Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பப்ஜி கேம் மோகத்தினால் இளம் குடும்பத் தற்கொலை - சுன்னாகத்தில் அதிர்ச்சி, யாழ்ப்பாணத்தில் 2 வாரங்களுக்குள் 2 ஆவது சோகச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

https://www.jaffnamuslim.com/2022/05/2-2.html

உலகில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் உள்ள மிக மோசமான வசைச் சொற்களால் இவர்களை பேசினாலும் போதாது. 
உயிரின் மதிப்பை மிக அதிகமாக உணர்ந்த ஒரு சமூகம் ஒரு தசாப்த காலத்துக்குள் எப்படி மாறி விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறு நாடுகளில் நடந்த சம்பவம் எள்று நினைத்தேன்.எதற்காக எல்லாம் இறக்கிறார்கள்..ஊருல இருக்கிறவைக்கு வெக்கமா இல்லயா...ச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு போதைபோல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இந்த கேம் ஆல்தானோ  தற்கொலை பண்ணுகிறார்கள் என்று விசாரணை செய்யணும் .

  • கருத்துக்கள உறவுகள்

புளியமரத்தில் பேய்க்கதையோ? பெருமாளும் விளையாடுகிறமாதிரி இருக்கே, விசாரணையை  பாத்தால்.

3 hours ago, பெருமாள் said:

உண்மையிலே இந்த கேம் ஆல்தானோ  தற்கொலை பண்ணுகிறார்கள் என்று விசாரணை செய்யணும் .

இந்தியாவில், தமிழகத்தில் பலர் இவ்வாறு இந்த Game மால் தற்கொலை செய்துள்ளனர். இந்த Game விளையாடுகின்றவர்கள் தன்னளவில் வன்முறையாளர்களாக மாற சந்தர்ப்பம் உண்டு என்றும், அதனால் தம்மை தாமே காயப்படுத்தும் நிலைக்கு கூட செல்கின்றார்கள் என்றும் கூறுகின்றனர்.

Quora வில் இப்படி ஒருவர் எழுதியுள்ளார்.

It's a mental addiction , and the kid's playing the game when sees the real world they don't have much to do . When one wins he/she plays to win again but that doesn't happen therefore one plays more to win and in this they lose the precious life . Even if they don't commit suicide they are already dead . It's very hard to find an alive person .

https://www.quora.com/Why-do-PUBG-players-commit-suicide-day-by-day

ஆனால் இறந்தவர்களில் அனேகம் பேர் வளரிளம் பருவத்தினர் மற்றும் சிறுவர்/சிறுமியர்.ஆனால் ஊரில் இப்படி நாலு கழுதை வயசாகியும் தற்கொலை செய்வதை அறிய அதிர்ச்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எதெற்க்கெல்லாம் பழக்கமாகி அதில் போதையாகி விடுகின்றோமோ அது எங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொன்று தீர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 11:31, satan said:

புளியமரத்தில் பேய்க்கதையோ? பெருமாளும் விளையாடுகிறமாதிரி இருக்கே, விசாரணையை  பாத்தால்.

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருத்தர் call of duty வடிவமைப்பில் முக்கிய பங்காற்றி இருப்பதாக அது எப்படி உள்ளது என்று கேட்க இரண்டு கிழமையாக  X  பொக்சிசின் அடிமையாக   வாழ்ந்த வாழ்க்கை க்கு பிறகு அதன் பக்கம் போவதில்லை இப்பவும் கேம் PC தான் கீபோர்ட் எல்லாம் கேம் கீபோர்ட் தான் அதனால்தான் முற்றுப்புள்ளி  ஆச்சரியகுறிகள் போன்றவை பிசறிக்கொண்டு இருக்கும் கேம் PC உபயோகிப்பதன் நன்மை அதிகப்டியான மெமரி  ஒரே நேரத்தில் பல தளம்களுக்குள் இலகுவாக புகுந்து கொள்ளலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

எதெற்க்கெல்லாம் பழக்கமாகி அதில் போதையாகி விடுகின்றோமோ அது எங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொன்று தீர்க்கும்.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கன ஆக்களை வயது வித்தியாசம் இல்லாமல் வாட்ஸாப் பேய் பிடிச்சிருக்கு. ( நான் உட்பட).

 கொரோனாப் பூச்சியோட தொடங்கினது இப்ப வேற லெவலுக்கு போய் நிக்குது .

அண்டைக்கு ஒரு நாள் மொபைல் போனை மறந்து போய் விட்டிட்டு ஆஃபீஸ் போய் விட்டேன். அண்டைக்கு பின்னேரம் வீட்டை திரும்புவதற்கு முன்னர் ஆஃபீசில செய்த்து முடித்த வேலைகளை திரும்பி பார்க்க எனக்கே மலைப்பாக இருந்த்துது.

 ஒழிக வாட்ஸாப்!!! 

இனி கிழமைக்கு ஒரு நாளெண்டாலும் போனை வீட்டில மறந்து விட்டிட்டு வாறதெண்டு இருக்கிறன் ….
(போன் லயிட் மின்னுது ஏதோ புது மெசேஜ் போலஇ  பொறுங்கோ என்னெண்டு பாப்பம்…)...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.