Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துப்படம் - 19.07.2007

Featured Replies

thoppigala1.jpg

*** யாழ் இணையத்துக்கான ஓவியர் மூனா அவர்களின் சிறப்புக் கருத்துப்படம்.

அருமை...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- கட்டுரைகளை விஞ்சியதான தகவல் அனைவருக்கும் எளிதில் புரியக்ககூடியதாக வெளிவந்துள்ளது. இதுதான் ஓவியமொழியின் தனிச்சிறப்பு. பொருத்தமான வேளையில், கருத்துப் பொலிவோடு யாழ் முகப்பு.

- தொடரட்டும் நல்முயற்சி.

நிரந்தரமான கெளரவமான சுதந்திரமான நிம்மதியான வாழ்வை நாடும் ஈழத் தமிழ்மக்களது மனம் புரிந்து செயலாற்றும் ஓவியருக்கும், யாழ் இணையத்திற்கும் நன்றியுடன் கைகுலுக்குகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தான் தொப்பிக்கல என்டு சொல்லுறான் என்டா நாங்களும் அதை தொப்பிக்கல என்டு சொல்லி குடும்பிமலையை அழிக்கப்போகிறோம்.

மிகவும் அருமையான படைப்பு............!

  • கருத்துக்கள உறவுகள்

ம். மிகவும் சிறப்பாக இருக்கின்றது. மூனாவிற்கு வாழ்த்துக்கள்.

சமீபத்தில் அனிதா மூனாவின், இணைப்பு ஒன்றைத் தந்திருந்தார். அதையும் பார்வையிடுங்கள். அனைத்து ஆக்கங்களும் சிறப்பாக இருக்கின்றன.

http://kirukkall.blogspot.com/

அவரது மகளும் சிறந்த ஓவியர் என்பது அனிதா தந்த மேலதிகத் தகவல்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூனா சார் சந்திரவதனா அம்மையாரின் கணவர். யாழ் களம்.. விசுவாசிப்பவர்களில் இவர்கள் அடக்கம். சோ.. யாழ் இணைய முகப்பில் இப்படங்களைப் போடுதல் அதிக பயனளிக்கும்.. ! இங்கு மிணக்கட்டு ஒட்டிட்டு.. சூப்பர்.. என்று இங்குள்ளவங்களே சொல்லுறதிலும்.. வெளில போட்டா பலர் பார்த்து சூப்பர் என்பாங்க..! B)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துப்படம் அழகு.

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றது.

எப்போது விழுவார் என்ற எதிர்பார்ப்புடன்........................

சிறப்பாய் தந்த யாழ்களத்துக்கு பாராட்டுகள்-

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பில் தெரிவது பாதிதான். சொடுக்காவிட்டால் ஏதோ மகிந்தவிற்கு ஜால்ராப் போடும் இணையம் என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடலாம்..

முகப்பில் தெரிவது பாதிதான். சொடுக்காவிட்டால் ஏதோ மகிந்தவிற்கு ஜால்ராப் போடும் இணையம் என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடலாம்..

நான் கூட யாழில் ஏன் இந்த படத்தை முகப்பில் போட்டிருக்கிறார்கள் என்று குழம்பிக்கொண்டிருந்தேன்

அருமையான படம்..

:P

பளிச்சென்று பல கதை சொல்கிறது.....பாராட்டுகள்... தொடரட்டும்....

தமிழ் நெட் போன்ற வெளி நாட்டினர் பார்க்கும் இணையத்தளங்களிலும் வரவேண்டும்.....

பெரும் கட்டுரைகளில் எழுதி சொல்லும் விடையங்களை ஒரு கருத்து ஓவியம் எளிதில் புரியவைக்கிறது...

இதற்கு மொழி தெரியத்தேவை இல்லை....

தொடரட்டும்......மூனா....

வலையனுக்கும் பாராட்டு.... கிளிக் பண்ணாமல் நேரடியாக போட்டால் நல்லது.....

வார்தைகளால் சொல்ல முடியாத பல கருத்துக்களை இந்த படம் மூலம் சொல்லி இருக்கிறார் முனா அவர்கள்

நான் அறிந்தது சரியாக இருக்குமாயின் இவரின் மைத்துனர்( மனைவி தம்பி ) ஒரு மாவீரர்?

  • தொடங்கியவர்

வணக்கம் அனைவருக்கும்,

அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி. மூனா அவர்கள் அறியப்பட்ட ஓவியர். tamilguardian இதழில் தொடர்ந்து பல வருடங்களாக கேலிச் சித்திரங்களை வரைந்து வருபவர். ஈழமுரசிலும் கேலிச்சித்திரங்களை வரைந்திருக்கிறார். யாழ் இணையத்திற்கும் தொடக்க காலங்களில் கேலிச்சித்திரங்களை வரைந்து தந்திருக்கிறார். ஓவியர் - படைப்பாளி என்பதன் அடிப்படையில் அவர்பற்றி நாம் நிறையவே சொல்லலாம். அதுபற்றி தனியான தலைப்பில் நாம் பேசிக்கொள்வோம். :huh:

கருத்துப்படம் இங்கு இணைக்கப்பட்டதன் நோக்கம் - இக் கருத்துப்படத்தில் உள்ளடக்கப்பட்ட விடயம் தொடர்பாக கருத்தாடலைச் செய்யவே. வெறுமனே பாராட்டுக்களோடு நிக்காது இவ்விடயம் தொடர்பாக அனைவரும் உங்கள் கருத்துக்களை முடிந்தளவு முன்வையுங்கள்.

மற்றும் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை உள்வாங்கிக்கொண்டோம். ஆவன செய்கிறோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பில் தெரிவது பாதிதான். சொடுக்காவிட்டால் ஏதோ மகிந்தவிற்கு ஜால்ராப் போடும் இணையம் என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடலாம்..

முகப்பில் இரண்டாவது படத்தைப் போட்டிருக்கலாம்.( வெற்றி பெருமிதத்துடன் மகிந்தா ஏறி நிக்கும் தொப்பிக்கல என்ற குண்டின் திரியில் நெருப்பு வரும் படம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம இராணுவ ஆய்வாளர்கள் சொல்வதுபோல அகலக்கால் வைத்துவிட்டார்கள் ஆப்பு காத்திருக்கிறது என்று அரைத்த மாவைத்தான் இந்த காட்டூனிலும் அரைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது எனது ரியூப் லைட்டு மூளைக்கு ஏதோ ஒன்று இன்னும் அகப்படவில்லையா?

ஓவியர் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் நல்ல விதமான இக்காலத்துகு ஏற்றவிதமாக அமைந்திருகின்றது உங்கள் ஓவியம் துயவன் தந்த இணைபில் ஓவியரின் புளக்கை பார்த்தேன் அவரின் திறமையை மிகவும் ரசித்தேன்.அனுபவசாலியான நீங்கள் இன்னும் இன்னும் சிறந்த ஆக்கங்களை தரவேண்டும் உங்கள் ஓவிய கலையை எமக்கும் கற்பிக வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

http://www.selvakumaran.de/kodukal/Dec14a.jpg

http://www.selvakumaran.com/kodukal/Dec7sw.jpg

அருமையாக இருகின்றது மேல் இருக்கும் இரு ஓவியங்களும்

Edited by ஈழவன்85

நல்லாக இருக்கிறது நன்றி.

அடுத்து சுகன் சொன்னது போல் தொப்பிகல என்ற கோறையான வெற்றி மேடை நோக்கிய படிகள் தமிழி மக்களின் இறந்த உடல்கள் அவலங்கள் இடப்பெயர்வுகளினால் ஆனது என்பது எப்படி இலகுவாக சித்தரிக்கலாம்?

மேலும் அந்த Thoppigala time bomb இன் உள்ளடக்கம் என்னென்ன என்று கொஞ்சம் விபரங்களை அடக்க முயலலாமா? முக்கியமாக சிங்கள மக்கள் நோக்கியதாக அந்த time bomb அய் பின்வருமாறு சித்தரிக்க முயற்சிக்கலாம்:

கிழக்கிலோ வடக்கிலோ இராணுவரீதியில் என்னத்தைதான் முயற்சித்தாலும் அது எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று எப்படித்தான் பிரச்சாரம் செய்தாலும் இறுதியில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம் சுதந்திர தமிழீழமாக மலரும் என்பதை சித்தரிக்க வேண்டும். இது தான் horizon இல் தெரியும் உண்மையான உதயமாக காட்டிய படி அந்த யதார்த்தம் உறைக்கும் பொழுது வேறு பல அதிர்ச்சிகள் தென்னிலங்கைக்கு இருப்பதாகக் காட்டலாம்.

-1- அதள பாதாளத்தில் சிறீலங்கா பொருளாதாரம்

-2- இயற்கை வளங்களும் பொருளாதார வணிக உரிமைகளும் தமிழரிற்கு எதிரான யுத்தத்திற்கு உதவுகிறன் என்ற பெயரில் வெளிச்சக்திகளால் சூறையாடப்பட்டிருக்கிறது.

-3- வெளிநாடுகளுடனான பாதுகாப்பு உடன்பாடுகளில் பகுதி பகுதியாக விலைபோயிருக்கும் சிறீலங்காவின் (தென்னிலங்கை) இறமை.

இந்த அரசியல் தெருக்கூத்திற்கு தனியே மகிந்தவை மட்டம் தட்டிப்பயனில்லை. இதற்கு வெளிவேசத்திற்கு மனித உரிமை என்று பேசிக் கொண்டு உள்ளுர சுயலாபங்களிற்காக உடந்தையாக நிதியுதவி ஆயுத உதவி ஆலோசனை வழங்கும் வெளிச் சக்திகளை எவ்வாறு சித்தரிக்கலாம்? இது எரியிற வீட்டில் பிடுங்கும் சர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனையும் விதிவிலக்காக இல்லாது யப்பான் , அமெரிக்கா முதல் இந்தியா பாகிஸ்தான் சீனா வரை எல்லா வல்லூறுகளும் வட்டமடிக்கின்றன என்பதை தமிழர் சிங்களவர் சர்வதேசம் என்று எல்லோரையும் நோக்கியதாக வரையலாம்.

மகிந்தவின் ஆட்சியை கவிள்ப்பதில் குறியாக இருக்கும் ரணில் இதை பற்றி புலம்புவதையும் அவரது சமாதான தேவன் என்ற வேடத்திற்கு பின்னால் உள்ள கருணா பிளவின் முக்கிய சூத்திரதாரி என்ற வரலாற்றையும் எப்படித் தமிழரை நோக்கியதாகச் சித்தரிக்கலாம்?

இவை சில எதிர்கால வரைபுகளிற்கான கருப்பொருளிற்கு உதவியாக இருக்கலாம். எழுத்துக்களில் பலவற்றைச் சொல்லாம் அதை சித்திரமாக்குவதில் உள்ள சிக்கல்கள் தனித்துவமானவை.

கேலிச்சித்திரத்தை பார்ப்பதற்கான மாதிரியாக...

வலைஞன் கூறிப்பிட்டது போல் 1ஆவது படத்தை முகப்பிலும் அதற்கு மேல் கொண்டுபோகும் பொழுது அது விரிவடைந்து அந்த வெற்றியின் கோரத்தையும் அதன் கீழுள்ள ஆப்பத்துகள் கோறைகளை காட்டுவதுமாக இருக்கும் 2 ஆவது படத்தை பெரிதாக தெரிய வைக்கலாம்.

இன்று பல இணையத்தளங்களில் விளம்பரங்கள் இருக்கிறது. அதன் மேல் mouse pointer கொண்டு போனதும் அந்தப் பகுதியில் இன்னொரு layer சற்றுப் பெரிதாக முன்னுக்கு வந்து (தனி window ஆக அல்ல) அந்த விளம்பரம் animation ஓடு சிறிது நேரம் ஓடும் பின்னர் தானக மூடிவிடும், விரும்பினால் நீங்களே மூடுவதற்கு close button உம் இருக்கும். இது புது புது windows உருவாகி கரைச்சல் தராது முழு வில் window உள்ள தகவல்களையும் மீண்டும் load பண்ணி முன்னுக்கு பின்னுக்கு போய்வராத நல்ல முறை. இப்படிப்பட்ட ஒரு template அய்ய பயன்படுத்தலாம்.

உண்மைச்சித்திரம்! முடிந்தால் இந்த கருத்துப்ப்படத்தை Island, Sunday Times,

Sunday Leader போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுங்கள்

அருமையான படம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)

- வாழ்த்துகள்.

இந்த உந்துதலால் உருவாகும் எண்ணங்களையும் -இதே தலைப்பில் பொருந்தக்கூடியதான- கேலிச்சித்தரமாக வரையக்கூடியவர்கள் இருந்தால் இக்களத்தில் பதிவு செய்யலாமே!!

மெளன மொழியில் கலந்துதுரையாடுவதாக இருக்கும்.

அடுத்த கார்ட்டூன் எப்பவருமென்ற ஆவலுடன் இருக்கிறோம்.

அழகாக வரைந்து கலர் குடுத்திருக்கார். :rolleyes:

கிழக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்திலும் விடுதலைப்புலிகள் பெரும் இழப்புகள் இன்றி முடிந்த அளவுக்கு சிங்களத்துக்கு இழப்பை ஏற்படுத்தி விலகி நிற்கிறார்கள். மூதூர் சண்டைக்கு பிறகு அங்கு வேறு பெரும் நேரடி மோதல்கள் ஏதும் நடக்கவில்லை. துரோகி கருணா போக கிழக்கின் பலம் அப்படியேதான் இருக்கிறது. புலிகளின் பலத்தை அழிக்காமல் நிலத்தை பிடித்ததற்காக வெற்றி விழா கொண்டாடும் மகிந்தாவின் நிலமையை ஓவியர் மூனா தனது கேலிசித்திரம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.