Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூக்களிற்கு வாழ்த்துமடல்..

Featured Replies

etoiledelyon2lb3.jpg

இன்று மொட்டவிழ்ந்த

இனிய பூவே! உனக்கு

இதயபூர்வமான எனது

பிறந்தநாள் வாழ்த்துகள்!

எந்தன் கண்களில்

வாழ்க்கையின் இரகசியம்

எதுவெனச் சொல்லும்

பூவே நீ வாழ்க!

வண்டுகள் கால்களில்

மகரந்த தூதுவிட்டு

மணியான காதல்செய்யும்

பூவே நீ வாழ்க!

தன்னிலை மறந்து

துன்புறும் மனிதனுக்கு

அன்பினை போதிக்கின்ற

பூவே நீ வாழ்க!

ஓர்நாளில் நீ வாடிப்

போனாலும் என்நெஞ்சில்

நீங்காத இடம்பிடித்து

நீடூழி வாழ்வாய்!

என் உயிருடன் உறவாடும்

உன் மெல்லிய இதழ்களில்

தருவேன் நான் என்றும்

ஒருகோடி முத்தங்கள்!

Edited by கலைஞன்

பூ மேல் காதல் கொண்டு

பிறந்த நாள் கொண்டாடி

கவி வடித்த கலைஞனே

பூ போல் உங்கள் கவியும்

வாசணை பொங்குகிறது............

:D

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.........பூவுக்கு பிறந்தநாள் வாழ்த்தா

அல்லது பூவைக்கு பிறந்தநாளா?

உங்க கவிதை அழகு கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்க கவிதை...நல்லாயிருக்கு..அதிலும் எனக்கு பிடித்த வரிகள்..

ஓர்நாளில் நீ வாடிப்

போனாலும் என்நெஞ்சில்

நீங்காத இடம்பிடித்து

நீடூழி வாழ்வாய்!

இந்த வரிகளை பலவிதமாக கற்பனை பண்ணி;கொள்ளலாம், அதாவது ஒரு நண்பன் அல்லது நண்பி நன்றாக பழகிய பின்பு சந்தர்ப்பம் சூழ்நிலையால் சில சதிகளினால், பிரியும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்.....இந்த வரிகளும ஒத்துப்போகும்....

பாராட்டுக்கள்....

வாடிப்போகும் மலர்களே..உங்களுக்காக ஒரு

ஜீவன் வாடுகிறது..

கருகிப்போகும் இதழ்களே உங்களுக்காக..இவன்

இதயம் கனக்கிறது..

பெண்கூந்தல் பின்னேறி கீழ் விழுந்து நசுங்கும்..

பூக்களே..உங்களுக்காக..இவன்

கரைகிறான்..கவி வரைகிறான்..

காவியமானவர்கள் கல்லறையில் கூட

உங்களை ஏன் உதிர்க்கிறார்கள்..

புரியாத உலகத்திலே..

புதிராக ஒரு கலைஞன்..

பிடித்திருக்கிறது அவன் கவிதை

பூக்களுக்காக ஒரு பா

அழகு..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கடை கவலை விளங்கிது அந்த பூவை பிரயோசனமா யாராவது ஒரு பூவையிடம் கொடுத்தால் பிரச்சனை முடிஞ்சுதே :D:D

நல்லாக இருக்கு பூக்கவிதை.

  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி! நான் கடந்த ஒரு மாதகாலமாக டென்மார்க் நாட்டில் தங்கியிருக்கின்றேன். நாளை எனது நாட்டிற்கு மீண்டும் பயணம். நான் டென்மார்க் நாட்டின் இயற்கை அழகை மிகவும் இரசித்தேன். அழகிய பரந்தவெளி, தோட்டங்கள், சிறிய காடு... என இயற்கையின் அழகு எல்லாம் மிகவும் அற்புதமாய் இருந்தது. நான் தினமும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இயற்கை காட்சிகளை இரசித்தபடி வோக்கிங் செய்வேன். இன்றுடன் எனது கடைசி நடைபயணத்தின்போது நான் கண்டு இரசித்த பூக்கள், மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்திற்கும் பிரியாவிடை கொடுத்தேன். இவற்றின் பிரிவுத்துயரில் வந்த சோகத்தில் எழுந்ததே இந்த கவிதை.. நான் கண்டு இரசித்த சில பூக்களை கீழே படங்களில் நீங்கள் காணலாம். நான் படம் எடுத்தபோது மழை பெய்து கொண்டிருந்தமையால் பூக்களின் மேல் அதிகளவில் நீர்த்துளிகள் காணப்படுகின்றன. நன்றி!

dsc01553hx8.jpg

dsc01558bu1.jpg

dsc01554hv8.jpg

dsc01555kk7.jpg

dsc01557na9.jpg

dsc01556rz7.jpg

dsc01559wa9.jpg

dsc01560ct0.jpg

dsc01561bt8.jpg

dsc01562fl4.jpg

  • தொடங்கியவர்

dsc01563xj8.jpg

dsc01564tm1.jpg

dsc01565uc1.jpg

dsc01566dk6.jpg

dsc01568tl0.jpg

dsc01569yr0.jpg

dsc01570mf7.jpg

dsc01571zc9.jpg

dsc01574rw4.jpg

dsc01572fu6.jpg

  • தொடங்கியவர்

dsc01592vf8.jpg

dsc01591ti5.jpg

dsc01590kw0.jpg

dsc01589zq8.jpg

dsc01588ym6.jpg

dsc01587fp1.jpg

dsc01586pc2.jpg

dsc01585rf3.jpg

dsc01584oa5.jpg

dsc01583lp1.jpg

  • தொடங்கியவர்

dsc01582ke5.jpg

dsc01581at4.jpg

dsc01580gj3.jpg

dsc01579pb3.jpg

dsc01578ss8.jpg

dsc01577rr8.jpg

dsc01576do8.jpg

dsc01575wt3.jpg

dsc01574eq3.jpg

dsc01573lm0.jpg

பூக்களை பார்த்து ரசித்து அவற்ரை கமராக்குள்ளும் எடுத்திட்டியளா?

உங்கள் டென்மார்க் பயணம் இயற்கையை நன்றாக ரசிக்க வைத்திருக்கின்றது. எமக்கும் பூக்களின் அழகை ரசிக்க சந்தர்ப்பத்தை தந்த உங்கள் கமராவுக்கு நன்றிகள்.

மீண்டும் கனடா பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூ பற்றிய கவிதை அருமை,எனது சிறுபருவத்தில் ஒரு முதியவர் மரத்தில் பூக்கும் பூக்களை மாலையில் பறித்து தான் சாமிக்கு வைப்பார் என் என்று கேட்ட போது பூ பாவம் மரத்தில் கொஞ்சம் நேரம் இருக்க விடுறனான் என்று சொல்லுவார்,அவருடைய மனநிலை போல் உங்கள் மனநிலையும் இருக்குது போல வாழ்த்துகள்.

ம்

கலைஞன் மொட்டவிழ்ந்த மலர் உங்களை முட்டி நின்றதோ

வாழ்த்துக்கள் நண்பரே

சின்ன சந்தேகம். மொட்டவிழ்தல் என்றால் அர்த்தம் வேறல்லவா ?

நல்ல பூக்கவிதையும் பூப்படங்களும் பூப்பூப்புவாக இருக்கு<_<

  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துக்களிற்கும் நன்றி!..

பரணி, நீங்கள் மனிதரில் நடைபெறும் ஒரு செய்முறையை சொல்கின்றீர்களா? எனக்கு சரியாக எதை குறிப்பிடுகின்றீர்கள் என விளங்கவில்லை.

மொட்டு என்பது பூவினை அடிப்படையாக வைத்து வந்த, பூவிற்கே உரித்தான சொல் என நினைக்கின்றேன். நன்றி!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை மனசு கலஞானே.

  • தொடங்கியவர்

நன்றிகள் கவிஞர்!

நான் காலையில் எழுந்ததும், மற்றும் நேரம் கிடைக்குபோது பூக்களிற்கு மிக அருகில் நின்று அவற்றை நீண்ட நேரத்திற்கு உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பேன். அதில் ஒரு சுகம், இனிமை, ஆத்ம திருப்தி இருக்கின்றது.

இந்த அழகிய பூக்களின் நினைவுகளை மீண்டும் மீட்டுப்பார்க்க மனதுக்கு மிகவும் சுமையாக, கவலையாக உள்ளது. :)

தன்னிலை மறந்து

துன்புறும் மனிதனுக்கு

அன்பினை போதிக்கின்ற

பூவே நீ வாழ்க!

நல்ல அருமையான கவி.

அதிலும் மேலே உள்ள வரி யதார்த்தமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.