Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரவூப் ஹக்கீம், மனோகணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவூப் ஹக்கீம், மனோகணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல்

ரவூப் ஹக்கீம், மனோகணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு பகீரங்க மடல் ஒன்றை இன்று (05) அனுப்பி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலில் தாங்கள் இருவரும் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களை வரவேற்கின்றேன். தமிழ் முஸ்லீம் உறவுகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக உருவாக வேண்டும் என்ற தங்கள் இருவரின் கருத்துக்களும் காலத்தின் தேவை என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி நன்கு உணர்ந்துள்ளது. தங்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

அதேவேளை தமிழ் முஸ்லீம் மக்களின் உறவுகள் பற்றியும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சனைகள் பற்றியும் இதற்கு தீர்வு வேண்டும் என முதன் முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்சென்றது.

இருந்த போதும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று குறிப்பாக தாங்கள் இருவரும் மறந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய நாள் தொடங்கி பல்வேறு இன்னல்களையும் சந்தித்து பல தலைவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் பலி கொடுத்து இன்று வரை ஜனநாயக ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பது தங்களின் ஞாபகத்திற்கு வராதது எனக்கு வியப்பை தருகின்றது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பால் மட்டுமே முடியும். ஆனால் தாங்கள் இருவரும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ஏனையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஒரு கனம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

2004ம் ஆண்டு தேர்தல் ஜனநாயகத்தை முற்று முழுதாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடனும், ஆசியுடனும் தேர்தலில் களமிறங்கி வாக்குச்சாவடிகளில் அவர்களின் ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகளும் நடந்து கொண்டவிதம் உலகத் தமிழர்களையே வெட்கித்தலைகுனிய வைத்தது என்பதை எவ்வாறு மறந்தீர்கள்?

அதுமட்டுமல்ல 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். 2015ம் ஆண்டு நீங்கள் சேர்ந்து ஆதரவு கொடுத்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் பற்றி ஏன் பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை. பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டு இப்போது மட்டும் எங்கிருந்து ஞானம் வந்தது. பதவிகள் வந்த போது அவர்களின் வசதி வாய்ப்புக்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்ணை மறைத்துவிட்டது.

இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? ஜனநாயக விரோத சக்திகளுடன் கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றீர்களா?

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு பல சவால்களுக்கு முகம்கொடுத்து உயிரைப்பனையம் வைத்து இன்று வரை துணிச்சலுடன் செயல்பட்டு வரும் என்னைப் போன்ற ஒரு ஜனநாயக வாதியிடம் இருந்தும் கருத்துக்களை பெற வேண்டும் என்று உணர்வு உங்களுக்கு எழவில்லையா? அல்லது எவராவது தடுத்தார்களா? எது எவ்வாறாயினும் தங்களின் செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு என்னைப்போன்ற ஜனநாயக செயற்பாடுகளுடன் செயற்படும் ஒரு சிலரின் கருத்துக்களையும் பெற்று தாங்கள் இருவரும் இனியாவது சிந்தித்து செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என அந்த பகுஜரங்க மடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

ரவூப் ஹக்கீம், மனோகணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல் (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்

கருனாநிதி  ஆனந்தசங்கரி இருவருமே உடும்புக்கறி உண்டு வளர்ந்தவர்கள்போல் உள்ளது, இருவருமே கடிதம்எழுதி அரசியல் செய்வதில் விண்ணர்களாகத் தெரிகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வயசாக வயசாக நாகத்தின் விசத்தினது வலிமை கூடுமாமே. உண்மையோ என்று தெரியாது. ஆரும் ஊர்வனவியல் படிச்சவையைத்தான் கேட்க வேண்டும். ஆனால் கிளிநொச்சிக் காடுகளை அழிச்சு களணிகளாக்கினதோட பாம்புகளின் நடமாட்டம் குறைஞ்சிட்டுது. எண்டு முந்திப் பெருசுகள் கதைக்கிறவை. ஆனால் சில நாகங்களின் நடமாட்டம் இன்னும் இருக்குதென்று சீறீக்காட்டுதாம் எண்டு ஊரிலை பறையினமாம். 

  • கருத்துக்கள உறவுகள்+

அட ஆனந்த சங்கரியோ... புலி அழிய வேண்டும் என்று நினைத்த ஆளல்லாவா இவர். இப்ப என்ன மையல் போடுறார்?

 

அவங்களின்ர காலத்தில ஆனந்த கிங்கரி பற்றி வந்த கட்டுரை இது:

http://www.tamilcanadian.com/article/tamil/278

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரி நலம் பெற பிக்கு நடத்திய புத்தம் சரணம் கச்சாமி...

ஆனந்தசங்கரி நலம் பெற பிக்கு நடத்திய புத்தம் சரணம் கச்சாமி...

ஒட்டுக்குழு  ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி  பேரினவாத பிக்கு  முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய ஆனந்தசங்கரியை இன்று மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நலம் விசாரித்ததுடன், விரைவில் நலம் பெற ஆசி வழங்கினார்.

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 18 Oct, 2020
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ... நம்மால் முடிந்தது, கண்ணில் பட்டது, "டக்"கென்று பதிந்து விட்டேன்.  
சங்கரியை பற்றி.. தேட, வெளிக்கிட... இது தான் கிடைத்தது. 
இனி... இந்தாளைப் பற்றி, மினக்கெட்டு தேட... ஒரு, இழவும் இல்லை.  😎

"பைத்தியக்காரர்களை... கண்டும், காணாத மாதிரி இருப்பதே... மேலோர்க்கு அழகு."
- ஆப்கானிஸ்தானிலிருந்து... தலிபான், கவிஞர். - 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந்தாளைப் பற்றி எமனுக்கு.. அல்லது கொரோனாவுக்கு ஒரு மடலைப் போடுங்கப்பா. உந்தாள் மட்டும் மடல் மடலா எழுதிக்கிட்டு திரியுது. நல்லா காதல் கடிதம் எழுதிய பழக்கம் போல. அதுசரி.. கிளிநொச்சியில்.. உவர் உழாத வயல்களா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

யாராவது இந்தாளைப் பற்றி எமனுக்கு.. அல்லது கொரோனாவுக்கு ஒரு மடலைப் போடுங்கப்பா. உந்தாள் மட்டும் மடல் மடலா எழுதிக்கிட்டு திரியுது. நல்லா காதல் கடிதம் எழுதிய பழக்கம் போல. அதுசரி.. கிளிநொச்சியில்.. உவர் உழாத வயல்களா. 

நெடுக்ஸ் அண்ணே... இவரும், சுமந்திரன் மாதிரி... ஒரு விவசாயியா?  🤪

😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ் அண்ணே... இவரும், சுமந்திரன் மாதிரி... ஒரு விவசாயியா?  🤪

😜

அவரும் இறங்கி இருக்கிறார்.. எத்தனை வயல்களை உழுது தள்ளுறாரோ யாருக்குத் தெரியும். 😀

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அவருக்கு இறங்கி இருக்கிறார்.. எத்தனை வயல்களை உழுது தள்ளுறாரோ யாருக்குத் தெரியும். 😀

சுமந்திரன்... உழுத, வயலை... நாம் பார்த்து விட்டோம். 😂
சங்கரி... உழுத வயலை, பார்க்க.. ஆசையாக கிடக்குது. 😍
எங்கே.. பார்க்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... உழுத, வயலை... நாம் பார்த்து விட்டோம். 😂
சங்கரி... உழுத வயலை, பார்க்க.. ஆசையாக கிடக்குது. 😍
எங்கே.. பார்க்கலாம். 🤣

அவர் உழுத வயல்கள் அவர் உழுத கலப்பை போலவே தூர்ந்து போயிருக்கும். அதைப் பார்த்து.. என்ன பார்க்கா விட்டால் என்ன...?!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

அவர் உழுத வயல்கள் அவர் உழுத கலப்பை போலவே தூர்ந்து போயிருக்கும். அதைப் பார்த்து.. என்ன பார்க்கா விட்டால் என்ன...?!

விவசாயி ஆக மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி  சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..! | Jaffna Breaking  News 24x7

விவசாயியாக மாறிய சுமந்திரன் - சமூக ஊடகங்களில் வைரலாகும் படங்கள் - ஐபிசி  தமிழ்

எண்டாலும்...  சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, சுமந்திரன், உழுத மாதிரி...
சங்கரியார்... உழுகிறதை பார்க்க, ஆசையாய் இருக்கண்ணே.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

விவசாயி ஆக மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி  சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..! | Jaffna Breaking  News 24x7

விவசாயியாக மாறிய சுமந்திரன் - சமூக ஊடகங்களில் வைரலாகும் படங்கள் - ஐபிசி  தமிழ்

எண்டாலும்...  சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, சுமந்திரன், உழுத மாதிரி...
சங்கரியார்... உழுகிறதை பார்க்க, ஆசையாய் இருக்கண்ணே.  🤣

பயிரை விதைப்பதற்குத்தான் உழுவார்கள் தமிழ் சிறி. விளைந்தபின் உழுவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.