Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகேந்திரன் தர்மலிங்கம்: போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளி நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகேந்திரன் தர்மலிங்கம்: போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளி நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
நாகேந்திரன்

பட மூலாதாரம்,SHARMILA

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்பாற்ற கடைசி வரை போராடிய அவரது குடும்பத்தார் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

முன்னதாக, நேற்று தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் அனைத்து விதமான சட்டப்பூர்வ வாய்ப்புகளும் முடிவுக்கு வந்ததை அடுத்து, நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.

34 வயதான நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் எதையும் அவரது தரப்பு முன்வைக்கவில்லை என சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது.

மேலும், விசாரணையை இழுத்தடிக்க நாகேந்திரனின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்வதாக நீதிபதிகள் அதிருப்தியை வெளியிட்டனர். நாகேந்திரனின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் முன்பே நிராகரித்துவிட்டார்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், அந்நாட்டின் மாமன்னர் ஆகியோரும் நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அனைத்து சட்டப்பூர்வ வாய்ப்புகளும் முடிந்துபோனதால் நாகேந்திரன் தூக்கிலிடப்படுவது கடந்த வாரம் உறுதியானது. இதையடுத்து, அவரது தாயாரும் உடன்பிறந்தோர் மூவரும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விரைந்தனர்.

நாகேந்திரன் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியாக சுந்தரேஷ் மேனன் பொறுப்பில் இருந்தார். பின்னர் நாகேந்திரனின் மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை அவரது தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது என்பதைச் சுட்டிக்காட்டிய நாகேந்திரன் தரப்பு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டது,

மேலும் இது நாகேந்திரனுக்கு சிங்கப்பூர் அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையை மீறும் செயல் என்றும் நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், இந்த வாதம் எடுபடவில்லை.

நாகேந்திரனின் மேல்முறையீட்டு மனு முன்பு விசாரிக்கப்பட்டபோது, இது குறித்து அவரது தரப்பு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, நாகேந்திரனின் தாயார் நீதிபதிகளை நோக்கி, கண்ணீர்மல்கப் பேசினார்.

"என் மகன் எனக்கு உயிருடன் வேண்டும்," என்று அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார். எனினும், அவரது அந்த கண்ணீர் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலையின் மனு தீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிங்கப்பூர் சட்டப்படி, நாகேந்திரனின் குடும்பத்தார் அவரைச் சந்திக்க இரண்டு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கண்ணாடித் தடுப்புக்கு மத்தியில் உள்ள இடைவெளியில், ஒருவருக்கொருவர் கைகளை மட்டும் பற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், நாகேந்திரனின் தாயார் தன் மகனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் பேசும் பழக்கம் இல்லாத நாகேந்திரனும் தாயாரைக் கண்டதும் 'அம்மா.. அம்மா... ' என்று தொடர்ந்து கதறியதாகவும், அது நீதிமன்ற வளாகத்தில் எதிரொலித்ததாகவும் அவருக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்தது.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் முந்நூறுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் நாகேந்திரனைத் தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.

அறிவுசார் குறைபாடு உள்ளவர் என்பதால் 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கத்தை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

"கடைசி வரை முயற்சி செய்வோம். எங்கள் நம்பிக்கையை கைவிடத் தயாரில்லை," என்று நாகேந்திரனின் உறவினர் தேன்மொழி சின்னையா கூறினார்.

இந்த அமைதிப் போராட்டத்தில் நாகேந்திரனின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சிங்கப்பூர் சட்டப்படி வெளிநாட்டவர்கள் அங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க அனுமதி இல்லை.

மரண தண்டனைக்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கப்பூரை சேர்ந்த செயற்பாட்டாளர் கிர்ஸ்டென் ஹான், நாகேந்திரன் தனது விருப்பமான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்வதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மரண தண்டனைக்கு முன்பாக சிறையில் இருப்பவருக்கு அவரது குடும்பத்தினர் துணிகள் வாங்கித் தர அனுமதிக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்போ அல்லது பின்போ குடும்பத்தினரிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாகேந்திரனும் தூக்கிலிடப்பட்ட நிலையில், மலேசியாவில் உள்ள அவரது சகோதரி ஷர்மிளாவை தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயற்சி மேற்கொண்டது எனினும், இணைப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மேலும் இரண்டு மலேசியர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-61244377

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய போதைப்பொருள் வியாபாரிகள் எல்லாம் முக்கிய நகரங்களில் மாடமாளிகைகள் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. இடையில் அகப்படும் அப்பாவிகள் தான் இப்படி தண்டனைகளுக்கு ஆளாகின்றனர்.. கத்திக்குத்துக்கும் ஆளாகின்றனர். 

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்கின்றவர்களுக்கும், ஒரு நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்துகின்றவர்களுக்கும் மரண தண்டனை கொடுத்து அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. இத் தவறை நானோ அல்லது நாளைக்கு என் பிள்ளைகளோ செய்தாலும் இதுவே என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்கின்றவர்களுக்கும், ஒரு நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்துகின்றவர்களுக்கும் மரண தண்டனை கொடுத்து அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. இத் தவறை நானோ அல்லது நாளைக்கு என் பிள்ளைகளோ செய்தாலும் இதுவே என் நிலைப்பாடு.
 
நிழலி… இவர் ஒரு மன நோயாளி.
அதை நிரூபிக்கக் கூடிய அளவில்,
அவர்களுக்கு வைத்திய உதவியும், சட்ட உதவியும், 
பொருளாதார வளமும் இல்லாமல் போனதால்…
அந்தத் தாய்… தன் மகனை, அவர் கண் முன்னாலேயே இழந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

பெரிய பெரிய போதைப்பொருள் வியாபாரிகள் எல்லாம் முக்கிய நகரங்களில் மாடமாளிகைகள் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. இடையில் அகப்படும் அப்பாவிகள் தான் இப்படி தண்டனைகளுக்கு ஆளாகின்றனர்.. கத்திக்குத்துக்கும் ஆளாகின்றனர். 

அப்பாவிகளா ? 

அடப்பாவி நெடுக்காலபோவான் குறுக்கால போறீங்களே 🤣

7 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி… இவர் ஒரு மன நோயாளி.
அதை நிரூபிக்கக் கூடிய அளவில்,
அவர்களுக்கு வைத்திய உதவியும், சட்ட உதவியும், 
பொருளாதார வளமும் இல்லாமல் போனதால்…
அந்தத் தாய்… தன் மகனை, அவர் கண் முன்னாலேயே இழந்து விட்டார்.

மனநோயாளி போதைப்பொருள் கடத்தலாமா? 

(இவரை மனதில் இறுத்திக் கூறவில்லை )

14 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி… இவர் ஒரு மன நோயாளி.
அதை நிரூபிக்கக் கூடிய அளவில்,
அவர்களுக்கு வைத்திய உதவியும், சட்ட உதவியும், 
பொருளாதார வளமும் இல்லாமல் போனதால்…
அந்தத் தாய்… தன் மகனை, அவர் கண் முன்னாலேயே இழந்து விட்டார்.

தமிழ் சிறி, அவர் மனநோயாளி அல்ல. 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது IQ Level 69 ஆக உள்ளது என்று கண்டறிந்தனர். இந்த 69 உள்ளவர்களை intellectual disability உள்ளவர்கள் என்று வகைப்படுத்துவர். சில நாடுகள் இவ்வாறு intellectual disability உள்ளவர்களை மரண தண்டனைக்குட்படுத்தாதவாறு சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால் சிங்கபூரில் இச் சட்டம் இல்லை.

இவர் தன் தொடையில் சிறு பையை ஒட்டி, அதனுள் போதப் பொருளை வைத்து கடத்தியிருக்கின்றார். அதை அவர் நீதிமன்றில் ஒத்தும் கொண்டுள்ளார். தான் வறுமை காரணமாக மேலதிகமாக வருமானம் பெறுவதற்காக அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறியுள்ளார். போதைப் பொருளால் ஏற்படும் தீங்கை நன்கு அறிந்தவராக, அவ்வாறான ஒன்றை களவாகத்தான் கொண்டு வர வேண்டும் என்ற புரிதலுடன் உள்ளவராக இருக்கும் ஒருவரை intellectual disability  என்று ஒத்துக் கொள்ள முடியாது என்று சிங்கபூரின் அனைத்து நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. அவர்கள் சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.

கடத்தல் காரர்கள், கொலைகாரர்கள் தாம் தப்ப எடுக்கும் கடைசி ஆயுதம், தாம் மனநிலை சரியில்லாமல் செய்து விட்டோம் என்று நிரூபிக்க முனைவதுதான்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மனநோயாளி போதைப்பொருள் கடத்தலாமா? 

(இவரை மனதில் இறுத்திக் கூறவில்லை )

போதைப் பொருள் கடத்தலை… நான் நியாயப் படுத்தவில்லை.
அதனால்.. பாதிக்கப் படுபவர்கள் அநேகம் என்பதனையும் அறிவேன்.

அந்தப் பொருளை கொண்டு சென்றவருக்கு, அது போதைப் பொருள் தானா…
என்று தெரியாமல் இருந்திருக்காலாம்.

2 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி, அவர் மனநோயாளி அல்ல. 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது IQ Level 69 ஆக உள்ளது என்று கண்டறிந்தனர். இந்த 69 உள்ளவர்களை intellectual disability உள்ளவர்கள் என்று வகைப்படுத்துவர். சில நாடுகள் இவ்வாறு intellectual disability உள்ளவர்களை மரண தண்டனைக்குட்படுத்தாதவாறு சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால் சிங்கபூரில் இச் சட்டம் இல்லை.

இவர் தன் தொடையில் சிறு பையை ஒட்டி, அதனுள் போதப் பொருளை வைத்து கடத்தியிருக்கின்றார். அதை அவர் நீதிமன்றில் ஒத்தும் கொண்டுள்ளார். தான் வறுமை காரணமாக மேலதிகமாக வருமானம் பெறுவதற்காக அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறியுள்ளார். போதைப் பொருளால் ஏற்படும் தீங்கை நன்கு அறிந்தவராக, அவ்வாறான ஒன்றை களவாகத்தான் கொண்டு வர வேண்டும் என்ற புரிதலுடன் உள்ளவராக இருக்கும் ஒருவரை intellectual disability  என்று ஒத்துக் கொள்ள முடியாது என்று சிங்கபூரின் அனைத்து நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. அவர்கள் சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு.
 
நிழலி…. அவரே, வருமானத்திற்காக கடத்தினேன் என்று ஒப்புக் கொண்ட பின்….
மேலே கூறிய எனது கருத்தை, வாபஸ் பெறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவர் தன் தொடையில் சிறு பையை ஒட்டி, அதனுள் போதப் பொருளை வைத்து கடத்தியிருக்கின்றார். அதை அவர் நீதிமன்றில் ஒத்தும் கொண்டுள்ளார். தான் வறுமை காரணமாக மேலதிகமாக வருமானம் பெறுவதற்காக அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறியுள்ளார். போதைப் பொருளால் ஏற்படும் தீங்கை நன்கு அறிந்தவராக, அவ்வாறான ஒன்றை களவாகத்தான் கொண்டு வர வேண்டும் என்ற புரிதலுடன் உள்ளவராக இருக்கும் ஒருவரை intellectual disability  என்று ஒத்துக் கொள்ள முடியாது என்று சிங்கபூரின் அனைத்து நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. அவர்கள் சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.

தொடையில் சிறுபையை ஒட்டி..

கிலோ கணக்கில் கடத்தி...

சிங்கப்பூரை சீரழிச்சு..

பெரும் குற்றத்தை செய்து..

மரண தண்டனைக்கு ஆளாக வேண்டியவர் ஆகிட்டார்..

தொடையில் பையை ஒட்டி.. அதற்குள் போதைப் பொருள் நிரப்பி.. வறுமையை பயன்படுத்தி.. இவரை ஒரு காவியாக பாவிச்சவங்கள் எங்க..??!

சிங்கப்பூரோ.. அதன் அண்டை அயலான மலேசியாவோ.. இல்ல இன்னும் இதர நாடுகளோ ஏன் இந்த வலையமைப்பை முழுமையாகக் கண்டுபிடிச்சு.. இந்த வியாபாரத்தின் உச்ச பயனாளிகளை கண்டுபிடிக்க முடியல்ல..?! அதை எது தடுக்குது..???!

லண்டனிலும் இதே தான் நிலைமை.. பாடசாலைப் பிள்ளைகளை.. கருவியும் ஆக்கி.. பாவனையாளர்களுமாக்கி.. இந்த வியாபாரத்தில் போட்டியையும் கூட்டி.. இறுதியில் கத்திக்குத்தில் சாக.. உச்ச பயனாளிகள் மூட்டைக் கணக்கில் பவுன்சை அள்ளிக் கொண்டு போய்.. வீடு வீடா வாங்கிப் போட்டிட்டாங்கள். கழுத்து நிறைய தங்கமா போட்டிருக்காங்கள். வீடு சும்மா இல்ல.. எல்லாம் ரெடி காசு.. இன்வெஸ்ட்மென்டா சும்மா கொடிகட்டிப் பறக்கிறாங்கள். அடிமட்டம் 100 பவுனுக்கு 1000 பவுனுக்கு கத்தியால குத்திக்கிட்டு சாகுது. 

பயங்கரவாதம் என்று விடுதலைப் போராட்டங்களையும் சேர்த்து தங்களின் சுயலாபத்துக்கு அழிக்க கூடியவைக்கு.. இந்தப் போதைப்பொருள் வர்த்தக பயங்கரவாதத்தை அழிக்க முடியாது என்றில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைத்தால்.. ஒரு மாதத்திற்குள் இதற்கு முடிவு கட்டலாம். அப்பாவிகள்.. இந்த வர்த்தக முதலைகளிடம் சிக்கி சாவதையும்.. பாவனையாளர்களாகி சீரழிவதையும் தடுக்கலாம்..

ஏன் தடுக்கல்ல.. இதெல்லாம்.. பில்லியன் டொலர்கள் புரளும் வியாபாரம். இதன்.. உச்ச... பயனாளிகள் எல்லா அரசு மட்டத்திலும் இருக்கினம். அதுதான் அடக்கி வாசிக்கிறது. இடைக்கிடை அப்பாவிகளை பிடிச்சு போட்டு.. சட்டத்தை நிலைநாட்டிறம் என்ற பதவி உயர்வுகளுக்கான நாடகங்கள். அதற்கு பலி.. அப்பாவிகள்..

போதைப் பொருள்.. எவ்வளவு கொடியதோ.. அதை விடக் கொடிய சிகரட்.. மதுபானம்... அற்ககோல் வகைகள்... அரச வருவாய் பெருக்க சட்டத்துக்குள் ஆபத்து விளம்பரம் ஒட்டி விற்கிறாங்கள். அதை மெளனமாக அங்கீகரித்து நிற்பவர்கள்.. கூட.. இங்கு.. இந்த அப்பாவிக்கு நிகழ்ந்து.. சரிதான் என்பது நகைப்புக்கிடமான விடயம்.

சிங்கப்பூரில்.. மதுபானம்.. சிகரெட் பிடிக்க ஏன் தடை வரேல்ல...???! சரி.. சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் வரும் மார்க்கங்கள் தெளிவாக இருந்தும்.. ஏன் சிங்கப்பூர் அந்த நாடுகளுக்கு தடை போடவில்லை..?! சிங்கப்பூரில் போதைப்பொருள் என்று சொல்லி தடை செய்ததை.. மேற்கு நாடுகள்.. பகிரங்கமாக விற்கும் நிலையில்.. அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு ஏன் தடையில்லை..?!

ஆக சிங்கப்பூரின் டபிள் கேமில்.. இந்த அப்பாவி தான் சிங்கப்பூருக்கு கிடைத்த நட்டமில்லாத இலக்கு.. தன் சட்ட அமுலாக்கத்தைக் காட்ட. பதவி உயர்வுகளை தக்க வைக்க. அவ்வளவும் தான். இது போதைப்பொருள் வியாபாரம் என்ற பல ரில்லியன் டொலர் வியாபாரத்தை தடுக்க துளியும் உதவாது. இது சிங்கப்பூருக்கும் நன்கு தெரிந்தே தான் இதைச் செய்தும் இருக்கும். 

அதனால்.. இந்த மரண தண்டனைக்கு பின்னால் சிங்கப்பூர் காட்டும் போலி நாடகத்துக்கு ஆதரவளிக்க முடியாது. உண்மையில்.. போதைப்பொருள் வியாபாரம் பாவனையை தடுக்கனுன்னா.. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அதனை செய்யலாம். குறைந்தது 30 நாட்களுக்குள் போட வேண்டிய பெரிய புள்ளிகளைப் போட எல்லாம் அடங்கும். செய்ய ஆக்களில்லை. ஏனெனில்.. இந்த வியாபாரம் மூலம் ஆதாயம் பெறுபவர்கள் அரச.. அதிகார மட்டங்களில் அதிகம். 

Edited by nedukkalapoovan

11 minutes ago, nedukkalapoovan said:

தொடையில் சிறுபையை ஒட்டி..

கிலோ கணக்கில் கடத்தி...

சிங்கப்பூரை சீரழிச்சு..

பெரும் குற்றத்தை செய்து..

மரண தண்டனைக்கு ஆளாக வேண்டியவர் ஆகிட்டார்..

தொடையில் பையை ஒட்டி.. அதற்குள் போதைப் பொருள் நிரப்பி.. வறுமையை பயன்படுத்தி.. இவரை ஒரு காவியாக பாவிச்சவங்கள் எங்க..??!

சிங்கப்பூரோ.. அதன் அண்டை அயலான மலேசியாவோ.. இல்ல இன்னும் இதர நாடுகளோ ஏன் இந்த வலையமைப்பை முழுமையாகக் கண்டுபிடிச்சு.. இந்த வியாபாரத்தின் உச்ச பயனாளிகளை கண்டுபிடிக்க முடியல்ல..?! அதை எது தடுக்குது..???!

லண்டனிலும் இதே தான் நிலைமை.. பாடசாலைப் பிள்ளைகளை.. கருவியும் ஆக்கி.. பாவனையாளர்களுமாக்கி.. இந்த வியாபாரத்தில் போட்டியையும் கூட்டி.. இறுதியில் கத்திக்குத்தில் சாக.. உச்ச பயனாளிகள் மூட்டைக் கணக்கில் பவுன்சை அள்ளிக் கொண்டு போய்.. வீடு வீடா வாங்கிப் போட்டிட்டாங்கள். கழுத்து நிறைய தங்கமா போட்டிருக்காங்கள். வீடு சும்மா இல்ல.. எல்லாம் ரெடி காசு.. இன்வெஸ்ட்மென்டா சும்மா கொடிகட்டிப் பறக்கிறாங்கள். அடிமட்டம் 100 பவுனுக்கு 1000 பவுனுக்கு கத்தியால குத்திக்கிட்டு சாகுது. 

பயங்கரவாதம் என்று விடுதலைப் போராட்டங்களையும் சேர்த்து தங்களின் சுயலாபத்துக்கு அளிக்க கூடியவைக்கு.. இந்தப் போதைப்பொருள் வர்த்தக பயங்கரவாதத்தை அளிக்க முடியாது என்றில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைத்தால்.. ஒரு மாதத்திற்குள் இதற்கு முடிவு கட்டலாம். அப்பாவிகள்.. இந்த வர்த்தக முதலைகளிடம் சிக்கி சாவதையும்.. பாவனையாளர்களாகி சீரழிவதையும் தடுக்கலாம்..

ஏன் தடுக்கல்ல.. இதெல்லாம்.. பில்லியன் டொலர்கள் புரளும் வியாபாரம். இதன்.. உச்ச... பயனாளிகள் எல்லா அரசு மட்டத்திலும் இருக்கினம். அதுதான் அடக்கி வாசிக்கிறது. இடைக்கிடை அப்பாவிகளை பிடிச்சு போட்டு.. சட்டத்தை நிலைநாட்டிறம் என்ற பதவி உயர்வுகளுக்கான நாடகங்கள். அதற்கு பலி.. அப்பாவிகள்..

போதைப் பொருள்.. எவ்வளவு கொடியதோ.. அதை விடக் கொடிய சிகரட்.. மதுபானம்... அற்ககோல் வகைகள்... அரச வருவாய் பெருக்க சட்டத்துக்குள் ஆபத்து விளம்பரம் ஒட்டி விற்கிறாங்கள். அதை மெளனமாக அங்கீகரித்து நிற்பவர்கள்.. கூட.. இங்கு.. இந்த அப்பாவிக்கு நிகழ்ந்து.. சரிதான் என்பது நகைப்புக்கிடமான விடயம்.

சிங்கப்பூரில்.. மதுபானம்.. சிகரெட் பிடிக்க ஏன் தடை வரேல்ல...???! சரி.. சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் வரும் மார்க்கங்கள் தெளிவாக இருந்தும்.. ஏன் சிங்கப்பூர் அந்த நாடுகளுக்கு தடை போடவில்லை..?! சிங்கப்பூரில் போதைப்பொருள் என்று சொல்லி தடை செய்ததை.. மேற்கு நாடுகள்.. பகிரங்கமாக விற்கும் நிலையில்.. அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு ஏன் தடையில்லை..?!

ஆக சிங்கப்பூரின் டபிள் கேமில்.. இந்த அப்பாவி தான் சிங்கப்பூருக்கு கிடைத்த நட்டமில்லாத இலக்கு.. தன் சட்ட அமுலாக்கத்தைக் காட்ட. பதவி உயர்வுகளை தக்க வைக்க. அவ்வளவும் தான். இது போதைப்பொருள் வியாபாரம் என்ற பல ரில்லியன் டொலர் வியாபாரத்தை தடுக்க துளியும் உதவாது. இது சிங்கப்பூருக்கும் நன்கு தெரிந்தே தான் இதைச் செய்தும் இருக்கும். 

அதனால்.. இந்த மரண தண்டனைக்கு பின்னால் சிங்கப்பூர் காட்டும் போலி நாடகத்துக்கு ஆதரவளிக்க முடியாது. உண்மையில்.. போதைப்பொருள் வியாபாரம் பாவனையை தடுக்கனுன்னா.. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அதனை செய்யலாம். குறைந்தது 30 நாட்களுக்குள் போட வேண்டிய பெரிய புள்ளிகளைப் போட எல்லாம் அடங்கும். செய்ய ஆக்களில்லை. ஏனெனில்.. இந்த வியாபாரம் மூலம் ஆதாயம் பெறுபவர்கள் அரச.. அதிகார மட்டங்களில் அதிகம். 

சிங்கபூரில் இந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உற்பத்தி ஆவது இல்லை. எனவே தன் நாட்டில் உற்பத்தி ஆகாத இவ் தடை செய்யப்பட்ட பொருள் அவ் நாட்டுக்குள் வரும் வழிகளை கடுமையாக கட்டுப்படுத்தி விட்டால், இந்த சீரழிவை கட்டுக்குள் வைத்து இருக்கலாம் என அவ் அரசு நம்பி செயலாற்றுகின்றது. அதன் ஒரு அங்கமாக, விமான நிலையம் மற்றும் அதை போன்ற நிலையங்களினூடாக போதைப் பொருளை கடத்துகின்றவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கின்றது. 

இது ஒரு சிம்பிளான, சிங்கபூரால் தன் சக்திக்குட்பட்டு செய்யக் கூடிய விடயம். உங்களைப் போன்றவர்களின் புத்திமதிகளை காதில் வாங்காமல் தன்னால் முடிந்த அளவுக்கு அது தடுக்க முனைகின்றது.

மலேசியாவில் இருந்து மட்டுமல்ல, கனடாவில் இருந்து - கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட ஆனால் சிங்கபூரால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை கொண்டு போனாலும் இதே கதிதான். கனடிய தமிழர் ஒருவரும் அங்கு கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றார் இன்னும்.

ஆனாலும் ஒரு 'குடு' காரனது செயலை நல்லா நியாயப்படுத்துகின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் மிகக் கடுமையான தண்டனைகள் உள்ளன. அப்பாவிகள் மாட்டுப்பட்டதும் நடந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

ஆனாலும் ஒரு 'குடு' காரனது செயலை நல்லா நியாயப்படுத்துகின்றீர்கள்!

குடிகாரனுக்கும்.. புகைக்காரனுக்கும் ஏன் சிங்கப்பூரில் தடையில்லை.. வரி வட்டின்னு வருவதாலா..?! 

'குடு' எப்படி தீங்கோ.. அதை விடத் தீங்கு புகை. பக்கத்தில் இருப்பவனையும் பாதிக்கும். அதேபோல்.. குடி.. குடியையே நாசம் பண்ணும். அதை எல்லாம் ஏன் சிங்கப்பூர் இன்னும் ஒழிக்கல்ல.

சரி அதைவிடுவம்.. சிங்கப்பூருக்குள்.. தரைவழியா வரனுன்னா.. மலேசியா வழி தான். அங்கு ஸ்கானர்களை போட்டு ஆளை ஸ்கான் பண்ணி உள்ள விட்டால்.. குடு மட்டுமல்ல.. இன்னும் எவ்வளத்தையோ தடுக்கலாம். விபச்சாரம் உட்பட. அதெல்லாம்.. திறந்துவிட்டிருக்குது.. நோஞ்சானுகளை பிடிச்சு.. வீரத்தை.. போதை ஒழிப்ப.. சட்ட அமுலாகத்தை நிரூபிக்க வேண்டிய அவல நிலை சிங்கப்பூருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

மாற்றுதிறனுடையவருக்கு இப்படி ஒரு வேண்டாத செயல் வேணுமா..அந்த சமுகத்திற்கே இழுக்கான செயல்பாடு தாள் இது....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் தமிழருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் : சர்ச்சையை அடுத்து ஆர்ப்பாட்டம்

சிங்கப்பூரில் போதைவஸ்த்துக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி மலேசியத் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை (27 ) சாங்கி நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டுள்ளது.

May be an image of 1 person, standing and text that says 'In Loving Memory Of Nagaenthran K Dharmalingam Born on 13th September 1988 Passed away peacefully on 27th April 2022 Wake Held At: Blk 38 Sin Ming Drive, #01-545, Singapore 575712 Wake Time: Wednesday, 27th April 2022, 1.00pm to 4.00pm Cortege Departs On: Wednesday, 27th April 2022 at 4.00pm Repatriation To: Ipoh, Malaysia N BEREAVEMENT SERVICES NITHIYA JEEVAN 24 Hour Hotline: 6100 7072 Daniel (Anil): 9694 1042'

2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 3 மேசைக்கரண்டி (43 கிராம் ) அளவான போதைவஸ்தை எடுத்துவர முற்சித்த குற்றச்சாட்டில் தர்மலிங்கம் ( 34 வயது ) என்ற மேற்படி நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 10 வருடங்களுக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்திருந்தார்.

May be an image of 1 person, standing and indoor

300-400 people attend candlelight vigil at Hong Lim Park for M'sian drug  traffickers on death row - Mothership.SG - News from Singapore, Asia and  around the world

சிங்கப்பூரில் 15 கிராமிற்கு அதிகமான போதைவஸ்தை வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.

May be an image of 5 people, people standing and text

நாகேந்திரன் தர்மலிங்கம் மதிநுட்ப ஆற்றல் குறைந்த ஒருவர் என மருத்துவ பரிசோதனையொன்று தெரிவிக்கின்ற நிலையில், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Singapore confirms mentally disabled Indian-origin Malaysian's death  sentence | World News - Hindustan Times

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

People took part in a vigil ahead of the planned execution of Malaysian drug trafficker Nagaenthran Dharmalingam, outside Singapore High Commission in Kuala Lumpur, Malaysia, Tuesday.(REUTERS) 

அவரது மரணதண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தக்கோரும் இணையத்தளம் மூலமான மனுவில் 70 ஆயிரம் பேர் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றத்தை தடுத்து நிறுத்த அவரது குடும்பத்தினர் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

Singapore judges asked to show 'mercy' in high-profile execution appeal |  Reuters

அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தனக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து தனது இறுதிப் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அவ்வாறு அவர் தனக்குப் பிடித்தமான ஜீன்ஸ் மற்றும் ரீசேர்ட்டை அணிந்தவாறு நாற்காலியில் அமர்ந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இங்கு காணலாம். அத்துடன் அவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் இரு மணித்தியாலங்களை கழிக்கவும் அனுமதிக்கப்பட்டது.
 
https://www.virakesari.lk/article/126491

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்சிணாமூர்த்தி காத்தையா: மரணத்தின் விளிம்பில் மேலும் ஒரு மலேசியர்; நாளை சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 
தட்சிணாமூர்த்தி காத்தையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார். இந்தத் தகவல் அவரது குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. அதனால் தமக்குத் தாமே வாதாட உள்ளார்.

காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்கிறார் தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதம்.

45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர். விசாரணையின்போது, தமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆதரிக்க தமக்கு பணம் தேவைப்பட்டதாகவும், ஒருசிலரால் தாம் தட்சிணாமூர்த்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிறிஸ்டின் ஜெயமணி தெரிவித்தார்.

கம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தட்சிணாமூர்த்தி என்னிடம் ஒரு பையைக் கொடுப்பார். அதில் சில பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்கச் சொல்வார். அந்த பாக்கெட்டுகள் செய்தித்தாள்களாலும் கனமான டேப்புகளாலும் சுற்றப்பட்டிருக்கும். மேலும் கனமாகவும் இருக்கும்.

"எனவே, அவற்றில் விளையுயர்ந்த பொருட்கள் இருக்கும் எனக் கருதினேன். வேலை முடிந்ததும் அவர் எனக்கு 200 சிங்கப்பூர் டாலர்கள் (630 மலேசிய ரிங்கிட்) தருவார். தட்சிணாமூர்த்தி அளித்த பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பதோ, அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பதோ எனக்குத் தெரியாது," என்று கிறிஸ்டின் ஜெயமணி கூறியிருந்தார்.

இதேபோல் தட்சிணாமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தாம் போதைப் பொருள் கடத்துவது தமக்கு அறவே தெரியாது என்றும், சீன மருத்துவக்கான மருந்துகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாகவே தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார்.

"மலேசிய, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தாம் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சீன மருந்துகளை ராஜா என்பவர் தம்மிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

"ஒருமுறை ஆர்வத்தின் பெயரில், நான் கொண்டு செல்வது என்ன என்று ராஜாவிடம் கேட்டேன். அதற்கு, அபாயகரமான மருந்துகள் ஏதுமில்லை என்று அவர் கூறினார். அதன் பின்னர், உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியும்படி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாக்கெட்டில் பிரவுன் (brown) நிறத்தில் ஏதோ இருப்பது தெரிந்தது. எனவே, அது சீன மருந்தாகத்தான் இருக்கும் என்று கருதினேன்.

"சந்தேகம் ஏதும் எழாததால், நான் மேலதிக விவரங்கள் எதையும் கேட்கவில்லை. ராஜாவுக்கும் கிறிஸ்டினுக்கும் இடையே தகவல் தொடர்பாளராகவும் நான் மாறிப்போனேன்," என்று தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் வாக்குமூலம் அளித்திருந்தார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயல்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.

இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.

கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தியும் கிறிஸ்டினும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், கிறிஸ்டின் வெறும் தபால் சேவையைப் போல் செயல்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார்.

அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது.

நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம்

பட மூலாதாரம்,SHARMILA

படக்குறிப்பு,

நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம்

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் தேதி, தட்சிணாமூர்த்தி மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தட்சிணாமூர்த்தியால் தமக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரையும் நியமிக்க முடியவில்லை. அவருக்குப் போதுமான வசதியில்லாத நிலையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்களும் அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்பவில்லை என்கிறார் லாயர்ஸ் ஃபார் லிபெர்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸைட் மாலெக்.

"போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடினால், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றங்களால் பழிவாங்கப்படுவோம் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் தட்சிணாமூர்த்தி இன்று தமக்குத்தாமே வாதாட வேண்டிய நிலையில் உள்ளார்," என்று ஸைட் மாலெக் கூறியுள்ளார்.

நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-61253817

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன குற்றம் செய்தாலும் சட்டரீதியான உயிர்பலி பற்றிய செய்திகளை பார்க்கும்போது அனுதாபமே ஏற்படுகின்றது.

சில வருடங்கள் முன் அவுஸ்திரேலியா தமிழ் இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் இதே குற்றத்துக்காக சுட்டு கொல்லப்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
28 ஏப்ரல் 2022
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்
 
தட்சிணாமூர்த்தி காத்தையா

பட மூலாதாரம்,GETTY IMAGES

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது.

இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, மே 20ஆம் தேதி தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 13 கைதிகள் தொடர்பான ஒரு சிவில் வழக்கின் அங்கமாக தட்சிணாமூர்த்தியின் வழக்கும் உள்ளது. அந்த கைதிகள் தங்களுடைய பார்வைக்கு காட்டப்படாமல் தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கடிதப் பரிவர்த்தனையை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கான வழக்கு விசாரணைக்காக சிறைக்கு வெளியே மனித உரிமைகள் ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான் குரல் கொடுத்து வருகிறார்.

அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு பயந்து எந்த வழக்கறிஞரும் வழக்கை எடுக்க விரும்பாததால், தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ரவியும் ஹானும் தெரிவித்தனர்.

தட்சிணாமூர்த்திக்காக ஏன் தற்போது ஆஜராகவில்லை என்று கேட்டதற்கு, "மரண தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளை கடைசி கட்டத்தில் கையில் எடுக்கும் வழக்கறிஞர்கள், அந்த வழக்கில் தோற்றால் நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பேசும் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அடிக்கடி ஆளாவதுண்டு. அத்தகைய வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கோரும் வழக்குச் செலவினத்தொகையை கட்டவும் நேரிடும்," என்று வழக்கறிஞர் ரவியும் கிர்ஸ்டன் ஹானும் தெரிவித்தனர்.

2011ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார். சக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறுகிறது.

யார் இந்த தட்சிணாமூர்த்தி, இவருக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் யார்?

மலேசிய தமிழர் சிங்கப்பூர் தூக்கு

பட மூலாதாரம்,REUTERS

மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 36 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் ஏப்ரல் 27 (புதன்கிழமை) தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையில் தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் தமக்குத் தாமே அவர் வாதாடினார்.

காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்றார் தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதம்.

45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர். விசாரணையின்போது, தமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆதரிக்க தமக்கு பணம் தேவைப்பட்டதாகவும், ஒரு சிலரால் தாம் தட்சிணாமூர்த்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிறிஸ்டின் ஜெயமணி தெரிவித்தார்.

கம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தட்சிணாமூர்த்தி என்னிடம் ஒரு பையைக் கொடுப்பார். அதில் சில பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்கச் சொல்வார். அந்த பாக்கெட்டுகள் செய்தித்தாள்களாலும் கனமான டேப்புகளாலும் சுற்றப்பட்டிருக்கும். மேலும் கனமாகவும் இருக்கும்.

"எனவே, அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் எனக் கருதினேன். வேலை முடிந்ததும் அவர் எனக்கு 200 சிங்கப்பூர் டாலர்கள் (630 மலேசிய ரிங்கிட்) தருவார். தட்சிணாமூர்த்தி அளித்த பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பதோ, அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பதோ எனக்குத் தெரியாது," என்று கிறிஸ்டின் ஜெயமணி கூறியிருந்தார்.

இதேபோல் தட்சிணாமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தாம் போதைப் பொருள் கடத்துவது தமக்கு அறவே தெரியாது என்றும், சீன மருத்துவத்துக்கான மருந்துகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாகவே தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார்.

"மலேசிய, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தாம் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சீன மருந்துகளை ராஜா என்பவர் தம்மிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

"ஒருமுறை ஆர்வத்தின் பெயரில், நான் கொண்டு செல்வது என்ன என்று ராஜாவிடம் கேட்டேன். அதற்கு, அபாயகரமான மருந்துகள் ஏதுமில்லை என்று அவர் கூறினார். அதன் பின்னர், உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியும்படி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாக்கெட்டில் பிரவுன் (brown) நிறத்தில் ஏதோ இருப்பது தெரிந்தது. எனவே, அது சீன மருந்தாகத்தான் இருக்கும் என்று கருதினேன்.

"சந்தேகம் ஏதும் எழாததால், நான் மேலதிக விவரங்கள் எதையும் கேட்கவில்லை. ராஜாவுக்கும் கிறிஸ்டினுக்கும் இடையே தகவல் தொடர்பாளராகவும் நான் மாறிப்போனேன்," என்று தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் வாக்குமூலம் அளித்திருந்தார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயல்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.

கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தியும் கிறிஸ்டினும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், கிறிஸ்டின் வெறும் தபால் சேவையைப் போல் செயல்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார்.

அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது.

நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம்

பட மூலாதாரம்,SHARMILA

படக்குறிப்பு,

நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம்

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் தேதி, தட்சிணாமூர்த்தி மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தட்சிணாமூர்த்தியால் தமக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரையும் நியமிக்க முடியவில்லை. அவருக்குப் போதுமான வசதியில்லாத நிலையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்களும் அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்பவில்லை என்கிறார் லாயர்ஸ் ஃபார் லிபெர்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸைட் மாலெக்.

"போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடினால், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றங்களால் பழிவாங்கப்படுவோம் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் தட்சிணாமூர்த்தி இன்று தமக்குத்தாமே வாதாட வேண்டிய நிலையில் உள்ளார்," என்று ஸைட் மாலெக் கூறியுள்ளார்.

நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-61253817

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.