Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட 'சின்னு' எனும் கோழி - கேரள கிராம மக்கள் வியப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
814235.jpg  
 
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து காலில் வலி நிவாரணி தடவி விட்டுள்ளார் அவர்.

பின்னர் அன்றைய தினமே காலை 8.30 தொடங்கி மதியம் 2.30 மணி வரையில் தொடர்ச்சியாக 'சின்னு' கோழி முட்டைகளை இட்டு வந்துள்ளது. அந்தச் செய்தியை அறிந்து பிஜு வீட்டிற்கு பலரும் வருகை தந்து, கோழியை பார்த்துள்ளனர். ஊரார் கூடியிருக்க அவர்கள் முன்னிலையில் அந்தக் கோழி முட்டை இட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து அறிந்த கால்நடை மருத்துவர்களும் கோழியை வந்து பார்வையிட்டுள்ளனர். "இது மிகவும் அரிதான ஒன்று. அந்த கோழி தொடர்ச்சியாக முட்டையிட்டது ஏன் என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார் கால்நடை மருத்துவக் கல்வி பேராசிரியர் பினோஜ் சாக்கோ. பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஒரே சமயத்தில் அதிகளவிலான முட்டையை இட்ட கோழிக்கு அதன் உடலில் இருந்து கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் போன்ற சக்திகள் பெருமளவு குறைந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது தவிர அதற்கு உடல் அளவிலும் சிரமம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட 'சின்னு' எனும் கோழி - கேரள கிராம மக்கள் வியப்பு | chinnu a hen lays 24 eggs in 6 hours alappuzha kerala india miracle - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

 கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பிழம்பு said:

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

24 முட்டையும் என்னவிலை என்று விலையை பேசுங்க.

33 minutes ago, தமிழ் சிறி said:

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

  • கருத்துக்கள உறவுகள்

 சின்னுவுக்கு நடந்த    ஏதும் தந்திர மந்திர வேலையாய் இருக்குமோ ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

🐓சின்னு…. போட்ட, 24 முட்டையையும்…. அடைகாத்து, 🐣குஞ்சு பொரிக்க வைக்க வேணும்.
சின்னுவின் வம்சத்தில் வாற, கோழிகள் எல்லாம்… டசின் கணக்கில், முட்டை இடலாம். 🥚🥚🥚

சின்னுவின் வீட்டுக்காரரை காட்டினால் தான் நம்புவம்....

6 மணித்தியாலத்திலை 24 எண்டால்... ஆள் விசய காரர் போலை கிடக்குது...

Roster Stock Photos and Images. 1,812 Roster pictures and royalty free  photography available to search from thousands of stock photographers.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிலாமதி said:

 சின்னுவுக்கு நடந்த    ஏதும் தந்திர மந்திர வேலையாய் இருக்குமோ ? 😀

சின்னு…. இரண்டு முட்டை இட்டிருந்தால் நம்பலாம்.
அது… 24 முட்டையை, 6 மணித்தியாலத்திலை போட்டுதாம் என்றதை நான் நம்பவில்லை.

சின்னு  முட்டையிட முதல்…. ரொம்ப அசதியாய், நொண்டி, நொண்டி நடந்ததாம்.
அதை பார்த்த உரிமையாளர், அதனை தனிமைப் படுத்தி…
காலுக்கு…. வலி நிவாரணி தடவி விட்டாராம்.

ஊர்ச்சனங்கள், கால் நடை வைத்தியர்கள், ஆராய்ச்சியாளர்கள்….
எல்லாம் வந்ததை பார்க்க…. நிலைமை… சீரியஸ் போல கிடக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

சின்னுவின் வீட்டுக்காரரை காட்டினால் தான் நம்புவம்....

6 மணித்தியாலத்திலை 24 எண்டால்... ஆள் விசய காரர் போலை கிடக்குது...

Roster Stock Photos and Images. 1,812 Roster pictures and royalty free  photography available to search from thousands of stock photographers.

சின்னு…. 24 முட்டை, போட்டதை கேள்விப் பட்டு….
15 பேர், தாங்கள்தான்… சின்னுவின் வீட்டுக்காரர் என்று உரிமை கோருவதால்,
ஓறிஜினல் வீட்டுக்காரர் யார் என்று கண்டு பிடிக்க,  சிரமமாக உள்ளதால்…
பொலிசார்…. மோப்ப நாயை, வரவழைத்து உள்ளார்கள். 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

சின்னு…. 24 முட்டை, போட்டதை கேள்விப் பட்டு….
15 பேர், தாங்கள்தான்… சின்னுவின் வீட்டுக்காரர் என்று உரிமை கோருவதால்,
ஓறிஜினல் வீட்டுக்காரர் யார் என்று கண்டு பிடிக்க,  சிரமமாக உள்ளதால்…
பொலிசார்…. மோப்ப நாயை, வரவழைத்து உள்ளார்கள். 🤣
 
நாய்..... லபெக்கெண்டு... கோழிய... கவ்வீரும் எண்டதால.... டிஎன்ஏ ரெஸ்ட் தான் சரிவரும் எண்டுறார் உடான்சு சுவாமியார்... குருஜி நித்தியானந்தா சுவாமிகள்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாய்..... லபெக்கெண்டு... கோழிய... கவ்வீரும் எண்டதால.... டிஎன்ஏ ரெஸ்ட் தான் சரிவரும் எண்டுறார் உடான்சு சுவாமியார்... குருஜி நித்தியானந்தா சுவாமிகள்... 😁

உடான்ஸ் சாமியார்…. நாய்க்கு முதல், கோழியை கவ்வ… பிளான் போடுறார் போல கிடக்கு.😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முட்டையைச் சாப்பிட்டால்........🤣🤛🤛🙏👍😢😭🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.