Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பகிடி said:

நன்றி தமிழ் சிறி அவர்களே.யாழ் அகவை 24 இல் சுய ஆக்கம் பகுதியில் பதிந்து உள்ளேன் 

மிக வேகமாக செயல் பட்டு, புதிய தலைப்பை ஆரம்பித்துள்ளீர்கள், பகிடி.

அதே நேரம்… இங்கே உள்ள ரஞ்சித்தின் தலைப்பும், 
உங்கள் தலைப்பு பெயரில் மாற்றப் பட்டுள்ளது, ஆச்சரியமாக உள்ளது. 🤔
அப்படி.. நடக்க, சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. 😁

34 minutes ago, இணையவன் said:

@பகிடி,

உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.

இணையவன் தான்… ரஞ்சித்தின் தலைப்பை மாற்றி விட்டார் போலுள்ளது. 
றஞ்சித் வந்து… தனது தலைப்பை காணவில்லை என்று, பஞ்சாயத்து வைக்கப் போகிறார். 🤣

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

மிக வேகமாக செயல் பட்டு, புதிய தலைப்பை ஆரம்பித்துள்ளீர்கள், பகிடி.

அதே நேரம்… இங்கே உள்ள ரஞ்சித்தின் தலைப்பும், 
உங்கள் தலைப்பு பெயரில் மாற்றப் பட்டுள்ளது, ஆச்சரியமாக உள்ளது. 🤔
அப்படி.. நடக்க, சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. 😁

இணையவன் தான்… ரஞ்சித்தின் தலைப்பை மாற்றி விட்டார் போலுள்ளது. 
றஞ்சித் வந்து… தனது தலைப்பை காணவில்லை என்று, பஞ்சாயத்து வைக்கப் போகிறார். 🤣

நீங்கள் சொன்னது போல் தவறுதலாக பிழை நேர்ந்து விட்டது என்று நினைக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பகிடி said:

நீங்கள் சொன்னது போல் தவறுதலாக பிழை நேர்ந்து விட்டது என்று நினைக்கிறன்..

நிர்வாகத்தினர் அதனை, பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.
நீங்கள் யோசிக்காதீர்கள். 👍🏽

  • நியானி changed the title to மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரியோபுல் பகுதியில் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட உக்ரேனியப் பொதுமக்களின் எண்ணிக்கை 21,000 இனைத் தாண்டியிருப்பதாக அந்நகர மேயர் கூறுகிறார்.

Mariupol Mayor Says Siege Has Killed More Than 10K Civilians

தொலைக்காட்சியூடாக செய்தியாளர்களுக்குப் பேசிய மரியோபுல் நகர மேயர், மரியோபுல் பகுதியினுள் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் புகுந்ததிலிருந்து இதுவரையில் குறைந்தது 21,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிகளவில் அப்பாவி உக்ரேனியர்களை ரஸ்ஸியர்கள் இவ்விதம் கொன்றுவருவது இனவழிப்பாகக் கருதப்படக்கூடியது என்றும் அவர் மேலும் கூறினார்.

அல் ஜசீரா தொலைக்காட்சியூடாக பேசிய பொய்ச்செங்கோ, "வீதிகளில் கொல்லப்பட்டு வீசப்பட்ட எமது மக்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் தற்போது அவசர அவசரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் எமது மக்களின் உடல்களை அவர்கள் ரகசியமாக எரித்துவருவதன் மூலம் இனவழிப்பிற்கான சாட்சியங்களை அழித்துவருகிறார்கள். மரியோபுல் மீது தாம் நடத்திவரும் இனவழிப்பினை, போர்க்குற்றங்களை ரஸ்ஸியர்கள் மறைத்துவருகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இவ்வாறே, இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பவ்லோ கிரிலெங்கோ,  சீ என் என் செய்திச் சேவையுடன் பேசுகையில், "மரியோபுல் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களின் எண்ணிக்கை 21,000 என்பது சரியான கணிப்புத்தான்" என்று உறுதிப்படுத்தினார்.

"மரியோபுல்லில் இன்று நிலவும் நிலைமை மிகவும் கவலைக்குரியது. எம்மக்களில் எத்தனைபேர் இதுவரையில் கொல்லப்பட்டார்கள் என்பதனை துல்லியமாக எம்மால் கூறமுடியாது. தொடர்ச்சியான ஆக்கிரமிப்பிற்குள்ளும், முற்றான முற்றுகைக்குள்ளும் அகப்பட்டிருக்கும் எமது மக்களின் அவலம் வெளியே தெரியாதது. ஆனால், அங்கிருந்து வெளியேறியவர்கள், ரஸ்ஸியர்களால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் ஆகியவர்களின்  எண்ணிக்கையுடன் எமது மக்கள் தொகையினை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது சுமார் 20,000 இற்கும் 22,000 இற்கும் இடையிலான மக்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்துகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.

Russian forces accused of secret burials of Mariupol civilians in mass  graves | Ukraine | The Guardian

ஆனால், ஐ நா மனிதவுரிமைகள் அமைப்பு மரியோப்புல்லில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெறும் 2,000 மட்டுமே என்று கூறுகிறது. உண்மையான இழப்புக்கள் குறித்த தகவல்கள் தமக்குக் கிடைக்கும்வரை தம்மால் உக்ரேன் அரசு கூறும் எண்ணிக்கையினை உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் ஐ நா, உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தமது கணிப்பீட்டினைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என்பதனையும் மறுப்பதற்கில்லை என்றும் கூறியிருக்கிறது.

இது, முள்ளீவாய்க்கால் யுத்தத்தில் அன்றைய ஐ நா அதிகாரிகளான ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கையினை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதுடன், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட பொதுமக்கள் இறப்புக்கள் எனும் எண்ணிக்கையினையே தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக இவர்கள் இருவரும் அறிவித்ததுடன், ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினை உண்மையான பொதுமக்கள் இறப்புக் குறித்து அடக்கி வாசிக்கும்படி அழுத்தம் கொடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கிரிலெங்கோ பொதுமக்கள் படுகொலைகள் குறித்துப் பேசும்போது, "ரஸ்ஸிய ராணுவம் இரசாயத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகிறது என்பது எமக்குத் தெரியும். எமது மக்களில் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள்" என்று கூறினார். இந்தத் தாக்குதல் குறித்து பென்டகன் விசாரித்துவருவதாகக் கூறியிருக்கிறது.

"கடந்த இரவு ரஸ்ஸிய ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து இதுவரை நாம் அறிந்திராத வெடிகுண்டுகள் நகர் மீது ஏவப்பட்டன. இத்தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்த பொதுமக்கள் பலர் உடனடியாகவே மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். இது நிச்சயமாக இரசாயன ஆயுதமாக இருக்கும் என்றே நாம் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கியிவ் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள்

World Leaders Condemn Alleged Civilian Massacre By Russian Forces In Bucha

சித்திரை 15 ஆம் திகதி கியிவ் பிராந்தியப் பொலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கியிவினைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஸ்ஸிய ராணுவம் வெளியேறிச் சென்றுள்ளதையடுத்து அப்பகுதியில் குறைந்தது 900 பொதுமக்களின் உடல்களைக் கண்டெடுத்ததாகக் கூறுகின்றனர். இவர்களுள் 350 பொதுமக்கள் பூச்சா பகுதியில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாகக் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்களில் 95 வீதமானவர்கள் அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான தடயங்களைக் கொண்டிருந்ததாகக் கூறும் பொலீஸார், இன்னும் பல பொதுமக்களில் உடல்களை பாரிய மனிதப் புதைகுழிகளுக்குள் இருந்தும், கட்டிட இடிபாடுகளுக்கடியிலிருந்தும் தாம் கண்டெடுத்துவருவதாகவும் கூறுகின்றனர்.

பூச்சா படுகொலைகள்

Some Ukraine towns may be WORSE than Bucha: Locals say Russian troops  killed children | Daily Mail Online

கியிவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பூச்சாவிலிருந்து  ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த பங்குனியில் வெளியேறியபின்னர் அந்நகர்ப்பகுதியினைப் பார்வையிட்ட பொதுமக்கள் வீதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கிடந்ததை அவதானித்துள்ளனர். இதே நேரத்தில் இப்பகுதியில் பொதுமக்களின் குறைந்தது 20 உடல்களைத் தாம் கண்டதாகச் சர்வதேசச் செய்தியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவற்றுள் சில உடல்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டுக் கிடந்ததை ஏ எf பி செய்தியாளர் ஆவணப்படுத்தியிருக்கிறார். 
பூச்சா நகர மேயர் அனடொலு பெடுரொக் கூறுகையில், தம்மால் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொதுமக்களினதும் உடல்களில் தலைகளின் பின்னாலேயே துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகக் கூறுகிறார். தம்மால் கண்டெடுக்கப்பட்ட 280 பொதுமக்களின் உடல்களை தாம் பாரிய குழிகளில் அடக்கம் செய்ததாகக் கூறும் இவர், இப்பகுதியில் இதுவரையில் 350 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்லதாகக் கூறினார்.


இதேவேளை இந்த உடல்களில் சில பெண்களின் உடல்களும் காணப்பட்டதாகவும், இப்பெண்களின் உடல்கள் நிர்வாணமாக்கப்பட்டும், அவர்களின் உடல்களை ரஸ்ஸிய ராணுவம் பாதியாக எரித்தும் சென்றிருப்பது இப்பெண்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, தடயங்களை அழிப்பதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. 

டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூச்சா பிராந்தியத்தின், சபுச்சாயா பகுதியில் ஒரு வீட்டின் நிலக் கீழ் அறையொன்றில் முற்றாக எரிக்கப்பட்டிருந்த 20 ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், பல பொதுமக்களின் உடல்களிலிருந்து காதுகள் அறுக்கப்பட்டும், பற்கள் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டும் இருப்பது இப்பொதுமக்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்றும் அக்கட்டுரை கூறுகிறது. பல வீடுகளில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது ரஸ்ஸிய ராணூவம் கைய்யெறிகுண்டுகளை எறிந்துவிட்டுச் சென்றதாகவும் சாட்சிகள் கூறியிருப்பதுடன், புகைக்குண்டுகள் எறிந்த வீடுகளில் அகப்பட்டிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறி வெளியே ஓடிவரும்போது, ரஸ்ஸிய ராணூவம் அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பூச்சா பகுதியில் ரஸ்ஸிய ராணூவம் நிலைகொன்டிருந்த நாட்களில், நகரத்தின் உயர்வான கட்டிடங்களில் பதுங்கியிருந்த ரஸ்ஸிய குறிபார்த்துச் சுடும் வீரர்கள் வீதிகளால் சென்ற பொதுமக்கள் வேண்டுமென்றே தூரவிருந்து சுட்டுக் கொன்றதாக தெரியவந்திருக்கிறது.

Sexual violence towards women as 'weapon of war' to rise after Russia's  invasion, campaigners warn | The Independent

மேலும், பூச்சா நகரில் ரஸ்ஸிய ராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட சில இளம்பெண்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக நடத்திவந்ததாகவும், நகரை விட்டு ரஸ்ஸிய ராணுவம் தப்பியோடியபோது இப்பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான கொடூரம் பற்றி குறிப்பிடும் உக்ரேனின் நீதியமைச்சின் தலைமை வழக்குத் தொடுநரான லுட்மிலா லினிசோவா  , பல பெண்களும் சிறுமிகளும் ரஸ்ஸிய ராணூவத்தால் பாலியல் அடிமைகளாக ஒரு மாதம் வரை அடைத்துவைக்கப்பட்டதாகவும், இவர்களுள் 9 சிறுமிகள் கர்ப்பமாக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதே வகையான கட்டாயக் கருத்தரிப்பினை பொஸ்னியப் பெண்கள் மீது சேர்பிய இனவழிப்பு ராணூவம் சிரெப்ரெனிக்காவில் நடத்தியதென்பதும், பலநூற்றுக்கணக்கான பொஸ்னியப் பெண்கள் இதனால் கட்டாயக் கருத்தரிப்பிற்கு உள்ளானார்கள் என்பதும், பொஸ்னிய இனத்தில் சேர்பிய இனம் கலப்பதன் மூலம் பொஸ்னியகளின் அடையாளம் அழிக்கப்படவே இதனை சேர்பியர்கள் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சேர்பியர்களின் நெருங்கிய உறவுகள் என்று கருதப்படும் ரஸ்ஸியர்களும் இதே பாணியினைக் கைக்கொள்வது ரஸ்ஸிய ராணுவம் இனவழிப்பில் ஈடுபடுகிறதென்பதையே காட்டுகிறது.

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பவ்லோ கிரிலெங்கோ,  சீ என் என் செய்திச் சேவையுடன் பேசுகையில், "மரியோபுல் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களின் எண்ணிக்கை 21,000 என்பது சரியான கணிப்புத்தான்" என்று உறுதிப்படுத்தினார்

1 hour ago, ரஞ்சித் said:

ஆனால், ஐ நா மனிதவுரிமைகள் அமைப்பு மரியோப்புல்லில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெறும் 2,000 மட்டுமே என்று கூறுகிறது.

 

இப்ப இவை  இரண்டு பேருக்குள்ளையும் சண்டை வரப்போகுது 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ஸிய ராணுவத்தால் இயக்கப்பட்ட சித்திரவதைக் கூடங்கள்

Ukrainian officials uncover Russian 'torture chambers' in Bucha |  news.com.au — Australia's leading news site

சித்திரை 4 ஆம் திகதி அறிக்கையொன்றினை வெளியிட்ட உக்ரேனின் பிரதம வழக்குத் தொடுநர், பூச்சா பகுதியில் இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றினை ரஸ்ஸிய ராணுவத்தினர் சித்திரவதைக் கூடமாக பாவித்து வந்ததை கியிவ் பொலீஸார் கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார். இச்சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் நிலக்கீழ் அறையில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து ஆண்களின் உடல்கள் பின்னால் கட்டப்பட்டு, அவர்கள் தொங்கவைக்கப்பட்டுக் கிடந்ததை பொலீஸார் கண்டதாகவும், உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Russians burned swastikas into victims' bodies: report
சித்திரை 5 ஆம் திகதி, பூச்சாவின் சிறுவர் மைதான வீதியில் எரியூட்டப்பட்ட பல பொதுமக்களின் உடல்கள் காணப்பட்டதை அஸோசியேட்டட் நியூஸ் பத்திரிக்கையாளர் ஆவணப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டவர்களுள் குழந்தை ஒன்றினதும் உடல் காணப்பட்டதையும், உடல்கள் சிலவற்றில் தலையில் சுடப்பட்டமைக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. 

சித்திரை 6 ஆம் திகதி கண்ணிவெடியில் அகப்பட்டுச் சிதறிய உடல் ஒன்றையும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனான உடல்கள் மூன்றையும் தாம் கண்டெடுத்ததாக உக்ரேனிய விசாரணையாளர்கள் தெரிவித்தனர். 

Swastika-shaped burns': Ukrainian MP claims Russian soldiers raped and  branded girls, shows gory image - World News

கியிவி இன்டிபென்டன்ட் எனும் பத்திரிக்கை செய்தி வெளியிடுகையில், தெருக்களில் நடந்துசென்ற உக்ரேனியப் பொதுமக்கள் ரஸ்ஸிய ராணுவம் சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கிறது. பங்குனி 4 ஆம் திகதி தெருவில் சென்ற மூவரை அருகிலிருந்து சுட்டுக் கொன்ற ரஸ்ஸியர்கள், கார்களில் தப்பிச் சென்ற குடும்பம் ஒன்றின் மீது கனரக வாகனம் ஒன்றிலிருந்து தாக்குதல் நடத்தியதில் இரு குழந்தைகள் அடங்கலாக காரில் பயணித்த நால்வர் ஸ்த்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது. புச்சா நகரை ஆக்கிரமித்த ரஸ்ஸிய ராணுவம் முதல் சில நாட்களில் தமது கனரக வாகனங்களில் நகரை வலம்வந்து தெருக்களில் காணப்பட்ட பொதுமக்கள் மீது சகட்டுமேனிக்குத் துப்பாக்கித் தாக்குதல் நடத்திக் கொன்றதை ஊர்மக்கள் சாட்சியப்படுத்தியதாகவும் கூறுகிறது.

Russian tank caught in graphic footage blowing up civilian car killing  couple inside - World News - Mirror Online

உக்ரேனின் பொதுமக்கள் கொல்லப்படும் விதத்தினை போர்க்குற்றம், இனவழிப்பு, படுகொலை என்று உக்ரேனிய அரசு கூறிவரும் நிலையில், ரஸ்ஸிய பாதுகாப்பு அமைச்சு இப்படுகொலைகள் சோடிக்கப்பட்டவை, நாடகங்கள் என்று கூறி நிராகரித்ததுடன், உக்ரேனிய ராணுவத்தினரே தமது பொதுமக்களைக் கொன்றுவிட்டு ரஸ்ஸிய ராணூவத்தினரின் மீது அபாண்டமாகப் பழிசுமத்துவதாகத் தெரிவித்திருக்கிறது. 

ஆனால், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஸ்ஸியாவின் மனிதவுரிமை மீறல்களைக் கண்டித்திருப்பதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ரஸ்ஸிய ராணுவத்தினர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கின்றன. 

Biden Brands Putin A 'War Criminal', Russia Hits Back, Says Biden's Remark  'Unforgivable Rhetoric' - YouTube

சித்திரை 4 ஆம் திகதி கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், புட்டின் ஒரு போர்க்குற்றவாளி என்று கூறியிருப்பதுடன், இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புட்டினினின் ராணூவம் பூச்சா பகுதியில் புரிந்திருக்கும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்காக அவரை நீதியின் முன் நிறுத்த தனது அரசு ஆவணங்களைச் சேகரித்து வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

சர்வதேச மன்னிப்புச்சபை பூச்சா படுகொலைகள் பற்றிக் கூறுகையில், " பூச்சா நகர் பொதுமக்கள் மீது ரஸ்ஸியா நடத்தியிருக்கும் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பான, அநீதியான படுகொலைகளாகும், ஆகவே இவை போர்க்குற்ற வரையறைக்குள் அடங்குகின்றன, இவை நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் கூறியிருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தலைவர் அக்னஸ் கலமார்ட் கூறும்போது, "ஆயுதம் ஏந்தாத அப்பாவி உக்ரேனியர்கள் அவர்களது வீடுகளிலும் தெருக்களிலும், தஞ்சமடைந்திருந்த இடங்களிலும் இருந்து ரஸ்ஸிய ராணுவத்தால் மிகவும் குரூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை மனித நேயத்திற்கெதிரான பாரிய குற்றங்களாகும்" என்று கூறியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டுரை ஆசிரியர் கவனத்திற்கு; 

உக்ரேன் என்கிற நாடே இல்லாமல் போகப்போவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன 😉

Posted

யுக்ரேனில் ரஸ்யர்கள், அல்லது ரஸ்ய ஜீன் உள்ளவர்கள்   பிடிக்கப்பட்டு  ( சந்தேகப்பட்டு) சித்திரவதை செய்யப்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனில் தனது படுகொலைகளின் கொடூரம் வெளித்தேரிய தொடங்கியிருப்பதையடுத்து, தனது பொய்ப்பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கும் சர்வாதிகாரி புட்டின்

file-20220406-16-zph6pc.jpg?ixlib=rb-1.1.0&q=45&auto=format&w=754&fit=clip

உக்ரேனை ஆக்கிரமித்து நிற்கும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் கொடூரங்கள் வெளித்தெரிய ஆரம்பித்திருப்பதையடுத்து, இந்த மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை தனது மூலோபாய, அரசியல் நலன்களுக்காக நியாயப்படுத்தவோ அல்லது இவற்றைத் தனக்கெதிரான சதியென்று நிறுவுவதற்கோ ரஸ்ஸியப் போர்க்குற்றவாளியான சர்வாதிகாரி புட்டின் முயன்று வருகிறான் என்பது தெளிவாகிறது.

கியிவின் புறநகர்ப்பகுதியான பூச்சாவிலிருந்து ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் ரஸ்ஸிய ராணுவத்தினர் புரிந்த மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. குறிப்பாக கைகள் பின்னால் கட்டப்பட்டு, அருகிலிருந்து பிடரியில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் பற்றிய விபரங்களை வெளியானதையடுத்து இப்படுகொலைகளை செய்தது உக்ரேனிய ராணுவமும் அதனது மேற்குலக அரசுகளும் தான் என்று பொய்யான பிரச்சாரத்தினை சர்வாதிகாரி புட்டினும் அவனது ஆதரவாளர்களும் முடுக்கி விட்டிருக்கின்றனர்.

இப்படுகொலைகளை மறைக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கிய ரஸ்ஸிய பொய்ப் பிரச்சாரகர்களும், ஆதரவாளர்களும் பின்வருமாறு கூறுகின்றனர், "இப்படுகொலைகளை நாம் செய்திருக்கமுடியாது, நாம் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டோமே? ", "நிச்சயமாக இது இங்கிலாந்து ராணூவத்தின் உளவியல் யுத்தம் தான்", "இல்லையில்லை, இது உக்ரேனிய பாஸிஸ்ட்டுக்களான அசோவ் பட்டாலியன் அமைப்பினால் நடத்தப்பட்டிருக்கிறது, அல்லது இங்கிலாந்து ராணுவமும், அசோவ் பட்டாலியனும் சேர்ந்தே இந்த மக்களைக் கைகளைக் கட்டிக் கொன்றுள்ளனர்", "இல்லையில்லை, இவை எல்லாமே சோடிக்கப்பட்ட நாடகம், சுடப்பட்டு வீதியில் கிடப்பவர்கள் எல்லாருமே நடிகர்கள், காலை அசைக்கிறார்கள், கையை உயர்த்துகிறார்கள், பாடல் பாடுகிறார்கள்......." என்று இப்படுகொலைகளை ஒன்றில் தனது ராணுவம் செய்யவில்லையென்றோ, அல்லது உக்ரேன் ராணுவமே செய்ததென்றோ, அல்லது முற்றான நாடகம் என்றோ கூறிவருகிறது.

முள்லிவாய்க்கால் இனவழிப்பில் தமிழர்களை புலிகளே கொல்கிறார்கள், மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள், கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட தமிழர்களும், குண்டுவீச்சிலிருந்து தப்பியோடுவதாகக் காட்டும் சிறுமிகளும், அவர்களைத் தொடர்ந்துசென்று புகைப்படம் எடுக்கும் புலிகளும் செய்வது முற்றான நாடகம்" என்று சிங்கள இனவழிப்பாளர்கள் அன்று செய்த அதே பொய்ப்பிரச்சாரத்தினை சர்வாதிகாரி புட்டினும் அவனது ஆதரவாளர்களும் இன்று செய்துவருகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் நாஜிகளால் படுகொலைசெய்யப்பட்ட பல லட்சம் மக்களின் கொலைகளை மேற்குலகே செய்ததாக கோயப்லஸ் எனும் பொய்ப்பிரச்சார மிருகத்தை வைத்து ஹிட்லர் நியாயப்படுத்தியதைப் போன்றே, சர்வாதிகாரி புட்டினும் இன்று வெளிவரத் தொடங்கியிருக்கும் தனது அக்கிரமங்களை பொய்யென்று பிரச்சாரப்படுத்தி வருகிறான்.

ரஸ்ஸிய அரச செய்திப்பிரிவிலிருந்து வெளிவரும் செய்திக்குறிப்புக்களை அப்படியே வெளியிட்டு வரும் ஏனைய ரஸ்ஸிய ஊடகங்களும், சர்வதேசத்தில் இயங்கிவரும் ரஸ்ஸிய தூதரகங்களும் தமது சர்வாதிகாரி புட்டினின் படுகொலைகளை மறைக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது.

சர்வாதிகாரி புட்டினின் ஊதுகுழலான டிமிட்ரி பெச்கோவ் மற்றும் ஐ நா வுக்கான ரஸ்ஸிய தூதுவர் ஆகியோர் வெளியிட்டு வரும் பொய்ப்பரப்புரைகளை இந்த ரஸ்ஸிய ஊதுகுழல்களும், ஆதரவாளர்களும் அப்படியே வழிமொழிந்தும், வேதவாக்காக வெளியிட்டும் வருகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னெவென்றால், தான் உக்ரேனில் நடத்திவரும் மனிதநேயத்திற்கு எதிரான படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும், உக்ரேன் அரசே செய்தது என்றும் குற்றஞ்சாட்டிக்கொண்டு, அவற்றை விசாரிக்கவேண்டும் என்று ஐ நா வில் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டினின் எடுபிடிகள் அடம்பிடித்ததுதான் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வாதிகாரி புட்டினின் பொய்களை விளக்குதல்

5 cartoons about Russian disinformation | The Week

சர்வாதிகாரி புட்டினை நியாயப்படுத்தியும், அவனது படுகொலைகளை நடக்கவில்லையென்று அடியோடு மறுத்தும், அவனுக்கு ஆதரவாக இணையத்தில் பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் அவனது ஆதரவாளர்களான "புட்டின் - வெஸ்டகர் , தமிழில் புட்டினைப் புரிந்துகொண்டோர் " எனும் கூட்டம் மிகவும் பரிதாபத்திற்குரிய பொய்களைப் பரப்பி வருவது தெரிகிறது.

இந்த பிரச்சாரகர்கள் கூட்டம் அடிப்படையிலேயே மிகவும் தவறான, சாத்தியமில்லாத பொய்களைக்கொண்டே தமது புனைவுகளை கட்டி வருகின்றன. உதாரணத்திற்கு மேற்குலக ராணுவ வல்லுனர்களே இப்படுகொலைகளைச் செய்தார்கள் எனும் இவர்களின் கூப்பாடு உண்மையிலேயே எப்படிச் சாத்தியமாகும் என்பது இவர்களுக்கே வெளிச்சம். ஒரு பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டு, அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆக்கிரமிப்பாளர்களைக் குவித்துவைத்திருக்கும் நிலையில் ஒரு மேற்குலக ராணுவத்தால், அப்பகுதியெங்கும் சுற்றித்திருந்து மக்களைக் கொல்வது எங்கனம் சாத்தியம்? அதுவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு?

உக்ரேனிய பாஸிஸ்ட்டுக்களே இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள் என்றால், அதனை அவர்கள் செய்ததற்கான சாட்சிகளை எப்படி இலகுவாக, அதுவும் ரஸ்ஸியர்களின் கண்களில் படுமளவிற்கு விட்டுச் சென்றார்கள்?

ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்து நின்ற இடங்களிலெல்லாம் நடிகர்களையும், நடிகைகளையும் எப்படி அவ்வளவு சுலபமாக கொண்டுசென்று ஒரு முற்றான நாடகத்தினை உக்ரேனியர்களால் மேடையேற்ற முடிந்தது? அதுவும் ரஸ்ஸியர்கள் பிரசன்னம் அதிகமாக இருந்த இடங்களில்? 

சரி, இவையெல்லாம் இருக்கட்டும். ரஸ்ஸிய இனவழிப்பு ராணுவம் இப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலத்திலேயே செய்மதிப் படங்களூடாக கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக் கிடந்ததை இந்த உலகம் பார்த்ததே? உக்ரேனும், மேற்குலக நண்பர்களுமே இதனைச் செய்தார்கள் என்றால், எப்படி அவர்களால் ரஸ்ஸிய தாங்கிகளுக்கு அண்மையாகச் சென்று இம்மக்களைக் கொல்லவோ அல்லது நடிகர்களை வீதிகளில் கிடத்தி நாடகம் ஆடவோ முடிந்தது? 

ஆக்கிரமிப்பிலும், அழித்தொழிப்பிலும், இனவழிப்பிலும் ஈடுபடும் ரஸ்ஸியா போன்றதொரு ராணுவம் இவற்றைச் செய்யாது என்பதற்கும், இதுவரை இப்படியான படுகொலைகளைச் செய்யவில்லையென்பதற்கும் சரித்திரத்தில் சாட்சிகள் இருந்திருக்கிறதா? இல்லையே. அப்படியானால், இப்போதுமட்டும் ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள் இக்கொலைகளைச் செய்யவில்லையென்பதற்கும், ஐ நா மனிதவுரிமை சாசனத்தை ஒரு கையிலும், இன்னொரு கையில் ஒலிவ மரக்கிளையினையும் ஏந்திக்கொண்டு "நாஜிகளிடமிருந்து உக்ரேனியர்களை மீட்கும் விசேட நடவடிக்கை" ஒன்றினை தான் மேற்கொள்வதாக சர்வாதிகாரி புட்டின் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?

Chechen victims of a Russian massacre in Novye Aldi, Chechnya 2000.  [205x300] : r/HistoryPorn

1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் செச்னியாவை ஆக்கிரமித்த போர்க்குற்றவாளி புட்டினின் கொலையாளிகள் அப்பகுதியெங்கும் தாம் சகட்டுமேனிக்குக் கொன்றுகுவித்த லட்சக்கணக்கான அப்பாவிகளின் உடல்களை தாம் வெளியேறியபோது அப்படியே வீதிகளிலும், ,அரைகுறையான பாரிய மனிதப் புதைகுழிகளிலும் விட்டுச் சென்ற அதே செயற்பாடுகளையே இன்று சர்வாதிகாரி புட்டின் உக்ரேனிலும் செய்துவருகிறான் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சாடியிருக்கிறது.

Mass graves in Chechnya - Wikipedia

குறிப்பாக அப்பாவிகளை வரிசையில் நிற்கவைத்து பின்னாலிருந்து தலையில் சுட்டுக் கொல்லும் கொடூரத்தை சர்வாதிகாரி புட்டினின் படைகள் செச்னியாவிலும் உக்ரேனிலும் ஒரேவிதத்திலேயே அரங்கேற்றி வந்திருக்கின்றன என்று அது கூறுகிறது.

Do Russian activities in Chechnya constitute war crimes or crimes against  humanity? - Quora

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலியல் வன்புணர்வை ஆயுதமாகப் பாவிக்கும் புட்டின்

Rape by Russian soldiers in Ukraine is the latest example of a despicable  wartime crime that spans the globe

தாம் ஆக்கிரமித்து நின்ற பூச்சா பகுதியில் இயங்கிவந்த சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றினை ரஸ்ஸியர்கள் சித்திரவதைக் கூடமாகப் பாவித்தார்கள் என்பதற்கான சாட்சிகள் வெளித்தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அத்துடன் தம்மால் படுகொலை செய்யப்படும் பல நூற்றுக்கணக்கான உக்ரேனியர்களைப் புதைப்பதற்கென்று ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள் அப்பகுதியெங்கும் தோண்டிவரும் பாரிய புதைகுழிகள் செய்மதிகளூடாகத் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.  

கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் அரைகுறையாக எரித்துக்கொல்லப்பட்ட பல உக்ரேன் பெண்களின் வெற்றுடல்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக் கிடப்பதை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட பல உக்ரேனியப் பெண்களும், சிறுமிகளும் இறுதியில் கொல்லப்பட்டும் எரிக்கப்பட்டும் வீதிகளில் தூக்கியெறியப்படுவது பல இடங்களிலும் ரஸ்ஸியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. உக்ரேனின் அரச ஊழியர்களைக் குறிவைத்துக் கொன்றுவரும் புட்டினின் இனக்கொலையாளர்கள் மொடிஸின் பகுதியின் நகர மேயரையும் அவரது குடும்பத்தில் இருந்த அனைவரையும் கைகளைப் பின்னால் கட்டி, தலையில் சுட்டுக்கொன்றுவிட்டு, தலைகள் வெளியே தெரியும்படி புதைத்துவிட்டுச் சென்ற அகோரமும் வெளிவந்திருக்க, இவை எல்லாமே நாடகங்கள் என்றும், உக்ரேனிய - இங்கிலாந்து ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கைங்கரியங்கள் என்றும் புட்டினை - நம்புவோர் எனும் பிரச்சாரப் பிரிவு நிறுவ முயற்சிப்பது, புட்டினை வெளியே இருந்து ஆதரிக்கும் சிலருக்குக் கூட தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. 

எதிரியின் பெண்களை இலக்குவைத்து பாலியல் வன்கொடுமை புரிதல், இழுத்துச் சென்று துன்புறுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் எதிரி மீதான வெற்றியெனும் மநோநிலை எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் இருக்கிறது. ஈழத்தில் தமிழ்ப்பெண்களை இலக்குவைத்து சிங்கள இனக்கொலையாளர்கள் நடத்திய அனைத்து வெறியாட்டங்களும் , ஒன்றில் எமதினத்தைக் கொச்சைப்படுத்தவோ, தமிழினத்தின் பொக்கிஷங்களான எமது பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திக் கொல்வதை ஒரு பெரு வெற்றியாகவோ எண்ணித்தான் செய்யப்பட்டு வருகின்றன. அதே பாணியிலான பெண்கள் மீதான அக்கிரமங்களையே உக்ரேனிலும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளி புட்டினும் செய்துவருகிறான் என்பது கண்கூடு.

உக்ரேனில் இனவழிப்பை நடத்திவரும் ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகள் 3 வயது சிறுமியொருத்தியை வன்புணர்ந்தது, அவளை வன்புணர்ந்த ரஸ்ஸிய வீரர்களாலேயே வீடியோவாகப் படமாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. பல தாய்மார்கள் அவர்களது பிள்ளைகள் பார்த்திருக்க ரஸ்ஸிய மிருகங்களால் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட பல பெண்களை ரஸ்ஸிய போர்க்குற்றவாளிகள், ஏனைய கிராமத்தவர்கள் பார்த்திருக்க மீண்டும் மீண்டு கூட்டாக வன்புணர்ந்தது அவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில், தமது இச்சை தீரும்வரை கூட்டாகப் பாலியல் வன்புணர்வு புரிந்து, கொல்லப்பட்ட பெண்களின் முகங்கள் மீது மலங்கழித்து தனது வெற்றியை சர்வாதிகாரி புட்டினின் படைகள் நிறுவியிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணிணி யுகத்தில் ரஸ்ஸியப் பொய்ப்பிரச்சாரம்

உக்ரேனில் தான் புரிந்துவருகிற இனவழிப்பினை மறைக்க புட்டின் மேற்கொண்டுவரும் பொய்ப்பிரச்சாரம் ஒன்றும் புதியது அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களால் கடைப்பிடிக்கப்பட்ட உத்திதான் என்று, உளவியல்ப் போர் வகையென்றும் அவர்கள் இதனைக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், நவீன யுகத்தில் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவோர் தமது குற்றங்களையே, தற்போதிருக்கும் தொழிநுட்பத்தினைப் பாவித்து தமக்குச் சார்பான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வசதியினைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது வெளிப்படையாகக் கிடைக்கும் சாட்சியங்களையே தகவல் தொழிநுட்பம் ஊடாக, மாற்றியமைத்து, படிப்போரின் சிந்தனையில், சந்தேகத்தினையும், அதனூடான மாற்றத்தினையும் கொன்டுவருவதன் மூலம், தமது சொந்தக் குற்றங்களை, தம்மால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே திருப்பிவிடும் உத்திகளை அவர்கள் பாவிக்கிறார்கள்.

இன்று சமூக வெளியில் பரவிக் கிடக்கும் ஏராளமான தகவல்களை ஒருவரால் முழுவதுமாக அலசுவதென்பது இயலாத காரியம். ஆகவேதான், தனக்குப் பிடித்த சில தகவல்களை மட்டுமே அவர் படிப்பதோடு, ஒரு கட்டத்தில் இதனையே உண்மையென்றும் நம்பத் தலைப்பட்டு விடுகிறார். இவ்வாறானவர்களையே புட்டினின் ஆதரவாளர்களும், பிரச்சாரகர்களும் இலக்குவைத்து தமது நடவடிக்கையினை முடுக்கிவிடுகின்றனர். கணிணி வலையமைப்பு மூலம் பல எண்ணிக்கையானவர்களை இவர்களால் எட்ட முடிவதால், இப்பொய்ப் பிரச்சாரங்கள் பலராலும் உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடுகிறது.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.