Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிபீர் ஆமி அம்மன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிபீர் ஆமி அம்மன் ;ஜரோப்பிய அவலம் பாகம் 11

அவலம் கேட்க இங்கே அழுத்துங்கள்

avalam11.gif

தமிழ்வெப்றேடியோ.கொம்

Edited by sathiri

விளம்பரம் அருமை :lol:

அதுவும் அம்மா சாமி என்பது செம பகிடி :P

குடும்பமே சாமியாகீட்டீங்களே முருகன் சாமி துர்கா சாமி வவுவியன் அண்ணாவின் குடும்பத்தையே சாமிகுடும்பம் ஆக்கிய பெருமை சாத்திரியையே சேரும் :P

Edited by ஈழவன்85

ஹாஹாஹாஹ நல்லா இருக்கு சாத்திரியின் குரலும் சூப்பர்.

விளம்பரம் ஹீஹீஹீஹீ

சாத்திரி தாத்தா பெண் குரல் யாரோடது?

வர வர சாத்திரியாருக்கு ளொள்ளு கூடிக்கொண்டே போகுது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் எல்லாம் நம்மடை டென்மார்க் அம்மனை மனதிலை நினைத்து எழுதினது தான் இந்த நாடகம். :lol::lol::rolleyes:

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் எல்லாம் நம்மடை டென்மார்க் அம்மனை மனதிலை நினைத்து எழுதினது தான் இந்த நாடகம். :D^_^^_^

அட்ரா சக்கை :o யாரப்பா அந்த அம்மன் அந்த அம்மனின் திருவிளையாடல்களை சொல்லுங்கோவன் :mellow:

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் எல்லாம் நம்மடை டென்மார்க் அம்மனை மனதிலை நினைத்து எழுதினது தான் இந்த நாடகம். :mellow::D^_^

டென்மார்க் பக்கம் போனியள்.. பக்த "கேடிகள்" தேடி வந்து கண்ணை குத்தும்.. நீங்கள் செய்தது சாமி குத்தம் ஆகீடும்...

அட்ரா சக்கை :lol: யாரப்பா அந்த அம்மன் அந்த அம்மனின் திருவிளையாடல்களை சொல்லுங்கோவன் :lol:

முதலில் சாத்திரிக்கு வாழ்த்துக்கள்.

நாடகம் சூப்பர் அதுவும் நீங்கள் அம்மனை விளம்பரம் செய்தது மிகஅருமை.

"ஈழவன்"

இதை ஒருதொடர்கதையாய்எழுதலாம் அவ்வளவு அனியாயம் நடக்குதாம்.

(டென்மாக்கிலிருக்கும் எனது நன்பர்கள் மூலம் பலசெய்திகள் இப்போ எடுத்துள்ளேன்

நானே நிச்சயம் எழுதுகிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா அம்மனிலும் கை வைச்சிட்டீங்களா?

சாத்திரியின் தலையில் யாராவது தேங்காய் உடைக்கப் போறாங்க.

சாத்திரி எதற்கும் கெல்மட் போடடுக் கொண்டு திரியவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா அம்மனிலும் கை வைச்சிட்டீங்களா?

சாத்திரியின் தலையில் யாராவது தேங்காய் உடைக்கப் போறாங்க.

சாத்திரி எதற்கும் கெல்மட் போடடுக் கொண்டு திரியவும்.

அய்யோ அந்த அம்மனிலை நான் கையை வைச்சு பட்ட பாடு இருக்கே சொல்லி முடியாது அவற்றை எழுதவும் விருப்பம் இல்லை.ஆனாலும் பணிந்து போகவும் இல்லை ஆனாலும் திருந்தாத எங்கடை சனம் இருக்கும் வரை அவரை பற்றி எழுதி என்ன பியேசனம் அதுதான் விட்டு விட்டேன் :angry: :angry: :angry:

கிபிர் அம்மனின் வரவு மிகவும் அவசியமானது சாத்திரியாரே. காலம் வேகமாக மாறி நவீன ஆயுதங்கள் உலகத்தின் பாவனைக்கு வந்த பின்னரும் எமது கடவுள்கள் இன்னும் சூலாயுதம் வேலாயுதம் தாங்கிய படியே நிற்பது வருத்தத்துக்குரியதே. அதே போல் நீங்கள் அம்மன் வேப்பிலையும் சாறியும் கட்டடியபடிதான் நிற்கவேணும் கண்ணை உருட்டி பிரட்ட வேணும் என்றும் கூறுகின்றீர்கள். ஏன் ஜீன்ஸ் ரீ சேட்டில் அம்மன் வருவதை அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்களே தெரியவில்லை. எங்கட அம்மன்கள் சீனாவில் பட்டு கண்டுபிடித்த பிறகு பட்டுக்கு மாறவில்லையா? அதே போல் ஏன் இப்போது ஜீன்ஸ் ரிசேட்டுக்கு மாறக்கூடாது? அடுத்தநாள் சுதந்திரமாக பறந்து இந்த அழகிய உலகத்தை காணவிருக்கும் ஆயிரமாயிரம் பட்டுபூச்சிகளை உயிரோடு சுடுநீரில் போட்டு கொன்று நூல் எடுத்து அதில் செய்யும் பட்டாடையை விட ஜீன்ஸ் ரி சேட்டில் புனிதம் அதிகம் என்பது உண்மைதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

; டென்டார்க் நாட்டில் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும ஈழத்தில் ஏழாலையை சேர்ந்த ஒரு பெண் போலி சாமியாரைப்பற்றி கடந்த வருடம் ஒரு பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரை அதனை யாழிலும் இணைத்திருந்தேன் அந்த கட்டுரை தான் இந்த நாடகத்தின் கருவும் . பெரும் சர்ச்சையை உருவாக்கிய அந்த கட்டுரையை தேவை கருதி இங்கு இணைக்கிறேன்

காலங்காலமாய் போலிசாமியார்கள் பற்றிய செய்திகள் வருவதும் அவர்கள் பிடிபடுவதுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் எம்மிடையே இன்னமும் போலி சாமியார்கள் உருவாகி கொண்டும் மக்கள் அவர்களை நம்பி கொண்டும் தான் இருக்கிறார்கள்.ஆனாலும் போலி சாமியார் களை நம்புகிற விடயத்தில் இந்தியாவை போல எம்மவர்கள் அதிகம் இல்லை எண்று மகிழ்ச்சியடைவதா அல்லது இன்னமும் போலிகளை நம்பும் எம்மவர் இருக்கிறார்கள் என்று கவவையடைவதா என்று தெரியவில்லை.

80 களில் யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதிகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் பிரேமானந்தா சாமியார்.அவரை ஒரு போராளி குழு ஒன்று பிடிக்க சென்றபோது மயிரிழையில் இந்தியாவிற்கு தப்:பியோடி அங்கு இந்தியாவில் தமிழ்நாட்டை ஒரு கலக்கு கலக்கி இப்போது சிறைச்சாலையில் எந்த வித அற்புதங்களும் செய்யமுடியால் நாழை கழிக்கிறார். பின்னர் அவ்வப்போது ஈழத்தில் சில சாமியார்கள் தோன்றி சாமியாடுவதும் அருள் வாக்கு சொல்வதும் பின்னர் அவர்களை போராளிகள் அழைத்து போனதும் அவர்கள் அருளும் போய் அம்மனும் மலையேறி சாதாரண மனிதர்களாய் திரிவதும் பலரும் அறிந்ததே.

ஆனால் இன்று புலத்தில் டென்மார்க் நாட்டில் ஒரு பெண் சாமியார் தோன்றி சாமியாடி அருள் சொல்கிறார் அவரையும் அவரது பின்ணணி பற்றியும் சிறிது பாரக்கலாம் . இந்த பெண் சாமியார் ஈழத்தில் ஏழாலையை சேர்ந்தவர் இவரும் மற்றை ஈழதமிழர்களை போல டென்மார்க் நாட்டில் அகதியாக குடியேறியவர் பின்னர் புலத்தில் எம்மவர் தங்கள் திறைமைக்கேற்ப தொழில்களை தொடங்கியது போல இவரும் தனது திறைமைக்கேற்ப தனது வீட்டின் சாமான்கள் போட்டு வைக்கும் நில கீழ் அறையில் ஒரு சிறிய கோவில் போல ஒன்றை உருவாக்கினார்.

தனக்கு ஊரில் ஆறு வயதிலேயே அம்மன் வந்து விட்டதாகவும் அதனால் தான் கலையாடுவதாகவும் கூறி கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களை அழைத்து சாமியாடி குறி சொல்ல தொடங்கினார். எனக்கு தெரிய இவருக்கு இரண்டு தடைவை குலைப்பன் காச்சல்தான் வந்தது ஊரிலை. அப்பிடி பாத்தால் மாரி காலத்திலை மலேரியா வந்தாக்கள் எல்லாரும் அம்மன் அளுள் கிடைத்ததாக நினைத்து சாமியாடலாம்.அவர் எதிர்பார்த்தது போல சிறிது கூட்டமும் பண புளக்கமும் வர தொடங்கியது (அதுதானுங்க காணிக்கை)நாளடைவில் இவரது பெயர் அக்கம் பக்கத்து நகரங்களில் வசிக்கும் தமிழர் களிற்கும் பரவ புலத்தில் ஏதோ ஒரு மனச்சுமையுடனும் இருக்கும் தமிழர்கள் மன ஆறுதலுக்காகவும் இவர் சொல்வது நடக்குமாம் என்கிற ஒரு நப்பாசையிலும் இவரை தேடி போக தொடங்கினார்கள்.

அவர்களது நப்பாசை இந்த பெண்சாமியாரின் பேராசையாக மாறி அவர்களிடம் வழைமையாக எல்லா போலி சாமியார்களும் சொல்வது போல தோசம் தெய்வ குற்றம் பரிகாரம் என்று பணம் கறக்க தொடங்கினார்.இவரது விசேடம் என்னவெண்றால் நல்ல வாட்ட சாட்டமான அழகான ஆண்கள் அவரிடம் போனால் அவர்களிற்கு உடனே ஏதாவது தோசம் கண்டுபிடித்து அவர்களிற்கான பரிகார பூசையை தனியாக ஏற்பாடு செய்து விடுவார்.பிறகென்ன பரிகாரத்திற்கு போனவர் பேய்பிடித்து வெளியே வருவார்.

இப்படித்தான் ஒருமுறை ஈழத்தில் எம்மவருக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பார்க்க கொஞ்சம் வாட்ட சாட்டமாய் இருப்பார் அவர் இவரிடம் தொண்டு நிறுவனத்திற்காய் பண உதவி கேட்டு இவரை நாடியிருந்தார் போனவரிடம் அந்த அம்மணி சொல்லியிருக்கிறார் பண உதவிதானே பிரச்சனையில்லை நான் இன்றிரவு பூசையில் இருக்கும் போது அம்மன் என்னில் வருவார் அப்பவாருங்கள் நீங்கள் கேட்ட உதவியை அம்மன் அருளுடன் தருகிறேன் என்று போனவரும் கொஞ்சம் சாமி பக்தியுள்ளவர் அவரும் அடடா அம்மனே வந்து உதவபோறா எண்டு நினைத்து அன்றிரவு குளித்து சுத்தமாய் பயபக்தியுடன் அர்ச்சனை சாமானுடன் போயிருக்கிறார் அங்கு போனதும் அவருக்கு ஒரு சந்தேகம் அங்கு யாரும் இல்லை இவர்மட்டும்தான் சரி எதுக்கும் வந்த அலுவலை பாப்பம் எண்டிட்டு பக்தியுடன் அந்த அம்மணிமுன் அமர அந்த அம்மணியும் சில வசனங்களை உச்சரித்தபடி உடலையும் தலையையும் ஆட்டியபடி அம்மன் வந்திட்டா உனது பிரச்சனைகளை தீர்து வைப்பா எனவே நீ அம்மனை குளிர்வித்து மகிழ்ச்சி படுத்து அப்போதான் அம்மன் மகிழ்வடைந்து நீ கேட்டதை தருவா எணறபடி அவரை கட்டியணைத்திருக்கிறார்.

போனவர் திடுக்கிட்டு அம்மணியை உதறி தள்ளி விட்டு துண்டை காணம் துணியை காணம் எண்டு ஒடியந்திட்டார்.இப்படி பல லீலைகளை அம்மன் செய்து வந்ததால் அவரது கணவன் ஆரம்பத்தில் அவருடன் கோபித்து கொண்டு போய் தனியாக கனகாலம் இருந்தவருக்கு அந்த அம்மணியின் பெயர் புகழ் பணம் என்பவற்றை பார்த்து விட்டு அவருடன் சமரச உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு அவருடன் மீண்டும் இணைந்து விட்டார். அதனால் அவரும் இப்ப கடவுளாகி விட்டார் அவரிடம் போகும் பக்தர்கள் முக்கியமாக அவரது காலிலும் அவரது கணவர் காலிலும் வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கவேண்டும்.

அவர்கள் காலில் விழும் எம்மவர்களை என்னவெண்று சொல்வது.அதை விட இவர்களிடம் அதிகம் ஏமாந்தவர்கள் பிள்ளையில்லாத குறையை போக்கவென்று இவரிடம் சென்று பணத்தை கொடுத்தவர்களே.போனவர்கள் கொஞ்சமாவது சிந்தித்திருக்கலாம் ஒரு ஆண் சாமியார் என்றாலாவது பரவாயில்லை பிள்ளை வரம் கொடுப்பார் பெண் சாமியாரால் எப்படி பிள்ளை வரம் குடுக்க இயலும். இவரது திருகு தாளங்கள் மெல்ல மெல்ல வெளியே தெரிய வர அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களும் மற்றும் டென்மார்க்வாழ் தமிழர்களும் இவரிடம் போவதை நிறுத்த இவருக்கும் வருமானம் குறைந்து கொண்டு போகவே இன்னொரு ஆலோசனையை செயற்படுத்தினார்.

அதுதான் அய்ரோப்பாவில் ஒளிபரப்பாகும் ஒருதமிழ் தொலை காட்சி நிறுவனர் ஒருவரை பிடித்தார் அவருக்கு தனிய விசேட பூசை நடத்தி அருள்வாக்கு கொடுத்தார். அந்த நிறுவனரும் அருள் பெற்று கொண்டு தனது தொலைகாட்சி முலம் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்க தொடங்கினார். அந்த அம்மணி எதிர்பார்த்த பலன் கிடைத்தது மற்றை அய்ரோப்பிய நாடுகளில் இருந்து ஏமாந்த எம்மவர்கள் இப்போடென்மார்க்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இன்றை கால கட்டத்தில் இந்த அளவுக்கு விஞ்ஞான வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அதுவும் இத்தனை வசதிகள் கொண்ட அய்ரோப்பாவில் வாழ்ந்து கொண்டு இன்னமும் பிள்ளை வரம் கேட்டும் எதிர் காலத்தை அருள்வாக்கு முலம் அறியவும் இவர் போன்ற போலி சாமியார்களை நம்பி மோசம் போகும் எம்மவர்களை என்ன செய்யலாம் விடையையும் நீங்களே சொல்லுங்கள் மக்களே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் எல்லாம் நம்மடை டென்மார்க் அம்மனை மனதிலை நினைத்து எழுதினது தான் இந்த நாடகம். :(:rolleyes::o

என்ன சாஸ்திரிகளே தாங்களும் சாமபூஜைக்கு போனீங்களோ என்னவோ???? :( அபச்சாரம்.....அபச்சாரம்......?ஒரு சொம்புலை கொஞ்ச ஜலம் எடுத்தொண்டு தலை முழுகிடுங்கோ :o

சாமபூஜை சமாச்சாரம் உண்மையா

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் சூப்பர் அதுவும் நீங்கள் அம்மனை விளம்பரம் செய்தது மிகஅருமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சாமபூஜை சமாச்சாரம் உண்மையா
சமாச்சாரம் உண்மைதான் ஈழவன் அது நடந்து இப்போ பல வருடங்கள் ஆகின்றது ஆனால் அம்மன் இப்போ பக்தர்களின் பண உதவியால் அசுர வளர்ச்சியில் எங்கையோ போயிட்டாங்க இனி நடக்கிறதுகள் வெளியில் வராது அப்படி தப்பி தவறி வந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் :lol:
நாடகம் சூப்பர் அதுவும் நீங்கள் அம்மனை விளம்பரம் செய்தது மிகஅருமை.
அட கறுப்பியக்கா இப்பதான் கேட்டிருக்கிறா சரி அடுத்தது இறுதி அங்கம் அம்மனை பற்றியது அது இதை விட நல்லா செய்ய முயற்சிக்கிறன் பார்ப்போம். நன்றி கருத்துகளிற்கு :D:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா நல்லா இருந்திச்சு............ வசனங்கள இன்னும் கூர்மையாக்குியிருக்கலாம் எண்டு படுது..........

அதுசரி கீபீர் ஆமி அம்மனுக்கும் லலிதா அம்மனுக்கும் தொடர்பில்லத்தானே :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா நல்லா இருந்திச்சு............ வசனங்கள இன்னும் கூர்மையாக்குியிருக்கலாம் எண்டு படுது..........

அதுசரி கீபீர் ஆமி அம்மனுக்கும் லலிதா அம்மனுக்கும் தொடர்பில்லத்தானே :P

நன்றிகள் பூனைக்குட்டி முழுக்க நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் வசனங்கள் எழுதினேன் ஏனென்றால் இதையெல்லாம் உண்மையாக நல்ல விதமாக சொல்லி யார் கேட்க போகினம். காலிலை விழ போறவை போகத்தான் போகினம். : :angry: :angry: லலிதா அம்மன் தானாம் கிளை அம்மன் :P :lol:

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.