Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய

May 31, 2022

spacer.png

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.22) நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அந்த கடினமான தீர்மானத்தை நாட்டுக்காகவே தான் எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட விருகிறது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது. அவர் மீதிருந்த நம்பிக்கையில் ஆகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

https://globaltamilnews.net/2022/177223

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய

ஆம் நீங்கள் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருந்து சிங்களவர்களை மகிழ்ச்சி கடலில் வைத்திருங்க .

 யாழை ரிவேர்ஸ்  பண்ணி பார்த்த பொழுது சும்மா சொல்லக்கூடாது கோத்தா ஆட்சிக்கு வரும்போது நம்ம யாழ்கள சிலரின்  வாழ்த்துப்பா தற்போது படிக்க புல்லரிக்குது கோத்தா யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்க்கு என்னவெல்லாம் செய்வேன் என்று கூறியதை  பார்க்க அட இந்த மனுசனா இப்படி சொல்லுது என்று வியக்க வேண்டி உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

பெருமாள்…. அந்த லிங்கை கொடுங்க.
நாங்களும் வாசித்து… மயிர் கூச்செறிவோம். 🤣

1 hour ago, கிருபன் said:

“நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்” - கோட்டாபய

May 31, 2022

spacer.png

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.22) நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அந்த கடினமான தீர்மானத்தை நாட்டுக்காகவே தான் எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட விருகிறது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது. அவர் மீதிருந்த நம்பிக்கையில் ஆகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

https://globaltamilnews.net/2022/177223

பெரிய கடினமான முடிவு???
மகிந்த…. கோத்தாகோகமவிற்கு, ரவுடிகளை அனுப்பி….
காரியத்தை கெடுத்திருக்கா விட்டால்,
இப்பவும் அவர்தான் பிரதமர்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை பலி  கொடுக்கவில்லை  என்றால்  உங்கள்  குடும்பமே காலியாகி  இருக்கணும்

இப்பவும்  என்ன  பின்  கதவால் அவர் தானே  இயக்குகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

முதலாம் பக்கத்திலேயே.... ஒரு மருத்துவர் ஐயா, 
கோத்தாவுக்கும், ஸ்ரீலங்காவுக்கும்... பயங்கரமாக உருட்டுகிறார்.  😁

அவர்களுடன் தொடர்பில் உள்ள ஆக்கள், 😜
அவரை... இரண்டு நாளைக்கு யாழ்.களத்துக்கு கூட்டிக் கொண்டு வந்தால்..
நாக்கைப்  புடுங்கிற மாதிரி, நாலு கேள்வி கேட்க... ஆசையாக உள்ளது.  😂
செய்வீர்களா...   செய்வீர்களா...   செய்வீர்களா...    🤣

  • கருத்துக்கள உறவுகள்

“Great people talk about ideas, average people talk about themselves and small people talk about others”.

”விடயங்களை அலசுபவர்கள் பெரிய மனிதர்கள். 

தம்மை பற்றி அலட்டுபவர்கள் சராசரி மனிதர்கள்.

இன்னொருவனை பற்றி அலட்டுபவர்கள் சின்ன மனிதர்கள்”.

-John C Maxwell -

எமக்கு யாரும் ஆப்பை சொருகுவதில்லை, நாமாகவேதான் ஆப்பின் மீது போய் உக்காருகிறோம்.

-நடிகர் சிம்பு -

“தானமாய் தந்தது - தற்காலிகம், தலைகெட்டு ஆடினால் - நிரந்தரம்”

-உடாஸ்சாமியார்-

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

”விடயங்களை அலசுபவர்கள் பெரிய மனிதர்கள். 

தம்மை பற்றி அலட்டுபவர்கள் சராசரி மனிதர்கள்.

இன்னொருவனை பற்றி அலட்டுபவர்கள் சின்ன மனிதர்கள்”.

-John C Maxwell -

அதே மக்ஸ்வெல் 

A man must be big enough to admit his mistakes, smart enough to profit from them, and strong enough to correct them. - John C. Maxwell

ஒருமனிதன் என்பவன் தனது தவறுகளை திருத்தி கொள்பவன் ஆக இருக்கனும் ......................................................................................................................

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்காக சேவை செய்வார்கள் என்கிற நம்பிக்கையிலேயே மக்கள் தம் தலைவரை தெரிவு செய்கிறார்கள், அது முடியாத போது தாமாகவே பதவி விலகுவதுதான் தார்மீகம். அது முடியாது என்று பிடிவாதம் பிடிக்கும்போது மக்கள் விரட்டி அடிக்கத்தான் செய்வார்கள். இதில் தங்களுக்கு என்ன கடினம்? மக்களை காரணம் காட்டி சுகம் அனுபவிப்பவர்கள் அதிக கவலை கொள்கிறார்கள். மஹிந்தவை பதவிவிலகச் செய்து தான் தப்பித்து கொண்டதாக தற்போதைக்கு நிம்மதி கொண்டாலும் இது இவருக்கு நிரந்தரமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.