Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nochchi said:

"உக்கிரேனிய அகதிகளின் வரவு நல்வரவு" என்று யேர்மனி வரவேற்கிறது. இதே யேர்மனி தமிழர்கள் தெருத்தெருவாய் அலைந்து அழிவைத் தடுக்குமாறு கேட்டபோது வாழதிருந்ததோடு  தொடர்போராட்டங்களை ஒருங்கிணைத்தோர்மீது வழக்குப் பதிவுசெய்யத கொடுமையையும் செய்ததோடு, அண்மையில் பேர்லினில் மனிதசங்கிலிப் போராட்டத்திலே ஏந்தியிருந்த தமிழீழி தேசியக் கொடியைக் காவல்துறை அகற்ற முயற்சித்துள்ளது.  இதுதான் இவர்களின் சனநாயகமும் மனித உரிமையும்...............

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பசுமைப்புரட்சி,பசுமைப்புரட்சி என வாய்கிழிய தவளைக்கத்து கத்தும் பசுமைவாத கட்சிதான் இங்கே உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்க சிபாரிசு செய்துகொண்டிருக்கின்றது.கேடு கெட்டதுகள். போரை விரும்பாத ஜேர்மனி உக்ரேனுக்கு ஆயுதங்களை கொடுத்து மேலும் இழப்புகளுக்கு உரமேற்றுகின்றது..

இதை பார்த்தாலே எரிச்சல் எரிச்சலாகவே வருகின்றது.😡

Es wird eng für Annalena Baerbock | SN.at

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

சட்டுப்புட்டு என்டு முடிவுக்கு வாங்கோ கறன்ட் போகப் போகுது.😄

இனி போகாது அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கிருபன் said:

ரஷ்யா என்பது புடின். புடின் என்பது ரஷ்யா. கடந்த 22 ஆண்டுகளாக ரஷ்யாவைத் தனது இரும்புப் பிடியின் கீழ் வைத்திருக்கும் புடின் அப்படி ஓர் ஆட்சியையே நிலைநிறுத்தியிருக்கிறார். உக்ரைனைச் சுற்றி ஒன்றரை லட்சம் படையினரை நிறுத்தியிருக்கும் அவர் அணு ஆயுதப் படையினரையும் தயாராக இருக்கச் சொல்லியிருப்பது யதேச்சதிகாரத்தின் உச்சம். இதுதான் முற்றதிகாரத்தின் தன்மை - நானே விதி, நானே வழி, நானே நீதி!

இதே நேரம் ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில்  அமெரிக்க ஆயுத குவிப்புகள் தங்கள் கவனத்திற்கு வரவில்லையோ? போலந்தில் எதற்கு அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன? வெள்ளி பார்க்கவா?

3 hours ago, Eppothum Thamizhan said:

RT நியூஸ் சேனல் ஐயும் நிற்பாட்டிவிட்டார்கள் போலுள்ளது. இதுதான் மேற்கின் ஊடக தர்மம். போங்கடா நீங்களும் உங்கடை ...

3 hours ago, nunavilan said:

ஆம் நிற்பாட்டி விட்டார்கள். இதன் அர்த்தம் மேற்கு எதையோ மக்களிடம் மறைக்க முயல்கிறது. உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். பெயர் ம்ட்டும் தான் ஜனநாயகம். செயல்கள் அத்தனையும் நாசிசம், பாரபட்சம்.

இவர்கள் தான் ரஷ்யாவிற்கு ஊடக சுதந்திரம் பற்றி பாடம் எடுக்கின்றார்களாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆங்கிலத்தில் Putin Apologists என்று சொல்லலாம். தமிழில் பூட்டினுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அல்லது பூட்டினை நியாயப்படுத்துபவர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்

நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன் கிருபன். அவர்களை Putin apologists என்று கூறலாம். 

ஆனால்

தீக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு உலகம் இருண்டது என்று கூறினால் தீக்கோழியை எவ்வாறு அழைப்பது...? 

தீக்கோழிஜிஸ்ற் ? 

😒

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SERBIA - Belgrade streets as thousands of people march in support of Russia: “Krim je Rusija, Kosovo je Srbija” — “Crimea is Russia, Kosovo is Serbia”

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

Ignorant fools என்று நான் சொல்லுவேன்😃

மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து துப்பவில்லைத்தானே கிருபன் ....😉

(எங்கேயோ கேட்ட குரல் அல்லது தூரத்து இடி முழக்கம் போல இருக்கிறது இந்தக் கூற்று..😆)

3 hours ago, நிழலி said:

கண்ணை மூடிக் கொண்டு மேற்குலகை ஆதரிப்பவர்களை எப்படி அழைக்கலாம் கிருபன் ஜீ

தீக்கோழி அல்லது கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனை..😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரு நாட்டையும் ஒன்று சேராமல் ரஷ்யா தடுத்திருந்தால் உலகில் ஏராளமான பிரச்சனைகள் தோன்றியிருக்காது. நல்லதுக்கு நம்பிக்கெட்டது ரஷ்யா :cool:

Bild

இன்றைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் சண்டையை வைத்துக்கொண்டு பேசாமல் சற்று நாம் இதற்கு முன்னாடி என்னவெல்லாம் நடந்திருக்கு என்பதை எல்லாம்  விரிவாக தெரிந்துகொண்டு பேசினால் தான் நம்மால் பிரச்சனையை சரியாக புரிந்துக் கொள்ள முடியும்....

நேட்டோவும், ஐ.நா.சபையும் அவரிடம் கோரிக்கை வைக்கிறது கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்போம். அதன் பின் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அந்த வாக்குறுதி எல்லாம் பின்னர் காற்றில் பறக்கவிடப்பட்டன...

அதன்பிறகு சோவியத் யூனியன் உடைந்து, அதிலிருந்து பிரிந்த நாடுகளுக்கும் நேட்டோ பரவியதும் போலந்தில் நேட்டோவின் ஏவுகணைத் தளமும் அமைக்கப்பட்டது. USSR உடைக்கப்பட்டால் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நம்பவைக்கப்பட்ட மக்கள் ஏமாந்துபோயினர் வறுமை நாடெங்கும் தாண்டவம் ஆடியது வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

ரஷியாவுக்கும் செசன்யாவுக்கு இடையில் நடந்த போரில் கூட ரஷியாவிற்குள் இருந்த இசுலாமியர்களை ரஷியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதற்காக மேற்குலகம் அந்த போரில் முஜாகிதீன் இயக்கத்தை களமிறக்கியது. இவையெல்லாமுமாக சேர்ந்து, ரஷியா என்கிற நாடே உலகவரைபடத்தில் இல்லாமல் போகிற நிலை,அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட இயலாத நிலை போதாக்குறைக்கு அயல்நாட்டு கொள்ளையர்களுடன் இணைந்து பல சூறையாடல்களை நிகழ்த்திய உள்ளூர் கொள்ளையர்கள் ரஷியாவின் அதிகார சக்திகளாக உருவெடுத்தனர்.

இதுதான் வாய்ப்பு என்று அமெரிக்காவிலிருந்து கிருத்துவ...மிஷனரிகள் குவியத் துவங்கினர். பல நாடுகளில் இருந்த ரஷியாவின் தூதரகங்கள் கூட செயல்படாத நிலையில் இருந்தன.அமெரிக்காவின் போட்டியாளராக இருந்த  சோவியத் யூனியன் அழிந்துவிட்டது.

உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு ஒரு..இயக்கம் உருவானது project for new American century இந்த அறிவுஜீவிகள் தான் ஈராக் ஆப்கானிஸ்தானுக்குள் போர் புரிந்தது. ....  

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நேட்டோவும், ஐ.நா.சபையும் அவரிடம் கோரிக்கை வைக்கிறது கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்போம். அதன் பின் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அந்த வாக்குறுதி எல்லாம் பின்னர் காற்றில் பறக்கவிடப்பட்டன...

கொடுத்த வாக்குறுதி சோவியத் யூனியனுக்காம்.
இப்ப இருக்கும்… ரஷ்யாவுக்கு இல்லையாம். 
பண்ணியில்… பண்ணி பாருங்கோவன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

SERBIA - Belgrade streets as thousands of people march in support of Russia

1990 களில் ஐரோப்பாவில் கொசோவா இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய வலதுசாரிகள் ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, கிருபன் said:

1990 களில் ஐரோப்பாவில் கொசோவா இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய வலதுசாரிகள் ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது?

ஓமோம் கோசோவாக்காரரும்,பொஸ்னியாக்காரரும் தெய்வீக கடாட்சம் உள்ளவர்கள். மிதித்தால் புல்லுக்கூட நோகும் என நினைப்பவர்கள்.

ஒரு தலைப்பட்ச செய்திகளை மட்டும் வாசித்து விட்டு  கருத்தெழுதும் விண்ணர்களை நாம் என்ன சொல்ல?

ரிரிஎன்  தொலைக்காட்சி தடைக்கு வருத்தப்படாத சங்கத்தலைவர் நீவீர்....😜

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

1990 களில் ஐரோப்பாவில் கொசோவா இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய வலதுசாரிகள் ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது?

கிருபன்

மண்ணுக்குள்ள தலையைப் புதைப்பதால் பலனில்லை. 

வரலாற்றையும், நாகரீகங்களையும், அந்நாகரீகங்களின் மக்களையும்  கொஞ்சம் தேடிப் படியுங்கோ..😉

புண்ணியமாகப் போகும்.. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

(ஆகக் குறைந்அதது) மெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மீதான  ஆக்கிரமிப்புக்களையும், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அழிப்பை  கண்டும் காணாது  தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு சனனாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் ரஸ்யாவின் உக்ரேன் மீதான ப்டையெடுப்பை க்ண்டிப்பதுதான் வெட்கக்கேடு.

நரிகளின் சாயம் கரைவது எப்போதும் நன்மையானதுதானே..?

என்ன நாஞ் சொல்றது..😉

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் கோசோவாக்காரரும்,பொஸ்னியாக்காரரும் தெய்வீக கடாட்சம் உள்ளவர்கள். மிதித்தால் புல்லுக்கூட நோகும் என நினைப்பவர்கள்.

ஒரு தலைப்பட்ச செய்திகளை மட்டும் வாசித்து விட்டு  கருத்தெழுதும் விண்ணர்களை நாம் என்ன சொல்ல?

ரிரிஎன்  தொலைக்காட்சி தடைக்கு வருத்தப்படாத சங்கத்தலைவர் நீவீர்....😜

கொசோவா, பொஸ்னிய  படுகொலைகள் நடக்கும்போது ஐரோப்பாவில் பங்கருக்குள் இருந்திருப்பீர்கள் போலிருக்கின்றது. 😁

செளகரியமாக ஜேர்மனியில் இருந்துகொண்டு படுகொலை செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் அம்மணத்தைக் காட்டுகின்றீர்கள். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kapithan said:

(ஆகக் குறைந்அதது) மெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மீதான  ஆக்கிரமிப்புக்களையும், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அழிப்பை  கண்டும் காணாது  தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு சனனாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் ரஸ்யாவின் உக்ரேன் மீதான ப்டையெடுப்பை க்ண்டிப்பதுதான் வெட்கக்கேடு.

நரிகளின் சாயம் கரைவது எப்போதும் நன்மையானதுதானே..?

என்ன நாஞ் சொல்றது..😉

இஸ்ரேலின் சுப்ரபாத நிகழ்சிகளில் ஒன்று பலஸ்தீன நிலப்பரப்புகளில் குண்டு வீசுவது. இதையெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் பேசமாட்டார்கள்.
காரணம் மேற்கத்திய வெள்ளை பதுமைகளை விரும்புபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஆகக் குறைந்அதது) மெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மீதான  ஆக்கிரமிப்புக்களையும், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அழிப்பை  கண்டும் காணாது  தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு சனனாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் ரஸ்யாவின் உக்ரேன் மீதான ப்டையெடுப்பை க்ண்டிப்பதுதான் வெட்கக்கேடு.

அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்களின் பிரச்சினை. 

நான் இணைக்கும் கட்டுரைகளைப் படித்திருந்தால் அவற்றை எழுதுபவர்கள் இடதுசாரிகள் அல்லது லிபரல்கள் என்று புரிந்திருக்கும். வலதுசாரிகளுக்கும், பாஸிஸவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும், நாஜிகளுக்கும் ஆதரவு ஒருபோதும் கொடுப்பதில்லை. அதேவேளை சொந்த மக்களையே கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்களையும் ஆதரிப்பதில்லை.

அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் பக்கம்தான் எப்போதும் இருப்பேன்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இஸ்ரேலின் சுப்ரபாத நிகழ்சிகளில் ஒன்று பலஸ்தீன நிலப்பரப்புகளில் குண்டு வீசுவது. இதையெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் பேசமாட்டார்கள்.
காரணம் மேற்கத்திய வெள்ளை பதுமைகளை விரும்புபவர்கள்.

எல்லாம் ஆங்கில மோகம் செய்யுற வேலை Mr. டாமோடிரன்..😉

சிரித்திரன் சுந்தர் இல்லாதது பலருக்கு வாய்ச்சுப்போட்டு . என்ன ஐசே..😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, கிருபன் said:

கொசோவா, பொஸ்னிய  படுகொலைகள் நடக்கும்போது ஐரோப்பாவில் பங்கருக்குள் இருந்திருப்பீர்கள் போலிருக்கின்றது. 😁

செளகரியமாக ஜேர்மனியில் இருந்துகொண்டு படுகொலை செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் அம்மணத்தைக் காட்டுகின்றீர்கள். 😁

அங்கே படுகொலைகள் நடந்தது உண்மைதான்.......ஆனால் சேர்பியர்களின் எதிர் தரப்புகளின் கைகள் பூ புஸ்பங்கள் பறித்துக்கொண்டிருக்கவில்லை.அவர்களும் அறுத்தெறிந்தார்கள்.

அது வெளியே சொல்லப்படவில்லை.ஊடகங்களில் காண்பிக்கப்படவில்லை. ஏனெனில் அது மேற்கத்திய ஊடக தர்மம்.

இதே தர்மம் தான் எம் இனத்திற்கும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்களின் பிரச்சினை. 

நான் இணைக்கும் கட்டுரைகளைப் படித்திருந்தால் அவற்றை எழுதுபவர்கள் இடதுசாரிகள் அல்லது லிபரல்கள் என்று புரிந்திருக்கும். வலதுசாரிகளுக்கும், பாஸிஸவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும், நாஜிகளுக்கும் ஆதரவு ஒருபோதும் கொடுப்பதில்லை. அதேவேளை சொந்த மக்களையே கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்களையும் ஆதரிப்பதில்லை.

அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் பக்கம்தான் எப்போதும் இருப்பேன்😎

நம்புறன் சாமியோவ்

😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, கிருபன் said:

அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் பக்கம்தான் எப்போதும் இருப்பேன்😎

ஐயாவுக்கு அடுத்த டூர் சவுத் அமெரிக்கா பக்கம் தான்..... ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நம்புறன் சாமியோவ்

😉

உங்கள் நம்பிக்கையைப் பற்றி எனக்கு எதுவித அக்கறையும் இல்லை. 😊

பூட்டினை நியாயப்படுத்துபவர்கள், தனது இனத்துக்காக தமிழரைப் படுகொலை செய்த மகிந்த, கோத்தபாயவையும் அதே வகையில் நியாயப்படுத்தலாம். அது வேறு, இது விறகு என்று வியாக்கியானங்களையும் வைத்து உங்களையே ஏமாற்றிக்கொண்டிருங்கள்😙

3 minutes ago, குமாரசாமி said:

ஐயாவுக்கு அடுத்த டூர் சவுத் அமெரிக்கா பக்கம் தான்..... ☺️

இல்லை. ஜேர்மனிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாதுகாப்புக்கு கருதி இந்தியா இலங்கையினுள் படையெடுப்பு ......(நம்ம கனவு)
பெரிய நாடுகள் (வல்லரசு நாடுகள்,வல்லரசுக் கனவிலிருக்கும் நாடுகள்) எல்லாம் பக்கத்திலிருக்கும் நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதை வரவேற்க்கவேணும் கண்டியளோ....🤣

சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் தமிழருக்கு(மாகாணசபை,மாவட்ட சபை ...முழு அதிகாரத்துடன் கொடுக்க பயப்படுவதின் காரணமும் இது தான்) என்ற ஓர் நிலப்பரப்பு இருக்க க்கூடாது என்று அதிதீவிரமாக கடந்த 70 வருடங்களாக உழைப்பதின் காரணமே இது தான் ...

பாதுகாப்பு என்ற வகையில் நாடு பிரிக்கப்படலாம் அல்லது நாடு பூராகவும் கைப்பற்றலாம்....)மேற்குலகை பகைத்து சீனா,ரஸ்யா போன்ற நாடுகளின் பின் போவதின் காரணமும் இது வாக இருக்குமோ?🤣

நாடுகளின் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பது அல்லது பல் கலாச்சராம என்ற போர்வையில் சிறு சிறு குழுக்களாக  பிரித்து வைப்பது...
டயஸ்போரா என்ற குழுவை குற்றம்சாட்டி அதை ஒரு இனக்குழுமம் போல காட்ட முயற்சிப்பது எல்லாம்.....அரசியலில் சகஜம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கிருபன் said:

பூட்டினை நியாயப்படுத்துபவர்கள், தனது இனத்துக்காக தமிழரைப் படுகொலை செய்த மகிந்த, கோத்தபாயவையும் அதே வகையில் நியாயப்படுத்தலாம்.

இங்கே யாரும் புட்டினை நியாயப்படுத்தவில்லை. மேற்குலகின் இரட்டை வேடத்தையும் ஊடக நிலைப்பாட்டினையுமே வெளியே சொல்ல விரும்புகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kapithan said:

சிரித்திரன் சுந்தர் இல்லாதது பலருக்கு வாய்ச்சுப்போட்டு . என்ன ஐசே..😆

சரியாச்சொன்னியள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

உங்கள் நம்பிக்கையைப் பற்றி எனக்கு எதுவித அக்கறையும் இல்லை. 😊

பூட்டினை நியாயப்படுத்துபவர்கள், தனது இனத்துக்காக தமிழரைப் படுகொலை செய்த மகிந்த, கோத்தபாயவையும் அதே வகையில் நியாயப்படுத்தலாம். அது வேறு, இது விறகு என்று வியாக்கியானங்களையும் வைத்து உங்களையே ஏமாற்றிக்கொண்டிருங்கள்😙

இல்லை. ஜேர்மனிதான். 

ஐயா,

உங்களுக்கு எதுவித  அக்கறையும் இல்லை என்பது தெரிந்ததுதான். 

(இலங்கை இனப்பிரச்சனையில் தமிழரில் பலர் நடுவூநிலை எடுத்து தங்களைப் பிரபல்யப்படுத்திய செயலை இதுவரை பார்த்திருக்கின்றோம். அவர்களால் எமது சமூகத்திற்கும் எதிவித பலனுமில்லை)

சரியானதைச் சரியென்றும் பிழையானதை பிலையென்றும் கூற வேண்டும். அதுதான்  தர்ம நீதி...( மேற்கின் அநீதிகளைப்பற்றி வாயே திறப்பதில்லை. அது ஏன் ? )

ஒரு பக்கத்தை மட்டும் நியாயப்படுத்தும் செயல் பக்கச் சார்பெனப்படும் கண்டியளோ..😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

இல்லை. ஜேர்மனிதான். 

.முதல்லை ஜேர்மனிக்கு வெளுக்க எல்லாம் சரிவரும்.....🤣

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.