Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள்ளப் பூனைகள்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து 
சட்டியை உருட்டும் பூனைகள் போலே 
எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

வெள்ளாடை வேட்டி கட்டி
வேதங்கள் பல சொல்லி 
எல்லோர்க்கும் உதவுவதாய் 
எல்லாமே தெரிந்தவராய் 
நல்லாக நடிப்பாரடா சிலர் 
நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

நட்பு என்றும் உறவு என்றும்
நல்ல பல கதைகள் பேசி 
சமூகம் சேவை என்றும் 
கோவில் பள்ளி படிப்பு என்றும் 
கொக்கரித்து திரிவாரடா 
பின்பு கட்டியதை உடைப்பாரட 
கண்டபடி கதைப்பாரடா 

ஒற்றுமையை தொலைத்து விட்டு 
ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா 
கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் 
கள்ளப் பூனை போல் தானடா 
பின்பு வல்லவர் தான் என்பாரடா 
வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

பேருக்கும் புகளுக்குமாய் 
பொய்யான கதை பேசி 
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா 
தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் அறியாரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

ஞானம் கொண்ட புத்தனைப்போல் 
தாமும் என்று சொல்வாரடா 
தங்கள் பிழை அறியாரடா 
தாங்கள் மாற நினைக்காரடா 

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை 

பொய்யான முகங்களுடன் 
மெய்யான  மனிதர் போலே 
அங்கீகாரம் தேடி அலைந்தே 
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா 
அந்த கள்ளப் பூனை போல் தானடா 
அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன் ✍️
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, uthayakumar said:

 

எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து 
சட்டியை உருட்டும் பூனைகள் போலே 
எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

வெள்ளாடை வேட்டி கட்டி
வேதங்கள் பல சொல்லி 
எல்லோர்க்கும் உதவுவதாய் 
எல்லாமே தெரிந்தவராய் 
நல்லாக நடிப்பாரடா சிலர் 
நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

நட்பு என்றும் உறவு என்றும்
நல்ல பல கதைகள் பேசி 
சமூகம் சேவை என்றும் 
கோவில் பள்ளி படிப்பு என்றும் 
கொக்கரித்து திரிவாரடா 
பின்பு கட்டியதை உடைப்பாரட 
கண்டபடி கதைப்பாரடா 

ஒற்றுமையை தொலைத்து விட்டு 
ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா 
கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் 
கள்ளப் பூனை போல் தானடா 
பின்பு வல்லவர் தான் என்பாரடா 
வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

பேருக்கும் புகளுக்குமாய் 
பொய்யான கதை பேசி 
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா 
தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் அறியாரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

ஞானம் கொண்ட புத்தனைப்போல் 
தாமும் என்று சொல்வாரடா 
தங்கள் பிழை அறியாரடா 
தாங்கள் மாற நினைக்காரடா 

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை 

பொய்யான முகங்களுடன் 
மெய்யான  மனிதர் போலே 
அங்கீகாரம் தேடி அலைந்தே 
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா 
அந்த கள்ளப் பூனை போல் தானடா 
அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன் ✍️
 

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை ....!

 

சிறப்பான வரிகள், நல்ல கவிதை உதயகுமார்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகளிலும் கள்ளப்பூனைகள்  உள்ளது போல  எல்லா வகை வேதம் ஓதுவோர் வகையிலும் கள்ளப் பூனைகள் உள்ளனர். 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளப்பூனைகள்.
நல்ல கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 13:01, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

 

On 27/3/2022 at 13:10, suvy said:

சிறப்பான வரிகள், நல்ல கவிதை உதயகுமார்.......!  👍

 

On 27/3/2022 at 16:47, நிலாமதி said:

பூனைகளிலும் கள்ளப்பூனைகள்  உள்ளது போல  எல்லா வகை வேதம் ஓதுவோர் வகையிலும் கள்ளப் பூனைகள் உள்ளனர். 
 

 

On 27/3/2022 at 23:11, குமாரசாமி said:

கள்ளப்பூனைகள்.
நல்ல கவிதை.

அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2022 at 00:29, colomban said:

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

 

பூனைகளில் இல்லை ஆனால் மனிதர்களில்தான் இருக்கிறார்கள்.. 

மிகவும் சுவாரசியமான பிராணி அதனிடம் இருந்து மனிதர்கள் கற்க வேண்டிய விடயங்கள் உள்ளது.. 

இந்த புத்தகத்தை பற்றி நல்ல கருத்து உள்ளது.. 👇🏽

 

In Feline Philosophy, the philosopher John Gray discovers in cats a way of living that is unburdened by anxiety and self-consciousness, showing how they embody answers to the big questions of love and attachment, mortality, morality, and the Self: Montaigne's house cat, whose un-examined life may have been the one worth living; Meo, the Vietnam War survivor with an unshakable capacity for fearless joy; and Colette's Saha, the feline heroine of her subversive short story The Cat, a parable about the pitfalls of human jealousy.

Exploring the nature of cats, and what we can learn from it, Gray offers a profound, thought-provoking meditation on the follies of human exceptionalism and our fundamentally vulnerable and lonely condition. He charts a path toward a life without illusions and delusions, revealing how we can endure both crisis and transformation, and adapt to a changed scene, as cats have always done.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2022 at 15:29, colomban said:

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

 

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

பூனைகளில் இல்லை ஆனால் மனிதர்களில்தான் இருக்கிறார்கள்.. 

மிகவும் சுவாரசியமான பிராணி அதனிடம் இருந்து மனிதர்கள் கற்க வேண்டிய விடயங்கள் உள்ளது.. 

இந்த புத்தகத்தை பற்றி நல்ல கருத்து உள்ளது.. 👇🏽

ஆறு அறிவுகளை மனிதன் கொண்டிருந்தாலும் மனிதனுக்கும் விலங்குக்குக்கும் இடையில் பல ஒருமித்த எதிர் குணாதிசயங்கள் பல உண்டு. மனிதர்களை போன்றே உண்ணும் போதும் உறங்கும் போதும் தம் பாதுகாப்பு கருதியே செயல்ப்படுகின்றன. பூனைகள் கண்ணை மூடி பால் குடிப்பது அதன் கண்கள் மிக அருகில் இருப்பதால் கண்ணில் பால் தெறிக்காமல் இருப்பதற்கு என்றும் விஞ்ஞான ரீதியான விளக்கம் கூறுவதாகவும் சொல்வார்கள்.அதேபோல் தாம் செய்யும் சில செயல்களை தவறாக இருந்தும் அது அடுத்தவருக்கு தெரியாது என்ற நினைப்புடனேயோ அதனை செய்கிறார்கள் என்ற ஒரு கருத்துடன் மனிதனுடன் இணைத்து பேசப் படுகின்றன. சில மிருக்கங்களினது ஆற்றல் மிகுந்த செய்கைகளைக் கொண்டும் அதன் செயற்பாடுகளைக் கொண்டும் பூனை மாத்திரம் இல்லை இன்னும் பல விலங்குகளை மனிதக் குணங்களுடன் ஒப்பிடுவார்கள். நீங்கள் எழுதிய உதாரணம் போலவே  மியோ, வியட்நாம் போரில் உயிர் பிழைத்தவர், அச்சமற்ற மகிழ்ச்சிக்கான அசைக்க முடியாத திறன் கொண்டவர்; குரங்கு மனம் கொண்டானே மனிதா என்றும் , நரித்தந்திர காரன் என்றும் , பச்சோந்தி மனிதன் என்றும் , எறும்பு போல் ஒற்றுமையை பார் என்றும் , தேனீ போல் உழைக்கப் பார் என்றும்,  யானை போல் பலம் என்றும்,  ஆந்தை போலும் என்றும், விலங்குகளைப் போலவே  இன்னும் பல இயற்கையோடு மனிதனை ஒப்பிட்டு போசுவதும் பாடுவதும் மனித வாழ்வியலிலிலும் இது பொருந்தக்கூடியதாகவே அமைகிறது. சில ஊர்வன பறப்பன தெய்வங்களாகவே மனிதரால் வணங்கப்படுகின்றன. இலக்கியமும், இதிகாசங்களும், புராணங்களும் இதை ஒப்பிட்டே பாடுகின்றன பேசுகின்றன. ஆமாம் மிருகங்களின் இயல்பை ஆராந்து மனிதன் கற்றுக் கொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு அனைவரின் கருத்துக்கும் நன்றிகள். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.