Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பார்வையில் 'விக்ரம்' திரைப்படம்

Featured Replies

இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

********************************

🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
(VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

************************************

🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

நன்றி 😊

  • கருத்துக்கள உறவுகள்

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

  • தொடங்கியவர்
16 hours ago, suvy said:

தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️

16 hours ago, கிருபன் said:

இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மல்லிகை வாசம் said:

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நண்பர்களின் சிபாரிசால் இப்படத்தை அகண்ட திரையில்(i-MAX) பார்த்தேன்.
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்புடன் இருக்குமென தோன்றியது.

பிடித்த விடயம்:

கதாபாத்திரங்களின் செயல்கள்/குணங்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் திடீர் மாறுதல்கள், குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

முதல் பாதிவரை புதிரான ஊகிக்க முடியாத முடிச்சுகள்..🤔

ரசிக்காதவை:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

பாடல்களை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம், ரசிக்கும்படி இல்லை. 😡

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@மல்லிகை வாசம்

நல்லதொரு திரைவிமர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

ராசவன்னியன் ஐயா சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. 

முதல்பாதி நேரம் போனதே தெரியவில்லை.

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது. இரண்டாவது பாதியில் சில முடிச்சுக்களை இன்னும் பிந்தி அவிழ்த்திருக்கலாம். ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். அல்லது அவரையும் போட்டுத்தள்ளியிருக்கலாம் ( இன்னோர் 3 மணித்தியாலம் வெடிகுண்டுகளை வெடிக்கவைக்கத்தான் வேண்டுமா!)

வெண்திரையில் பார்க்கவேண்டிய படம்தான்👍🏾

  • தொடங்கியவர்
5 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊

நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை.

பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊

மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏

3 hours ago, ராசவன்னியன் said:

குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

1 hour ago, கிருபன் said:

ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

ராசவன்னியன் அண்ணா, கிருபன்,

பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்! 

Edited by மல்லிகை வாசம்

  • தொடங்கியவர்
3 hours ago, ராசவன்னியன் said:

சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

29 minutes ago, கிருபன் said:

சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம்.

லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊

3 hours ago, ராசவன்னியன் said:

முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

32 minutes ago, கிருபன் said:

இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது.

படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.