Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? - ராஜன் குறை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?

ராஜன் குறை 

spacer.png

சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர் சந்துருவும் இணைந்து உண்மையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் பெற்றுத்தந்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக நிஜ உலகில் ஒரு சம்பவம் இதே நாட்களில் நடைபெற்றது. அஸ்வினி என்ற நரிக்குறவப் பெண் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர். அவருக்கு அருகேயுள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது வருத்தத்தையும், கோபத்தையும் காணொலிக் காட்சி ஒன்றில் பதிவு செய்ய அது சமூக ஊடகங்களில் பரவலாகியது. அதைக் கண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலசயன பெருமாள் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்ணுடன் அன்னதான பந்தியில் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்தக் காட்சியும் ஊடகங்களில் பரவலாகி வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பெண் தங்களது நெடுநாள் பிரச்சினையான பட்டா வழங்கப்படாமை, வசிப்பிட, வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றை குறித்து முறையிட்டார். அமைச்சர் மூலம் இதை அறிந்த முதலமைச்சர், அரசுத் துறைகளை இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க சொல்ல, துரித கதியில் அரசு இயந்திரம் அந்தக் கிராமத்தின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்றது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அங்கு சென்ற முதல்வர் அஸ்வினி உட்பட நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். வேறு பல நல உதவிகளையும் வழங்கினார். அஸ்வினி தன் வீட்டுக்கு முதல்வரை அழைத்தபோது அவர் இல்லத்துக்கும் சென்றமர்ந்து உரையாடினார். இவையெல்லாமே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

spacer.png

சமூக மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை. நரிக்குறவர் பெண் அஸ்வினி எப்படி அவரது தாத்தா காலத்திலிருந்து அவரது இனக்குழு வாழ்க்கை மாறி வந்துள்ளது என்பதை அழகாகப் பேசுகிறார். இனி வரும் தலைமுறை பிற சமூகங்களைப் போல கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் உரிய இடம்பெற வேண்டும் என்பதே அவர் கோரிக்கையாக இருக்கிறது. இதுவே கடந்த நூறாண்டுக் கால சமூக நீதி அரசியலின் கதையாடல்; திராவிட அரசியலின் கதையாடல். கதையாடல் என்றால் ஆங்கிலத்தில் நேரடிவ் (Narrative) எனப்படும் கலைச்சொல். தமிழகத்தின் வெகுஜன அரசியலின் கதையாடல் சமூக மாற்றம் குறித்த, முற்போக்கு இயக்கம் குறித்த கதையாடல். சினிமாவிலும் இதே போல முற்போக்கு சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றன. மரபுவழிப்பட்ட பார்வைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும், சமூக மாற்ற சிந்தனைகளுக்குமான உரையாடல் களமாக தமிழ்த் திரைப்படம் விளங்கியது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையுடன் நெருக்கமான உறவு கொள்ளும் தளமாக அமைந்தது. அதன் பக்கவிளைவாக உருவான எம்.ஜி.ஆர். நாயக பிம்பம் எதிர்ப்புரட்சி (Counter-revolution – புரட்சிக்கு எதிராக இருப்பதுதான் எதிர்ப்புரட்சி) அரசியலுக்குப் பின்னாளில் துணைபோனாலும் அவரது பிம்பமும் முற்போக்கு வரலாற்று கதையாடலில் உருவானதே. அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலுக்கு வடிவம் கொடுப்பதில் உருவானதே. தமிழகத்தின் இந்த வெகுஜன அரசியல் மற்றும் சினிமாவின் முற்போக்கு சமூக நீதி கதையாடலைப் பார்க்க முடியாத ஒரு தன்மை பாப்பனீய மனோபாவத்துக்கு இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

பார்ப்பனீயம் என்பது என்ன? 

தமிழ் இலக்கியத்தில் பிராமணர்களுக்கு அந்தணர்கள், பார்ப்பர்கள் அல்லது பார்ப்பனர்கள் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஒரு பெயர் விளக்கம் என்னவென்றால் குறி பார்ப்பவர்கள், ஆரூடம் பார்ப்பவர்கள் என்பதால் பார்ப்பனர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பார்ப்பது என்பது அறிதலுடன் பிணைத்துக் காணப்படலாம் என்பதால் அவர்கள் அறிவார்கள் என்பதும் பொருள். பிராமணர் என்ற வர்ண அடையாளம் அவர்கள் பிரம்மனின் அம்சம் என்று அவர்களை உயர் பிறப்பாளர்கள் ஆக்குவதால், வர்ண முறைப்படி பிறர் சூத்திரர் என்பதை ஏற்பதாக முடியும் என்பதால், அவர்களை பார்ப்பனர் என்று தமிழ் சொல்லால் குறிப்பிடுகின்றோம். இதில் இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. அப்படி ஜாதீய மனோபாவத்துடன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகின்றோம்.

பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் கிடையாது. ஜாதீய அடையாளத்தில் சிக்குபவர்கள், ஏற்றத்தாழ்வு பேணுதலை அனுசரிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனீய மனோபாவத்தை ஏற்பவர்களே. அதே சமயம் பார்ப்பனர்கள் அனைவரும் பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. பல முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக நீதி நடைமுறை கொண்டவர்கள், முற்போக்கு உணர்வினை கொண்டவர்கள் பார்ப்பனர்களிடையே எப்போதும் இருந்து வந்துள்ளார்கள்.

இப்படி நாம் கவனமாக பிரித்துப் பார்க்கும்போதும், கணிசமான பார்ப்பனர்கள் பார்ப்பனீய மனோபாவத்தை சுமந்துகொண்டு இருப்பதைக் காணலாம். பார்ப்பனீயத்தின் பார்வைக் குறைபாட்டுக்கு அவர்களது பிளவுண்ட சுயம் ஒரு காரணம். உதாரணமாக ஒரு பார்ப்பனரை கேட்டால் அவர் நான் நவீனமானவன்; ஜாதி வேற்றுமை பார்க்க மாட்டேன். அந்த காலமெல்லாம் மாறிவிட்டது என்பார். என் முன்னோர்கள் செய்ததற்கு நான் பொறுப்பல்ல என்பார். ஆனால் பெரியார் பார்ப்பனர்களைத் திட்டுகிறார் என்பதால் அவரை பிடிக்கவில்லை என்பார். பெரியார் ஜாதி வேற்றுமை பார்த்த உன் முன்னோர்களைத் தானே திட்டுகிறார், அதை ஏன் நீ உன்னை திட்டுவதாக எடுத்துக்கொள்கிறாய் என்று கேட்டால் பதில் கூற வகையில்லாமல் திணறுவார்.

பார்ப்பனர்களெல்லாம் கூடி சமஸ்கிருதத்தில் ஒரு புதிய தர்மசாஸ்திரம் எழுதி இரு பிறப்பாளன் என்று யாரும் கிடையாது; எல்லோருக்கும் ஒரே பிறப்புதான், சமம்தான் என்று எழுதி அறிவித்தால் பிறகு எதற்கு பார்ப்பனர்களை திட்டப் போகிறார்கள். ஒருபுறம் ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் சமத்துவத்திற்கு எதிரான அமைப்புகளைப் பாதுகாப்பது, இன்னொருபுறம் நாங்கள் நவீனமானவர்கள் எங்களை திட்டுவதால் திராவிட இயக்கத்தை ஏற்க மாட்டோம் என்பது என பிளவுண்ட சுயமாக இருப்பதுதான் சிக்கல். ரகசியமாக தங்களை உயர் பிறப்பாளர்களாக, பிறரை சுரண்டி உருவாக்கிக்கொண்ட தங்களுடைய கலாச்சார மூலதனத்தை தங்களுக்கு இயற்கையே வழங்கிய திறன் என்று இனவாத மனமயக்கம் கொள்வதும் இந்த மனோபாவத்தில் அடங்கும்.

spacer.png

அதற்கு அடுத்த பிரச்சினை என்னவென்றால் இவர்கள் முற்போக்கு, முன்னேற்றம் என்பதையெல்லாம் ஆங்கிலக் கல்வி, நவீனமாதல் ஆகியவற்றுடன் இணைத்துப் புரிந்துகொள்வதால் அதற்கேற்ற ஒரு ரசனை, அழகியலை உருவாக்கிக்கொள்கின்றனர். தமிழ் வெகுஜன இயக்கத்தில் கலையோ, அரசியலோ எடுக்கும் வடிவங்களை அருவருக்கின்றனர். இது ஒரு பிரச்சினையாகக் கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

உதாரணமாக ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு பரத்வாஜ் ரங்கன் என்ற விமர்சகர் அவரது யூடியூப் சானலில் ஒரு விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழில் வாசிப்பவர்கள், பொதுமக்கள் பரத்வாஜ் ரங்கனின் ஆங்கில விமர்சனத்தை அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். புளூ சட்டை மாறனை அறிந்த அளவு அவர்கள் ரங்கனை அறிய மாட்டார்கள். என்னைப்போல திரைப்படக் கோட்பாட்டை ஆழமாகப் பயில்பவர்களும், லக்கான், தெல்யூஸ் போன்ற தத்துவ மேதைகளை பயில்பவர்களும் பரத்வாஜ் ரங்கனை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆங்கிலமே அறிவு என்று நினைக்கும் அரைவேக்காட்டு படிப்பாளிகளுக்கு அவர் முக்கிய விமர்சகராக இருக்கலாம். அப்படி பெரியதொரு மத்தியதர வர்க்கம் இந்தியாவில் உள்ளதல்லவா. “தி நேஷன் வாண்ட்ஸ் டு க்னோ” என்று அடித்தொண்டையில் கத்தி அலறவிடும் அர்னாப் கோஸ்வாமியை நினைவில் கொள்ளுங்கள். அவரையும் பார்க்கிறார்களல்லவா... அந்த வகை மாதிரி.

பரத்வாஜ் ரங்கனுக்கு அவர் ரசனையைப் பொறுத்து ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது. அவர் எதை செயற்கையான திணிப்பு என்று பார்க்கிறார், எதை மேலோ டிராமா என்று நினைக்கிறார் என்பதெல்லாம் அவர் சுதந்திரம். ஆனால் அவரால் ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் எழுப்பியுள்ள தார்மீக மன எழுச்சியைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் வியப்பிற்குரியது.

ஜெய் பீம் படம் அப்படி ஒன்றும் புரிந்துகொள்ள கடினமான படம் அல்ல. அதில் பலவீனமான, எளிய, அப்பாவியான பழங்குடி மக்களின் வாழ்வியல் காட்டப்படுகிறது. அவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஜாதி சமூகத்தின் உளவியல் காட்டப்படுகிறது. அதன் காரணமாக காவல்துறை நிராதரவான பழங்குடி மக்களை இரக்கமே இல்லாமல் நடத்துவதைக் காண்பிக்கிறது. ஆனால் ஜாதி சமூகத்தில் மனசாட்சியுள்ள மனிதர்கள் சிலர், முற்போக்கு அரசியல் மனோபாவம் கொண்டவர்கள் அந்த எளிய மனிதர்களுக்காகப் போராடுகிறார்கள். காவல் துறை அரசின் துணையுடன் மூடி மறைக்கும் குற்றச்செயலை நீதி மன்றத்தின் துணையுடன் முறியடிக்கிறார்கள். வேலைக்காரி, பராசக்தி முதல் இன்றுவரை தமிழ் வெகுஜன சினிமாவின் முற்போக்கு சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதில் நீதிமன்றம் முக்கிய களமாக இருந்து வந்துள்ளது. ஜெய் பீம் படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், முன்னைவிட அதிக யதார்த்தத் தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் அது அனைவர் மனதையும் தொட்டுவிட்டது. தமிழக முதல்வர் படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அவர் படம் பார்த்து உறக்கம் வரவில்லை என்று சொன்னதே பரவலாக மக்கள் பலரின் அனுபவமாகவும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

ஆனால் பரத்வாஜ் ரங்கன் ஆங்கிலத்தில் படத்தை எள்ளி நகையாடுகிறார். அழுவாச்சி படம் என்கிறார். மனித உரிமை பேசுவதால் மட்டுமே ஒரு திரைப்படம் நல்ல படமாகிவிட முடியாது என்கிறார். வெற்றி மாறனின் விசாரணை யதார்த்தமான படம் என்று கூறுகிறார். ஆனால், ஜெய் பீம் செயற்கையாகப் புனையப்பட்டுள்ளது என்கிறார். மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை ஜெய் பீம் என்ற தலைப்புதான் பிரச்சினையோ என்றெல்லாம் தோன்றத்தான் செய்கிறது. அதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்கள். அதெல்லாம் தவறான போக்கு என்பதில் ஐயமில்லை. என்னைப் பொறுத்தவரை தனிநபர் தாக்குதலைக் கண்டிப்பதில் முன் நிற்பவன். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஏன் பரத்வாஜ் ரங்கனின் உணர்வு நிலை இப்படி முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அதை வைத்து யோசிக்கும்போதுதான் பெரியாரைப் புரிந்துகொள்வதிலும், அண்ணாவை, கலைஞரைப் புரிந்துகொள்வதிலும் பார்ப்பனீய மனோபாவம் எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பது நினைவுக்கு வருகிறது. இடது சாரிகளையும் இவர்களில் பலர் ஏற்றவர்களல்ல. நல்ல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்கூட பெரியாரையோ, அண்ணாவையோ படிக்கவே முடியாதவர்களாக, அணுகவே முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை படித்தால்தானே அடுத்து கலைஞரைப் படிக்க முடியும். இதையெல்லாம் ஒரு காலத்திலும் செய்யாமல், சமூக நீதி அரசியலில் வெகுஜன இயக்கத்தின் மாபெரும் வரலாற்று தடத்தை உணராமல் இவர்கள் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று வாழப் போகிறார்கள். அவர்களுடன் நானும் பண்புடனும், பொறுமையுடனும் உரையாட வேண்டும் என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் ரசனைக்கேற்றபடி இல்லையென்பதால் ஒரு சாரார் பராசக்தி படத்தை கலையென்று ஏற்கவில்லை. பேசாமொழியான சினிமா பக்கம் பக்கமாக வசனம் பேசலாமா என்று கேட்டார்கள். மூன்று தலைமுறையினர் பராசக்தியில் சிவாஜி கணேசன் நீதிமன்றத்தில் பேசிய வசனத்தைப் பேசியே வளர்ந்தார்கள் என்பதும், அந்த மக்களின் சமூக நீதி அரிச்சுவடியே அதுதான் என்பதையும் ஒரு நாளும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இன்று அப்படி வசனமெல்லாம் பக்கம் பக்கமாக பேசாமல் காட்சி அழகியலாகவே படம் வந்தாலும், தேவைக்கதிகமாக அழுவாச்சி காட்சி இருப்பதால் இது மோசமான படம் என்கிறார்கள். ரசனையின் எல்லைக்கோடுகளை அவர்கள் நகர்த்திக்கொண்டே செல்கிறார்கள். அந்தக் கோட்டுக்குக் கீழே பேரலையாய் உருக்கொள்ளும் ஒரு மாபெரும் சமூக இயக்கம், அதன் தார்மீகம் அவர்கள் கண்களுக்குப் புலனாவதேயில்லை.

அதனால்தான் நாம் கேட்கவேண்டியுள்ளது: பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
 

https://minnambalam.com/politics/2021/11/08/5/what-is-brahmanism

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பேராசிரியர், முற்று முழுதாக திராவிடத்தை கரைத்துக் குடித்த ஒருவர் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிராமண வர்க்கங்களால் தான் சாதீயம் இன்னும்  உயிர்ப்புடன் இருக்கின்றது. பார்பனீயத்தை அடக்க ஒடுக்க பல்வேறு பிரச்சனைகள் தானாக ஒழியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இந்த பிராமண வர்க்கங்களால் தான் சாதீயம் இன்னும்  உயிர்ப்புடன் இருக்கின்றது. பார்பனீயத்தை அடக்க ஒடுக்க பல்வேறு பிரச்சனைகள் தானாக ஒழியும்.

இணைப்புக்கு நன்றி. நான் படம் பார்க்கவில்லை.  திரைப்படங்களுக்கு நேரம் செலவழிப்பதில்லை. கட்டுரையைப் பார்த்தபின் பார்க்கவுள்ளேன்.

உண்மைதான் குமாரசாமியண்ணா. ஆனால்,  அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....) முதலில் எமது அயலிலே இருக்கும் தன்னைவிடத் தாழந்தவனை ஏற்றுக்கொள்ளாத குமூகமாகத் தமிழினம் இருக்கும்வரை பார்ப்பனீயம் மேலெழுந்தே இருக்கும். கோவில்களின் தளகர்த்தர்கள்(தர்மகர்தாக்கள்) முதலில் மாறவேண்டும். அனைவரையும் பாரபட்சமின்றிக் கோவிற்பணிகளில் பங்கேற்கவைத்துப் பகிர்ந்தளித்துத் துணிவோடு நடைமுறை மாற்றங்களை சபைகள் ஏற்படுத்தி வழிகாட்டினால் மாற்றம் ஏற்படும். ஆனால், பார்பனீயர்களைக் காட்டி நம்மவரே முன்னிற்று உதவுவுதால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இல்லாதிருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....)

உண்மை

வெளிநாடுகளில் கூட கோவிலில் பூசை செய்பவர்களை தவிர பார்ப்பனியர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் சாதி பார்ப்பவர்கள் தமிழர்களில் இருக்கிறார்களே. தமிழ்நாட்டில் கூட சாதி கட்சி வைத்திருக்கும் இராமதாசு பார்ப்பனியர் இல்லை தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, nochchi said:

இணைப்புக்கு நன்றி. நான் படம் பார்க்கவில்லை.  திரைப்படங்களுக்கு நேரம் செலவழிப்பதில்லை. கட்டுரையைப் பார்த்தபின் பார்க்கவுள்ளேன்.

உண்மைதான் குமாரசாமியண்ணா. ஆனால்,  அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....) முதலில் எமது அயலிலே இருக்கும் தன்னைவிடத் தாழந்தவனை ஏற்றுக்கொள்ளாத குமூகமாகத் தமிழினம் இருக்கும்வரை பார்ப்பனீயம் மேலெழுந்தே இருக்கும். கோவில்களின் தளகர்த்தர்கள்(தர்மகர்தாக்கள்) முதலில் மாறவேண்டும். அனைவரையும் பாரபட்சமின்றிக் கோவிற்பணிகளில் பங்கேற்கவைத்துப் பகிர்ந்தளித்துத் துணிவோடு நடைமுறை மாற்றங்களை சபைகள் ஏற்படுத்தி வழிகாட்டினால் மாற்றம் ஏற்படும். ஆனால், பார்பனீயர்களைக் காட்டி நம்மவரே முன்னிற்று உதவுவுதால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இல்லாதிருக்கிறது.   

வணக்கம் நொச்சி!

நீங்கள் கூறிய கருத்தில் எனக்கு நூறுவீத உடன்பாடு உண்டு. இருந்தாலும் சாதீயம் கோவில் குளத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெரும்பாலும் தனிப்பட்ட விடயங்களிலையே அதிகமாக சாதி பார்க்கப்படுகின்றது. குறிப்பாக திருமண விடயங்களில் இது வெற்றிகரமாக நடந்தேறுகின்றது.இங்கு யாருமே தலையிட முடியாது. ஏனனில் இது அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால் திருமண வைபவம் என்று வரும்போது ஒரு பார்ப்பனீய குருக்கள் தேவைப்படுகின்றார். கடவுள்/மதம் இல்லை என்பவர்களும் திருமணம் என்று வந்தால் ஐயர்மாரை தேடிச்செல்வது யாவரும் அறிந்த விடயமாகும்.

எனவே சாதீயத்தின் மூலவேரை முதலில் அறுத்தெறிய பக்கத்து வேர்கள் தானாக வழிக்கு வரும் என்பது என் கருத்து.

நிற்க...

இன்னொரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

இது ஜேர்மனியில் நடந்த இருவார பழைய கதை.
எனக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் எனக்கு பரீட்சயமான ஒரு குரல். டேய் என்னடா எப்பிடி இருக்கிறாய் என்ற நலன் விசாரிப்புகளுடன் சம்பாசணை ஆரம்பமாகியது.நானும் அந்த உறவும் இதுவரைக்கும் டேய் போட்டு கதைத்ததேயில்லை. நீங்கள் நாங்கள் என்று மட்டுமே உறவாடியிருந்தோம். ஆனாலும் அந்த உறவு திடீரென என்னை டேய் என்று விளித்ததும் எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் எனக்கு புதிதல்ல.

சரி விடயத்திற்கு வருவோம்..
எனக்கு தொலைபேசி எடுத்த நண்பர் வழமையான சுக நல விசாரிப்புகளுடன் தொடங்கி தனது மகளின் திருமண விடயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். மாப்பிளை  வெள்ளாள மாப்பிளை. மின்னிணைப்பு தொழில் சம்பந்தமாக படிப்பு முடித்துவிட்டு வேலை தேடுகின்றாராம்.யார் மாப்பிளை எண்டு தெரியுமோ என என்னை கேட்டார்.நான் இல்லை என்றேன்.வேறை ஆர் உன்ரை -----   -----  ----  --- பொடியன் தான். இனி நாங்கள் ஒண்டு என புளகாங்கிதம் அடைந்தார்.


இறங்கி போனாலும் குத்தி காட்டுவார்கள்.
இறங்கி போகா விட்டாலும் குத்தி காட்டுவார்கள்.

 

இங்கே யார் முதலில் திருந்த வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இறங்கி போனாலும் குத்தி காட்டுவார்கள்.
இறங்கி போகா விட்டாலும் குத்தி காட்டுவார்கள்.

இங்கே யார் முதலில் திருந்த வேண்டும்?

வணக்கம் அண்ணா,

உண்மைதான். இவைபோன்ற சில குறைமதியிலான சிந்தனைகளும் மாற்றங்களை மறுதலிக்க வைக்கின்றன. சமயங்களை மதமென்றழைக்கத் தொடங்கியபோதே அவை வேறொரு பரிமாணத்துள் சென்றுவிட்டது. அகநிலைத் தெளிவுகளும், தெளிவான சிந்தனை மாற்றமுமே ஆரோக்கியமானது. ஆனால் இது உடனடிச் சாத்தியமாகாது. முழுமையான குமுகாய மற்றும் இனத்துவச் செயற்பாடாக மாற்றமடைய வேண்டும். இதனை யார் எங்கிருந்து.... விடைகாண தெளிவான தலைமையும் தற்துணிவும் தேவை.
 
சமூக நீதிக் கட்சிகள் தோன்றி 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் இருளரின் நிலை.(!) இது பார்ப்பனீயரால் நிகழவில்லை. இதே சமூக நீதிக் கட்சிகளின் குழந்தைகளான தி.மு.கு, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சியியே இந்த அவலங்கள் நிகழ்ந்தன. 

இன்று முதல்வர் செய்வது அவரது கடமை. அவர் அனைவருக்குமான முதல்வர். அதைவிட இன்றைய மின்னியற் பொறிகளின் குமுகாயத் தகவற் பரவற்றிறன் கரணியமாக சிலமணித்துளிகளில் உலகப்பரப்பிலே வினாவெழுப்பப்படும் நிலை போன்றனவும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைதளங்களின் செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நான்கு முதலமைச்சர்கள் செய்யாததை ஸ்டாலின் செய்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.