Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரNaகோர்ட்..... பரNaகோர்ட்

"பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா"

"அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ"

" ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா"

காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா

 

"தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று"

"அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற  பரனகோர்ட்அண்ண"

"நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்"

இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி

"அம்மா இந்த   பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா"

"அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ"

தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம்  பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார்

"நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா  தான் பெறும்"

"அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே"

" என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்"

"அப்பா வளவுக்குள்  இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்"

"எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு"

அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான்.

வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது  கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை  சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல  பானை .ஆடுகள்  உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை.

இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர்  கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் .

"அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ"

அவர்கள் சிரித்து கொண்டே

"இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ"

அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே  அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர்.

அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று.

அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான்.

அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர்.

படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான்.

குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் .

"அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே"

"இவர் என்ட சொந்த தம்பி"

"அண்ணே இந்த  போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ"

"இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவருக்கு அனுப்பிவிடுவோம்  "

"அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது"

"அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை"

"அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்"

அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான்

விடியகாலையில் '

"டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி"

"இந்தா இருக்கு புதுசு"

" எங்கயடா பழைய சட்டி"

"அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்"

கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு

"டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?"

இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள்

"இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு"..

"சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்"

" நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா"

"அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்"

"இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்."

"சரி சரி"

"உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ"

"அம்மா,பரணகோர்ட் அண்ணே  பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு"

"படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல்

வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்"

என கோபத்தில கத்திவிட்டு  ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை.

தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி  நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர்

  குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள்.

குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் .

குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். 

வாடிவென்ட என்றார்கள்

இவனும் பயந்து பயந்து அமர்ந்தான்

"நம மொக்கத"

"குகன்"

"கொயத வடக்கருவே"

"வெர்ஸ்ட் ஜொப்"

"கம ஹொயத"

"யாப்பானய"

"அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)"

பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள்.

 இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி  வீடு வந்தான்.

"என்னடா இன்டெர்வியூ எப்படி"

"சரிவரவில்லையப்பா"

"சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்"

என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் .

 "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு"

" எந்த கொம்பனி?பெயரை சொல்லு?"

"GoMaBa"

"அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள்

அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்"

"அடகோதாரி "

"நான் சொன்னான் தானே  அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த  பொருட்களை  எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்"

அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு

 

திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு  உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன்.

கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் 

திடுக்கிட்டு எழுந்தான்

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா உங்கட கனவுல வந்த இரண்டுபேரையும் எனக்கு தெரியும் நான் சொல்ல மாட்டன் ..........!  😂

பரணகோட் சூப்பர் புத்ஸ் ......!  

  • கருத்துக்கள உறவுகள்

பரணகோட் எங்க ஊரில

“போத்தல் பித்தளை அலுமினியம் இருக்கா போத்தல் பித்தளை அலுமினியம்”

என்று கூவுவார்கள்.

பழைய நினைவுகள்.சூப்பர் புத்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

கடைசியா உங்கட கனவுல வந்த இரண்டுபேரையும் எனக்கு தெரியும் நான் சொல்ல மாட்டன் ..........!  😂

பரணகோட் சூப்பர் புத்ஸ் ......!  

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....சொல்லி போடாதையுங்கோ பிறகு நான் அவுஸ் டொலரை சிறிலங்கா மாதவிடம் விசிட் பண்ணும் பொழுது மாற்ற முடியாது ...

8 hours ago, ஈழப்பிரியன் said:

பரணகோட் எங்க ஊரில

“போத்தல் பித்தளை அலுமினியம் இருக்கா போத்தல் பித்தளை அலுமினியம்”

என்று கூவுவார்கள்.

பழைய நினைவுகள்.சூப்பர் புத்ஸ்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....இப்ப சிறிலங்காவை விற்கின்றனர் ...டொலர் இருக்கா,மருந்து இருக்கா,அரிசி இருக்கா,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@putthan உங்கள் பறண கனவு அருமை. 

 நீங்கள் ஒரு முருக பக்தர் என்பதற்காக போற வாற இடங்களிலெல்லாம் அவன் பெயரை தூக்கி செல்வது அந்த அழகனுக்கு இன்னும் பெருமை.😀

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

@putthan உங்கள் பறண கனவு அருமை. 

 நீங்கள் ஒரு முருக பக்தர் என்பதற்காக போற வாற இடங்களிலெல்லாம் அவன் பெயரை தூக்கி செல்வது அந்த அழகனுக்கு இன்னும் பெருமை.😀

அவன் ஒர் 
ஆடம்பர அழகன்
அமைதியான ஆண்டி

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி

இது கட்டாயம் நம்ம சுமந்திரனாகத்தான் இருக்கும்! அவருக்குத்தான் கோர்ட் சூட் எடுப்பாக இருக்கும்!! சிங்களவரை எல்லாம் கடலுக்குள்ள தூக்கிப்போட்டுவிட்டு சிறிலங்காவை விக்கக்கூடிய திறமை அவரை விட்டால் வேறு யாரிடம் இருக்கு?

 

புத்தன் ஐயா, முதுசொமாக இருந்த சருவச் சட்டியை வித்த விண்ணன் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது கொஞ்சம் ஓவர்!😁

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களை மீட்டிய பதிவுக்கு  நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2022 at 13:22, putthan said:

பரNaகோர்ட்..... பரNaகோர்ட்

"பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா"

————-" எந்த கொம்பனி?பெயரை சொல்லு?"

"GoMaBa"

——-கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் .

புத்தன்…. பாரட்டுக்கள்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையையும்,
பறண கோட்டுடன் அழகாக தொடர்பு படுத்தி….
எழுதிய, அருமையான நகைச்சுவை கதை. 👍🏽😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்

எல்லாரும் புத்தன் புத்தன் எண்டு சொல்ல..... என்ரை காதிலை புட்டின் புட்டின் எண்டு கேக்குது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😂


ரேடியோ பேப்பர் ரிவி எல்லாம் ஒரே புட்டின் புராணம் எண்ட படியாலை காது ஒரு மாதிரியாப்போச்சுது😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எல்லாரும் புத்தன் புத்தன் எண்டு சொல்ல..... என்ரை காதிலை புட்டின் புட்டின் எண்டு கேக்குது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😂


ரேடியோ பேப்பர் ரிவி எல்லாம் ஒரே புட்டின் புராணம் எண்ட படியாலை காது ஒரு மாதிரியாப்போச்சுது😀

புத்தனும், புட்டினும்…. உலகத்திற்கு, எத்தனையோ நல்ல விடயங்களை
செய்து காட்டி உள்ளார்கள் என்பதை…. புட்டின் மூலமாக, உக்ரைனில் காண்கின்றோம். ❤️

இங்கு ஒரு சிலருக்குத்தான்… புட்டினை கண்டால், அலர்ஜி.
அது… அவர்களின் வெள்ளைக்கார பாசத்தால், வந்தது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பரணகோட் எனக்கு பார்கோட் என்று தொடங்கேக்க விளங்கினது, போகப்போகத்தான் விளங்கினது. நன்றி புத்தண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2022 at 17:22, கிருபன் said:

இது கட்டாயம் நம்ம சுமந்திரனாகத்தான் இருக்கும்! அவருக்குத்தான் கோர்ட் சூட் எடுப்பாக இருக்கும்!! சிங்களவரை எல்லாம் கடலுக்குள்ள தூக்கிப்போட்டுவிட்டு சிறிலங்காவை விக்கக்கூடிய திறமை அவரை விட்டால் வேறு யாரிடம் இருக்கு?

 

புத்தன் ஐயா, முதுசொமாக இருந்த சருவச் சட்டியை வித்த விண்ணன் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது கொஞ்சம் ஓவர்!😁

சில சின்ன உண்மைகளுக்கு பொய் சேர்த்து  கிறுக்குவது கிறுக்கர்களின் குணம்...நன்றி கிருபன்

On 14/4/2022 at 23:00, நிலாமதி said:

பழைய ஞாபகங்களை மீட்டிய பதிவுக்கு  நன்றி 

நன்றி நிலாமதி

On 15/4/2022 at 00:19, தமிழ் சிறி said:

புத்தன்…. பாரட்டுக்கள்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையையும்,
பறண கோட்டுடன் அழகாக தொடர்பு படுத்தி….
எழுதிய, அருமையான நகைச்சுவை கதை. 👍🏽😂

நன்றி சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

On 15/4/2022 at 00:50, குமாரசாமி said:

எல்லாரும் புத்தன் புத்தன் எண்டு சொல்ல..... என்ரை காதிலை புட்டின் புட்டின் எண்டு கேக்குது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😂


ரேடியோ பேப்பர் ரிவி எல்லாம் ஒரே புட்டின் புராணம் எண்ட படியாலை காது ஒரு மாதிரியாப்போச்சுது😀

🤣

On 15/4/2022 at 02:36, ஏராளன் said:

பரணகோட் எனக்கு பார்கோட் என்று தொடங்கேக்க விளங்கினது, போகப்போகத்தான் விளங்கினது. நன்றி புத்தண்ணா.

நன்றி ஏராளன் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.