Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் சுட்டுப் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார்.

யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

(மேலதிக இணைப்பு) யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை

[புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 10:00 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் பகுதி நேர ஊடகவியலாளருமான சகாதேவன் டிலக்சன் (வயது 22) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். கொக்குவில் மேற்கில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் டிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகவள நிலையத்தின் மாணவரான சகாதேவன் டிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார்.

யாழ். மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் "சங்கம்" என்ற இதழின் ஆசிரியர்களில் ஒருவர் டிலக்சன். அண்மையில் மாமனிதர் சிவராம் தராக்கியின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை யாழில் நடத்தியதில் டிலக்சன் முக்கியப் பங்காற்றினார்.

யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவரான டிலக்சனின் தாயார் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஆவார்.

சிவராம் தராக்கியின் நினைவு நிகழ்வை முன்னின்று நடத்திய இளம் ஊடகவியலாளரான வர்மன் அண்மையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

சகாதேவன் டிலக்சனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாணவர் படுகொலைக்கு த.தே.கூ. கண்டனம்

[புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:17 ஈழம்] [ந.ரகுராம்]

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரும், தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளருமான சகாதேவன் டிலக்சன் படுகொலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்துக்கான சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகிய சகாதேவன் டிலக்சன் (வயது 24) இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் ஆடியபாதம் வீதி கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிறிலங்கா இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பி துணை இராணுவக் குழுவினராலும் கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

டிலக்சன் துணிச்சலும் துடி துடிப்பும் விடுதலை உணர்வும், தலைமைத்துவப் பண்பும் மிக்கவர்.

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலும் அதன் பின்னரும் யாழ். குடாநாட்டு மக்களின் ஐனநாயக உரிமைகளுக்காகவும், மாணவர்களின் கல்வி உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.

1995 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டிலிருந்த பொது மக்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் சிங்களப் படைகளும் ஈ.பி.டி.பி உள்ளிட்ட துணை இராணுவக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்களுக்கு எதிராகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஐனநாயக வழியிலான எதிர்ப்பு போராட்டங்களில் பாடசாலை மாணவனாக சிறு வயதிலிருந்தே மிகத் தீவிரமாக பங்கு கொண்டவர்.

2001 ஆம் ஆண்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் போது அந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் மீறி கலந்து கொண்டால் சுட்டுக்கொலை செய்வோம் எனவும் சிறிலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் பகிரங்கமாக அறிவித்திருந்த பொழுது அவர்களது அச்சுறுத்தலையும் மீறி பெருமளவான பாடசாலை மாணவர்களை அந்நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக தமது உயிரையே துச்சமாக மதித்து தமது வயதை ஒத்த பாடசாலை மாணவர்களை அந் நிகழ்வுக்காக அணிதிரட்டியவர்களில் முக்கியமான ஒருவர்.

அதனைத் தொடர்ந்து குடாநாட்டில் நடைபெற்ற அனைத்து மக்கள் எழுச்சி நிகழ்வுகளிலும் அதன் வெற்றிக்காக தனது முழு பங்களிப்பினையும் வழங்கி வந்தவர்.

தான் கல்வி பயின்ற பாடசாலைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது- தமது பாடசாலைக்கென ஓர் தனித்துவம் உண்டு என்ற அடிப்படையில் சிங்களவனுக்கு தமது பாடசாலை சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இறுதி வரை செயற்பட்டவர்.

யாழ். குடாநாட்டு மாணவர்களின் கல்வி திட்டமிட்டு சிறிலங்கா அரசாலும் சிங்களப் படைகளாலும் சீரழிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் யாழ். குடாநாட்டில் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இருந்து குடாநாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அரும் பணியாற்றியவர்.

குடாநாட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளர்த்து தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பதிலும் தீவிரமாக செயற்பட்டவர். குடாநாட்டு மாணவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.

ஆளுமையும் விடுதலை உணர்வும், தலைமைத்துவ பண்பும் கொண்ட பெறுமதி மிக்க ஒரு இளம் தலைவனை நாம் இழந்து நிற்கின்றோம். இத்தகையோரை படுகொலை செய்வதன் மூலம் வருங்கால இளைய தலைமுறையினரை முற்றாக அழித்து ஒழித்துவிட மகிந்த அரசு முயல்கின்றது.

இத்தகைய கொலைகள் மூலம் தமிழ் மாணவர்களின் தேசிய உணர்வை அடக்கி விடவோ அழித்து விடவோ முடியாது என்பதனை ஆக்கிரமிப்பாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கோழைத்தனமான முறையில் மேறகொள்ளப்பட்ட இக்கொடூரமான கொலையினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

தோழன் நிலக்சனுக்கு எனது கண்ணீர் காணிக்கைகள்....

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் காணிக்கைகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20070801012lf6.jpg

கண்ணீர் காணிக்கைகள்

  • கருத்துக்கள உறவுகள்

டிலக்சனின் இழப்பு மாணவர் சமுதாயத்திற்கும் விடுதலை விரும்பிகளுக்கும் ஒரு பேரிழப்பாகும்...கொடியவர்கள் கூத்தடிக்கின்றனர்..

வெறிபிடித்த நாய்கள்...பிசாசுகள்..உடல் அழுகி உத்தரிக்கப் போகின்றார்கள்...இனியும் நாம் பொறுத்திருக்க வேண்டுமா?

இவங்களை உயிருடன்தான் கொழுத்தவேண்டும்...

.....

டிலக்சனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி....

ஈழமண்ணின் விடிவிற்காக விதையாகிவிட்ட டிலக்சனுக்கு எமது கண்ணீர் பூக்களை காணிக்கையாக செலுத்துகின்றோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

- உதயன் பத்திரிகையிலிருந்து

இறந்தவரின் தந்தையான இராசரத்தினம் சகாதேவன் (வயது59) மரண விசாரணையில் சாட்சியமளித்தார். அப் போது அவர் கூறிய வையாவது:

விடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை ஏறிப்பாய்ந்து கடந்து மூவர் உள்ளே வந்தனர். அவர்கள் வீட்டின் கதவைத் திறக் கும்படி கோரினர். நாம் மறுத்தோம்.

வந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர். எமது இரு மகன்மாரின தும் பெயர்களைக் கேட்டனர். நாம் பெயர் களைக் கூறினோம்.

இளைய மகனான நிலக்ஷனுடன் தாங் கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர். எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.

வீட்டு "போர்ட்டிக்கோ'வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் "கேற்'றைப் பாய்ந்து ஓடி னார்கள். மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.

வந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டை யும் சேட்டும் அணிந்திருந்தார். மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட் டும் அணிந்திருந்தனர் என்றார் தந்தையார்.

இதையடுத்து, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தைப் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் தொடரும் படுகொலைகளிலிருந்து அப்பாவிகளை காப்பாற்றப் போவது யார்?

[03 - August - 2007]

* யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

யாழ்.குடாநாட்டில் தினமும் தொடரும் படுகொலைகளிலிருந்து அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்கப் போவது யாரென, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை யாழ்.பல்கலைக்கழக ஊடக பயிற்சிநெறி மாணவனான ச.நிலக்ஷனின் படுகொலை தொடர்பாக விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மாணவர் ஒன்றியம் தனது கடும் விசனத்தை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்;

சிறிது நாள்கள் ஓய்ந்திருந்த படுகொலைகள் தற்போது மீளவும் ஆரம்பமாகியுள்ள சூழல் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. கடந்த இரவு வேளை எமது பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நெறியை சேர்ந்த மாணவன் ச.நிலக்‌ஷன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வளமான, திறமைமிக்க ஊடக மாணவனை எமது சமூகம் இழந்துள்ளது. அவரது இழப்பின் வகை ஈடு செய்ய முடியாதது மட்டுமன்றி கண்டிக்கப்படவும் தக்கது.

வன்முறைப் பாணியில் நடைபெறும் இத் தொடர் கொலைகள் சர்வதேச தரப்புகளின் கவனத்தில் தணிந்திருந்த போதும் இப்போது மீளவும் ஆரம்பித்துள்ளது.

நிறுவன ரீதியான தொடர்புடையவர்களின் படுகொலைகள் மட்டுமே அவர் சார்ந்த நிறுவனங்களால் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் நாளாந்தம் பல அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணமேயுள்ளனர்.

இவ் அனைத்துக் கொலைகளையும் மனித நேயத்தோடு கண்டிப்பது மட்டுமன்றி சர்வதேச கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஆயுதப் போரின் அடிப்படையில் நடைபெறும் நிழல் யுத்தத்துக்கு பல இளைஞர்கள் அநியாயமாக பலியாவதை தொடர்ந்து பார்த்து நிற்பது வேதனையான விளைவுகளையே தரும். இவ்வாறான கொலைகளுக்கு காரணமானவர்கள் யார்? குடா நாட்டின் பாதுகாப்பற்ற இச் சூழ்நிலைக்கு காரணம் யாது? என, பொறுப்புக் கூற வேண்டிய பதவிகளில் உள்ளோரின் கவலையீனமே படுகொலைகள் தொடர வாய்ப்பாகவுள்ளது.

எமது சக மாணவனின் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரது இழப்புகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்து அவரது இறுதிக் கிரியைகள் வரை எமது மாணவர்கள் துக்க நாளை கடைப்பிடிக்கவுள்ளனர்.

மேலும் இப் படுகொலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு துறையினர் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதோடு மக்கள் பிரதிநிதிகளும் தமது பங்களிப்பை ஆற்ற வேண்டுவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தினக்குரல்

தமிழ் ஓசை வாய் திறந்திருக்காதே.அண்மைகாலமாக தமிழ் சேவையை புலிகள் புறக்கணித்து வருகின்றார்கள் அதனை நிருபிக்கும் வகையில் சிங்கள சேவைக்கு மட்டும் இளந்திரையன் அண்ணா பேட்டி கொடுத்திருந்தார்சிங்களத்தி

தமிழ் ஓசை வாய் திறந்திருக்காதே.அண்மைகாலமாக தமிழ் சேவையை புலிகள் புறக்கணித்து வருகின்றார்கள் அதனை நிருபிக்கும் வகையில் சிங்கள சேவைக்கு மட்டும் இளந்திரையன் அண்ணா பேட்டி கொடுத்திருந்தார்சிங்களத்தி

மாணவர் பேரவை சிங்கள அரசுக்கும் இராணுவத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களின் படங்களை தேடி எடுக்க முடியாதா...?? எடுக்க முடிந்தால் மானவர் பேரவை மீது கொதித்து போய் உள்ள சிங்கள இராணுவம் எனும் தலைப்பில் ஒண்றையும், பின்னர் படங்களை மாற்றி போட்டு... தமிழ் மாணவர்களின் எழுச்சியை எனும் தலைப்பிலும், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மாணவர் பேரவை எனும் தலைப்பில் ஒரு பிரசண்டேசன் ஒண்டை செய்து ஏற்றி விடுவம்...

என்னாலை முடிந்த படங்கலை இங்கே ஏற்றி விடுகிறேன்... நீங்களும் இணையுங்கள்... மற்றும் முடிந்தவர்கள் எல்லாம் இணைத்து விட்டீர்கள் எண்டால் பலதரப்பட்ட வகையில் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்...

ஒரு வ்வீடியோ இருக்கு ஏன நினைகிறன்

ஒரு வ்வீடியோ இருக்கு ஏன நினைகிறன்

புலிகளை சம்பந்த படுத்தாத தலைப்பு ஒண்டிலை உடனடியா தரவேற்றி விடுங்கோ... அடுத்ததாக அதேமாதிரி எழுத்து விளக்கங்களோடு கூடிய கிளிப்ஸ் புகைபடங்கள் எல்லாம் இணைந்தாக ஒண்டு செய்யலாம் எண்டு நினைக்கிறன்.. தேவை எண்டா உங்கடை வீடியோவை நான் பயன் படுத்துறன்...

தோழன் நிலக்சனுக்கு எனது கண்ணீர் காணிக்கைகள்

சகோதரன் நிலக் ஷனின் இழப்பை கண்ணீர் அஞ்சலிகளால் மட்டும் ஈடு செய்யவிட முடியுமா?

ஜானா

ஒரு பல்கலைக்கழகமாணவனுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் நிலை????? தாயகத்து மாணவர்களிற்காக புலம்பெயர்வாழ் இளைய சமுதாயத்தினர்தான் குரல் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மாணவர்கள், முக்கியமாக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுக்கவேண்டும். நாமும் அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும்.

இறுதிக் கிரியைகள் முடியும் வரை தமது போராட்டம் தொடரும் -பல்லைக்கழக மாணவர்

Friday, 03 August 2007

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் மாணவன் சகாதேவன் நிலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப்பகிஷ் கரிப்பில் ஈடுபட்டனர்.

சகாதேவன் நிலக்ஷன் நேற்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனையடுத்து நேற்றுப் பல்கலைக் கழகத்துக்கு வந்த மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப் பட்டிருந்தன.

சுட்டுக்கொல்லப்பட்ட நிலக்ஷனின் இறுதிக் கிரியைகள் முடியும் வரை தமது பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் எனப் பல்லைக்கழக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

tamiloosai

  • கருத்துக்கள உறவுகள்

டிலக்சனின் உடல் தீயுடன் சங்கமமானது

[வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 19:34 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட டிலக்சனின் உடல் இன்று வெள்ளிக்கிழமை தீயுடன் சங்கமமானது.

முன்னதாக டிலக்சனின் உடல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது

பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் டென்மார்க் நாட்டின் இணைப்பாளர் கலாநிதி கென்றிக், யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையப் பணிப்பாளர் போராசிரியர் சண்முகதாஸ், இணைப்பாளர் அருட்திரு

ரூபன் மரியாம்பிள்ளை, கலைப்பீட ஊடகத்துறை மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

கொக்குவில் இந்து மயானத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மாணவரின் படுகொலையை கண்டித்து யாழ். ஊடக மாணவ சமூகத்தினர் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.