Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan அண்ணா, நீங்கள் கம்யூனிசத்தை முழுமையாக ஆதரிக்கிறீர்களா?

இன்று கம்யூனிசம் தனியாக, முதலாளித்துவம் தனியாக இயங்க முடியுமா?

சீனாவின் கொள்கைகள் தற்போதைய உலகிற்கு ஏற்புடையவையா? 

நீங்கள் இங்கே இணைக்கும் செய்திகளை வைத்தும் மட்டுமே இந்த கேள்வி.. குறை நினைக்க வேண்டாம்

  • Replies 68
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் ஆக்கிரமிக்கப்பட வேண்டும் என்றோ அழிவுகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றோ யாரும் விரும்பியதாக தெரியவில்லை. 

இப்போது கூட ஒருவர்  யாழ்களத்தில் - ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் - என்று எழுதியிருக்கிறாரே.
மற்றும் நேரிலே இவர்களை பற்றி எல்லாம் உங்களுக்கு  சரியாக தெரியாது படு மோசமான கொலைகாரர்கள். ரஷ்யா தான் ஒரு பாவம் என்று மேற்குநாடுகளில் இருந்தபடியே சொல்கிறார்களே. இப்படியான கொலைகார நாடுகளை தேடிதான் விமானம் ஏறி ஆயிரகணக்கான மைல்கள் கடந்து அடைக்கலம்தேடி வந்தார்களா ராசவன்னியன் அண்ணா செல்கிற மாதிரி பக்கத்து தமிழ்நாட்டிற்கே சென்றிருக்கலாமே.
நீங்கள் கம்யுனிச சித்தாந்தவாதி இல்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@Kapithan அண்ணா, நீங்கள் கம்யூனிசத்தை முழுமையாக ஆதரிக்கிறீர்களா?

இன்று கம்யூனிசம் தனியாக, முதலாளித்துவம் தனியாக இயங்க முடியுமா?

சீனாவின் கொள்கைகள் தற்போதைய உலகிற்கு ஏற்புடையவையா? 

நீங்கள் இங்கே இணைக்கும் செய்திகளை வைத்தும் மட்டுமே இந்த கேள்வி.. குறை நினைக்க வேண்டாம்

கம்யூனிசம், முதலாளித்துவம் என்றெல்லாம் நான் யோசித்ததேயில்லை. யாழ்ப்பாணத்தில் எனது கல்வி சைவ சமயக் கல்லூரியில் ஆரம்பமானது. அங்கு ஒவ்வொரு நாளும் காலைப் பிரார்த்தனை முடிந்தவுடன் இறுதியாக எல்லோரும் "இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க"  என்று முடிப்பார்கள். 

இதுதான் என்னுடைய கொள்கையும். பொ

பொதுவுடமையும் முதளாளித்துவமும் தனித்தனியே இயங்க முடியாது. இர்ண்டிலுமுள்ள நன்மையான அம்சங்களெல்லாம் ஒருங்கே இணைந்த கலப்பு முறையே முழு மனித குலத்திற்கும் நன்மை தரும். 

அதாவது, கடுமையான உழைப்பிற்கு வெகுமதியும் மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை, Greed க்கு கடிவாளமிடப்பட வேண்டும். சோம்பேறித்தனத்தை உதைத்துத்தள்ள வேண்டும். அத்துடன் யாசகம் கேட்கும் நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும். 

சீனாவின் கொள்கை என்ன ?  அது எந்த நாட்டுடன் சண்டை பிடிக்கிறது ?

( சீனா தனது பணத்தை  அபிவிருத்தி அடையாத நாடுகளில் முதலீடு செய்வதை கவனிக்கவும். பட்டுப்பாதை திட்டத்தையும்  முக்கியமாக ஆபிரிக்க கண்டத்தில்.  இதனை ஒரு  தகவலா மட்டும்தான் பதிகிறேன். சிந்தனைக்கு மட்டுமே )

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது கூட ஒருவர்  யாழ்களத்தில் - ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் - என்று எழுதியிருக்கிறாரே.
மற்றும் நேரிலே இவர்களை பற்றி எல்லாம் உங்களுக்கு  சரியாக தெரியாது படு மோசமான கொலைகாரர்கள். ரஷ்யா தான் ஒரு பாவம் என்று மேற்குநாடுகளில் இருந்தபடியே சொல்கிறார்களே. இப்படியான கொலைகார நாடுகளை தேடிதான் விமானம் ஏறி ஆயிரகணக்கான மைல்கள் கடந்து அடைக்கலம்தேடி வந்தார்களா ராசவன்னியன் அண்ணா செல்கிற மாதிரி பக்கத்து தமிழ்நாட்டிற்கே சென்றிருக்கலாமே.
நீங்கள் கம்யுனிச சித்தாந்தவாதி இல்லை என்று நினைக்கிறேன்.

கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்…பிசியா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

( சீனா தனது பணத்தை  அபிவிருத்தி அடையாத நாடுகளில் முதலீடு செய்வதை கவனிக்கவும். பட்டுப்பாதை திட்டத்தையும்  முக்கியமாக ஆபிரிக்க கண்டத்தில்.  இதனை ஒரு  தகவலா மட்டும்தான் பதிகிறேன். சிந்தனைக்கு மட்டுமே )

அவர்களுடைய பட்டுப் பாதை திட்டத்தின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் அவர்கள் எவ்வாறு இதனை நிறைவேற்றுகிறார்கள் என்பதையும் ஓரளவிற்கு அறிவேன்..

நீங்கள் சிந்தனைக்கு மட்டும் என கூறியதால் இதனை இப்படியே விடுவோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுடைய பட்டுப் பாதை திட்டத்தின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் அவர்கள் எவ்வாறு இதனை நிறைவேற்றுகிறார்கள் என்பதையும் ஓரளவிற்கு அறிவேன்..

நீங்கள் சிந்தனைக்கு மட்டும் என கூறியதால் இதனை இப்படியே விடுவோம்.

நன்றி

புரிந்துகொடதற்கு நன்றி பிரபா. 

எங்களுக்கு எப்போதும் ஒருபக்க தகவல்கள் மட்டுமே புகுத்தப்படுகிறது. பட்டுப்பாதை திட்டத்தால் யார், எந்த நாடுகள், எப்படிப் பயனடைகிறார்கள் என்பதை விரிவான வாசிப்பின் மூலம் கண்டடையலாம். நீண்ட கால நோக்கில் இதனைப் பார்க்க வேண்டும்.  

எல்லா முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் இருக்கும். அதன் விகிதாசாரங்கள்தான் வேறுபடும். 

பட்டுப்பாதை திட்டத்தை ஒரு உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். அண்மையில் இந்த திட்டத்திற்கு போட்டியாக மேற்கு 700 பில்லியன் டொலர் முதலீட்டில் புதிய திட்டமொன்றை முன்வைத்துள்லதையும் கவனிக்க. 

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது கூட ஒருவர்  யாழ்களத்தில் - ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் - என்று எழுதியிருக்கிறாரே.

இப்படி எழுதுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அப்பால் நகர்ந்துவிடவேண்டும்.

ஆசான் அருளியது:

Quote

அறியாமையை ஈட்டிக்கொண்டால், அது நாம் ஈட்டிக்கொண்டது என்பதனாலேயே அதை கடைசிவரைக்கும்காத்து நிற்போம். அதை நாம் கைவிடவே மாட்டோம். அதை உடைத்துக்கொண்டு அறிவு நமக்குள் நுழைவதுமிகமிகக் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விசிலுடன் திரிகிறேன் ஆனால் எப்ப ஊத வேணும் என்டு தெரியுதில்லை.ஊத வேண்டிய நேரத்தை யாராவது சொன்னால் னுண்ணியமாகப் போகும்.😆

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது கூட ஒருவர்  யாழ்களத்தில் - ரஸ்யாவை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் அவர்களின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் - என்று எழுதியிருக்கிறாரே.
மற்றும் நேரிலே இவர்களை பற்றி எல்லாம் உங்களுக்கு  சரியாக தெரியாது படு மோசமான கொலைகாரர்கள். ரஷ்யா தான் ஒரு பாவம் என்று மேற்குநாடுகளில் இருந்தபடியே சொல்கிறார்களே. இப்படியான கொலைகார நாடுகளை தேடிதான் விமானம் ஏறி ஆயிரகணக்கான மைல்கள் கடந்து அடைக்கலம்தேடி வந்தார்களா ராசவன்னியன் அண்ணா செல்கிற மாதிரி பக்கத்து தமிழ்நாட்டிற்கே சென்றிருக்கலாமே.
நீங்கள் கம்யுனிச சித்தாந்தவாதி இல்லை என்று நினைக்கிறேன்.

1991 க்கு முன்பு யூக்ரேன் என்ற நாடு இருந்ததா?

தடித்த எழுத்தில் போட்டு காவோ காவென்று காவுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 04:45, goshan_che said:

https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
 
எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

நல்ல ஒரு இணப்பு, தகவலுக்கு நன்றி கோசான்.

இரஸ்சியாவின் மத்திய வங்கியின் ஆளுனராகவுள்ள  இந்த பெண்மணியின் திறமையினாலேயே இரஸ்சியா ஒட்டு மொத்த உலகபொருளாதார தடையினை தனித்து எதிர்கொள்ள முடிகிறது எனக்கூறுகிறார்கள்.

https://www.nytimes.com/2022/05/09/business/elvira-nabiullina-russia-central-bank.html

ஆரம்பத்தில் இரஸ்சிய எரிபொருள்களுக்கு தடை என கூறிய மேற்கு தற்போது 3 வது நிலையிலுள்ள இரஸ்சிய தங்கத்திற்கும் தடை விதித்துள்ளது, இதனிடையே ஆரம்பத்திலிருந்து எரிபொருள் தடைக்கு பதிலாக இரஸ்சிய எரிபொருலை குறைந்த விலைக்கு இரஸ்சியா விற்கவேண்டும் என மேற்கு கோரும் நிலைக்கு மேற்கு வந்துள்ளது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பணவீக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது அமெரிக பிரித்தானிய வர்த்தக பங்காளி நாடுகளுக்குள் இந்த நாடுகளது பணவீக்கம் மறைமுகமாக நுழைகிறது.

மேற்குடன் ஒப்பீடு செய்யும் போது இரஸ்சிய பொருளாதாரம் வலுவான பொருளாதாரம் ( Sustainable economy ).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இரஸ்சியாவின் மத்திய வங்கியின் ஆளுனராகவுள்ள  இந்த பெண்மணியின் திறமையினாலேயே இரஸ்சியா ஒட்டு மொத்த உலகபொருளாதார தடையினை தனித்து எதிர்கொள்ள முடிகிறது எனக்கூறுகிறார்கள்.

இது உண்மை.

பல வெளியில் தெரிந்தாலும், பலராலும் பொருட்படுத்தப்படாத, மற்ற நாடுகள் அவ்வப்போது செய்த பல சிறு நடவடிக்கைகள் மூலம்,  கூட்டு  விளைவாக நம்பிக்கையை  தக்க வைத்தார்.

வெளியாக சூழ்நிலைகளும் உதவியது என்பது மறுபுறம். அதாவது, முழுமையாக மேற்றுகின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மேற்கிற்கு உறைத்து இருக்கும்  

 முக்கியமாக, ரஷ்யா ஐ தவிர்த்து விட்டு, oil ஐ பற்றி கதைக்க முடியாது என்பது தெரிய வேண்டி வந்தது.

முக்கியமாக, சர்வதேச கடன் முறிகள் ரஷ்யா default பண்ணும் என்னும் மேற்கு பிரச்சாரம் பொய்யாகி, இறுதியில் ரஷ்யா பணம் அனுப்புவதை தடுத்து செயற்கையான DEAFULT க்கு கொண்டு வர, அது கடன் CONTRACT இல் இல்லை என்பதால் default அல்ல என்பதை வந்து நிற்கிறது.  

நான் பயப்படுவது, வெளியில் தம்மை நல்ல பிள்ளைகளை காட்டிக் கொள்ளும் மேற்கு (cia, MI5) போன்றவை, இவரைப் போன்றவர்களை குறிவைக்க கூடும்.  

ருசியா, அதற்ககா நல்லது என்று சொல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

உண்மைதான் மிகவும் திறமையான பெண்மணி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

3 hours ago, Kadancha said:

30 minutes ago, vasee said:

உண்மைதான் மிகவும் திறமையான பெண்மணி.

இவர் மிக திறமையான பொருளாதார நிபுணர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உக்ரேன் யுத்தம் தேவையில்லாத ஆணி என இவர் தனிப்பட்டு கருதுவதாயும், புட்டினிடம் கூறியதாயும் ஆனாலும் நாட்டின் நலன் கருதி வேலை செய்வதாயும் அறிகிறேன்.

ரஸ்யா பொருளாதாரம் - எமக்கு உண்மை நிலை தெரியவில்லை - மக்கள் அடிப்படை வாகன உதிரி பாகங்கள் கூட இல்லாமல் அவதி படும் ஒரு நிலை அங்கே இருக்கிறது. RT போன்ற ஊது குழல்கள் மட்டுமே ரஸ்ய நிலையை சொல்கிறன. டிவிட்டர் போன்றவற்றில் கூட நடப்பதை “யுத்தம்” என எழுதியோர் அச்சுறுத்தப்படும் நிலை. என்பது என் கருத்து.

அடுத்து இது ஒரு dead cat bouncing effect என்பதும் என் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் battle of wills என்பார்கள். புட்டினுக்கும் மேற்குக்கும் மட்டும் அல்ல. சவுதியின் சல்மான் போன்றோருக்கும் கூட. இன்னும் 15 வருடத்தில் மேற்கு பெற்றோலியத்தை மட்டும் அல்ல, இந்த நாடுகளையும் கைவிட போவதை இவை உணருகிறன. இதற்கான தயார்படுத்தலின் ஓரங்கமே இந்த போர். 

நீண்ட கால நோக்கில் இதில் இராணுவ, கேந்திர, பொருளாதார, நோக்கில் இழப்பு ரஸ்யாவுக்கே என்பது என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2022 at 18:42, goshan_che said:

https://www.smh.com.au/business/the-economy/putin-s-desperation-on-show-as-he-slowly-loses-the-financial-battle-20220708-p5b024.html

புட்டின் பொருளாதார ரீதியாகத்தோற்கிறார் என்பதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன மேலே உள்ள கட்டுரை சிட்னி மோர்னிங் கேரட்டில் வந்துள்ளது.

பொருளாதாரத்தில் 4 வகையான வளங்களை கொண்டு அவற்றினை என்ன பொருளை எவ்வளவு யாருக்காக உற்பத்தி செய்தல் என்பதினை முதலாளித்துவ பொருளாதாரத்தில் இலாப நோக்கில் உற்பத்தி செய்யும் போது, சந்தையினை மையமாகக்கொண்டு அதிகளவில் குறைந்த விரயங்களுடன் பொருள்களை உற்பத்தி செய்து அதனை, சந்தை பொருளாதாரத்தின் மூலம் ஏற்றுமதியினை நோக்கமாகக்கொண்டு அதிகளவில் உற்பத்தி செய்வார்கள், அந்த பொருளாதாரம் தன்னிறைவற்ற இறக்குமதியில் தங்கின பொருளாதாரம் ஆகும்.

பொதுவுடமை பொருளாதாரத்தில் இலாபத்திற்கு பதிலாக சமூக நோக்கில் தன்னிறைவு பொருளாதாரமாக காணப்படும்.

முதலாளித்துவ நாடுகளின் ஏற்றுமதி பெரும்பாலும் கைத்தொழில் பொருள் ஏற்றுமதியாக இருப்பதால் அவர்களது பொருள்களுக்கு அதிக பணமும், விவசாய மற்றும் கனிய வளங்க்ளை ஏற்றுமதி செய்யும் வறிய நாடுகளின் பொருள்கல் மலிவாகவும் காணப்படும்.

நான் நினைக்கிறேன் இரஸ்சியா முழுமையாக முதலாளித்துவ பொருளாதார நிலைக்கு மாறாமல் இருப்பதனாலேயே இரஸ்சிய பொருளாதாரம் சந்தை பொருளாதாரத்தில் போடப்படும் தடைகளால் ஆட்டம் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

ரஸ்யா ஒரு போதும் ஒரு ஜனநாயக நாடாக இருந்ததில்லை என்பதுதான் உண்மை. ஷார் காலமாகட்டும், கம்யூனிஸ்ட் காலமாகட்டும், புட்டின் காலமாகட்டும் - ரஸ்யா எப்போதும் ஒரு அடக்குமுறை, அரசு அனைத்தையும் கட்டுப்படுத்தும் சமூகமாகவே இருந்துள்ளது.

ஆகவே சகல வழங்களையும் போரை நோக்கி திருப்புவது இப்படி பட்ட ஒரு பெயரளவில் ஜனநாயக, செயலில் முழு சர்வாதிகார நாட்டில் இலகு.

இது கம்யூனிஸ்ட் அல்லது சோசலிஸ்ட் பொருளாதாரத்தின் அம்சத்தால் வருகிறது என்பதை விட - எதேச்சதிகாரத்தால்/சர்வாதிகாரத்தால் நிகழ்கிறது என்பதே உண்மை. 

கம்யூனிசத்தின் நல்ல அம்சங்கள் எல்லாம் ரஸ்யாவில் எப்போதோ இழக்கப்பட்டு விட்டது. இப்போ இருப்பது எதேச்சாதிகாரம் மட்டும்தான்.

உண்மையில் அமெரிக்காவை விட மோசமான ஒரு சுரண்டல் முதலாளிதுவமே ரஸ்யாவில் இப்போ உள்ளது.

கூடவே கழுத்தை நெரிக்கும் ஊடக அடக்குமுறை. ஒவ்வொன்றாக ரஸ்யாவில் இருந்த அத்தனை புட்டின் எதிர் ஊடகங்களும் சேவையை நிறுத்தும் அளவுக்கு கட்டுப்பாடு.

ஆகவே உண்மையில் ரஸ்ய பொருளாதாரத்தின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

ஆனால் சில educated guess ஐ செய்யலாம்.

1. எரி சக்தியை ஐரோப்பாவுக்கு விற்பது ரஸ்யாவின் பெரும் வருவாய். இது தடைபடும் போது, அதை குறிப்பாக எரி வாயுவை ரஸ்யா வேறு யாருக்கும் அரை விலைக்கு கூட விற்க முடியுமா என்பது சந்தேகமே.

2. அதே போலத்தான் சந்தையும். இழக்கப்ட்ட ஐரோப்பிய, அமெரிக்க சந்தைக்கு நிகராக ஏனைய நாடுகளுக்கு ரஸ்ய ஏற்றுமதி அதிகரித்ததாக தரவுகள் ஏதும் அதிகம் இல்லை.

ஆகவே நீண்ட கால நோக்கில், ரஸ்யா ஒரு, தனக்குள் வாங்கி வித்து, சீனா, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் ஒரு மூடிய பொருளாதாரமாக மாற வேண்டும்.

இதுவரைக்கும் இப்படி பட்ட மூடிய பொருளாதாரங்கள் எவையும் (சிறிமா காலத்து இலங்கை, நரசிம்மராவ்/ மன்மோகன் சிங்குக்கு முந்திய இந்தியா) பொருளாதாரத்தில் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன்.

அதுவும் மூடிய முதலாளிதுவ பொருளாதாரம் என்பது 90 களுக்கு முந்திய இந்தியாவை போலதான் இருக்கும். இந்தியாவில் அம்பாசடர், பியட் பத்மினி மட்டுமே கார்களாக இருந்த காலம்.  

நாடு தாக்குப்பிடிக்கும் (survive) ஆனால் பொருளாதாரம் வளராது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மோசமான ஒரு சுரண்டல் முதலாளிதுவமே ரஸ்யாவில் இப்போ உள்ளது.

கூடவே கழுத்தை நெரிக்கும் ஊடக அடக்குமுறை. ஒவ்வொன்றாக ரஸ்யாவில் இருந்த அத்தனை புட்டின் எதிர் ஊடகங்களும் சேவையை நிறுத்தும் அளவுக்கு கட்டுப்பாடு.

100 வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

உண்மை, பொதுவுடமை பொருளாதாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் தற்செய்லாக இரண்டும் ஒருமித்து ஒரே நாடுகளில் காணப்படுவதால் ஏற்படும் ஒரு மயக்கநிலை.

பொதுவுடமை பொருளாதாரத்தில் தமக்குத்தேவையான குண்டூசியிலிருந்து விமானங்கள் வரை தாமே தயாரிக்கும் போது ஒவ்வொஉ பொருளுக்கும் வேறுபட்ட அமைய செலவு உண்டு சிலவற்றிற்கு அதிகம் சிலவாற்றிற்கு குறைவு, முதலாளித்துவத்தில் குறைந்த அமையசெலவு உள்ள பொருளை அதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் விரயம் தடுக்கப்படுகிறது.

இந்த சாதகநிலை பொதுவுடமையில் இல்லை.

ஆனாலும் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பு இல்லாமையால் அவர்களது பொருளாதாரம் உறுதியாகவுள்ளது (Sustainable growth), மிக குறைந்த விகிதத்திலான வளர்ச்சி.

சந்தை பொருளாதாரத்தில் விரவான வளர்ச்சி இருந்தாலும், உலக பொருளாதாரத்தில் ஏற்படும் தளம்பல்கள் பாரிய அழிவினை ஏற்படுத்தும்.

எமது நிறுவனத்தில் கடந்த பங்குனி மாதத்தில் மூலப்பொருள்கலுக்கானை இருப்பு 6 மாத இருப்பு உள்ளதாக கூறினார்கள், ஆனால் ஏற்கனவே உற்பத்தியினை பெருமளவில் குறைத்திருந்தும் மூலப்பொருள்கள் முடிவடைந்துவிட்டது, எதிர்வரும் வாரத்தில் வரும் என எதிபார்க்கிறார்கள்.

நான் நினைக்கிறேன், மேற்கு நாடுகளுக்கு தெரியும் இந்த பொருளாதார தடைகள் இரஸ்சிய அரசினை பாதிக்காது, அதனால் அவர்களது இலக்கு இரஸ்சிய மக்கள்.

கம்போடியாவில் கொமினிச போராட்டத்தினை ஒடுக்க பொருளாதார தடைகளை போட்டு பட்டினியில் வாடும் மக்களின் சுதந்திரத்திற்கு உணவை விலை பேசினது போல இங்கும் முயற்சிக்கப்படுகிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அல்லது புட்டினின் போன்ற ஒரு 23 வருட பெயரளவு ஜனநாயகவாதியிடம் இருந்து நாட்டை மீட்டு, ஏனைய ஐரோப்பிய நாடுகள் போல் ஒரு மேம்பட்ட ஜனநாயகத்தை ரஸ்யாவில், ரஸ்யர்களே ஸ்தாபிக்க இது வழிகோலவும் கூடும்.

பொல்பொட்டின் கீழான கம்போடியாவை விட இப்போதைய கம்போடியா, கம்போடிய சாதாரண குடிகளுக்கு எவ்வளவோ மேல் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அல்லது புட்டினின் போன்ற ஒரு 23 வருட பெயரளவு ஜனநாயகவாதியிடம் இருந்து நாட்டை மீட்டு, ஏனைய ஐரோப்பிய நாடுகள் போல் ஒரு மேம்பட்ட ஜனநாயகத்தை ரஸ்யாவில், ரஸ்யர்களே ஸ்தாபிக்க இது வழிகோலவும் கூடும்.

பொல்பொட்டின் கீழான கம்போடியாவை விட இப்போதைய கம்போடியா, கம்போடிய சாதாரண குடிகளுக்கு எவ்வளவோ மேல் தானே?

உண்மைதான்.

மேற்குநாடுகள் இரஸ்சியாவில் பயன்படுத்தும் அதே உத்தியினை உக்கிரேன் மீது இரஸ்சியாவும் உபயோகிக்கிறது என கருதுகிறேன், தற்போது அவர்களால் முழுமையான பொருளாதார தடையினை போட முடியாமல் போனாலும் (அதற்கேற்ப இராணுவ வல்லமை தற்போது இரஸ்சியாவிடம் இல்லை) எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலமை ஏற்படலாம்.

ஆக்கிரமிப்பாளர்களின் பொதுவான உத்தி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மைதான்.

மேற்குநாடுகள் இரஸ்சியாவில் பயன்படுத்தும் அதே உத்தியினை உக்கிரேன் மீது இரஸ்சியாவும் உபயோகிக்கிறது என கருதுகிறேன், தற்போது அவர்களால் முழுமையான பொருளாதார தடையினை போட முடியாமல் போனாலும் (அதற்கேற்ப இராணுவ வல்லமை தற்போது இரஸ்சியாவிடம் இல்லை) எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலமை ஏற்படலாம்.

ஆக்கிரமிப்பாளர்களின் பொதுவான உத்தி.

ஆம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.