Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட வேலை செய்பவனின் தந்தை ஒரு சமையல்காரன் என அறிந்த கோவிந்தன் அவனை நக்கலாகவும் ஏழனமாகவும் பார்த்து சிரித்து விட்டு...தாய் சமைத்து கட்டித்தந்த சோத்து பார்சலை விரித்து வைத்து ஆகா ஓகோ என ரசித்து உருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2025 at 21:22, தமிழ் சிறி said:

காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !

காதலனா, கள்வனா அவன்? இப்போவெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை! கலியாணம் செய்தாலும் வரதட்ஷணை என்கிற பெயரில் கொள்ளையிடுகிறார்கள். ஆண்கள் மட்டுமா? இப்போ, பெண்கள் கலியாணம் என்கிற பெயரில் செய்துவிட்டு வரதட்ஷணை கொடுமை, வீட்டு வன்முறை என்கிற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். காதலும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் சில இளையவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பட்டம் தேடி விதை ....... விளக்கம் . .......! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maxresdefault.jpg

கடந்து போக கற்றுக்கொள்

மாயமான இவ்வுலகில்

எல்லா காயங்களுக்கும்

நியாயங்கள் தேடிக்

கொண்டிருந்தால்

நிம்மதி இருக்காது....

என சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

G3-D150j-XAAA6o41mn.jpg

தலைக்கனம் வெந்நீர் போன்றது.

அதை மற்றவர்கள் மீது தெளிக்காதீர்கள்.

அது உங்கள் மீதே பட்டு விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்பவெல்லாம் செவ்வந்தி பாட்டுக்கள்தான் கேட்க புடிக்குது..😂

paruthiveeran-12-600-1519369978-15978392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ok-computer.gif

உலகத்துடன் இணைந்திருக்கிறேன்..

உடனிருப்பவரை விட்டு தனித்திருக்கிறேன்...

கணணி எனும் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எனக்கு இப்பவெல்லாம் செவ்வந்தி பாட்டுக்கள்தான் கேட்க புடிக்குது.

அப்படியெண்டா; செவ்வந்தியில் ஒரு மயக்கமுங்கோ உங்களுக்கு. ஒரு அமைச்சரே அவரின் திறமையை மெச்சியிருக்கிறார் என்றா பாத்துக்கொள்ளுங்களேன் செவ்வந்தி எப்படிப்பட்டவர் என்று. அதிலும் இருபத்தாறு வயதுதான் அவவுக்கு. எங்கள் பெண் போராளிகளை விமர்சிக்கிறார்கள், இவவையோ நினைத்து, கனவு கண்டு பாட்டுபாடுகிறார்கள். இருவேறு உலகமிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

G3c5-Dma-XYAAB2-C7.jpg

தவறுகளே அதிகம்

பகிரப்படுவதால்

சரியானவற்றை அடையாளம்

காண முடிவதில்லை.....

குற்றவாளிகளை மட்டும்

எங்கும் எதிலும் தேடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kae.jpg

கரையாத மனமும் உண்டோ 💘
ஆ...கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு 💘
கரையாத மனமும் உண்டோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடித்த கதையும், கானமும், நடிப்பும், காட்சியும் நிறைந்த காட்சி...............💔

https://www.youtube.com/watch?v=s4MME4U6ScE

துரோகத்தாலும் பழிகளாலும் வீழ்ந்த உண்மைகளும் நியாயங்களும் அடுத்த தலைமுறைக்கும்.கடத்தப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sto.jpg

கணவன் யாரென்று மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தெரியும்...

மனைவி யாரென்று கணவன் பணமில்லாமல் இருக்கும் போது தெரியும்...

பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் முதுமை அடைந்த பின் தெரியும்...

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாரென்று பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இல்லாத போது தெரியும்...

நண்பர்கள் யாரென்று இடர்,கடினம் வரும் போது தெரியும்...

உற்றார்,உறவினர்கள் யாரென்று நீ கடன் கேட்கும் போது தெரியும்...

எல்லா உறவுகளினதும் உண்மை எப்போது தெரிய வருமென்றால்.....அவர்களுக்கு உன்னால் எந்த லாபமும் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

Prakasam P Palani  ·

நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது.

புகைப்படத்தை நல்லா பாருங்க.

கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல.

நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான்.

'என்னாது...வெறும் 27 கிலோவா...'?

ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ.

ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது.

காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான்.

நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும்.

இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க.

இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம்.

அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...?

அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது.

ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான்.

சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...?

ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு.

இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா...

"நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

ஆனால், அது தவறு.

நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!!

இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு.

இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு.

இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும்.

ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு.

இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!!

Voir la traduction

574267066_10163350833814294_496493307254

  • கருத்துக்கள உறவுகள்

572798520_877266997963761_46293621498065

  • கருத்துக்கள உறவுகள்

575044868_753187837770568_13291999826865

Isai Sangamam  · 

Nandha Kumar ·

🌹" சாண்டோ சின்னப்பா தேவர்.., எம்ஜிஆர்.., டி.எம்.எஸ்.., எம்.எஸ்.வி ஆகிய திரை ஜாம்பவான்களின் அழகிய புகைப்படம் 📷"

Voir la traduction .........!

  • கருத்துக்கள உறவுகள்

யானை ·

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை

புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று

நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை

தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்........!

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் என்றால் அது தெய்வம் .....சிலையென்றால் வெறும் சிலைதான்

உண்டென்றால் அது உண்டு .....இல்லை என்றால் அது இல்லை . .....! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ta.webp

மதம் மாறக்கூடியது.

மொழியும் இனமும்

மாற முடியாதவை.

  • கருத்துக்கள உறவுகள்

யானை ·

"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா

"இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."

"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல"

தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்...

"கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...

அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது

"இது என்னங்க"

"மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா

"மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"...

"அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா..

தோழர் ஜீவா

வீராசாமி

Voir la traduction

575115080_822089457276083_24254365431482

இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂

  • கருத்துக்கள உறவுகள்

579684053_850844820802669_50185666221134

தொலைபேசி பேசுகின்ற இடம்.. அன்றும், இன்றும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

579684053_850844820802669_50185666221134

தொலைபேசி பேசுகின்ற இடம்.. அன்றும், இன்றும். 😂

நான்கு சுவர்களுக்குள்த் தான் சுதந்திரம்

அப்பவும் இப்பவும் இருக்கிறது.

On 8/11/2025 at 11:03, suvy said:

யானை ·

"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா

"இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."

"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல"

தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்...

"கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...

அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது

"இது என்னங்க"

"மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா

"மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"...

"அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா..

தோழர் ஜீவா

வீராசாமி

Voir la traduction

575115080_822089457276083_24254365431482

இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂

அது அப்போ

இப்போ பண மூட்டையே காணாமல் போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

578269351_1179799011016886_8860749136692

100% பொழுது போக்கு

'சலங்கை ஒலி' படத்துல இதை நீங்க கவனிச்சீங்களா...?

முன்னாள் காதலர்களான கமலும், ஜெயப்பிரதாவும் பிரிஞ்சிடுவாங்க. பல வருஷங்களுக்கு பின்னாடி கல்யாணம் செய்துக்கொண்ட ஜெயப்பிரதாவின் கணவர் இறந்துடுவார். ஆனால், ஜெயப்பிரதாவின் கணவரை கமல் ஏற்கனவே நேரில் சந்திச்சி பேசிருப்பார்.

இப்ப ஜெயப்பிரதா தன்னோட மகளுக்கு பரத நாட்டியம் கத்துக்கொடுக்க கமலை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வைப்பார். ஆனால், கணவர் இறந்ததை மறைச்சிட்டு பொட்டு வெச்சிக்கிட்டு கமல் முன்னாடி சுமங்கலியா நடிச்சிட்டு இருப்பார்.

இதில் காமெடி என்னான்னா, ஜெயப்பிரதா மகளுக்கு ஹாலில் தான் கமல் நடனம் சொல்லிக்கொடுப்பார். இந்த ஹாலில் தான் செத்துப்போன ஜெயப்பிரதாவின் கணவர் போட்டோ மாலையுடன் தொங்கிட்டு இருக்கும். பல நாட்கள் அந்த வீட்டுல இருக்கும் கமல் அந்த போட்டோவை பார்க்காமல் தன் முன்னாள் காதலி சுமங்கலியா தான் இருக்காங்கன்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா இருப்பார்.

இத்தனை வருஷம் கழிச்சு ஒருத்தன் வந்து அந்த படத்தை யூடியூப்ல பார்த்து pause பண்ணி, அந்த போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்படிலாம் கேள்வி கேட்பான்னு இயக்குனர் யோசிச்சிருக்க மாட்டார்ல 🤣"

படித்ததில் பிடித்தது

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

581940438_853438463876638_82992651723866

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-funny.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.