Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔

வாழ்க வளமுடன்..! 🙌

வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது.

(சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!)

காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை

ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍

  • கருத்துக்கள உறவுகள்

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

அது எங்கை இருக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

6 minutes ago, குமாரசாமி said:

அது எங்கை இருக்கு?

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அது எங்கை இருக்கு?

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் .

நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் .

3 minutes ago, ராசவன்னியன் said:

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

..எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

யாழ்ப்பாண உணவு முறைகள், பேச்சு வழக்கு முதலியன மலையாள பச்சைத் தமிழை ஒட்டியே இருக்கின்றன. கலாச்சார வரலாற்று தொடர்புகளால் இவை ஒன்றியிருக்கலாம்.

முப்பது வருடங்களுக்கு முன் அரசுப் பணியில் நான் இருந்தப்போது, இப்பகுதிகளில் சர்வே சம்பந்தமாக சுற்றியிருக்கிறேன். பல கடைகளில் பேக்கறி, லாறி என வியாபார கடைகளில் எழுத்துக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து வீசும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ராசவன்னியன் said:

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

தமிழகம்- ஈழம்

கேடு கெட்ட அரசியலால் எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என எண்ணத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Picture1.jpg

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔

வாழ்க வளமுடன்..! 🙌

வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது.

(சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!)

காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை

ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍

கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்….
அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன்.
கடைசி வரை சொல்லவேயில்லை. 😁

கழுகுப் பார்வையில் (ட்ரோன் படப் பிடிப்பு) செங்கல் பட்டு பசுமையாக இருந்தது,
ஆச்சரியமாக இருந்தது.

நல்ல ஒரு காணொளி இணைப்பிற்கு, நன்றி ராஜவன்னியன். 👍🏽 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண உணவு முறைகள், பேச்சு வழக்கு முதலியன மலையாள பச்சைத் தமிழை ஒட்டியே இருக்கின்றன. கலாச்சார வரலாற்று தொடர்புகளால் இவை ஒன்றியிருக்கலாம்.

முப்பது வருடங்களுக்கு முன் அரசுப் பணியில் நான் இருந்தப்போது, இப்பகுதிகளில் சர்வே சம்பந்தமாக சுற்றியிருக்கிறேன். பல கடைகளில் பேக்கறி, லாறி என வியாபார கடைகளில் எழுத்துக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து வீசும்

என்ன பறைஞ்சு கொண்டு இருக்கிறியள்? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்….
அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன்.
கடைசி வரை சொல்லவேயில்லை. 😁

கன கட்டிங்,எடிட்டிங் நடந்திருக்கு போல.......ஒரு இடத்திலை எல்லாத்தையும் சொல்லேலாது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் முதல் விமானப் பயணம் எவ்வளவு எதிர்ப்பார்ப்புடனும், சிலிர்ப்புடனும் இருக்குமென்பதை அனுபவபூர்வமாக வர்ணித்து எழுதியுள்ளது சிறப்பு. இந்தக் காணொளியின் இறுதியில் சென்னையில் இறங்கி, வெளிவரும்போது சொல்லிருப்பார்.

காணொளிகளின் கீழே தமிழக உறவுகளின் பின்னூட்டங்களில், இவருக்கு எவ்வளவு வரவேற்பு இங்கே இருக்கிறதென்பதை அறியக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் .

நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் .

எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

சரசுவதி என்றாலே அவர் கைகளில் யாழைக் காணலாம். யாழுடன் பிறந்த சரசுவதி பேசிய மழலைதான் மலையாளம் என்று சொல்வார்கள். அதனால்தான் அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கிறது.

 th?id=OIP.aEUTh2V77x7qUpMJDqpH7gAAAA&pid=Api&P=0&w=182&h=179

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை

அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து  யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர்  ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர்.

எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம்,

அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும்,  யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

எமக்கும் அப்படித்தான்.

ஆனாலும் சிலர் "எலேய், இந்தியனா இருக்கப் பாரு, இல்லைனா சிலோனுக்கு போயிடு.." என பிரிப்பதும் இங்கே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, குமாரசாமி said:

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

நான் நெகிழ்ந்திட்டன்...
அன்பு மழையில்  என்னை அறியாமலேயே வாயெல்லாம் பல்லாகிவிட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது.

வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஆனாலும் சிலர் "எலேய், இந்தியனா இருக்கப் பாரு, இல்லைனா சிலோனுக்கு போயிடு.." என பிரிப்பதும் இங்கே உண்டு.

மனிதர்கள் எல்லோரும் ஒரே மனநிலையுடன் இருப்பது, இல்லைத்தானே...
இங்கும்... சிலர், துவேசத்தை கக்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனாலும்... பார்த்த காணொளிகளில், பலரும் எம் மேல்...
பாசம் கொண்டிருப்பது மனதிற்கு இதமாக உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ராசவன்னியன் said:

ந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது.

வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.

 பல இடங்களில்  கதைக்க பயப்பிடுகின்றார்கள் என தெரிகின்றது.அது நியானமானதும் கூட....ஏனெனில் கமாராவுடன் வருகின்றவர் வேறு யாராகவும் இருக்கக்கூடும் அல்லவா.

தமிழினத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் மொழியால்  இணைவோம். 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 பல இடங்களில்  கதைக்க பயப்பிடுகின்றார்கள் என தெரிகின்றது.அது நியானமானதும் கூட....ஏனெனில் கமாராவுடன் வருகின்றவர் வேறு யாராகவும் இருக்கக்கூடும் அல்லவா.

தமிழினத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், மொழியால்  இணைவோம். 🙏

நன்றி, கு.சா. 🙏

இந்தக் காணொளியின் சில பின்னூட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.

உள்நாட்டு போரின்போது, தானும், தன்னை சார்ந்தவர்களும் தப்பித்தால் போதுமென வசதிபடைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி செட்டிலாகிவிட, வசதியற்ற எளியவர்கள் தோணி மூலம் தமிழகம் வந்து ஏழ்மை நிலையில் இன்னமும் வாழ்கிறார்கள்.

இங்கிருக்கும் அரசியல் மிக மிக மோசமானதுதான்(இவர்கள் சுதந்திரமாக வாழ, குடியுரிமையை கொடுக்க மறுக்கும் நிலையும் சேர்த்து), அவற்றை புரிந்துகொண்டு, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால், குழப்பங்களை, ஏமாற்றங்களை தவிர்க்கலாம். (அரசியல் சூழலை பொறுத்து, காலப்போக்கில் இவர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கலாம், யார் கண்டா..? 😕)

மேற்கத்திய நாடுகளை போல தமிழ்நாடு பொருளாதர, சமூக வாழ்வளவில் உயர்ந்தது இல்லை, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையும் மிக சுமாரானதுதான்.

அந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் "ஈழத்தில் நாங்கள் அப்படியிருந்தோம், இப்படியிருந்தோம் தமிழகத்தில் வந்து சிரமப்படுகிறோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.." என வெளிநாட்டிற்கு தாங்கள் வசதியாக தப்பியோடி செட்டிலாகிவிட்டு, அங்கிருந்து கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்?

அப்படிபட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து, இவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அழைத்துக்கொள்ளலாமே..? இவர்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்கலாமே..?

'கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து,நெருப்பில் விழுந்த கதையாக போச்சுதே, இவர்களின் வாழ்க்கை.,!' என எமக்கும் மிகுந்த வருத்தமே.😢

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யதார்த்தம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.