Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; கொரோனா தடுப்பூசி போடாததால் வெளியேற்றப்படுவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; கொரோனா தடுப்பூசி போடாததால் வெளியேற்றப்படுவார்

16 ஜனவரி 2022, 07:12 GMT
 

நோவாக் ஜோகோவிச்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

படக்குறிப்பு, நோவாக் ஜோகோவிச்

ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது. 

34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அதிகபட்ச ஆண்கள் சிங்கிள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களாக உள்ளனர். 

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் நோவாக் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியனான அவர் இந்த முறை கிராண்ட் ஸ்லாம் வென்று 21 பட்டங்கள் என்ற சாதனையை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இப்போது நடக்காது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விசா ரத்து ஏன்?

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு அளிக்கப்பட்ட விசா குடிவரவுத் துறையால் ரத்து செய்யப்பட்டது. 

வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருக்கு விசா கொடுத்ததற்கு ஆஸ்திரேலியாவிலும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.

விசா ரத்து செய்யப்பட்டபின் நோவாக் ஜோகோவிச் தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

 

Novak Djokovic

பட மூலாதாரம், GETTY IMAGES

எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார். அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

இதை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார். டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது. 

அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளும் ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/sport-60013357

  • கருத்துக்கள உறவுகள்

ஜோகோவிச் நல்ல தரமான விளையாட்டு வீரர்......அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர் ......அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.....அதற்காக இதுக்கெல்லாம் அவருக்காக நான் வக்காலத்து வாங்க முடியாது..... ஊரோடு உலகத்தோடு ஒத்துப் போகவேண்டும்....நானே விருப்பம் இல்லாமல் ஆனால் மூன்டு ஊசியும் போட்டுட்டு நிக்கிறன்......!

அவர் விளையாட்டுகளில் முதலாம் இடம் வருவதை அடுத்தடுத்த விளையாட்டுகளில் பார்த்துக் கொள்ளலாம்.....ஆனால் ஊரோடு உலகத்தோடு ஒத்துப் போகவேண்டும்......இவரை இன்று விளையாட அனுமதித்தால் நாளைக்கு அங்கிருக்கிற புத்தனோ கந்தப்புவோ மற்றும் அங்கிருக்கிற ஏனைய விளையாட்டு வீரர்களோ (கிரிக்கட்டில் சும்மாவே அளாப்பி தகாத வார்த்தைகள் பேசி சண்டை பிடிப்பவர்கள்)இதையே முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் தடுப்பூசி போடமாட்டோம் என்று வீதியில் இறங்கிப் போராட, குளிரூட்டிய மண்டபங்களில் மனைவிகளுடன் உண்ணாவிரதம் இருக்க  சந்தர்ப்பம் உண்டு......அது நடக்கக் கூடாது.........!  😎

  • கருத்துக்கள உறவுகள்

 

நாடு கடத்தப்பட்டார் நோவக் ஜோகோவிச்

 

அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான கடைசி முயற்சியில் தோல்வியடைந்த உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று (16) நாடு கடத்தப்பட்டார்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர் அவுஸ்திரேலியாவை விட்டுப் புறப்பட்டார்.

உடல்நலம் மற்றும் நல்லொழுங்கு அடிப்படையில் தடுப்பூசி போடாத அவரது விசாவை அரசாங்கம் இரத்து செய்த பின்னர், அவர் தொடுத்த சவால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தற்காத்து 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அவரின் நம்பிக்கை தகர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/நட-கடததபபடடர-நவக-ஜகவச/44-289353

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/1/2022 at 14:40, nunavilan said:

நாடு கடத்தப்பட்டார் நோவக் ஜோகோவிச்

Novak Djokovic in der Business Class von Fly Dubai auf dem Weg nach Belgrad

இந்த நாடுகடத்தலுக்கு பின்னாலை அரசியல் இல்லை எண்டு ஆரும் சொல்லுறியளோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை கழண்டது???

போய் ஊசியைப்போடு

அல்லது இனி  உட்காரு.

  • கருத்துக்கள உறவுகள்

பணமும், புகழும் கிடைக்க…. தலைக்கனம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோட்டு அது இது என்று ஏறித்திரிந்த நேரத்தில் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கலாம். ஐயோ! கோவிச் கோவிச்சுப் பலனில்லை.

3 hours ago, குமாரசாமி said:

Novak Djokovic in der Business Class von Fly Dubai auf dem Weg nach Belgrad

இந்த நாடுகடத்தலுக்கு பின்னாலை அரசியல் இல்லை எண்டு ஆரும் சொல்லுறியளோ? :cool:

அரசியலும் இருக்கு, ஆனால் அது இரண்டாம் பட்சமே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

பணமும், புகழும் கிடைக்க…. தலைக்கனம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே அதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரஞ்சு ஓப்பன்,விம்பிள்டன் எல்லாம் சறுக்கும் போல கிடக்கு....

On 17/1/2022 at 16:34, தமிழ் சிறி said:

பணமும், புகழும் கிடைக்க…. தலைக்கனம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளி உலகத்துக்குத்தான் தலைக்கனம் பிடிச்சவர். ஆனால் 
சொந்த நாட்டுக்குள் கொடைவள்ளல்,தெய்வம் போன்றவராம்.பாடசாலைகளுக்கும் சிறுவர் பாடசாலைகளுக்கும் செய்யாத உதவிகள் இல்லையாம்.பல இடங்களில்  பாடசாலைகளுக்கு இவர்தான் சம்பளமே வழங்குகின்றாராம்.

23 hours ago, Paanch said:

இந்தக் கோட்டு அது இது என்று ஏறித்திரிந்த நேரத்தில் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கலாம். ஐயோ! கோவிச் கோவிச்சுப் பலனில்லை.

இவர் நினைத்திருந்தால் போலியான தடுப்பூசி பத்திரமும் காட்டியிருக்கலாம் எல்லோ? 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.