Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஒன்று கூடல்கள்.. தனித்துவமாகுமா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன.

யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது.

உல்லாசப் பயணம் போற வழியிலும் சந்திப்பு.. தனிநபர்களின் பிரத்தியேகக் கொண்டாட்டங்களிலும் சந்திப்பு.. வீதில சந்திப்பு.. கோயிலில சந்திப்பு இப்படி என்று சந்திப்புக்கள்.. சந்திக்கிறது என்ற குறுகிய எல்லைக்குள்ள நிகழ்வுப் போக்கற்று, இலக்கற்று செல்கின்றன.. நீள்கின்றன.

வருங்காலத்தில் ஒரு இலக்கைத் தீர்மானித்து வளமான நோக்கங்களோடு சில சந்திப்புக்களை என்றாலும் நடத்தலாமே..! <_<

உதாரணத்துக்கு யாழ் களம் தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் களம் என்பதற்கும் மேலாக பல துறைகளிலும் படித்த படிக்கும் உறுப்பினர்களைக் கொண்டது. அந்த வகையில் யாழின் உருவாக்கம் தொடக்கம் அதன் வரலாற்றுச் சாதனைகள் எதிர்கால திட்டங்கள் என்று மக்களூக்கு செய்திகளை காவிச் செல்லும் வகையில் கண்காட்சிகளை ஒழுங்கு செய்து அக் கண்காட்சிகளை யாழ் கள உறவுகளைக் கொண்டே நடத்துவதன் மூலம் சந்திப்புக்களும் நிகழும் காத்திரமான பங்களிப்புகளும் நிகழ வழிகாட்டி நிற்கலாமே..!

கண்காட்சிகளை ஒழுங்கு செய்ய பொது தொண்டர் நிறுவனங்களை அணுகலாம் அல்லது வெண்புறா போன்ற நிறுவன உதவிகளை நாடி கண்காட்சியின் மூலம் பெறப்படும் சிறுதொகை நிதிப்பங்களிப்பை அவ்வகை நிறுவனங்களுக்கு வழங்கலாம்..!

கண்காட்சியில்.. ( for example)

1. யாழ் இணையத்தின் வரலாறு..

2. தமிழீழ போராட்ட நியாயங்கள் அதன வரலாற்றுத் தேவை.. பின்னணிகள்..!

3. துறைசார் கண்டுபிடிப்புக்கள் அல்லது நவீன தொழில்நுட்ப பாவனைகளின் உச்சப் பயன்களின் வழிகாட்டல்கள்.

4. வெண்புறா மற்றும் சூழலில் பாதுகாப்பு பொதுஸ்தாபனங்கள்..சமூக ஸ்தாபனங்களுக்காக போஸ்ரர்கள்.. பிறசன்ரேசன்கள்.. என்று உருவாக்கிக் காண்ப்பிக்கலாம்.. அவற்றை மென்பொருள் வடிவில் தயாரித்து அல்லது சிடிகளில் தரமான வடிவங்களில் எழுதி குறித்த ஒரு விலைக்கு விற்பதன் மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபடலாம்.

5. ஆளாளுக்கு ஒரு இணையத்தை நடத்துவதிலும் வெண்புறா போன்ற ஸ்தாபனங்களின் பெயரால் அவர்களின் அனுமதியோடு ஒரு இணையத்தை நிறுவி அதன மூலம் போஸ்ரர்கள் மற்றும் விளம்பரங்கள், நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகள் போன்ற விடயங்களை செய்ய உதவலாம்..!

அண்மையில் வெண்புறா அமைப்பினரை சந்திக்கக் கிடைத்த போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் நெஞ்சை உலுக்குவனவாக இருந்தன. இளைய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்காட்சிகளை ஒழுங்கு செய்ய வேண்டுவதுடன் அவர்களின் ஈடுபாட்டுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்..!

6. யாழ் கள உறுப்பினர்களை உள்ளடக்கிய கண்காட்சி குழு அமைக்கப்படும் போது அதில் தலைவர் செயலாளர் என்ற பிரிவினைகள் இன்றி பங்களிப்புக்களின் தன்மைக்கு ஏற்ப முகாமைத்துவ பங்களிப்பு வழங்கப்பட வேண்டும். அதில் கல்வி வயது நாடு பால் என்ற எந்தப் பாகுபாடுகளும் இருக்கக் கூடாது..!

7. கள உறுப்பினர்களின் சொந்த ஆக்கங்கள் மற்றும் வெளியீடுகள் கண்காட்சிக் களத்தில் வைக்கப்படலாம்.

8. எல்லோரும் ஓர் இயக்கமாக யாழ் இணையத்தின் பெயரால் இயங்க வேண்டும்..!

இப்படி பல நிகழ்ச்சித் திட்டங்களை தீட்ட முடியும்..! உருப்படியா செய்ய கள உறவுகள் முனைக்கின்ற போது.

ஆனால் இந்தளவுக்கு சந்திப்புக்களுக்கு அர்த்தம் புகட்ட எத்தனை பேர் முன்வருவார்கள்....??????! யாழ் நிர்வாகிகள் என்று சொல்வோர் கூட தனிப்பட்ட விஜங்களை யாழின் பெயரால் சந்திப்புக்குப் பாவிப்பது யாழ் ஒரு பொது இணையமாகச் செயற்படுகிறது என்ற சிந்தனைக்கு வெளியில் அதை வைக்கச் செய்கிறது..! சிந்திப்பார்களாக..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான் இதனை நிங்களே முன்நின்று ஒரு கட்டமைப்பை உருவாக்கலாமே அதற்கான நீங்கள் சொன்னது போல வெண்புறா அமைப்பு மற்றும்வேறு அமைப்பக்களின் உதவிகள் வேண்டுமானால் பெற்றுத்தர உதவுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நண்பரே!

தாரளமாக இக்களத்தின் உறுப்பினர் என்ற வகையில் தாங்களே இதற்கு முன்னோடியாக இருந்து செயற்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன். உங்களின் வழிகாட்டல் மூலம், அடுத்த ஒன்றுகூடலில் இவ்வாறன செயற்திட்டத்தைச் செயற்படுத்த அனைவரையும் அணிதிரள வழி செய்வோம்.

யாழ்கள நிர்வாகியாகட்டும், உறுப்பினர்கள் ஆகட்டும் தனிப்பட்ட தேவைகளுக்காக பிரயாணம் செய்கின்றபோது, இப்படியான செயற்திட்டங்களை அமிழ்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. அது கணனிக்கு முன்னால் இருந்து தட்டுவது போல் இல்லை என்பதே என் கருத்து. இப்பணிகள் குறித்தான எண்ணங்கள் சிறப்பாக இருந்தாலும், அதற்கு முன்வருவதற்கு கருத்தோட்டம் செய்கின்ற எத்தனை பேர்கள் தயாராக இருப்பார்கள்.

உங்களின் சிந்தனைக்கு றநீங்களே வழிகாட்டியாக இருந்து செயற்படுத்த வேண்டும் என்று என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

ஒன்றுகூடலைப் பற்றிக் கதைத்து, நண்பர் குருவிகளின் நினைவை மீள ஞாபகப்படுத்தி எம்மைத் துன்பக்கடலில் வீழ்த்தி விட்டீர்கள். இந்த ஒன்றுகூடல் பற்றிய விமர்சனமும் அவர் பாணியில் அமைந்ததால், கண்ணீர் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான் இதனை நிங்களே முன்நின்று ஒரு கட்டமைப்பை உருவாக்கலாமே அதற்கான நீங்கள் சொன்னது போல வெண்புறா அமைப்பு மற்றும்வேறு அமைப்பக்களின் உதவிகள் வேண்டுமானால் பெற்றுத்தர உதவுகிறேன்

உருப்படியாக ஒரு சாத்திரம் பாருங்கோ என்றால் பிழை பிழையாகப் பார்ப்பீர்கள். ஆனால், நான் என்ன எழுதுகின்றேன் என்பதைக் கண்டுபிடிச்சு, பந்தியாக எழுதி முடிக்கு முன்பு, ஒற்றை வரியில் சாத்திரம் பார்த்துக் கொப்பி பண்ணிப் போடுங்கோ!... B)

சரியில்லாத வேலை! :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடந்த சில நாட்களாக நடந்த விடயங்களை வைத்து நோக்குகின்ற போது சில விடயங்கள் மீள் பார்வைக்கு உட்பட வேண்டி உள்ளது என்பதை உணர்த்தின.

பொதுக்களம் ஒன்றி பெயரால் நாம் எல்லோரும் இணைந்துள்ள போது அதன் நோக்கம் வேண்டித்தான் எமது செயற்பாடுகள் அமையவே வேண்டும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். அப்படி வேறு பலரும் இருக்கலாம்.

யாழில் உள்ளார் என்பதற்காக தனிப்பட்ட நபர்களின் நோக்கங்களுக்காக யாழ் ஒன்று கூடல்களைப் பாவிப்பதால் எழுந்த பிரச்சனைகளை கண்ணால் பார்த்தோம்..! அவற்றை விடுத்து ஒன்று கூடல்களில் கூட ஒரு உயரிய பங்களிப்பைப் யாழின் இலக்கோடு வழங்க முடியும் என்ற சிந்தனை வெளிப்பாடகாவே இதைத் தந்தோம்.

நிச்சயமாக இப்படியான ஒரு சந்திப்புக்கு யாழ் இணையம் முன்வருமானால் நமது பங்களிப்பை தர நாம் தயாராகவே உள்ளோம். பல நிறுவனங்களின் பங்களிப்பைக் கூட எம்மால் பெற்றுத்தர முடியும். ஆனால் அதற்கு காத்திரமான வகைக்குள் எமது நிகழ்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும். அதற்கு நீடித்த பங்களிப்பும் சலிப்பற்ற முன்வருதலும் அவசியம். போன் நம்பர் வாங்கவும் எம் எஸ் என் ஐடி வாங்கவும் யாழில் உள்ளவங்க பற்றி கற்பனைகளை அவிழ்க்கவும் தான் ஒன்று கூடலும் கண்காட்சியும் என்றால்.. அதற்கு நாம் தயாரில்லை..! அதை எவர் யாழ் என்ற பொதுக்களத்தில் உறுப்பினர்களை உள்வாங்கிக் கொண்டு செய்தாலும் ஏற்கவும் முடியாது..!

யாழ் நகரிலும் கொழும்பிலும் சில கண்காட்சிகளில் பங்காளியானவன் என்ற வகையில் எம்மாலும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்..என்ற நம்பிக்கை எமக்குண்டு. இப்படியான பொதுப்பணிக்காக நாம் யாழின் பெயரால் எவரையும் சந்திக்க தயங்கப் போவதும் இல்லை..!

சாத்திரி மற்றும் தூயவன் உங்களின் முன் வருகையைப் பாராட்டுறம். இப்படி எல்லோரும் முன் வர வேண்டும். யாழ் நிர்வாகமும் வெளிப்படையாக இது தொடர்பில் கருத்துரைக்க வேண்டும். இது இரண்டு வாரத்தில் செய்யத் சாத்தியப்படாது. தயாரிப்புக்களை இவ்வாண்டில் தொடங்கில் அடுத்த கறுப்பு யூலையில் நிச்சயம் ஒரு கண்காட்சியை வழங்க முடியும். கறுப்பு யூலையின் 25 தாவது வருட நினைவு கூறலாகவும் அது மக்களை ஈர்க்கவும்.. துன்பங்களை பகிர்ந்துக்க உதவுவதோடு.. அறிவியல் மற்றும் இதர செய்தி வழங்கலையும் செய்யும். இளையோரின் பங்களிப்பை தானாக ஈட்டித் தரவும் உதவலாம்.

இவர் அவர் வரணும் என்று காத்திருக்காம ஒவ்வொருவரும் நான் முன் வந்து செய்கிறேன் என்ற நிலைக்கு வரணும்...! அப்பதான் ஒன்றுகூடலால் நிகழுப் போகும் ஒரு காத்திரமான நிகழ்வை செய்ய முடியும்..! நெடுக்காலபோவன் மட்டும் முன்வந்தாப் போல உது நடக்கிறதென்றால்.. நெடுக்காலபோவன் வேற வழியில் முன்வருவோரோடு சேர்ந்து வேறொரு வழியில் பங்களிப்பை நல்குவார். ஆக நெடுக்காலபோவன் வரனும் என்பதிலும். நெடுக்காலபோவனுக்கு முதல் நான் இணைவேன் காத்திரமான பங்களிப்பை உறுதியோடு வழங்குவேன் என்று எல்லோரும் முன்வரனும்..! யாரும் யாருக்கும் தலைமை தாங்கனும் என்றில்லை. காரணம்.. இது பொதுப்பணி உங்கள் சமூகத்துக்கான பணி..!ஒவ்வொருவரும் தன் பங்களிப்புக்கு தானே தலைவரும் செயலாளியுமாவார்.. பொறுப்பாளியுமாவார்..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுங்கால போவன்.

உங்களின் உயரிய சிந்தனை என்பது எல்லோர் மனதிலும் வரவேண்டுமானால், அதற்குத் தலைமை தாங்க அக் கொள்கை கொண்டவன் முன்னுக்கு வந்தால் தான், உண்டு.

தலைவரின் சிந்தனையைப் பிரதிபலிக்கத் தலைவரால் தான் முடியும். அதை ன்னிருந்தவர்களோ, அல்லது கூட இருந்தவர்களோ தெளிவாக்க கொண்டு சென்றிருக்க முடியாது. அவ்வாறு தான் உங்களின் இச் சிந்தனைக்குத் தலைமை தாங்க உங்களை வாழ்த்துகின்றேன்.

மீண்டும் ஒரு யாழ்கள ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்த நிச்சயம் முடியும். அது உங்களின் திட்டமிடல் கூட அமைந்ததாக இருக்கட்டும். அடுத்த வருடத்திற்கான திட்டமிடலை ஏன் நீங்கள் இன்றே ஆரம்பிக்கக் கூடாது.

இளையோர் சமுதாயம் போல, யாழ்கள உறவுகளாலும் சாதித்திட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைகள் வெளியிடுபவனே செயலுக்கும் தலைமை தாங்கனும் என்பதை ஏற்க முடியல்ல.

இங்கு தலைமை தேவையில்லை என்பது எமது பார்வை. தலைமை ஒன்றை உருவாக்க முனைந்தால் அங்கு விருப்பு வெறுப்புகள் தோன்றும். அது காத்திரமான மற்றும் திறந்த மனப்பான்மையுடனான பங்களிப்புக்கு வாய்ப்பளிக்காமல் போகும்.

அதனால் யாழ் இணைய இயக்கம் என்பதற்கு ஒரு தலைமை என்பதிலும் அது பொதுத்தலைமை என்ற வகைக்குள் உறுப்பினர்களை எல்லோரையும் அவரவர் ஏற்கும் பங்களிப்புக்கு ஏற்ப தலைமை ஏற்க வைப்பதும் ஏனையவர்கள் அவர்களின் பிரதான பங்களிப்புக்கு மேலதிகமாக அடுத்தவரின் பங்களிப்பில் பங்கேற்பதும் அவசியமாகும்.

செல்வாக்குச் செலுத்துதல் என்ற நிலைக்கு அப்பால் ஒவ்வொருவரின் திறமையும் அவரவர் விரும்பும் வடிவில் வெளிவரணும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ஒவ்வொருவரும் தனது பங்களிப்புக்கு தானே தலைமை ஏற்கும் போது அனைத்து முகாமைத்துவப் பண்புகளையும் அவரே தீர்மானிப்பவராவார்.திட்டமிட?் தொடங்கி செயற்படுத்தல் வரை...! ஏனையவர்கள் அவர்களின் தலைமைப் பங்களிப்புக்கு மேலாக அடுத்தவரின் பங்களிப்பில் ஈடுபாட்டுடனான பங்காளியாகும் போது நட்புறவும் கூட்டுச் செயற்பாடும் என்பது செல்வாக்குச் செலுத்துதலுக்கு அப்பால் வெளிப்படும். அது திறமைகளை மறைக்காமல் ஒடுக்காமல் வெளிப்படுத்த உதவும்..!

இந்த வகை முகாமைத்துவ ரீதியில் அமைந்த முயற்சி வெற்றி அளிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு என்பதால்.. தலைமை தேவையில்லை. ஆனால் ஓர் இயக்கமாக எங்கள் கூட்டு நிலை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒருங்கிணைப்புக்களை செய்ய முடியும். ஆலோசனைகள் வெளியில் இருந்தும் பெறப்படலாம்..! அவை பங்களிப்புக்களில் செல்வாக்குச் செய்ய வேண்டும் என்பதிலும் பரிந்துரைகளாக பங்காளிகளுக்கு வழங்கப்படும் போது.. செயற்திட்டத்தில் ஒவ்வொருவரின் ஈடுபாட்டின் அவசியம் உணரப்படவும் திறமைகள் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப சீரிய வடிவில் வெளிப்படவும் வகை செய்யும்..!

சுதந்திரமான செயற்பாடு, கூட்டுத் தலைமை மற்றும் அர்ப்பணிப்புள்ள பங்களிப்பின் மூலம்.. பாகுபாடற்ற சூழலில் திறமைகளை வெளிப்படுதல் என்ற தத்துவார்த்தம் அறிமுகத்தின் கீழ் இது அமைய வேண்டும். ஒவ்வொருவரும் சம பங்காளி என்ற நிலையை நிறுவுதன் மூலம் யாரும் புறக்கணிப்படாத நிலையைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்த விருப்புகின்றோம். இதற்கு கட்டுப்பட நாம் தயார்..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமிக்கு வணக்கம்!யாரை நம்பி இந்ததலைப்பை தொடங்கினீர்கள்?அதுவும் தற்போது ஒருசில கருத்தாடல்கள் செய்பவர்களை எதிர்பார்த்தா?அவர்கள் எல்லோரும் பொழுது போக்கிற்காக தத்துவம் பேசுபவர்களாச்சே!இங்கு எத்தனை உறுப்பினர்கள் நிஜமாக,நிஜமான கருத்துக்களை முன் வைக்கின்றனர்.நீங்கள் தொடங்கிய தலைப்பின் கீழ் இதுவரை எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன?என்னமோ போங்கப்பா நான் நினைக்கிறன் எங்களுக்கிருக்கிற தலைமையும் அதுக்குப்பின்னாலை இருக்கிற வாலுகளும் காணுமெண்டு என்ன கோதாரிக்கு புதிசாய் சோசல் சேவீஸ் ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமிக்கு வணக்கம்!யாரை நம்பி இந்ததலைப்பை தொடங்கினீர்கள்?அதுவும் தற்போது ஒருசில கருத்தாடல்கள் செய்பவர்களை எதிர்பார்த்தா?அவர்கள் எல்லோரும் பொழுது போக்கிற்காக தத்துவம் பேசுபவர்களாச்சே!இங்கு எத்தனை உறுப்பினர்கள் நிஜமாக,நிஜமான கருத்துக்களை முன் வைக்கின்றனர்.நீங்கள் தொடங்கிய தலைப்பின் கீழ் இதுவரை எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன?என்னமோ போங்கப்பா நான் நினைக்கிறன் எங்களுக்கிருக்கிற தலைமையும் அதுக்குப்பின்னாலை இருக்கிற வாலுகளும் காணுமெண்டு என்ன கோதாரிக்கு புதிசாய் சோசல் சேவீஸ் ;)

இப்படி ஒரு தலைப்பை போட்டதாலதான் இங்குள்ளவர்களின் செயற்பாட்டு நோக்கங்களத் தெரியக்கூடியதா இருக்குது. களத்திலேயே இப்படின்னா.. ஒன்று கூடினாக் கூட சாத்தியமாகக் கூடியது.. வெறும் அறிமுகங்களும் உரையாடல்கள் மட்டுமே. அதற்கொரு சந்திப்பு யாழின் பெயரால்..ம்ம்ம்ம்ம்ம்... காலம்..! :o:(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ்.....இது ஒரு நல்ல சிந்தனை...இறங்குங்கள் செயலில் எம்மால் இயன்ற உதவிகளை இணைந்து செய்ய தயாராகவுள்ளோம்....

நல்ல விடயத்தில் இணைய பலர் முன்வருவார்கள்...நான் தயார் நீங்கள் தயாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன்.. நீங்கள் மட்டுமே பூரண ஒத்துழைப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ளீர்கள்.

சாத்திரியார்.. தொடர்பாடலை ஏற்படுத்த உதவுதல் என்ற அளவோடு.. சரி.

தூயவன்.. யாழின் வழமையான வாழ்த்துப்பாவுடன்.. தெளிவற்ற நிலையில் எஸ்கேப்.

சப்போஸ்.. இதே இடத்தில்.. லண்டன் தெருவோர தமிழ் உணவகம் ஒன்றில் யாழ் கள ஆண்களும் பெண்களும் கூடி அறிமுகமாவம் என்றிருந்தால்.. சிலவேளை கூட்டம் நிறைய இருந்திருக்கலாம்..! அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை.. என்றிருந்தால்... இன்னும் வசதியா இருந்திருக்கும்..! இதுக்கெல்லாம்.. யாழ்...????! :o:lol:

நெடுக்ஸ் தாத்தா இதை இன்று தான் பார்வையிட்டேன்...............நல்லதொர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் தாத்தா இதை இன்று தான் பார்வையிட்டேன்...............நல்லதொர

Edited by nedukkalapoovan

தாத்தா நீங்க கூறுவது எல்லாம் மிகவும் சரியாக இருகிறது.............நான் தயார் நீங்க சொல்வது போல செய்ய ஆனா இந்த பகுதியில கருத்து எழுதினதே 5 பேர் தான் அதில எத்தனை பேர் முன் வாறீனம் என்று தெரியாது.............அப்படி இருக்கும் போது நானும்,நீங்களும் மட்டுமா கண்காட்சியை நடத்துவது தாத்தா.............எல்லாரும் ஒன்று கூடினால் நிச்சயமாக நீங்கள் கூறிய மாதிரி சிறப்பாக நடத்த என்னால் முடிந்தவற்றை நிச்சயம் செய்கிறேன்.............. :lol:

நெடுக்காலபோவான்,

நல்ல யோசனை. யாழ் இணையத்தின் 10ஆவது அகவைக்குள்ளான உள்நுழைவையொட்டி சில ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய எண்ணியுள்ளோம். அவற்றில் ஒன்றுகூடலும் ஒன்றாக அமைந்துள்ளது. "தமிழும் இணையமும்" என்ற கருப்பொருளில் அந்த ஒன்றுகூடலை நடத்துவதற்கு ஆராய்ந்து வருகிறோம். யாழ் இணைய உறுப்பினர்களையும் தாண்டி "தமிழ் மக்கள் - குறிப்பாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஏனைய ஊடகத்துறை சார்ந்தோர், இளைஞர்கள்" என அனைவரையும் உள்வாங்கி நடாத்தவே எண்ணியுள்ளோம். நீங்கள் சொன்ன கருத்துக்களையும் கவனத்தில் எடுக்கிறோம். இவை தொடர்பான திட்டமிடல் பற்றி விரைவில் அறிவிப்புத் தரப்படும். அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன்

மற்றும், யாழ் இணையம் சார்பான "உத்தியோகபூர்வ" சந்திப்புகள் எவையும் இதுவரை நடைபெறவில்லை. யாழ் கள உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்போதே சந்தித்துக்கொள்கிறார்கள். நட்புரீதியான சாதரண சந்திப்புக்களாகவே அவை நடைபெறுகின்றன. சந்திப்பைவிட அதற்கான திட்டமிடல் என்பது மிகப்பெரிய வேலை. சந்தர்ப்பங்கள் அமையும் வேளைகளில் யாழ் உறவுகள் சந்தித்துக்கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விடயம்.

நன்றி

தாயக அவலங்களை வெளிப்படுத்துவதற்கு இம்முயற்சி நடக்குமேயானால் என்னால் முழுமையான பங்களிப்பைத் தரமுடியும். ஆனால் களத்திற்குப் புதிதென்றபடியாலும், களஉறுப்பினர்களோடு தொடர்பில்லாததாலும் என்னை நம்பி வேலைகள் தரத்தயங்குவீர்களோ தெரியாது. ஆனால் தாயக சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயத்திற்கும் நான் முன்னின்று செய்வேன். நான் பொழுதுபோக்கிற்காக யாழ் வருவதில்லை. தாயகம் சம்பந்தமான விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்.

ஒரு சிலராக இருந்தாலும் இதனை தொடர்ந்து செய்யுங்கள். எல்லோரும் வரவேண்டும் எனக் காத்திருந்தால் ஒன்றுமே செய்யமுடியாது. காலப்போக்கில் சிலர் சேருவார்கள். விலகி நிற்பவர்கள் விலகியே போய்விடுவார்கள். சிறிய அளவிலாவது உங்களால் முடிந்தளவு சிறப்பாகச் செய்தீர்களானால் அதுவே உங்களது வெற்றியாகும். தொடங்கும்போதே பெரிதாகத்தான் தொடங்கவேண்டும் என நினைத்தால் எதையுமே செய்யமுடியாது. இம்முயற்சியை சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்தனைகள் வெளியிடுபவனே செயலுக்கும் தலைமை தாங்கனும் என்பதை ஏற்க முடியல்ல. <<<

தூயவன் சொல்வது போல் நீங்கள் தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் நெடுக்ஸ் அண்ணே!..

செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத்தொடங்க வேண்டும்" என்பது எங்கள் தலைமையின் ஆணை" அப்படியானால் அந்த செயல் திட்டத்தை மட்டும் போட்டால் போதாது அதை முன் நின்று நீங்கள் நடத்தியாக வேண்டும். அப்போதுதான் அதன் பின் மற்றவர்களும் அந்த வழியில் இணைவார்கள்.

இது என் தாழ்மையான வேண்டுகோள்!.

>>>இங்கு தலைமை தேவையில்லை என்பது எமது பார்வை. தலைமை ஒன்றை உருவாக்க முனைந்தால் அங்கு விருப்பு வெறுப்புகள் தோன்றும். அது காத்திரமான மற்றும் திறந்த மனப்பான்மையுடனான பங்களிப்புக்கு வாய்ப்பளிக்காமல் போகும்.

நிச்சயமாக இல்லை?! எதற்காகத் தாங்களாகவே ஒரு வட்டம் போட்டுக்கொள்கின்றீர்கள். யாழ்களத்தில் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்று யாரையும் என்னால் சொல்ல முடியாது. அனைவரும் தோள் தருவார்கள். ஆனால் தலைமைக்குரிய பக்குவம் இருந்தால் போதும். எந்தக் கேள்விகளுக்கும் உணர்ச்சிவசப்படாமல் பதில் கொடுக்கும் தன்மை. அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு நடத்திச் செல்லும் விதம் அவரவர்க்கு ஏற்ற பொறுப்பை பிரித்தல்'...இவைகள் இருந்தால் போதும்!.

சுதந்திரமான செயற்பாடு, கூட்டுத் தலைமை மற்றும் அர்ப்பணிப்புள்ள பங்களிப்பின் மூலம்.. பாகுபாடற்ற சூழலில் திறமைகளை வெளிப்படுதல் என்ற தத்துவார்த்தம் அறிமுகத்தின் கீழ் இது அமைய வேண்டும். ஒவ்வொருவரும் சம பங்காளி என்ற நிலையை நிறுவுதன் மூலம் யாரும் புறக்கணிப்படாத நிலையைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்த விருப்புகின்றோம். இதற்கு கட்டுப்பட நாம் தயார்..! :lol:

"நல்ல ஒரு பணியைத் தொடங்கும் போது அந்த எண்ணத்தை வெளிக்கொண்டுவந்தவர் அதன் பலனையும் ஓரளவு தீர்மானித்தே வைத்திருப்பார். ஒரு படத்துக்கு இயக்குனர் எந்தளவு பங்காற்றுகின்றாரோ அதைப்போல ஒரு கட்டமைப்புக்கும் ஒரு நல்ல தலைமை இருந்தாலே திட்டம் 'வெற்றி" அளிக்கும் " !..

சிந்தியுங்கள்! செயலாற்றுவோம்!.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்....இப்போது எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்?...இது ஒரு நல்ல வேலைத்திட்டம் ஒத்திப்போடக்கூடாது...இதனால் பலர் பயனடையவேண்டும்...முக்கியமாக தாயக மக்களை நோக்கியதாக எங்கள் சிந்தனை இருக்கவேண்டும்...மேலதிக வேலைத்திட்டங்களுக்கு தனிமடலில் தொடர்புகளை ஏற்படுத்துங்கள்...தீவிரமாக செயல்பட விரும்புகின்றவர்களின் தொலைபேசி இலக்கத்தையும் சேகரியுங்கள்...வெற்றி நிச்சியம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்....இப்போது எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்?...இது ஒரு நல்ல வேலைத்திட்டம் ஒத்திப்போடக்கூடாது...இதனால் பலர் பயனடையவேண்டும்...முக்கியமாக தாயக மக்களை நோக்கியதாக எங்கள் சிந்தனை இருக்கவேண்டும்...மேலதிக வேலைத்திட்டங்களுக்கு தனிமடலில் தொடர்புகளை ஏற்படுத்துங்கள்...தீவிரமாக செயல்பட விரும்புகின்றவர்களின் தொலைபேசி இலக்கத்தையும் சேகரியுங்கள்...வெற்றி நிச்சியம்...

இப்பவே ஆரம்பியுங்கள். பிறசன் ரேசன்... வீடியோ பதிவுகள்... புகைப்படங்கள்.. போஸ்ரர்கள்.. என்று ஆரம்ப கட்ட அம்சங்களை நீங்கள் கையில் எடுக்கப் போகும் விடயம் தொடர்பாக சேகரிக்க.. உருவாக்க ஆரம்பியுங்கள்.

ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்தமான அல்லது தகவல்களை விபரங்களை சேகரிக்க இலகுவாக அமையக் கூடிய விடயமாக தெரிவு செய்து இங்கு உங்கள் விருப்பங்களை உடனடியாக வெளியிடுங்கள். அதற்கேற்ப தேர்வுகளை மற்றவர்களும்.. பங்கிட்டுக் கொள்வார்கள். ஒருவர் இன்னொருவருக்கு உதவிகளும் ஆலோசனைகளும் விபர மற்றும் ஆதாரப் பகிர்வுகளையும் செய்யலாம்.

தலைமை பற்றி யோசிக்க முதல் நடைமுறைச் சாத்தியம் பற்றி முடிவெடுத்து ஒவ்வொருவரும் செயற்படும் போது கூட்டுத் தலைமையில் தலைவர்களாக மோகன் சாரையும் யாழ் (சுரதா) சாரையும் சோழியான் சாரையும் அஜீவன் சாரையும்.

கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறுப்பினர்கள் பிரேரிக்கும் இன்னும் சிலரையும் உள்ளடக்கலாம். இது எமது யோசனை மட்டும் தான்.

ஆண் பெண் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை. கூட்டுத்தலைமையில் ஆண்கள் மட்டுமே உள்ளார்கள் என்று பெண்கள் நினைக்க கூடாது. அனுபவமிக்கவர்கள் என்ற வகையில் தான் இந்தப் பிரேரணை. ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திட்டங்களும் முன்மொழியப்படலாம்.

தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் எல்லோரும் சமனாகத்தான் மதிப்படுவர்.. நடத்தப்படுவர். தலைவர்கள் ஆக்கங்களை மீள் மதிப்பிடுதல்.. தரமறிதல்... அவற்றிற்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்குதலை பிரதானமாகச் செய்ய முன்வர வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறையிலும் அனுபவம் மிக்கவர்களை கூட்டுத் தலைமைக்குள் பிரேரித்துள்ளோம். இதில் மாறுபட்ட கருத்துள்ளவர்கள் சுதந்திரமாக தங்கள் திட்டங்கள் அபிப்பிராயங்களை முன்வைக்கலாம். பொது முடிவின் கீழ்.. பிரதான முடிவுகளை எட்டும் வகையில் விரைவான கருத்துப்பரிமாற்றம் அவசியம்.

இதில் இன்னும் உண்மையாக அக்கறை வெளிப்படும் போது.. வேலைத்திட்டமொன்றை அமைப்பு ரீதியா ஆரம்பித்து ஒரு அமைப்புக்கான தற்காலிக யாப்புருவாக்கத்தின் கீழ் செயற்பாட்டு சுதந்திரம் வழங்கி..இலக்கைத் தீர்மானித்து செயற்பட அனுமதிக்கலாம். ஒவ்வொரு செயற்பாட்டாளரின் குறிக்கோளும் வேறுபடினும்.. பொது இலக்கை அடைய உதவக் கூடியதாக திட்டங்களும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்..!

உறுப்பினர்கள்.. தலைவர்கள்.. ஒருமித்த கருத்துருவாக்கத்துக்கு கருத்துப்பரிமாற்றம் வாயிலாக உடன்படக் கூடிய தீர்வுகளை அங்கீகரிக்கனும். தாமதித்தல்.. இடையில் வெளியேறுதல்.. குழப்பி அடித்தல்.. செல்வாக்குச் செய்ய முனைதல் பாரபட்சமாக நடத்துதல் அனைத்தும் பாரபட்சமின்றி தடை செய்யப்பட்டிருக்கும்..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்காட்சிகளை நட்த்தகின்ற போது தற்போது உள்ள நிலவரத்தில் அந்த அந்த நாடுகளின் சட்ட திட்டங்களையும் அறிந்து நடாத்துவது உத்தெசம் என்னுடைய ஒத்தழைப்பையும் தருகின்றென்..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கொஞ்சம் விபரமாக உங்க திட்டத்தை சொல்லுங்கோ...ஒருவாரம் இதைப்பற்றி பிரஸ்தாபிப்போம். நிகழ்ச்சி நிரலை தயார்படுத்துவோம்.

இறுதியாக அவரவர்கள் ஆர்வமுள்ள துறைக்கு பொறுப்புக்களை பகிர்வோம்...தலைமைப் பொறுப்பைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீங்களே..இடம், காலம்...செலவு, இப்படி எவ்வளவு பெரிய விடயங்கள் இருக்கல்லவா? ஆனால் ஒன்று ரொம்ப பிரமாதமாக நடத்தவேனும்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கு நான் தொடர்பாடல்களை ஏற்படுத்தி தருவதாக சொன்னதில் எவ்வித மாற்றமும் இல்லை அதே போல செயலில் இறங்காமல் எழுதி கொண்டிரப்பதிலும் விருப்பம் இல்லை எனவே உங்கள் திட்டம் அதற்கு உதவியாக எந்தெந்த தமிழர் உதவி நிறுவனங்களின் தொடர்புகளை மற்றும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ற உதவிகள் என்பனவற்றை விபரமாக ஒரு திட்டத்தை தயார் பண்ணி விட்டு எனக்கு தனி மடல் மூலமோ அல்லது தொ. பேசி மூலமோ தொர்பு கொண்டால் நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளை செய்து தருவேன் ஏனெனில் எனக்கு நவம்பர் மாதம் வரை நேரம் மிக அரிதாகவே கிடைக்கும் எனவே தொ.பேசியில் தொடர்பு கொண்டால் எனக்கும் சுலபம் எனவே திட்டத்திற்:கு செயல் வடிவம் கொடுங்கள் என்னாலான உதவிகள் கிடைக்கும் என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.