Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

யாழ் களத்தை திராவிடர் - தமிழர் சண்டைக்களமாக மாற்றவென்றே ஒரு திரியை வளர்த்தெடுத்தார்கள் முன்னர்- அதை அகற்றி நிதானப் படுத்த முடிந்தது.

ஆனால் இப்படி யாழுக்கு வெளியே சமூக ஊடகங்களில் நிகழும் சண்டைகளை இங்கேயும் கொண்டு வந்து தீ  மூட்ட வேண்டிய தேவையேனென்று விளங்கவில்லை!

(கோசான் எழுதும் வரை எனக்குக் இரண்டரை வருடத் திரி ஏன் மீள வந்ததென விளங்கியிருக்கவில்லை! )

கொண்ட கொள்கை தோற்றுப் போன போது, தோற்கடிக்கப்பட்ட போது எல்லாருக்கும் சுய இரக்கம் தோன்றும். அதுவே பின்பு பழிவாங்கும் வெறியாக மாறும்.

தோல்வியில் இருந்து மீண்டு வந்து அதே கொள்கையை மீட்டு தொடர்வது எப்படி என சிந்திப்பவர் சிலர்.

கொள்கையை முன்னேற்றுவது எப்படி என்ற focus ஐ இழந்து, எதிரியை தவிர தோல்விக்கு காரணம் என நாம் நினைக்கும் எல்லாரையும் பழிவாங்க துடிப்பவர்கள் சிலர்.

இங்கே சிலருக்கு கருணாநிதியை, திருமாவை, சொல்கெய்மை, இன்னும் பலரை பழிவாங்கி விடவேண்டும் என்பதே இப்போ ஒரே focus. இதனால் கொண்ட கொள்கைக்கும், இனத்துக்கும் ஏற்படும் நீண்டகால கடும் பாதிப்பு, எதிரிக்கு ஏற்படும் நீண்டகால அனுகூலம் அவர்கள் கண்ணுக்கு புலப்படுவதே இல்லை.

ஆகவே எந்த நிலைக்கும் இறங்கி, தன்னிலை தாழ்ந்து முழு நேர கட்சி பணியாளர்களாகவே ஆகிவிடுவர்.

Tunnel vision focused only on revenge. 

இதைதான் காந்தி சொன்னார்.

“if you seek revenge, you should dig two graves”.

பழி தீர்க்க போகிறாய் என்றால் இரெண்டு சவகுழிகளை கிண்டு (ஒன்று உனக்கு, மற்றையது அவனுக்கு).

இது ஏசு பிரானின் மறு கன்னத்தை காட்டும் போதனை அல்ல.

இந்த பழிவாங்கும் அரசியல் counter productive ஆனது.

இதனால் முழு அழிவும் எமக்குத்தான்.

ஆனால் பழிவாங்கும் உணர்வு கண்ணை மறைப்பதால் - இந்த ஆபத்தை தரிசிக்க முடிவதில்லை.

பிகு

மேலே சொன்ன விளக்கம் குழப்பம்காசி agent provocateurs இற்கு பொருந்தாது.

அவர்கள் வருவதே குட்டையை மேலும் குழப்பி - இனத்துக்கு ஆப்படிக்கும் ஒரே நோக்கில்தான்.  

Edited by goshan_che

  • Replies 152
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பங்குவுக்கு..... கடல் கடந்த உசுப்பேத்தல்....

கவனம்... பங்கு..... நீங்கள் வந்து சன்னதம் ஆடத் தொடங்க.... ஆளைக் காணக் கிடையாது....

தோட்டம் கொத்தப் போறன் எண்டு போடுவார். 😁

நாதம், உங்களுக்கு ஒரு யோசனை (உங்கள் பாணியிலேயே, நீங்கள் கேட்காமல்): இந்த அஞ்சாம் வகுப்பு லெவல் உசுப்பேத்தல் (அவரோட கதைக்காதே, இவரோடு பேசாதே என அட்வைஸ் தரும்😎) உங்கள் அங்காளி பங்காளிகள் செய்வர் - பின் தொடருங்கள். சாதாரணமாக ஒரு திரியில் கருத்துரைப்போருக்கு நியாயமான காரணங்கள் இருக்குமென்பதைப் புரிந்து கொள்ள உங்கள் மூளைக்குப் பயிற்றுவியுங்கள். இப்படி கள உறுப்பினர் கருத்துரைப்பதை குறைக்கும் வகையிலான நக்கல்கள் என் பங்கு பற்றலை எங்கும் மாற்றாது!

அப்ப இன்னும் 39 தானா?😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கொண்ட கொள்கை தோற்றுப் போன போது, தோற்கடிக்கப்பட்ட போது எல்லாருக்கும் சுய இரக்கம் தோன்றும். அதுவே பின்பு பழிவாங்கும் வெறியாக மாறும்.

தோல்வியில் இருந்து மீண்டு வந்து அதே கொள்கையை மீட்டு தொடர்வது எப்படி என சிந்திப்பவர் சிலர்.

கொள்கையை முன்னேற்றுவது எப்படி என்ற focus ஐ இழந்து, எதிரியை தவிர தோல்விக்கு காரணம் என நாம் நினைக்கும் எல்லாரையும் பழிவாங்க துடிப்பவர்கள் சிலர்.

இங்கே சிலருக்கு கருணாநிதியை, திருமாவை, சொல்கெய்மை, இன்னும் பலரை பழிவாங்கி விடவேண்டும் என்பதே இப்போ ஒரே focus. இதனால் கொண்ட கொள்கைக்கும், இனத்துக்கும் ஏற்படும் நீண்டகால கடும் பாதிப்பு, எதிரிக்கு ஏற்படும் நீண்டகால அனுகூலம் அவர்கள் கண்ணுக்கு புலப்படுவதே இல்லை.

ஆகவே எந்த நிலைக்கும் இறங்கி, தன்னிலை தாழ்ந்து முழு நேர கட்சி பணியாளர்களாகவே ஆகிவிடுவர்.

Tunnel vision focused only on revenge. 

இதைதான் காந்தி சொன்னார்.

“if you seek revenge, you should dig two graves”.

பழி தீர்க்க போகிறாய் என்றால் இரெண்டு சவகுழிகளை கிண்டு (ஒன்று உனக்கு, மற்றையது அவனுக்கு).

இது ஏசு பிரானின் மறு கன்னத்தை காட்டும் போதனை அல்ல.

இந்த பழிவாங்கும் அரசியல் counter productive ஆனது.

இதனால் முழு அழிவும் எமக்குத்தான்.

ஆனால் பழிவாங்கும் உணர்வு கண்ணை மறைப்பதால் - இந்த ஆபத்தை தரிசிக்க முடிவதில்லை.

பிகு

மேலே சொன்ன விளக்கம் குழப்பம்காசி agent provocateurs இற்கு பொருந்தாது.

அவர்கள் வருவதே குட்டையை மேலும் குழப்பி - இனத்துக்கு ஆப்படிக்கும் ஒரே நோக்கில்தான்.  

பங்கு.... நன்கு தெரிந்து தானே சொன்னேன்....

உசுப்பேத்தலை தொடர்ந்து, வந்து சன்னதம் ஆடுவியள் எண்டு....

அப்படியே நான் சொன்ன மாதிரி, நடப்பதை கவனித்தீர்களா..... 😉

சொல்லிப்போட்டேன் என்பதுக்காக..... தோட்டம் கொத்துவதை நாளை பார்க்கலாம் என்று அவரும் கொஞ்ச நேரம் நிண்டு.... நீங்கள் சன்னதம் கொண்டாட தொடங்கியதை உறுதி செய்ய உங்க நிக்கிறார்... 😎

ஏஜன்ட் புரவோகேற்றர்..... சிரிப்புக்காட்டாமல் போங்கோ, செல்லம்... 🥰

நாளைக்கு வெள்ளன எழும்ப வேணும் எண்ட படியால.... இன்றிரவு.... உங்களுக்கு சிவராத்திரி ஆக்க விருப்பமில்லை. 😁

சந்திப்பம்.

பிற் குறிப்பு:

சும்மா உசுப்பேத்தலால் எடுபடக்கூடாது....

தளத்தில.... நமக்கெண்டு ஒரு ரெஸ்பெக்ட் இருக்குதெல்லே.... அதை கெடுக்கக் கூடாது....

பிறகு ரசிகர்கள், முக்கியமாக ஓணாண்டியர்... குழம்பியிடுவார்... 👍 😜😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் விடயம் 2019இல் நடைபெற்றுள்ளது. ஆனால்(2021.12)இருவாரங்களின் முன்பானதொரு  நெடும்செவ்வியிலே மகிந்தவின் சந்திப்புத்தொடர்பாக அவர்தெளிவாகக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறார். எல்லா அரசியல் சந்திப்புகளிலும் இடம் பொருள் ஏவல் என்றிருக்கும். அதனை அவதானித்து நகர்வதே அரசியல்பாடமாகவும் உள்ளது. அவரது செவ்வியின் நான்குபகுதிகளையும் செவிமடுத்தால் அவர்தொடர்பானதொரு புரிதல் வரலாம்.  நான்கூட இந்தத் திரியிலேயிருந்த ருவிற்றர்பதிவைப் பார்த்தபோது முழுமையற்றது என்று தேடியபோதே முழுமையான செவ்வியைக் கேட்க முடிந்தது. 

திரிகளிலே அந்தத்திரியோடு தொடர்புடைய விடயங்களை உரையாடுவதே மேலதிக தெளிவுகளைப் பெற உதவும். ஆனால்  இங்கே நாம் ஒருவருக்கொருவர் கருத்தாடல் செய்வதாக எண்ணி தமிழர்தரப்புகளின் ஆதரவுத் தளங்களை மறைமுகமாகச் சிதைக்கவும் உதவுகிறோமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தையோ இந்திய ஒன்றியத்தையோ தள்ளிவைத்துவிட்டு எமது குறைந்தபட்ச இலக்குகளைக்கூட எட்டமுடியாதென்பதே யதார்தமாகும்.(இது பலராலும் முன்னைவைக்கப்படும் கருத்தும் கூட) அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை என்பது உலக நகர்வாகும்.

ஏன் நான் அயலகத்தைப் பார்ப்பதைவிட எமது தேசியத் தலைவரவர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களையே உள்வாங்கி நகரவில்லையா? அவர்களைவிடவா தொல்.திருமாவளவனவர்கள் செய்துவிட்டார். அவர்சென்றது ஒரு அரசுமுறைப் பயணம். அந்தப் பயணம் எந்தச் சூழலில் தான் சென்றேன் என்பதை மிகத்தெளிவாக் கூறியுள்ளார்.(பகுதி - 3) அதன்பின்னும் அவர்மீதான கருத்துரைகளை தமிழீழவிடுதலைமேல் உள்ள பற்றிலா இந்த ஊடகங்கள் செய்கின்றன. இல்லை, அவர்மேல் உள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.   

தமிழினம் கடந்து செல்லவேண்டிய பயணம் மிக நெடியது. உணர்ச்சிகளுக்கப்பால் நாம் சிந்திக்கவேண்டிய காலம்.   
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nochchi said:

திருமா.... இன்றும், என்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர். அவர் மட்டுமல்ல, வைக்கோ, சீமான், ராம்தாஸ்.... பலர்...

தமிழகத்தில் அரசியலுக்காக யாரும் அவரது பேட்டியை அரசியலாக்கட்டும் அது எமக்கு தேவையில்லை.

ஆனால், இந்த திரி, சமீபத்திய பேட்டி ஒன்றில், ஈழத்தமிழர் விடயத்தில் அவர் காட்டிய முதிர்ச்சியின்மையின் விளைவு.

அதனை அவர் கவனமாக கையாண்டு இருக்கலாம்.

பெரும் அழிவின் பின்னும், தமிழகத்தையோ, இந்திய ஒன்றியத்தையோ, இன்னும் நம்புகிறீர்களா?

சீனாக்காரன் இல்லாவிடில், உள்ளதும் போவதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இலங்கை தீவில், இனமத பேத மின்றி, ஒற்றுமையாக நம்பும் ஒரு விடயம், இந்தியாவை எக்காலத்திலும் நம்பவே முடியாது.

இருந்தெழும்பி.... இன்னும் பதின்மூன்று பிளஸ் பற்றி பேசும் எமதரசியல் வாதிகளையும், அது தொடர்பில் இந்தியாவுக்கு கடதாசி போடுவதையும் என்னென்பது?

ஆகவே.... புலத்தில் பலமாகி, அரசியல் செய்வதே ஒரே வழி.

****

தம்ழர் விடுதலை கூட்டணி தலைவர், ஆனந்தசங்கரிக்கு.... பிக்குமார் மந்திரிச்சு விட்டிருக்கினம் போலை....

வெளிநாட்டு அரசுகள்.... இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகிப்பது ஆபத்தானதாம்...

அவரது மகன்.... கனடாவில்.... அரச மட்டத்தில்.... நல்ல தொடர்பில் இருக்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nochchi said:

அதன்பின்னும் அவர்மீதான கருத்துரைகளை தமிழீழவிடுதலைமேல் உள்ள பற்றிலா இந்த ஊடகங்கள் செய்கின்றன. இல்லை, அவர்மேல் உள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.   

👍🏾 நன்றி நொச்சி அவர்களே! தமிழக கட்சி அரசியலில் ஈழத்தமிழர்கள் எதுவித சார்புநிலை எடுக்காமல் ஆதரவுத் தளத்தை பெருக்கவேண்டும். குறைப்பதால் நட்டம் தமிழகச் கட்சிகளுக்கு அல்ல. எமக்குத்தான்.

23 minutes ago, Nathamuni said:

ஆனால், இந்த திரி, சமீபத்திய பேட்டி ஒன்றில், ஈழத்தமிழர் விடயத்தில் அவர் காட்டிய முதிர்ச்சியின்மையின் விளைவு.

இதுவா, நீங்கள் முதிர்ச்சியில்லாதது என்று சொல்வது?

ஈழத்தை பற்றி உணர்வுபூர்வமாக பேசும் மனிதர் நீங்கள். பிரபாகரன் இன்று உயிரோடு இருக்கிறாரா இல்லையா ?

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படி அவர் உயிரோடு இருந்தாலும் எந்த பயனும் இல்லை என்றே நான் நினைக்கிறன். இது என் தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், தப்பித்த ஓடக்கூடிய உளவியலை கொண்டவர் அல்ல அவர். தன் இன மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க தான் மட்டுமே தப்பித்து தன் மக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் நிச்சயம் இருந்திருக்காது. நூறு சதவிதிகம் தன் மக்களுடனே கடைசி வரை இருந்திருப்பார் பிரபாகரன். 

அவர் தற்போது இருக்கிறாரா இல்லையா என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் கிடையாது. ஆனால் அவரை நன்கு அறிந்தவன் என்ற முறையில், அவரின் ஆழ்மனதைக்கூட புரிந்துக்கொள்ளக் கூடிய அளவில் அவரிடம் மணிக்கணக்கில் உரையாடியவன் என்ற முறையில் அவர் தப்பித்து சென்று பதினோரு வருடங்களாக மௌனித்து இருக்கிறார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

https://www.vikatan.com/literature/politics/i-dont-believe-that-prabhakaran-is-still-alive-says-thirumavalavan-in-kathaipoma-with-parvin-sultana

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கிருபன் அய்யா,

பேச்சு.... எழுத்து வடிவில் வரும் போது..... வேறு வகையில் இருக்கும் என்பதை புரியாதவர் அல்ல நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

திருமா.... இன்றும், என்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர். அவர் மட்டுமல்ல, வைக்கோ, சீமான், ராம்தாஸ்.... பலர்...

தமிழகத்தில் அரசியலுக்காக யாரும் அவரது பேட்டியை அரசியலாக்கட்டும் அது எமக்கு தேவையில்லை.

ஆனால், இந்த திரி, சமீபத்திய பேட்டி ஒன்றில், ஈழத்தமிழர் விடயத்தில் அவர் காட்டிய முதிர்ச்சியின்மையின் விளைவு.

அதனை அவர் கவனமாக கையாண்டு இருக்கலாம்.

பெரும் அழிவின் பின்னும், தமிழகத்தையோ, இந்திய ஒன்றியத்தையோ, இன்னும் நம்புகிறீர்களா?

சீனாக்காரன் இல்லாவிடில், உள்ளதும் போவதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இலங்கை தீவில், இனமத பேத மின்றி, ஒற்றுமையாக நம்பும் ஒரு விடயம், இந்தியாவை எக்காலத்திலும் நம்பவே முடியாது.

இருந்தெழும்பி.... இன்னும் பதின்மூன்று பிளஸ் பற்றி பேசும் எமதரசியல் வாதிகளையும், அது தொடர்பில் இந்தியாவுக்கு கடதாசி போடுவதையும் என்னென்பது?

ஆகவே.... புலத்தில் பலமாகி, அரசியல் செய்வதே ஒரே வழி.

வணக்கம் நாதமுனியவர்களே,  உங்கள் ஆதங்கம் நியாயமானதானபோதும் களச்சூழல் அப்படியில்லையே. களச்சூழக்கேற்றவாறு நகர்ந்து அரசியல் நெளிவுசுழிவுகளூடாகவே சிலவற்றை அடையவேண்டும். 

இங்கே நான் யாரையும் நம்புமாறு யாரையும் சுட்டமுடியாது. அவளவு பட்டறிவைத் தமிழினம் கடந்துள்ளது. ஆனாலும் மீண்டும் மீண்டும் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். நிற்க. இங்கே இந்தியாவையோ தமிழகத்தையோ தட்டிவிட்டு ஒரு தீர்வைப் பெற்முடியாதென்பது யதார்தம் என்பது எனது பார்வை. அதற்காக நாம் புலத்திலே வலிமையானதொரு தரப்பாக ஒன்றிணைந்து போராடக்கூடாதென்று அர்த்தமாகாது. அப்படியொரு அலகைப் புலத்திலே காண்பதே கடினமாக உள்ளது. ஆங்காங்கே தனித்துவமான பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. இவர்களே ஒன்றிணைந்து பயணிக்கத்துணியவில்லை என்பதும் ஒருசாபக்கேடு. உயிரகளைவிதைத்து அடையப்பட்ட தமிழினத்தின் கோட்பாட்டை கீழ்நோக்கி தமிழ்த்தேசியத் துரோகிகள் மற்றும் எதிரிகள் ஒருபுறமும், மறுபுறம் தமிழினத்திற்காகச் செயற்படுகின்றோம் என்ற தரப்புகளும் ஒன்றிணையாது நிற்பதனூடாக எதிரிகளின் ஆசையை நிறைவேற்றுவதாகவே கொள்ளமுடியும். 

இந்தியா இல்லா தீர்வு எப்படிச் சாத்தியம்? அதற்கானதொரு வழிவரைபடச் செயற்றிட்டம் குறித்து ஏதாவது அமைப்புகளால் உரையாடப்பட்டுள்ளதா?(2009பின்) 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nochchi said:

கருத்துக்கு நன்றி.....

எமது பிரச்சணை டெல்லியைத் தாண்டி, பீகிங், வாசிங்டன் பக்கம் போய் நீண்டகாலமாகிறதே....

இப்போது, இந்தியா என்ன முயற்சி செய்தாலும், உள்ளே வந்து விட்ட, (வர விட்ட) சீனத்து டிராகன் வெளியேற்றுவது கடினம்.

முக்கியமாக சிங்களவரும் சீனத்தை ஆதரிப்பதால்.....

****

தமிழருக்கு, காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போன கதை.

இந்தியாவுக்கு, குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுற கதை....

பீகிங், வாசிங்டன்...... குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதை....

இதில் தமது மீனவரை காப்பதே பெரும் பாடாக உள்ள தமிழக வகிபாகம் எதுவுமே தெரியவில்லை.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

தமிழக கட்சி அரசியலில் ஈழத்தமிழர்கள் எதுவித சார்புநிலை எடுக்காமல் ஆதரவுத் தளத்தை பெருக்கவேண்டும். குறைப்பதால் நட்டம் தமிழகச் கட்சிகளுக்கு அல்ல. எமக்குத்தான்.

„ஈழ விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை முயற்சியில் தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களும் போட்டியில் இறங்கியது எமக்கு ஒரு சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. தமிழ்நாட்டு அரசியலில் பக்கச்சார்பற்ற நிலையைப் பேணுவதும் எமது கொள்கையாக இருந்தது. அப்படியிருக்கும் பொழுது திராவிட இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள இப்போட்டி எமக்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. திரு.பிரபாகரன் அவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன். 
கலைஞரின் அழைப்பையேற்று அவரைச் சந்தித்தால் எம்.ஜி.ஆரைப் பகைக்க நேரிடும், கலைஞரின் அழைப்பை நிராகரித்து, எம்.ஜி.ஆரைப் சந்தித்தால் கலைஞரைப் பகைக்க நேரிடும். இவ்விரு தலைவர்களினதும் , அவர்கள் தலைமை தாங்கும் அரசியல் இயக்கங்களனதும் ஆதரவும் அனுதாபமும் எமக்கு அவசியம்'

நன்றி „விடுதலை' கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து  (பக் 4-5)

8 minutes ago, Nathamuni said:

கருத்துக்கு நன்றி.....

எமது பிரச்சணை டெல்லியைத் தாண்டி, பீகிங், வாசிங்டன் பக்கம் போய் நீண்டகாலமாகிறதே....

இப்போது, இந்தியா என்ன முயற்சி செய்தாலும், உள்ளே வந்து விட்ட, (வர விட்ட) சீனத்து டிராகன் வெளியேற்றுவது கடினம்.

முக்கியமாக சிங்களவரும் சீனத்தை ஆதரிப்பதால்.....

****

தமிழருக்கு, காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போன கதை.

இந்தியாவுக்கு, குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுற கதை....

பீகிங், வாசிங்டன்...... குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதை....

உண்மை, இந்தக்குழம்பிய குட்டையிலிருந்தே தமிழினமும் மீண்டெழவேண்டிய சூழல். இந்தச் சூழலை தன்வசமாக்க்கூடிய புலமையும் ஆளுமையும் மிக்க செயற்பாடுகளே தமிழினத்தின் தேவை.

நாதமுனியவர்களே நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

உண்மை, இந்தக்குழம்பிய குட்டையிலிருந்தே தமிழினமும் மீண்டெழவேண்டிய சூழல். இந்தச் சூழலை தன்வசமாக்க்கூடிய புலமையும் ஆளுமையும் மிக்க செயற்பாடுகளே தமிழினத்தின் தேவை.

நாதமுனியவர்களே நன்றி.

நொச்சி, புரிதலுக்கு மிக்க நன்றி.

எமது அரசியல் வாதிகள் இன்னும் இந்தியாவே அக்கறைப்படாத, 13+ குறித்து கடிதம் அனுப்புவதும், தமிழக அரசியல் வாதிகளை நம்புவதும், இல்லாத ஊருக்கு வழி சொல்வது போன்றது.

அரைத்த மாவை அரைப்பது, வேலைக்காகாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தையோ இந்திய ஒன்றியத்தையோ தள்ளிவைத்துவிட்டு எமது குறைந்தபட்ச இலக்குகளைக்கூட எட்டமுடியாதென்பதே யதார்தமாகும்.

ஏன் முடியாது  ?சிங்களவன் விரும்பினால்    முடியும்.எங்களுக்கு உரிய தீர்வு தமிழ்நாடு மாநிலம் போன்றது இல்லை.  மேலும் இவர்களை நம்பினால் தீர்வு ஒருபோதும் கிடையாது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

லண்டன் விடயம் 2019இல் நடைபெற்றுள்ளது. ஆனால்(2021.12)இருவாரங்களின் முன்பானதொரு  நெடும்செவ்வியிலே மகிந்தவின் சந்திப்புத்தொடர்பாக அவர்தெளிவாகக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறார். எல்லா அரசியல் சந்திப்புகளிலும் இடம் பொருள் ஏவல் என்றிருக்கும். அதனை அவதானித்து நகர்வதே அரசியல்பாடமாகவும் உள்ளது. அவரது செவ்வியின் நான்குபகுதிகளையும் செவிமடுத்தால் அவர்தொடர்பானதொரு புரிதல் வரலாம்.  நான்கூட இந்தத் திரியிலேயிருந்த ருவிற்றர்பதிவைப் பார்த்தபோது முழுமையற்றது என்று தேடியபோதே முழுமையான செவ்வியைக் கேட்க முடிந்தது. 

திரிகளிலே அந்தத்திரியோடு தொடர்புடைய விடயங்களை உரையாடுவதே மேலதிக தெளிவுகளைப் பெற உதவும். ஆனால்  இங்கே நாம் ஒருவருக்கொருவர் கருத்தாடல் செய்வதாக எண்ணி தமிழர்தரப்புகளின் ஆதரவுத் தளங்களை மறைமுகமாகச் சிதைக்கவும் உதவுகிறோமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தையோ இந்திய ஒன்றியத்தையோ தள்ளிவைத்துவிட்டு எமது குறைந்தபட்ச இலக்குகளைக்கூட எட்டமுடியாதென்பதே யதார்தமாகும்.(இது பலராலும் முன்னைவைக்கப்படும் கருத்தும் கூட) அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை என்பது உலக நகர்வாகும்.

ஏன் நான் அயலகத்தைப் பார்ப்பதைவிட எமது தேசியத் தலைவரவர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களையே உள்வாங்கி நகரவில்லையா? அவர்களைவிடவா தொல்.திருமாவளவனவர்கள் செய்துவிட்டார். அவர்சென்றது ஒரு அரசுமுறைப் பயணம். அந்தப் பயணம் எந்தச் சூழலில் தான் சென்றேன் என்பதை மிகத்தெளிவாக் கூறியுள்ளார்.(பகுதி - 3) அதன்பின்னும் அவர்மீதான கருத்துரைகளை தமிழீழவிடுதலைமேல் உள்ள பற்றிலா இந்த ஊடகங்கள் செய்கின்றன. இல்லை, அவர்மேல் உள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.   

தமிழினம் கடந்து செல்லவேண்டிய பயணம் மிக நெடியது. உணர்ச்சிகளுக்கப்பால் நாம் சிந்திக்கவேண்டிய காலம்.   
நன்றி

மிக காத்திரமான கருத்துக்கள் நொச்சி.

விடுதலை புலிகள் கைக்கொண்ட மிக திறமான கொள்கை என்றால் அது தமிழக அரசியலில் அவர்கள் எடுத்த அணிசாரா நிலைப்பாடுதான். 

இன்று அதே கொள்கையை தொடர வேண்டிய அவசியம் அவர்கள் காலத்தை விட அதிகமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அவர்சென்றது ஒரு அரசுமுறைப் பயணம்

இருக்கலாம்   நடந்து கொண்ட முறை பிழை   எந்தச்சுழ்நிலையிலும். தனது தனித்தன்மையை. விட்டுகொடுத்திருக்கக்கூடாது   குறைந்த பட்சம்  இலங்கை தமிழருக்கு பூரண மாநில சுயாட்சி கொடு என்று சொல்லியிருக்க வேண்டும் சொன்னரா?இல்லையோ      மட்டுமல்ல நீ. உன் நண்பனுடன் இருந்தால்  நீயும் போய் சேர்த்து இருப்பாய். என்ற போது     நகைத்து விட்டு வந்தரே. தேவையா?தமிழகத்தில் இருந்து இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

சிங்களவன் விரும்பினால்    முடியும்

கந்தையா அண்ணை இதை நீங்கள் முன்பும் பலதடவை எழுதி உள்ளீர்கள். 

1948 இல் இருந்து சிங்களவன் விரும்பவில்லை என்பதுதானே அண்ணை பிரச்சனை?

அண்மையில் யோகியின் ஒரு கருத்து பகிரபட்டது வாசித்திருப்பீர்கள்.

ஒரு போதும் மனது மாறி எமக்கு ஒரு அங்குல நிலத்தைதானும், ஒரு ரோட்டு கூட்டும் அதிகாரத்தை தானும் இலங்க தராது.

இப்போ அடித்து பறிக்கும் நிலையிலும் நாங்கள் இல்லை.

தவிர இந்தியாவை மீறி இலங்கையில் அமெரிக்காவோ, ரஸ்யாவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிடாது.

தலையிட கூடிய ஒரே நாடு சீனா - அவர்கள் எம்மை திரும்பியும் பார்பதாக தெரியவில்லை.

ஆகவே இந்தியாவோடுதான் இதை பற்றி டீல் பண்ண வேண்டும்.

You only make peace with your enemies not with your friends.

ஆகவே எமக்கான டீல் இந்தியா இலங்கை என்பவற்றை தவிர்த்து ஒரு போதும் நடக்காது.

8 minutes ago, Kandiah57 said:

இருக்கலாம்   நடந்து கொண்ட முறை பிழை   எந்தச்சுழ்நிலையிலும். தனது தனித்தன்மையை. விட்டுகொடுத்திருக்கக்கூடாது   குறைந்த பட்சம்  இலங்கை தமிழருக்கு பூரண மாநில சுயாட்சி கொடு என்று சொல்லியிருக்க வேண்டும் சொன்னரா?இல்லையோ      மட்டுமல்ல நீ. உன் நண்பனுடன் இருந்தால்  நீயும் போய் சேர்த்து இருப்பாய். என்ற போது     நகைத்து விட்டு வந்தரே. தேவையா?தமிழகத்தில் இருந்து இருக்கலாம் 

நிச்ச்யமாக. 

இதை ஒரு தன்மையாக திருமாவிடம் எடுத்து சொல்ல முடியாதா?

ஒரு வெளிநாட்டில் ஒரு பொது வெளியில் வைத்து அவரை மானபங்கபடுத்தித்தான் இதை சாதிக்க வேண்டுமா?

இது எமது வேலி சண்டை இல்லை அண்ணை.

திருமா தனிழ்நாட்டின் முதலாவது தலித் தலைவர். அவரை அவமானம் செய்வது தனியே வி சி க வை மட்டும் அல்ல, ஒரு தொகுதி மக்களையே கோவப்படுத்தும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

மிக காத்திரமான கருத்துக்கள் நொச்சி.

விடுதலை புலிகள் கைக்கொண்ட மிக திறமான கொள்கை என்றால் அது தமிழக அரசியலில் அவர்கள் எடுத்த அணிசாரா நிலைப்பாடுதான். 

இன்று அதே கொள்கையை தொடர வேண்டிய அவசியம் அவர்கள் காலத்தை விட அதிகமாக இருக்கிறது.

தவறான கருத்து.

பிரபாகரன் எம்ஜியார் ஆதரவில் இருந்ததால், கலைஞர் ஆதரவை இழந்தார் என்பது வரலாறு.

****

தமிழகத்து அரசியலை..... நமது அரசியலுடன் குழப்பாமல்..... ரசியுங்கள், விமர்சியுங்கள்... அங்குள்ள அரசியலுக்குள் விரும்பியவர்களுக்கு ஆதரவு கருத்து கொடுங்கள். தப்பில்லை.

ஆனால், நமது அரசியலுடன் முடிச்சப் போட்டால், அணிசேர்ந்ததாகி விடும். அதுதான் இங்கே நடக்கின்றது.

அது தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஆகவே இந்தியாவோடுதான் இதை பற்றி டீல் பண்ண வேண்டும்.

You only make peace with your enemies not with your friends.

ஆகவே எமக்கான டீல் இந்தியா இலங்கை என்பவற்றை தவிர்த்து ஒரு போதும் நடக்காது.

அப்படி டீல் பண்ணினால். நாங்கள் விரும்பும் தீர்வு கிடையாது தமிழ்நாடு மாநிலத்தை விட குறைந்த அதிகாரம் உள்ள தீர்வு தான் கிடைக்கும்  அப்படி கிடைக்கும் தீர்வை இலங்கையில் அடுத்து வரும் அரசு இல்லாமல் செய்யலாம்   இந்தியா பல மொழி பல மாநிலங்கள் கொண்ட நாடு அவர்களின் மாநில சுயாட்சி முறை சமச்சீராக்கூடியது   இரண்டு மொழி இரண்டு மாநிலத்துக்கு ஒத்துவராதவை   எங்களுக்கு தேவை பலமிக்க அதிகாரமுள்ள. மாநில சுயாட்சி அதற்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது.எனவே இந்தியா இலங்கை டீல் சரியில்லை   மாறாக இலங்கைக்குள் சிங்களம் தமிழ் டீல் தான் சரியானது    தேவையெனின் கிழங்கு. மாகாணத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து  வடக்கு மாகாணத்தைப் பூரணமாக பெற முயற்க்கவேண்டும். யாழ்ப்பாணத்தில். கடலை நிரப்பி  நிலத்தைப்பெறலாம்   காலம் கடத்தினால். எதுவுமே கிடையாது  இது எனது கருத்து மட்டும் நாங்கள் அடிபடவேண்டியதில்லை உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி கோஷன்.  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் எம்ஜியார் ஆதரவில் இருந்ததால், கலைஞர் ஆதரவை இழந்தார் என்பது வரலாறு.

போராடத்தின் ஆரம்பத்தில் இப்படி நடந்து கொண்டதில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் - 90 க்கு பின் ஒரு நிழல் அரசாக மாறிய பின் அவர்களை அணிசாரா நிலைக்கு இட்டு சென்றது.

வரலாற்றில் இருந்து பாடம் படித்து தமது கொள்கையை புலிகள் செம்மை செய்தமைக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

29 minutes ago, Nathamuni said:

தமிழகத்து அரசியலை..... நமது அரசியலுடன் குழப்பாமல்..... ரசியுங்கள், விமர்சியுங்கள்... அங்குள்ள அரசியலுக்குள் விரும்பியவர்களுக்கு ஆதரவு கருத்து கொடுங்கள். தப்பில்லை.

இதில் ஒரு தப்பும் இல்லை. ஆனால் அங்கே ஒரு கட்சியை விமர்சிக்கும் போது “எமக்கு துரோகம் செய்தாய்” அல்லது காசை விட்டெறிந்து எமது அரசியலை முன்னிறுத்தி அவர்களை விமர்சிகாதீர்கள்.

தமிழ் நாட்டு கொள்கைகளை வைத்து நீங்கள் யாருக்கு ஆதரவு, எதிர்ப்பு காட்டினாலும் அது உங்களுடன் முடிந்து விடும்:

ஆனால் எமது பிரசானையை மையப்படுதினால் - அது ஒட்டு மொத்த ஈழத்தமிழர் மீதும் பகைமையை உருவாக்கும்.

3 minutes ago, Kandiah57 said:

அப்படி டீல் பண்ணினால். நாங்கள் விரும்பும் தீர்வு கிடையாது தமிழ்நாடு மாநிலத்தை விட குறைந்த அதிகாரம் உள்ள தீர்வு தான் கிடைக்கும்  அப்படி கிடைக்கும் தீர்வை இலங்கையில் அடுத்து வரும் அரசு இல்லாமல் செய்யலாம்   இந்தியா பல மொழி பல மாநிலங்கள் கொண்ட நாடு அவர்களின் மாநில சுயாட்சி முறை சமச்சீராக்கூடியது   இரண்டு மொழி இரண்டு மாநிலத்துக்கு ஒத்துவராதவை   எங்களுக்கு தேவை பலமிக்க அதிகாரமுள்ள. மாநில சுயாட்சி அதற்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது.எனவே இந்தியா இலங்கை டீல் சரியில்லை   மாறாக இலங்கைக்குள் சிங்களம் தமிழ் டீல் தான் சரியானது    தேவையெனின் கிழங்கு. மாகாணத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து  வடக்கு மாகாணத்தைப் பூரணமாக பெற முயற்க்கவேண்டும். யாழ்ப்பாணத்தில். கடலை நிரப்பி  நிலத்தைப்பெறலாம்   காலம் கடத்தினால். எதுவுமே கிடையாது  இது எனது கருத்து மட்டும் நாங்கள் அடிபடவேண்டியதில்லை உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி கோஷன்.  

நன்றி அண்ணை. 

உப்பிடி ஒரு டீலுக்கு சிங்களவன் ரெடி எண்டால் இந்தியனோட மினெக்கெடுவம் எண்டு சொல்ல எனக்கு என்ன விசரே அண்ணை.

சிங்களவன் தனியாக, தானாக ஒண்டும் தரமாட்டான்.

அடிச்சுத்தான் பறிக்க முடியும். அது இப்போ முடியாது.

ஆகவே அடுத்த தெரிவு வெளி அளுத்தம்.

அதுக்கு இந்தியாவை மிஞ்சி வர யாரும் தயாரில்லை. சீனா வரவே இல்லை.

இப்ப சொல்லுங்கோ உங்கட இந்த மேலே சொன்ன டீலை எப்படி சிங்களவனிட்ட இருந்து எடுக்க போறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கிழங்கு. மாகாணத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து  வடக்கு மாகாணத்தைப் பூரணமாக பெற முயற்க்கவேண்டும்.

புத்திய காட்டிப்போட்டமே அண்ணை.

ஏன் வடக்கை வீட்டு கொடுத்துவிட்டு கிழக்கை பெறலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இதை ஒரு தன்மையாக திருமாவிடம் எடுத்து சொல்ல முடியாதா?

கண்டிப்பாக தன்மையாகத் தான் எடுத்துக் கூற வேண்டும்  அதே சமயம்  தமிழ்நாடு வலுவுள்ள அதிகாரமிக்க மாநிலமாக போராடுவராயின்   இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி பெற போராடியதிற்க்கு. ஈடாகும். அல்லது சமனாககும் இதையும் எடுத்துக் கூறவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

கண்டிப்பாக தன்மையாகத் தான் எடுத்துக் கூற வேண்டும்  அதே சமயம்  தமிழ்நாடு வலுவுள்ள அதிகாரமிக்க மாநிலமாக போராடுவராயின்   இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி பெற போராடியதிற்க்கு. ஈடாகும். அல்லது சமனாககும் இதையும் எடுத்துக் கூறவேண்டும்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிலே எளிமையானவர்களில் ஒருவர் திருமா - நிச்சயம் கட்சி ஆபீஸ் போயோ அல்லது வெளிநாடு வரும் போதோ ஒரு சாதாரண ஈழத்தமிழன் கூட அவரை அணுகி இதை எடுத்து சொல்ல முடியும்.

அப்படி செய்யாமல் இப்படி மானபங்கபடுத்துவது சொந்த செலவில் சூனியம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

புத்திய காட்டிப்போட்டமே அண்ணை.

ஏன் வடக்கை வீட்டு கொடுத்துவிட்டு கிழக்கை பெறலாமே?

எப்படியோ ஒரு தீர்வு வந்தால் சரி எந்த இடம் வேண்டும் என்பது பற்றியது இல்லை எனது கருத்து மாறாக ஒரு உறுதிமிக்க அதிகாரமுள்ள தீர்வு வேண்டும் என்பது பற்றியே நிலம் கடலை நிரப்பியும் பெற முடியும்  கொழும்பில் சீனா பெறவில்லையா. ?

23 minutes ago, goshan_che said:

இப்ப சொல்லுங்கோ உங்கட இந்த மேலே சொன்ன டீலை எப்படி சிங்களவனிட்ட இருந்து எடுக்க போறியள்?

கஸ்டம்  தான் 

24 minutes ago, goshan_che said:

அதுக்கு இந்தியாவை மிஞ்சி வர யாரும் தயாரில்லை. சீனா வரவே இல்லை.

இந்தியா ஒத்துக்கொண்டான் என்றால் இலங்கை தீர்வை தருமா.? இலங்கையும்  ஒத்துக்கொள்ளவேண்டுமில்லையா. ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

எப்படியோ ஒரு தீர்வு வந்தால் சரி எந்த இடம் வேண்டும் என்பது பற்றியது இல்லை எனது கருத்து மாறாக ஒரு உறுதிமிக்க அதிகாரமுள்ள தீர்வு வேண்டும் என்பது பற்றியே நிலம் கடலை நிரப்பியும் பெற முடியும்  கொழும்பில் சீனா பெறவில்லையா. ?

நீங்கள் அப்படி பட்ட சிந்தனை ஓட்டம் உடையவர் இல்லை என்பது விளங்குதண்ணை. அது எம்மை ஒட்டு மொத்தமாக குறித்து சொன்னது. தனியே உங்களை அல்ல.

ஆனால் இப்படி ஒரு பொறியை பிரேமதாச தலைவருக்கு வைத்தது நீங்கள் அறிந்ததுதானே?

தனியே நிலம் இல்லை அண்ணை. மண். எமது பண்பாட்டு வாழிடம். எல்லாருக்கும் அவரவர் ஊர் அப்படித்தான். ஆகவே ஒன்றை விடுத்து இன்னொன்றை பெறுவது கடினமானது. 

எப்படியோ…உங்களுக்கு வெறும் கடலை தரக்கூட அவர்கள் தயாரில்லை.

10 minutes ago, Kandiah57 said:

கஸ்டம்  தான் 

கஸ்டம் இல்லை அண்ணை. Impossible அடைய முடியாதது.

வெளி அளுத்தம் இல்லாமல் இலங்கையிடம் நியாயமான தீர்வை பெறுவதிலும் பார்க்க, சந்திரனில் ஒரு தமிழர் குடியிருப்பை அமைப்பது இலகுவானது: 

12 minutes ago, Kandiah57 said:

இந்தியா ஒத்துக்கொண்டான் என்றால் இலங்கை தீர்வை தருமா.? இலங்கையும்  ஒத்துக்கொள்ளவேண்டுமில்லையா. ?

நிச்சயமாக எமக்கு (ஒன்றுபட்ட இலங்கைக்குள்) ஒரு தீர்வு வர எனது அறிவுக்கு எட்டி ஒரே வழிதான்.

அமெரிக்கா, இந்தியா, மேற்கு நாடுகள் அளுத்தத்தில் இலங்கை ஒரு தீர்வை தர தள்ளப்படுதல்.

இது நடக்கும் என சொல்லவில்லை. ஆனால் இது ஒன்றுதான் இருக்கும் முடியுமான தெரிவு (feasible option).

சீனாவை வந்தால் இழுத்து பார்க்கலாம் -ஆனால் அப்படி எந்த சமிக்ஞையும் இல்லை. எமது ஆட்களும் முயற்சிப்பதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Kandiah57 said:

தேவையெனின் கிழங்கு. மாகாணத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து  வடக்கு மாகாணத்தைப் பூரணமாக பெற முயற்க்கவேண்டும். யாழ்ப்பாணத்தில். கடலை நிரப்பி  நிலத்தைப்பெறலாம்   காலம் கடத்தினால். எதுவுமே கிடையாது  இது எனது கருத்து மட்டும் நாங்கள் அடிபடவேண்டியதில்லை.

ஐயனே, இனிமேல் இதுபோன்று சும்மா பேச்சுக்குக் கூட மொழிவதை தவிர்க்குமாறு தங்களிடம் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்.🙏🙏🙏😢

இதை வாசிக்கும்போது எனக்கு மனம் நொந்தது, அப்படித்தான் இதை வாசிக்கும் தென் தமிழீழ மக்களுக்கும் இருந்திருக்கும்.

இது உண்மையிலேயே எங்கட இனத்தை இரண்டாக பிரிக்கும். அவ்வாறு நடந்தால் தென் தமிழீழ தமிழரும் வட தமிழீழ தமிழரும் அடுத்த பன்னூறு ஆண்டுகளுக்கு பரம வைரிகளாக இருந்திருப்போம். மட்டுமல்லாது சிங்களம் தென் தமிழீழத்தை முற்றாக விழுங்குவதோடு (சில வேளை அங்குவாழும் தமிழர்கள் தாங்களாக விரும்பியே சிங்கள அ சோனியாக மாறிடுவர்) அவர்களை வைத்தே வட தமிழீழம் மீதும் படையெடுத்திருப்பான் (மிச்சத்திற்கு சோனிகள் வேறு, கேட்கவா வேண்டும்.இதான் வாய்ப்பெண்டு மொத்தமா விழுங்கிடுவாங்கள் 😢 ).

பேந்து நாங்கள் எல்லாரும் பின்னங்கால் பிடரியிலபட மரத்தாந்தான் ஓட வேணும்.  

காலம் முழுதும் பழி சுமப்பவர்களாக வாழ நேரிடும். வரலாற்றுப்பிழை செய்தோராக வரலாற்றில் எழுதப்படுவோம்.

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, இனிமேல் இதுபோன்று சும்மா பேச்சுக்குக் கூட மொழிவதை தவிர்க்குமாறு தங்களிடம் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்.🙏🙏

மன்னிக்கவும் தவிர்த்து கொளகிறேன்.  நடைமுறையில் தமிழ்பகுதிகள். முஸ்லிம் பகுதிகளாகவும். மன்னாரில்  அதிகமான தமிழ்பெண்கள். முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்து முஸ்லிமாக மாறியுள்ளது உங்களுக்கு தெரியுமா ? இன்னும் 50 ஆண்டுகளில் நிலமை என்ன மாதிரி இருக்கும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.