Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! - சமல் ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமல் ராஜபக்ஷ: “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சமல் ராஜபக்ஷ

பட மூலாதாரம்,FACEBOOK

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயிரை உண்ணுமாறு அந்நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

"நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா"? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு உள்ளமையை இதன்போது ஏற்றுக் கொண்ட அமைச்சர், அதற்குப் பதிலாக மரவள்ளி, பாசிப்பயறு போன்றவற்றை சாப்பிடலாம் என்றார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்து பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்; சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை அமைச்சரின் பேச்சு நினைவுபடுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

"இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் கடுமையான பட்டினியை எதிர்நோக்கப் போகின்றது என்பதையே, அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பேச்சு வெளிப்படுதுவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 50 வருடங்களுக்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுமாறு அப்போதைய அரசாங்கம் கட்டாயப்படுத்தியமை பற்றியும், பகல் உணவுக்கே மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட அனுபவங்களையும் பொதுமக்கள் சிலர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

பகலுணவே மரவள்ளிக் கிழங்குதான்

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி வகித்த 1970 தொடக்கம் முதல் 1977 வரையிலான காலப்பகுதியில், மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டதாக கூறுகிறார் - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஏ. சலீம்.

மரவள்ளி கிழங்கு

அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்டதொரு நாளில் மரவள்ளிக் கிழங்கை மக்கள் சாப்பிட வேண்டும் என்றும், ஹோட்டல்களிலும் சோற்றுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்குதான் வழங்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கம் கட்டாயப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கும் ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் சலீம் அந்த நடைமுறையைப் பின்பற்றாதவர்களை காவல்துறையினர் கைது செய்ததாகவும் கூறுகின்றார்.

"இரண்டு மரைக்கால் அளவு அரிசிக்கு அதிகமாக கொண்டு செல்பவர்களை அப்போது காவல்துறையினர் கைது செய்தார்கள்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் மரவள்ளிக்கிழங்கு ஒரு 'தூக்கு' (7.5 கிலோகிராம் எடையுடையது) இரண்டு ரூபா ஐம்பது சதத்துக்கு வாங்கினோம். அரசி கால் கொத்து 25 சதத்துக்குக் கிடைத்தது. (முக்கால் கொத்து என்பது 01 கிலோவுக்கு சமனானது). மரவள்ளிக்கிழங்கை பகல் உணவாகவும் மக்கள் அப்போது சாப்பிட்டனர்," என்கிறார் 75 வயதுடைய ரபியுதீன்.

"கிழங்கை அவித்தும், ஒடியல் செய்தும், மாவாக்கி அதில் பிட்டு சுட்டும் சாப்பிட்டோம்" என்றும், அந்தக் கால அனுபவத்தை ரபியுதீன் பகிர்ந்து கொண்டார்.

"மக்களின் கோபம், சிறிமாவை படுதோல்வியடையத் செய்தது"

இவ்விடயம் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஏ.எல். அப்துல் றஊப் உடன் பிபிசி தமிழ் பேசியபோது; "அரிசி இல்லை என்பதற்காக மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என திடீரெனக் கூறுவது, வேண்டா வெறுப்பானதொரு பேச்சாகும். பொறுப்பு வாய்ந்ததொரு அமைச்சர் அவ்வாறு கூறமுடியாது" என்றார்.

சோற்றுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வேண்டிய நிலை சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்டமைக்கு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு, அவர் பின்பற்றிய 'மூடிய பொருளாதாரக் கொள்கை'யே காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.

"உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக சில கொள்கைப் பிரகடனங்களை முன்வைத்தே அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தார். அவரின் அந்தக் கொள்கை நல்லது. ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை".

"இலங்கையில் நல்ல வளங்கள் உள்ளன. அவற்றினை சரியான முறையில் பயன்படுத்திப் பயனைப் பெறுவதற்கான நீண்டகாலத் திட்டங்களை எந்தவொரு அரசாங்கமும் இதுவரை மேற்கொள்ளவில்லை".

"அரிசியை இறக்குமதி செய்வதற்கான டாலர் அரசாங்கத்திடம் இல்லை" - என்கிறார் ரஊப்
 
படக்குறிப்பு,

"அரிசியை இறக்குமதி செய்வதற்கான டாலர் அரசாங்கத்திடம் இல்லை" - என்கிறார் ரஊப்

"சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் - மூடிய பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் கொள்கைத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போதும், அதனை அமுல்படுத்துவதற்கான வியூகங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

'எல்லோரும் அரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்' என்பதற்காகவே, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு இரண்டு மரைக்கால் அளவுக்கு அதிகமான அரசியை கொண்டு செல்வது அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது.

அப்போது நெல்லை பொதுமக்களிடமிருந்து அரசாங்கமே கொள்வனவு செய்தது. அரிசியை அரசாங்கமே விற்பனை செய்தது. தனியாருக்கு அனுமதியிருக்கவில்லை. தங்கள் சொந்த நெல்லை விற்பனை செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் அப்போது காத்திருந்தனர்".

"அந்தக் காலப்பகுதியில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அரிசிக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுமாறு கூறிய அரசாங்கத்தை, அடுத்து வந்த பொதுத் தேர்தலில் மக்கள் படுதோல்வியடையச் சந்தித்தனர். நாடாளுமன்றத்தின் 168 இடங்களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுந்திரக் கட்சி வெறும் 8 இடங்களை மட்டுமே பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது".

"எங்களிடம் கடந்த வருடம் வரைக்கும் போதுமான நெல் இருந்தது. நெல் உற்பதியில் பாதிப்பு இருக்கவில்லை. அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லை. ஆனால் அரிசிக்கு விலையேறியது. அந்த விலையேற்றத்தின் பயன்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிச் சந்தையில் செலுத்தும் ஏகபோகமே அரிசியின் விலையேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இது அரசாங்கத்தின் பலவீனமாகும்.

நெல்லுக்கு நல்ல விலையைக் கொடுத்து அரசாங்கம் கொள்வனவு செய்யுமாக இருந்தால், தனியாருக்கு தமது நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய தேவை இருக்காது.

இதேபோன்றுதான் தற்போது இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என விவசாயிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கான முறையான எந்தவித நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை" என்றார்.

இதேவேளை அரிசியை இறக்குமதி செய்வதற்கான டாலர் அரசாங்கத்திடம் இல்லை என்றும் பேராசிரியர் ரஊப் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் கொரோனா காலத்தில் பல்வேறு துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், நெல் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், கடந்த போகத்தில் நெல் விளைச்சல் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

முறையான திட்டமிடல்களுடன் இலங்கையின் நெல் உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுமாயின், ஆசியாவில் நெல் உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக மாறும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59182291

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

ஆமாம் ஞாபகம் வருகிறது, தேங்காய்பூவுடன் சீனியும் (தமிழ்நாட்டு வழக்கில் சர்க்கரை) சேர்த்து இனிப்பாக இருக்கும், சாப்பிட்டபின்பு அதிகம் தண்ணீர் குடிக்க அம்மா விடமாட்டார். அது கனாக்காலம் அல்ல, நாங்கள் கடந்துவந்த, மனிதரிடம் மனிதம் மிகுந்திருந்த காலம். 

உண்மைதான் பஞ்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுவில் மரவள்ளியை அரைவாசி அவித்து ஏதோ தூள் எல்லாம் போட்டு பொறித்து விற்பார்கள் ...ஆ🤫 அதன் சுவைக்கு அளவேயில்லை😋 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மட்டுவில் மரவள்ளியை அரைவாசி அவித்து ஏதோ தூள் எல்லாம் போட்டு பொறித்து விற்பார்கள் ...ஆ🤫 அதன் சுவைக்கு அளவேயில்லை😋 

மட்டுவில் மட்டுமல்ல... எந்த ஊர் மரவள்ளியாயினும்.... சுவை அப்படி தான்.

மஞ்சளும், உப்பும் போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்து.... எண்ணெயில் பொரித்து சரையில் போட்டு.... மேல... உப்ப, மிளகு, மிளகாய் தூள் போட்டு.... கொழும்பில் இஸ்லாமியர்கள் செய்து தருவார்கள்...

சுவையோ, சுவியர் .....🤩

அண்மையில் ..... Food You-tuber ஒருவர் கென்யா நாட்டுக்கு போய் வீடியோ போட்டார்....

அங்கும் வீதி ஓரத்தில் பொரித்து விற்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2021 at 03:59, ஏராளன் said:

அரிசிக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுமாறு கூறிய அரசாங்கத்தை, அடுத்து வந்த பொதுத் தேர்தலில் மக்கள் படுதோல்வியடையச் சந்தித்தனர். நாடாளுமன்றத்தின் 168 இடங்களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுந்திரக் கட்சி வெறும் 8 இடங்களை மட்டுமே பெற்றது.

அடியோடு ராஜபக்க்ஷா  குடும்பத்தினருக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளியில் பால்கிழங்கு, போண்டா, உப்புமா, கட்லற் போன்றவையும் செய்யலாம். மரவள்ளி இலை சாப்பிட்டு என் உறவினரின் ஒரே ஒரு வாழ்வாதாரமான கால்நடைகள் ஒரேயடியாக இறந்து கிடந்த பரிதாபத்தைக்கண்டு கண்ணீர் விட்டு நாளும் உண்டு. மரவள்ளித் தோலில் வறை செய்வதாக கேள்விப்பட்டதுண்டு, ஆனால் சுவைக்க  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

மரவள்ளியில் பால்கிழங்கு, போண்டா, உப்புமா, கட்லற் போன்றவையும் செய்யலாம். மரவள்ளி இலை சாப்பிட்டு என் உறவினரின் ஒரே ஒரு வாழ்வாதாரமான கால்நடைகள் ஒரேயடியாக இறந்து கிடந்த பரிதாபத்தைக்கண்டு கண்ணீர் விட்டு நாளும் உண்டு. மரவள்ளித் தோலில் வறை செய்வதாக கேள்விப்பட்டதுண்டு, ஆனால் சுவைக்க  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பாயசத்து.... சவ்வரிசி..... மரவள்ளி கிழங்கு என்றார்கள் .....

இல்லை அது சகோ எனும் வேறு தாவர வகை என்கிறார்கள் வேறு சிலர்.

விபரம் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

பாயசத்து.... சவ்வரிசி..... மரவள்ளி கிழங்கு என்றார்கள் .....

இல்லை அது சகோ எனும் வேறு தாவர வகை என்கிறார்கள் வேறு சிலர்.

விபரம் தெரியுமா?

ஜாவாவில் இருந்து வந்த சகோ பனம்பழ(palm tree) மாவில் இருந்து தயாரித்த ஜாவா அரிசியே - ஜவ்வரிசி.

இப்போ அதை மரவெள்ளி மாவில் இருந்தும் தயாரிக்கிறார்களாம்.

கேள்வி ஞானம்தான் - நோ ஆதாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில மெயின் ரோட்டில 2002 வாக்கில ஒரு முஸ்லிம் கோட்டல் போட்டிருந்தார்கள். ரோல்ஸ்க்குள்ள இறைச்சியும் மரவள்ளிக்கிழங்கும் இருக்கும்.  (பிற்குறிப்பு நான் இறைச்சி அதிகம் சாப்பிடுவதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பாயசத்து.... சவ்வரிசி..... மரவள்ளி கிழங்கு என்றார்கள் .....

நானும் அவ்வாறே கேள்விப்பட்டேன் உண்மை தெரியவில்லை. இரண்டின்  தன்மைகள் அதாவது இலகுவில் பதார்த்தம் இறுகும் தன்மை உள்ளதால் அனுபவத்தில் கண்டதால் அவ்வாறே இருக்கலாம்  என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎11‎-‎2021 at 21:03, Nathamuni said:

மட்டுவில் மட்டுமல்ல... எந்த ஊர் மரவள்ளியாயினும்.... சுவை அப்படி தான்.

மஞ்சளும், உப்பும் போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்து.... எண்ணெயில் பொரித்து சரையில் போட்டு.... மேல... உப்ப, மிளகு, மிளகாய் தூள் போட்டு.... கொழும்பில் இஸ்லாமியர்கள் செய்து தருவார்கள்...

சுவையோ, சுவியர் .....🤩

அண்மையில் ..... Food You-tuber ஒருவர் கென்யா நாட்டுக்கு போய் வீடியோ போட்டார்....

அங்கும் வீதி ஓரத்தில் பொரித்து விற்கின்றனர்.

அவர்கள் அரைவாசி அவிய விட்டு  தான் பொரிக்கிறவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிழல் மரவள்ளி. இது நிழலுக்காக மட்டும் முற்றத்தில் வைப்பது. ஓங்கி, பருத்து வளரும். அதிலும் கிழங்கு உண்டு, நஞ்சானது.  மூன்று மாத மரவள்ளி. இதை விட ஆறு மாத மரவள்ளி கிழங்கு சுவை கூடுவதோடு, மாப்பிடிப்பு அதிகமாய் இருக்கும். ஆனால் காலம் பிந்தி பிடுங்கினால் அவிய நேரம் எடுக்கும், சுவை குறைவு அதிலுள்ள மாச்சத்து இறங்கி விடும்,  சிலநேரம் அவியவும் மாட்டுது காலம் பிந்தினால் அது உடலுக்கு கூடாது என்று அம்மா சொல்லுவார். நஞ்சு ஊறி இருக்குமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.