Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடமிருந்து... பெறப்படும்  "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்

இந்தியாவிடமிருந்து... பெறப்படும்  "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்.

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்றும் பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1289170

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

உண்மையில் அம்பாந்தோட்டையில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டுதட போதே சிங்களவர்கள் ராஜபட்சக்களின் முட்டாள் தனத்தை புரிஞ்சிருக்க வேணும்.இனவாதம் கண்ணை மறைச்சுது.இப்ப பசி கண்ணை மறைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மையில் அம்பாந்தோட்டையில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டுதட போதே சிங்களவர்கள் ராஜபட்சக்களின் முட்டாள் தனத்தை புரிஞ்சிருக்க வேணும்.இனவாதம் கண்ணை மறைச்சுது.இப்ப பசி கண்ணை மறைக்குது.

இப்பவும் இந்தி  இனவாதம் தான்  நடத்துது??

நமக்கும்  சிங்களத்துக்கும் அது  புரியும்போது.....???

இலங்கை முழுங்கப்பட்டிருக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, தமிழ் சிறி said:

இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்றும் பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தாலும், தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், வட கிழக்கில் பெரும் தொழிற்சாலைகளை நிறுவிய திரு. யீ.யீ.பொன்னம்பலம் வர்கள், யாழ் காங்கேசன்துறையிலும் சீமேந்து தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சீமேந்து உற்பத்திக்கு தேவையான கற்கள் அங்கு ஏராளமாக இருப்பதைக் காரணம் காட்டி அன்றைய அரசை அதற்குச் சம்மதிக்கவும் வைத்தார்.

தொழிற்சாலைக்குப் பெருமளவில் கற்களைத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் மாபெரும் பள்ளத்தாக்குகளில், அருகே உள்ள கடல்நீர் ஏதாவது காரணத்தால் உட்புக வாய்ப்புள்ளது, அப்படி உட்புகுந்தால், நகரமே தண்ணீரில் மூழ்கி அழிந்துவிடும் என்று அதுபற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் கவலை தெரிவித்தபோது, கவலை வேண்டாம், கடல்நீர் உட்புகுந்தாலும் அதனை எமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். காங்கேசன்துறை நகரத்தையே பெரும் துறைமுகமாக்கிப் பயனடையலாம் என்று காங்கிரசு கட்சிக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் திரு. யீ.யீ.பொன்னம்பலம் அவர்கள்பற்றிக் குறிப்பிட்டுப் பேசியது இன்றும் நினைவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இந்தியா நாணயத்தை இலங்கையில் பாவிக்க தொடங்குவது ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

May be an image of road and text that says 'Expenditure Development projects Mattala MATTALA RAJAPAKSA IN TERNATIONAL International oneword A Airport Srilankan Airlines 2010 US$ million Hambantota Port 1320 US$ million Lotus Tower 103.4 US$ million Sooriyawewa Stadium 500 Million Rupees Matara- Mattala Expressway Central Expressway 242 Billion Rupees Kahatuduwa Pelmadulla Expressway 275 Billion Rupees 160.8 Billion Rupees Panbt'

ராஜபக்ச குடும்பத்தினராலும் , அவர்களின் அடிவருடிகளாலும்... 
மக்களின் வரிப்பணம், முற்றிலுமாக... வீணடிக்கப்பட்ட சம்பவங்கள்.

RAJAPAKSHA - development! in a nut shell. what a waste of tax payers' money!
extract from daily mirror - an article by Pargeeth Sampath Karunatileke. https://www.dailymirror.lk/.../Spotlight-on.../231-239978

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.