Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..!

Recommended Posts

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..!

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..!

அவுஸ்திரேலியா புதிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, இலங்கையைச் சேர்ந்த முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகப்பன், பிரியா ஆகிய இருவரும் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பித்து 2012-ம் ஆண்டு ஆள்கடத்தல் படகுகள் மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கோபிகா, தர்ணிகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

நடேசலிங்கம் முருகப்பன் 2014 முதல் அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் ஒரு இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்தார். பிரியாவின் `பிரிட்ஜ்ங் விசா´ 2018 மார்ச் மாதம் காலாவதியானது. அதனால் நடேசலிங்கம் முருகப்பன் - பிரியா தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவில் 2019-ம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பிரியா முருகப்பன் தம்பதியினர் அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் அகதிகளாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு நிரந்தர விசா வழங்குவதற்காக இந்த வழக்கில் அமைச்சரின் தலையீடு வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் தம்பதியின் கோரிக்கையை பிரதமர் மோரிசன் அரசு மறுத்துவிட்டது. ஆனால், அவுஸ்திரேலியா மக்கள் இந்தக் குடும்பத்துக்கு பெரும் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து ”ஹோம் டு பிலோ” எனும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நடேசலிங்கம் முருகப்பன் பிரியா தம்பதியினர் அவுஸ்திரேலியாவிலுள்ள பிலோலா-வில் மீண்டும் குடியேற அனுமதிக்கும் வகையில், அமைச்சரின் தலையீட்டின் மூலம் அந்த அவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவதாகத் தொழில் கட்சி தேர்தல் வாக்குறுதியளித்தது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் கடந்த தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி, தொழிலாளர் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது.

இருகட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களான லிபரல் கட்சியின் ஸ்காட் மோரிசனுக்கும், தொழிலாளர் கட்சியின் அந்தோணி ஆல்பனீஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அந்தோணி ஆல்பனீஸ் புதிய பிரதமராக தேர்வாகினார்.

இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி ஆல்பனீஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்திருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதமர் மோரிசன், ``பிரியா-நடேசலிங்கம் முருகப்பன் தம்பதியினர் விவகாரத்தில், அவர்களை அவுஸ்திரேலியாவில் வாழ குடியுரிமை அளிப்பது ஆள் கடத்தல்காரர்களுக்கும், கடலில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் பச்சைக்கொடி காட்டுவது போல ஆகும்” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

புதிய அவுஸ்திரேலிய பிரதமர்… முருகன் குடும்பத்தினருக்கு,
அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கிய செயலுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

அவுஸ்திரேலியாவில் வாழ குடியுரிமை அளிப்பது ஆள் கடத்தல்காரர்களுக்கும், கடலில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் பச்சைக்கொடி காட்டுவது போல ஆகும்” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் தமிழினத்தை அழிக்கப் பச்சைக்கொடி காட்டியதைவிட இது மோசமானதாகத் தெரியவில்லை. இப்போதும் தமிழருக்கான சமத்துவமான பாதுகாப்பானதொரு வாழ்வை உறுதிப்படுத்தும் தீர்வுக்கான அழுத்தத்தையோ கொடுக்க முடியாதவர்காளக இருந்தவாறு உயிர்தப்பிவருவோரையும் அவலப்படுத்தவது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

புதிய அவுஸ்திரேலிய பிரதமர்… முருகன் குடும்பத்தினருக்கு,
அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கிய செயலுக்கு பாராட்டுக்கள்.

பொது மக்கள், அனுதாப ஆதரவு தரும் ஒரு விடயத்தில்  அழுங்குப்பிடி பிடித்தால், தேர்தலில் வாக்கு கிடைக்காமல் தோல்வியடைந்து, இப்படி புலம்ப வேண்டியது தான்.

காரைநகர் பனித்தியாகர் கதை போலத் தான்.

5 hours ago, nochchi said:

 நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் தமிழினத்தை அழிக்கப் பச்சைக்கொடி காட்டியதைவிட இது மோசமானதாகத் தெரியவில்லை. இப்போதும் தமிழருக்கான சமத்துவமான பாதுகாப்பானதொரு வாழ்வை உறுதிப்படுத்தும் தீர்வுக்கான அழுத்தத்தையோ கொடுக்க முடியாதவர்காளக இருந்தவாறு உயிர்தப்பிவருவோரையும் அவலப்படுத்தவது நியாயமா?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

பொது மக்கள், அனுதாப ஆதரவு தரும் ஒரு விடயத்தில்  அழுங்குப்பிடி பிடித்தால், தேர்தலில் வாக்கு கிடைக்காமல் தோல்வியடைந்து, இப்படி புலம்ப வேண்டியது தான்.

காரைநகர் பனித்தியாகர் கதை போலத் தான்.

Dr A Thiyagarajah-287x397.jpg

தியாராஜாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். 😂
அரசாங்க வேலைக்கு.... காசு குடுத்து, ஏமாந்த சிலமன்...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Dr A Thiyagarajah-287x397.jpg

தியாராஜாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். 😂
அரசாங்க வேலைக்கு.... காசு குடுத்து, ஏமாந்த சிலமன்...  🤣

கேள்விப்பட்ட பழைய கதை தான்.....

ஒரு குறித்த ஊர்..... ஒழுக்கக்குறைவுக்கு பெயர் போனது....

வாக்குச்சேகரிப்பில் இருந்தார் தியாகர்.....

முகவர்.... அய்யா அங்கை ஒருக்கா தலயக் காட்டினால் போதும்.... மூவாயிரம் வாக்குகள் விழும்... வெண்டிடலாம்....

விசர் கத கதையாத.... செத்தாலும்.... அங்கை வறன்.....

அய்யா, இரண்டாயிரத்து சொச்சம் வாக்கால தோத்துப் போனார்....

பனித்தியாகர் பட்டம் மட்டும் வந்துவிட்டுது. 😁😁
 
அதைப்போல..... ஊரே, பாவம் அதுகளை விடுங்க எண்டு நிக்க.....

உந்தாள் விடாப்பிடி பிடிக்க.... இப்ப... வாக்குக்குடுத்தவர் வென்று, வெளிய விட.... இவர் அது பிழை எண்டு புலம்புகிறார்....

இவரையும் பனியர் எண்டலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தியாராஜாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். 😂
அரசாங்க வேலைக்கு.... காசு குடுத்து, ஏமாந்த சிலமன்...  🤣

வேலை எடுத்து தல்லாம் எண்டு சொல்லி  காசு அமுக்கின கொம்பனியிலை குமாரசூரியர்,தியாகராசா,ஆனந்தசங்கரி எல்லாம் ஒரே கூட்டுவள். ☺️

ஒரு சின்ன தகவல்  குமாரசூரியர் வேலை எடுத்து தல்லாம் எண்டு வாக்குறுதி குடுத்தால் போஸ்மாஸ்டர்,பீயோன் வேலை காரெண்டி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தால் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி வழங்கிய ஆஸ்திரேலியா

  • டிஃபானி டர்ன்புல்
  • பிபிசி செய்தியாளர், சிட்னி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
2018-ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாமில் இருக்கும் நடேஸ் முருகப்பன் குடும்பம்

பட மூலாதாரம்,HOMETOBILO/TWITTER

படக்குறிப்பு,

2018-ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாமில் இருக்கும் நடேஸ் முருகப்பன் குடும்பம்

ஆஸ்திரேலியாவின் அகதிகள் அடைக்கல கோரிக்கை குறித்த கொள்கைகள் மீதான கோபத்தை ஒருமுகப்படுத்திய, கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நடேஸ் முருகப்பன் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டு காலப் போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு விசா வழங்கியது. அவர்கள் தற்காலிகமாக பில்லோவீலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் குடும்பம் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வருவோர் பெரும்பாலும் அவர்களுடைய குடும்பப் பெயரைக் கொண்டு அறியப்படுவார்கள். ஆனால், நடேஸ் முருகப்பன் குடும்பம் மட்டும் பில்லோவீலா குடும்பம் என அழைக்கப்படுகிறது. பில்லோவீலா என்பது ஆஸ்திரேலியாவில் அவர்கள் 4 ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தின் பெயர்.

நாடு கடத்தப்படுவதற்கு எதிரான சட்டப் போராட்டங்கள்

இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ் முருகப்பன் மற்றும் பிரியா தம்பதியினரும் அவர்களுடைய குழந்தைகளான, ஏழு வயதான கோபிகா மற்றும் நான்கு வயதான தாருணிகா ஆகியோர் தான் அந்த பில்லோவீலா குடும்பம். அவர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு முதல் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம் முருகப்பன், பிரியா நடராஜா இருவரும் வெவ்வேறு தருணங்களில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். நடேஸ் 2012-ஆம் ஆண்டிலும் பிரியா அதற்கு அடுத்த ஆண்டிலும் வந்தனர். அடைக்கலம் கோரி இருவரும் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கியது.

குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சிக் கூடங்களைக் கொண்ட பில்லோவீலா நகரில் அவர்கள் குடியேறினார்கள். அங்கு சந்தித்துக் கொண்ட இருவரிடையே காதல் மலரவே திருமணம் செய்துகொண்டார்கள். கோபிகா, தாருணிகா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

ஆஸ்திரேலியாவில் பிரியா மற்றும் நடேஸின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லையென ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.

பில்லோவீலா சிறுமிகள்

பட மூலாதாரம்,HOMETOBILO

2018-ஆம் ஆண்டு நடேஸ் முருகப்பன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியானபோது, அவர்களை வெளியேற்ற முயற்சி நடந்தது. அப்போது ஆறாயிரம் பேர் வசிக்கும் பில்லோவீலா நகரத்தைச் சேர்ந்தவர்கள், நடேஸ் முருகப்பன் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

நடேஸ் முருகப்பன் குடும்பம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் இடைக்காலத் தடை பெற்றனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடந்தன. சமூக ஊடகங்களில் அவர்களுக்கு ஆதரவு பெருகின.

இந்த வழக்கு ஒரு கூக்குரலைத் தூண்டியது. பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் நடேஸ் முருகப்பன் குடும்பம் திரும்புவதற்காகப் பிரச்சாரம் செய்தார்கள்.

தடுப்பு முகாம் வாழ்க்கை

பில்லோவீலாவில் உள்ள உள்ளூர் மக்கள் அவர்கள் தங்குவதற்காகப் போராடினார்கள். தேசியளவிலான ஆதரவையும் அரசியல் களத்தில் பல்வேறு எம்.பிக்களின் ஆதரவையும் பெற்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

அவர்களுக்குப் பாதுகாப்பை மறுக்கும் முடிவுக்கு எதிரான சட்டரீதியான சவால்கள் ஆஸ்திரேலியாவின் நீதிமன்றங்களில் உள்ளன.

நடேஸின் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதியளிக்குமாறு போராட்டங்கள் நடந்தன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நடேஸின் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதியளிக்குமாறு போராட்டங்கள் நடந்தன

சர்ச்சைக்குரிய கொள்கைகளின் கீழ், நடேஸ் முருகப்பன் போன்ற அடைக்கலம் கோருபவர்களை ஆஸ்திரேலியாவில் காலவரையற்ற காவலில் வைக்கலாம். அதேவேளையில் அவர்களின் அகதி கோரிக்கைகளை மதிப்பிடுவது அல்லது அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முடிவை எடுக்கும்.

ஆனால், கடந்த சனிக்கிழமை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆந்தனி ஆல்பனீஸ், நடேஸ் முருகப்பன் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் எனக் கூறினார்.

"மக்களை மோசமாக நடத்தக்கூடாது என்ற செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும் அளவுக்கு நாங்கள் வலுவான சமூகமாக இருக்கிறோம். இவ்வளவு காலமாக இது எப்படி நடந்தது என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது," என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். ஆனால், தற்காலிக விசாவுக்குப் பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தக் குடும்பத்திற்கு ஆதரவளிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பில்லோவீலாவுக்கான அவர்களுடைய பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட, வலி மிகுந்த அத்தியாயம் முடிவடைவதைக் குறிக்கிறது. மேலும், அந்தக் காயங்கள் குணமடைவதற்கும் மீண்டு வருவதற்குமான தொடக்கமாகவும் அது இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க அனுமதிக்கும் வரை இந்தக் குடும்பம் பாதுகாப்பாக இருக்காது," என்று அந்தக் குடும்பத்தின் நண்பர் ஏஞ்சலா ஃபிரட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமையன்று ட்வீட் செய்தார்.

அடைக்கல கோரிக்கையை மறுமதிப்பீடு செய்வதற்காக நடேஸ் முருகப்பன் குடும்பம் நீண்ட சட்டப் போராட்டத்தையும் நடத்தியது.

விமானத்தில்

பட மூலாதாரம்,SIMONE CAMERON

படக்குறிப்பு,

இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது தங்களுடைய ஆதரவாளர்களை நடேஸ் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்

அந்தக் குடும்பத்தை நாடு கடத்த நடந்த இரண்டு முயற்சிகளுக்குப் பிறகு, 2019-இல் விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவு அவர்களின் வழக்கு தீர்க்கப்படும் வரை, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது. அவர்கள், 1,500 நாட்களுக்கும் மேலாக குடியேற்ற காவலில் (அதில் பெரும்பாலான நாட்கள் ஆஸ்திரேலிய புறக்காவல் பகுதியான இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, தருணிகாவுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால், அவர்கள் தீவிலிருந்து பெர்த்தில் இருக்கும் சமூக காவலுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு பிபிசியிடம் அவர்கள் நீண்டகாலமாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்கள். அவர்களுடைய மூத்த மகள் கோபிகா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தடுப்பு முகாமில் தான் கழித்துள்ளார். தடுப்பு முகாமில் இருந்த ஆண்டுகள் மனச்சோர்வை ஏற்படுத்தியதாக பிரியா கூறினார்.

இதற்கிடையில், குடும்பம் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டபோது வெறும் ஒன்பது மாதமாக இருந்த தருணிகாவுக்கு, மோசமான ஊட்டச்சத்து காரணமாக பல் சொத்தையானது. அதை அகற்றுவதற்கு இரண்டு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, 2019-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மற்றொரு நோய்க்காக இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடைக்கல கோரிக்கையாளர்கள் மீதான கடுமையான கொள்கைகள் மனித கடத்தல் மற்றும் கடலில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதாக ஆஸ்திரேலியா வாதிடுகிறது. ஆனால், ஐநா அதன் அணுகுமுறை மனிதாபிமானற்றது என்று விமர்சித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-61612098

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வேலை எடுத்து தல்லாம் எண்டு சொல்லி  காசு அமுக்கின கொம்பனியிலை குமாரசூரியர்,தியாகராசா,ஆனந்தசங்கரி எல்லாம் ஒரே கூட்டுவள். ☺️

ஒரு சின்ன தகவல்  குமாரசூரியர் வேலை எடுத்து தல்லாம் எண்டு வாக்குறுதி குடுத்தால் போஸ்மாஸ்டர்,பீயோன் வேலை காரெண்டி 😎

நல்லூர் தொகுதி... அருளம்பலத்தை விட்டு விட்டீர்கள்.
அவர்  ஆறு  முறை தேர்தலில் போட்டியிட்டு, ஆறாவது முறை தான் வென்றவர்.
ஒவ்வொரு முறை தேர்தல் முடிவுகள் வந்து, தோல்வி என்று அறிவிக்கும்போது...
சோகத்தில், கிணத்தில் பாய்ந்து விடுவாராம்.

ஆறாவது முறை, நல்லூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஆயத்தமாகிய போது..
இந்த முறையும் தோல்விதான் என்று, கிணத்தடிக்கு போய்க் கொண்டிருக்க..
மனிசி..  நீங்கள் வெண்டு போட்டியளப்பா...  
கிணத்துக்கை  குதிக்காதேங்கோ என்று மறித்து விட்டார்.

அதுக்குப் பிறகு எம்பியாகி... கல்லா கட்டத் தொடங்கினது தான்.
ஊரோடை  இடமாற்றத்துக்கு...  2000 ரூபாய்.
ஆசிரியர் பதவிக்கு 5000 ரூபாய் என்று, ஒரு பட்டியலே இருந்தது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 வருட இழுபறிகளுக்கு ஒரு தற்காலிக முடிவுதான் இது. அவர்கள் இருவரும் வேலை செய்யவும், பிள்ளைகள் பாடசாலை போக அனுமதி மற்றும் இதர நன்மைகளை அனுபவிக்கலாம் ஆனால் நிரந்தரகுடியுரிமை வழங்குவதைப் பற்றி கூறவில்லை. அவர்களை bridging visaவில் அவர்களை, அவர்கள் முன்பு இருந்த இடத்திற்கு(Biloela) போய் வாழ அனுமதித்துள்ளார்கள்.. 

நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கும் வரை எதுவும் நிலையில்லை, ஆனால் அவர்கள் dentition centreல் இல்லாமல் அவர்கள் வாழ விரும்பிய இடத்தில் வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.