்படாது..... மோடிஜி !

சென்னையை விட்டு, டெல்லி பக்கம் வாங்க...... ஜாலியா இருக்கும்....

உங்கண்ட பேர் விபரத்தை தனிமடலில் அனுப்பி விடுங்க..... சேர்த்து விடுறேன்....

சந்திப்பம். 

டெல்லி எனக்கு ஒத்துவராது. தடக்கி விழுந்தா பள்ளிவாசல் உள்ள ஊர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் இனி ஸ்டாலின் எதிர் ஸ்டாலின் தான். அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டது கருணாநிதிக்கு எதிராக மட்டும்தான். கருணாநிதி மறைவுக்கு பிறகு இரத்தத்தின் இரத்தங்களுக்கு உசுபேற்ற அதிமுகவிடம் எதுவும் இல்லை. அது போக அதிமுக பல துண்டுகளாகி பாஜகவினால் செலோடேப் போட்டு ஒட்ட வைச்சிருக்கப்பட்டு இருக்கு. ஸ்டாலின் ஆளுமையானவரோ இல்லையோ அவரை நெருக்கக்கூட இப்போது எவராலும் முடியாது. அதிமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் தராசு சியாம், ரவீந்திரன் துரைசாமி, SPL போன்றவர்களின் கருத்துக்களை கேட்டால் அதிமுகவின் உட்பூசல்கள் தெரியவரும்.  இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் கிடையாது.  இனி விஜய் போன்றவர்கள் ஏதாவது முயற்சித்தால் மட்டுமே உண்டு. பாஜகவால் ஒருபோதும் ஆளும் கட்சியாக வரமுடியாது. தமிழக களம் அப்படியானது. சிமானுக்கு வாய்ப்பே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

தமிழ்நாட்டில் முன்பு போல் இரெட்டை வெற்றிடம் இல்லை ஆனால் ஒற்றை வெற்றிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஜெயின் அதிமுகவின் இடத்தை யார் நிரப்புவார்?

1. சசி+ ஓபிஎஸ் தலமையில் அதிமுக? இதில் பிஜேபி ஒட்டி கொள்ளும்.

2. பிஜேபி - இப்போ வாய்பில்லாதது போல தெரிந்தாலும் இன்னும் இரெண்டு தேர்தலில் முடியலாம். கோவை முடிவுகள் காட்டுவது போல. 

3. ஒரு புதிய சக்தி? (விஜை).

4. சீமான் - இப்போ இறங்குமுகம்தான். முந்திய ஊராட்சி தேர்தல், அடுத்து வந்த சட்டசபை தேர்தல், அண்மைய ஊராட்சி தேர்தல் - அடுத்தடுத்து வாக்கு வங்கி கீழ்நோக்கியே போகிறது. 

என்னை பொறுத்தவரை திமுகவும் எதிர் முகாமின் பிரதான கட்சியாக வர மேலே உள்ள 4 ஆப்சனுக்கும் 50%, 20%, 25%, 5% வாய்புகள் உள்ளதாகவே கருதுகிறேன். 

6 hours ago, குமாரசாமி said:

செயல் பற்றி எல்லாம் முடிந்த பின்னரே சொல்ல முடியும்.அகதி முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட விட்டாலே போதுமானது.அவர்கள் தங்கள் பாட்டை தாங்களே பார்த்துக்கொள்வார்கள். அடிக்கல் எல்லாம் தேவையில்லை.

இதெல்லாம் கொண்டையை மறைக்க எடுக்கப்படும் முயற்சிகள்.

Bild

 இந்த பத்திரிகையை  இங்கு அடிக்கடி இணைக்கிறீர்கள். யுத்தத்துக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு? 

கருணாநிதியா உங்களை யுத்தம் செய்ய சொன்னது? 

இணைத்தலைமை நாடுகள் உட்பட அனைவருடனும் முரண்பட்டு பேச்சுவார்ததையை முறித்து யுத்தத்திற்கு திரும்பும் போது இப்படி அழிவு வரும் என்பது தெரிந்திருக்கவில்லையா? 

அன்ரன் பாலசிங்கத்ததின் அறிவுரையை கூட புறக்கணித்து புலம்பெயர் புலி வால்கள் யுத்ததிற்கை திரும்புவதற்கு தூபம் போட்ட போது  யோசிக்கவில்லையா? 

ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் நேரடியாக வன்னிக்கு வந்து எச்சரிக்கை விடுத்தபோது சுதாகரித்திருக்க வேண்டாமா? 

பின்னர் ஐரோப்பிய யூனியன் தடை  செய்தபோதாவது அறிவுக்கண்ணை திறந்திருக்க வேண்டாமா? 

இவ்வாறு தொடர்ந்து தவறான அரசியல் தீர்மானங்களை எடுத்தால் அதற்கு பொறுப்பேற்பதே நேர்மை. அதை விடுத்து அடுத்தவன் மீது முழுப்பழியையும் போட்டு தப்பிக்க நினைப்பது மடமை. 

நீங்கள் இணைத்த பத்திரிகையில் பிரபாகரன் மரணம் என்ற வெளியாகிய நேரத்தில் தானே ஐரோப்பாவில் புலம்பெயர் புலி வால்கள் தமிழ் மக்களின் மில்லியன் கணக்கான பணத்தை தமிழ் தேசியத்தை அடகு வைத்து உசுப்பேற்றி  திருடிக் கூத்தடித்து மகிழ்ந்திருந்தனரே. அந்த திருடர்கள் தான் இன்று ஐரோப்பாவில் இருந்து அடுத்தவர் மீது முழுப்பழியையும் போடுபவர்களில் முதன்மையானவர்கள். எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் இன்றும் தமது பங்கு பிரிப்பு பிரச்சனைக்காக பல குழுக்களாக பிரிந்து சுயநல குழுக்களாக இயங்குகிறார்களே. அது பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? 

அதனுடன் ஒப்பிடும் போது அடுத்த நாட்டு சுயநல அரசியல்வாதி  கருணாநிதி செய்தது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. 

முழு உலகத்தையும் பகைத்துவிட்டு யுத்தத்திற்கு திரும்பியதன் மூலம் நாமாகவே வினையை தேடிவிட்டு அடுத்தவன் மீது பழி சுமத்தி காலாகாலம் இப்படி ஒப்பாரி வைப்பதில் பலனுல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

என்னையா, காலையே கருணாநிதி புராணமா?

இந்த திராவிட திருடர்களிடம் இருந்தும், அவர்கள் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் ஈழத்தமிழர் கொலைகாரரிடம் இருந்தும் தமிழகம் காக்கப்பட வேண்டும்.

அதுக்கு..... நம்ம ஆதரவு.....இனி மோடிஜி தான்....

வவுணியா - காங்கேசன்துறை ரயில் ரோட் போட்டு தந்தவர்..... கலாச்சார மண்டபம் கட்டி தந்தவர்..... யாழ் - சென்னை பிளேன் விட்டவர்..... எங்கண்ட மோடிஜி....

அதால.... உந்த திருட்டு கோஸ்டிகளை விடுங்க..... ஒருகாலமும் எதுவுமே செய்ய மாட்டார்கள். சாட்சிககாரனிலும் பார்க்க, சண்டைக்காரன் முக்கியம் எண்டது போல.... சென்னையை விட்டு.... டெல்லிப்பக்கம் வாங்க ....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

தமிழக அரசியலில் இனி ஸ்டாலின் எதிர் ஸ்டாலின் தான். அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டது கருணாநிதிக்கு எதிராக மட்டும்தான். கருணாநிதி மறைவுக்கு பிறகு இரத்தத்தின் இரத்தங்களுக்கு உசுபேற்ற அதிமுகவிடம் எதுவும் இல்லை. அது போக அதிமுக பல துண்டுகளாகி பாஜகவினால் செலோடேப் போட்டு ஒட்ட வைச்சிருக்கப்பட்டு இருக்கு. ஸ்டாலின் ஆளுமையானவரோ இல்லையோ அவரை நெருக்கக்கூட இப்போது எவராலும் முடியாது. அதிமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் தராசு சியாம், ரவீந்திரன் துரைசாமி, SPL போன்றவர்களின் கருத்துக்களை கேட்டால் அதிமுகவின் உட்பூசல்கள் தெரியவரும்.  இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் கிடையாது.  இனி விஜய் போன்றவர்கள் ஏதாவது முயற்சித்தால் மட்டுமே உண்டு. பாஜகவால் ஒருபோதும் ஆளும் கட்சியாக வரமுடியாது. தமிழக களம் அப்படியானது. சிமானுக்கு வாய்ப்பே இல்லை!

தவறு வாலி....

தமிழக அரசியல்...... இப்போதைக்கு... ஸராலின் எதிர் கவரனர் தான்.....

நமது விருப்பம் வேற, நடப்பது வேற....

சுற்றி, முமுவதும் ஊழல் மூட்டைகளை வைத்துக் கொண்டு ..... ஸ்ராலின் சிக்கலில் மாட்டுவார்.

செந்தில் பாலாஜி..... கலக்சன் எக்பேற்..... பிரசாந் கிசோர்... பில்..... அவரது கலக்சனில் இருந்து செற்றில் பண்ண, ஸ்ராலின், உதயண்ணா திட்டம்....

அண்ணாமலை.... கவனர்..... ஆப்படிக்கிறார்கள்.

விரைவில் புரிவோம்.....

இங்கே, சீமான் வகிபாகம் எதுவும் இல்லை.....

****

விஜய்..... கோவணத்தோட படப்பிடிப்பு தளம் போனால்...... காலில் இருந்து தலை வரை உடுப்புகளைப் போட்டு.... படப்பிடிப்பு முடியும் போது குறைந்தது நூறு கோடி கையில் கொடுக்கும் போது, அவர் அரசியலுக்கு வருவார் என்பது..... அத்தைக்கு மீசை முளைத்த கதை தான்....

தவிர... அவரும் ரெயிடில் மாட்டியவர்...

தமிழகத்தில் தாமரை மலரும்..... அதுவும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் முன்பாக... திருட்டு திராவிடம் மூட்டை கட்டிக்கொண்டு போகும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.