Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
பாலியல் தொழில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.

இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி இதுவரை இல்லாத பின்னணியில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.

"புத்தர் காலத்திலேயே இருந்த தொழில்"

பாலியல் தொழில் என்ற விடயம் புத்த பெருமானின் காலத்திலிருந்து காணப்படுவதாக ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவிக்கின்றார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

கோகிலா குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பு ஆதரவு வழங்கிய வருகின்ற நிலையில், மற்றுமொரு தரப்பு எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளது.

பாலியல் தொழில் என்பது, உலகிலேயே மிக பழமை வாய்ந்த தொழில் என கோகிலா குணவர்தன கூறுகின்றார்.

kokila gunawardena

பட மூலாதாரம்,KOKILA GUNAWARDENA

தான் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிடுகின்ற போதிலும், இந்த கருத்தினை தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகள், இடை த்தரகர்கள் என அனைத்து தரப்பினரும் மோசடி செய்து வருகின்றனர்.

இதைவிட, தனது உடலை விற்பனை செய்து, வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, பாலியல் தொழிலை சட்டமாக்கிக் கொடுக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இதைச் சட்டமாக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள், சிறைச்சாலைகளுக்கு செல்லாது, தமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என அவர் கூறுகின்றார்.

எனினும், இது தனது தனிப்பட்ட கருத்து எனவும், இது அரசாங்கத்தின் கருத்து கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் இறுதி வரை இவ்வாறான தீர்மானமொன்றை எடுக்க மாட்டார்கள் என்பதனை தான் நன்கறிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேகிலா குணவர்தன கூறுகின்றார்.

எனினும், பெண் என்ற விதத்தில், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் மோசடி செயற்பாடுகளுக்குள் இட்டு செல்வதற்கு தான் எதிர்ப்பு என்ற விதத்திலேயே இதனை தான் கூறுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பாலியல் மோசடிகளிலிருந்து 100 வீதம் பெண்கள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தான் இதனைக் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

"பெண்களுக்கான முடிவை பெண்களே எடுக்க வேண்டும்"

ஹரினி அமரசூரிய

பட மூலாதாரம்,HARINI AMARASURIYA'S FACEBOOK

 
படக்குறிப்பு,

பெண்கள் தொடர்பான முடிவுகளை வேறு நபர்களே எடுத்து வருவதாக ஹரினி அமரசூரிய கூறுகிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவும், பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து கருத்து வெளியிட்டார்.

பெண்ணொருவரின் உடல் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டியது, குறித்த பெண்ணே தவிர, வேறொருவரும் கிடையாது என அவர் கூறுகின்றார்.

எந்தவொரு பெண்ணும் பாலியல் தொழிலில் விருப்பத்துடன் இணைவதில்லை என கூறிய அவர், பெண்களை மோசடி செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படாத பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாலியல் தொழில் என்ற ஒன்று உள்ளமையினால், அந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற இடத்திலிருந்து, தான் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

பெண்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது அவர் என்ற போதிலும், இன்றைய உலகில் பெண்கள் தொடர்பில் வேறு நபர்களே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

"தமிழ்ப் பெண்களே பாதிக்கப்படுவார்கள்"

பாலியல் தொழிலை சட்டமாக்கும் பட்சத்தில், கட்டாயமாக தமிழ் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பெண் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள யுவதிகள் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறுகின்றார்.

உமாசந்திரா பிரகாஷ்

பட மூலாதாரம்,UMA CHANDRA PRAGASH

 
படக்குறிப்பு,

பாலியல் தொழிலை சட்டமாக்கினால் தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் உமாசந்திரா பிரகாஷ்

ஏனைய சமூகங்களை விடவும், பின்தங்கிய நிலையில் பெரும்பாலும் தமிழ் சமூகம் உள்ளமையினால், அந்த பெண்கள் விபசார தொழிலுக்கு ஈடுபடுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பொருளாதார ரீதியில் தம்மையும், தமது குடும்பத்தையும் வலுப்படுத்த அந்த பெண்கள், இவ்வாறான தொழில்களில் ஈடுபடக்கூடும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

அதுமாத்திரமன்றி, குறிப்பிட்ட காலப் பகுதியில் தமது அழகு மற்றும் உடல் எடை மாறுபடும் பட்சத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அந்த தொழிலிலிருந்து தவிர்க்கப்படும் நிலை ஏற்படும் என கூறிய அவர், அதன் பின்னரான காலத்தில் அவர்களின் வாழ்க்கை முழுமையாகவே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், பல்வேறு நோய்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதுடன், சட்டவிரோத குழந்தைகளை ஈன்றெடுக்கும் நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

பாலியல் தொழில் சட்டமாக்கப்படும் பட்சத்தில், திருமண பதிவுகளின் போது தொழில் என்ற இடத்தில் 'விபசாரம் ' என்பதனை குறிப்பிட்டு, அதனை ஆண் ஏற்றுக்கொள்வாராயின், அது சாத்தியமானது என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

அதைவிடுத்து, பாலியல் தொழிலை சட்டமாக்கும் கருத்தானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பெண் சமூக செயற்பாட்டாளர் உமா சந்திரா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59451519

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ஸ குட்டியாராச்சியின் காட்டுமிராண்டித்தனத்துக்கு மனோ கடும் கண்டனம்

 
 
photo-11-696x392.jpg

” தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம்.

இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே பெரும்பான்மையினரான பெண்களை அவமானப்படுத்தி விட்டு, இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவுக்கு எதிராக பெண்ணின வெறுப்பு மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளை, அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக சபையில் பிரயோகித்துள்ளார். இந்நாட்டு பெண்களை அவமானப்படுத்தும்முகமாக சபையில் சொல்லப்பட்ட இக்கருத்துகளை, பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய அமைப்பின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபிள்ளை மற்றும் எதிரணி எம்பி தலதா அதுகோரள ஆகியோர், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் சென்று கடுமையாக கண்டித்து தமது உரிமைக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மாத்தளை மாவட்ட எம்பி ரோகினி குமாரி விஜேரத்ன உரிமை கோரிக்கை எழுப்பி, தன்னையும், இந்நாட்டு பெண்களையும் நிமிர்ந்து நின்று மகிமைப்படுத்தியுள்ளார்.

 

அருவருக்கதக்க விதத்தில், பெண்களை அவமானப்படுத்துவதும் பின்னர் அவற்றை விளையாட்டு, கேலி, கிண்டல், அரசியல் என்ற பெயர்களில் மூடி மறைப்பதும், நமது சமூகத்தில் வழமையாக நடைபெறுகிறது. இதுவே அன்று அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி வாயில் இருந்தும் பாராளுமன்ற சபையில் வெளிப்பட்டது.

தனிப்பட்ட உரையாடல்களில் இத்தகைய கருத்துகள் கூறப்படுவதையும்கூட அங்கீகரிக்க முடியாது. ஆனால், சிலவேளைகளில் அவை தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவோரின் நட்பு நடத்தைகளாக பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கும் இன்றைய நவீன பெண்கள் முறையாக உரிய பதிலடிகளை அளிக்கின்றனர். ஆனால், இவை பகிரங்கமாக, அதுவும் நாட்டின் அதியுயர் நாடாளுமன்ற சபையில் கூறப்படும்போது, நிலைமை வரம்பு மீறுகிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

 

இன்று பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய பெண் எம்பி உறுப்பினர்களும், நன்னடத்தை கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களை கண்டித்திருப்பது, இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களை உலுக்கி விட்டு அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் நல்விளைவை ஏற்படுத்தி உள்ளதாவே நான் நம்புகிறேன்

https://kuruvi.lk/திஸ்ஸ-குட்டியாராச்சியின/?fbclid=IwAR2nR09g6wetODI2aWZjtv7Du2usxdOEozo_xp6O8HWmPjVeoUUbnXF7MAk

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, ஏராளன் said:

தமிழ்ப் பெண்களே பாதிக்கப்படுவார்கள்
பாலியல் தொழிலை சட்டமாக்கும் பட்சத்தில், கட்டாயமாக தமிழ் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பெண் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

பாலியல் தொழிலை சட்டமாக்கும் கருத்தானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பெண் சமூக செயற்பாட்டாளர் உமா சந்திரா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.

😂

பாலியல் தொழிலில் அரசகாலங்களில் இருந்து வழமையாக இருந்து வரும் ஆனால் அதை சட்டமாக்கிக் அப்பாவி பெண்கள் சிறைக்கு செல்லுதல் துன்பபடுவதில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துவிட கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கருக்கலைப்பு செய்வதையும் சட்டபூர்வமாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்

இந்தப்பெண்களுக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ? பெண்களின் வாழ்வை மேம்படுத்த எத்தனையோ வழிகள் இருக்க  பெண் அரசியல்வாதிகள் சொல்லும் யோசனையை பார்த்தால் அடுத்து ஓரின சேர்க்கை, ஒன்றன்பின் ஒன்றாக சட்டம், அதோடு எயிட்ஸ் வந்தால் இவர்கள் பொறுப்பெடுப்பார்களா? பொறுப்பற்ற பெண்கள். இந்த அம்மணி அரசியலுக்கு வந்திருக்க கூடாது, இவ இருக்க வேண்டிய இடம் வேறு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.