Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜினாமா செய்தார் கோட்டாபயா.. ராஜபக்‌ஷே குடும்பத்தை அதிகாரத்திலிருந்து துடைத்தெறிந்த இலங்கை மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடியால் புரட்சியில் இறங்கிய இலங்கை மக்களை தாக்குபிடிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
 

சிங்கப்பூரில் கோட்டாபயா

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இது "வரும்.. ஆனா வராது" கேஸ் இல்லையே..? 🤗

ராஜினாமா கடிதம் இணையத்தில் வரட்டும், நம்ப ஆரம்பிப்போம். 😌

28 minutes ago, ராசவன்னியன் said:

இது "வரும்.. ஆனா வராது" கேஸ் இல்லையே..? 🤗

ராஜினாமா கடிதம் இணையத்தில் வரட்டும், நம்ப ஆரம்பிப்போம். 😌

மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். அதன் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கின்றனர் பலர். நேரிடையாக கொடுக்காமல் மின்னஞ்சல் மூலம் கொடுப்பது சரியா இல்லையா என கேள்வி வருகின்றது. அரசியலமைப்பின் படி "கையளிக்க" வேண்டுமாம்...

நல்ல வேளை புறாவின் மூலம் கடிதத்தை மனுசன் அனுப்பவில்லை

 

Sri Lanka President Gotabaya Rajapaksa has  emailed a letter of resignation to Speaker Mahinda Yapa Abeywardena.

Sri Lanka Speaker’s media office confirms receiving President Gotabaya Rajapaksa’s letter of resignation but says an official announcement will be done once the legality of the letter is confirmed.

According to sources, the official announcement has been delayed because Speaker Mahinda Yapa Abeywardena wants to verify the authenticity of the letter.

Sri Lanka High Commission in Singapore has been reportedly instructed to obtain the hard copy of the letter from President Gotabaya Rajapaksa.

Speaker has also referred the matter to the Attorney General’s Department to obtain necessary legal advice.

Meanwhile, Reuters reported that President Rajapaksa’s original resignation letter is to be flown into Colombo from Singapore at the earliest. (NewsWire)

https://www.newswire.lk/2022/07/14/sri-lanka-presidents-resignation-announcement-delayed-over-email-legality/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: கோட்டாபயவின் பதவி விலகல் தகவல் செல்லுமா? சபாநாயகர் ஆலோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோட்டாபய ராஜபக்ஷ

 

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான தகவலை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் தகவல் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆலோசனை நடத்தி வருதவாக அவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, தாய்நாட்டில் இருந்து மாலத்தீவுக்கு புதன்கிழமை அதிகாலையில் தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற கோட்டாபய, வியாழக்கிழமை நண்பகலில் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணியளவில் வந்தார்.

அவர் சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பார் என்று அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். அந்த வகையில் தற்போதைய அவரது பயணமும் அதே நோக்கத்துடனேயே இருக்கலாம் என்றும் அந்த அடிப்படையிலேயே அவர் நாட்டுக்குள் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. அவருக்கு அடைக்கலமும் தரப்படவில்லை. அடைக்கலம் கோரலை சிங்கப்பூர் ஏற்பதில்லை என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு எந்த விசாவில் வந்தார் கோட்டாபய?

சிங்கப்பூர், இலங்கையிலான உடன்பாட்டின்படி இலங்கையர்கள் சிங்கப்பூருக்குள் விசாயின்றி குறுகிய கால பயணத்தை மேற்கொண்டு அதிகபட்சமாக 30 நாட்களுக்கு தங்கியிருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே கோட்டாபய சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னதாக, கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு வரும் தகவல் பிற்பகலிலேயே உள்ளூர் மக்களுக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை பார்க்க சிறிய அளவில் விமான நிலையத்தில் இருந்த மக்கள் கூட்டம், நேரம் செல்லச்செல்ல அதிகமானது.

வழக்கமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு மூன்றாவது முனையத்திலேயே பயணிகளை செளதி ஏர்லைன்ஸ் விமானம் இறக்கி விடும். ஆனால், இன்று இரண்டாவது முனையத்திலேயே அந்த விமானம் பயணிகளை இறக்கி விட்டது.

இதேவேளை, அவர் சமூக வருகை (சோஷியல் விசா) நுழைவு அனுமதி பெற்று நாட்டுக்குள் வந்துள்ளார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கோட்டாபய விவகாரத்தில் நாட்டில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், வேலைக்கான அனுமதி பெற்று பணியாற்றும் வெளிநாட்டினர், சமூக நுழைவு அனுமதி பெற்றவர்கள் அனைவரும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்றும் விதிகளை மீறி பொது இடத்தில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, கோட்டாபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டில் ஜனநாயக முறையில் முதலாவது ஜனாதிபதி ஆக தேர்வானவருமான மெஹாம்மத் நஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் கோட்டாபய தொடர்பாக சில தகவலை பகிர்ந்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கிறேன். இலங்கையிலேயே அவர் இருந்திருந்தால் உயிர் பயத்துடன் இருந்து கொண்டு அவரால் ராஜிநாமா செய்திருக்க முடியாது. மாலத்தீவு அரசாங்கம் சிந்தித்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ எத்தனை நாட்கள் தங்கியிருப்பார், இங்கிருந்து வேறு நாட்டுக்கு செல்வாரா என்பதை கோட்டாபயவோ அவரது தரப்போ தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தமைக்கான 'ஆவணம்' தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது. ஆனால், மின்னஞ்சல் மூலம் வந்த தகவலை ராஜிநாமா கடிதம் என்று அழைக்காமல் ஆவணம் என்று சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடுகிறது.இந்த ராஜிநாமா ஆவணம், தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணம், அவரது ராஜிநாமா கடிதமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 'ஜனாதிபதியின் ராஜிநாமா' தொடர்பில் எவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதத்தில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகத்தின் பேச்சாளர் பிபிசி தமிழிடம் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62168699

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் யாப்பாவுக்கு ஈமெயில் செய்யபட்டுள்ளது. இப்போ அதை சிங்கபூர் இலங்கை தூதரகம் மூலம் அத்தாட்சி படுத்தபடுகிறது.

அட்டோனி ஜெனரலின் மதிப்பீடும் கோர பட்டுள்ளது.

சில சமயம் உச்ச நீதிமன்று இது செல்லும் செல்லாது என அபிப்ராயம் சொல்லவேண்டி இருக்கும்.

32 minutes ago, ராசவன்னியன் said:

இது "வரும்.. ஆனா வராது" கேஸ் இல்லையே..? 🤗

ராஜினாமா கடிதம் இணையத்தில் வரட்டும், நம்ப ஆரம்பிப்போம். 😌

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஜனாதிபதியாகவேண்டும் என நான் எதிர்பார்ப்பதன் காரணம், தனக்கு கிடைக்காத ஒன்றை, வேறு வகையில் பிடித்து, அதனை இல்லாமல் செய்வார் என்று நம்புவதால்.

அடுத்த முப்பது நாளில், ரணில், ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதை முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இதனை அவர் உறுதி செய்தால் மட்டுமே, அவர், பாராளுமன்றில் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகள் இல்லாமல், பொருளாதார பிரச்சனை குறித்து கவனம் செலுத்த முடியும்.

மேலும், அவரே, ஜனாதிபதியாக, ஒருவரை  பிரதமராக தெரிவு செய்வார் என்பதால், அது யாராக இருக்கும் என்று ஊகங்கள் அடிபடுகின்றன.

சஜித் வரமுடியும் என்று நான் நினைக்கவில்லை. ஹர்ஷா டீ சில்வா? அல்லது மொட்டு கட்சியில் யாரும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

In recent days, the political crisis in Sri Lanka has reached a critical point, with its president fleeing the country and protesters occupying his residence and office. Today, “The Daily” explores how the island nation, whose economy was once held up as a success story in South Asia, came apart — and why it’s a cautionary tale.

Guest: Emily Schmall, a South Asia correspondent for The New York Times.

Want more from The Daily? For one big idea on the news each week from our team, subscribe to our newsletter.

Background reading:

• Yesterday, mass demonstrations and tear gas filled the streets of Colombo, the Sri Lankan capital, and late into the night, protesters clashed with the police outside Parliament.

For more information on today’s episode, visit nytimes.com/thedaily. Transcripts of each episode will be made available by the next workday.

 

இன்று ஸ்பாட்டிபையில் வந்த தொகுப்பையும் கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

ரணில் ஜனாதிபதியாகவேண்டும் என நான் எதிர்பார்ப்பதன் காரணம், தனக்கு கிடைக்காத ஒன்றை, வேறு வகையில் பிடித்து, அதனை இல்லாமல் செய்வார் என்று நம்புவதால்.

நாதம் ஆரம்பத்திலிருந்தே ரணில் ஸனாதிபதியாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒருநாள் கூட ஜனாதிபதியாகி சரித்திரத்தில் இடம் பிடிக்கக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் ஆரம்பத்திலிருந்தே ரணில் ஸனாதிபதியாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒருநாள் கூட ஜனாதிபதியாகி சரித்திரத்தில் இடம் பிடிக்கக் கூடாது.

அதுவல்ல.... பிரச்சனை.... 

பிரச்சனை பொருளாதாரம்.... அதனை விட்டு விட்டு... நான் பிரதமர்... நீ ஜனாதிபதி என்று பாராளுமன்றில் ஆளுக்காள் அடிபடுகினம்.

ஒரு அரசியல் உறுதிப்பாடு வேண்டும். அது இல்லாவிடில், நாட்டு நிலைமை மிக, மிக மோசமாகிவிடும்.

இன்று உள்ள நிலையில் கப்பலை செலுத்தி கரை சேர்க்க கூடிய, அனுபவமும், அறிவும், இலங்கையில் வேறு யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன். மற்றும் படி.... ரணில் எமக்கு தீர்வு தருவார், கிளிப்பார் என்று நம்பவில்லை.

****

சிதைந்தது ராஜபக்சர்களின் கனவு 

அவர்கள் நாமல் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற கனவில் இயங்கினார்கள்.

ரணிலுக்கு இழக்க எதுவும் இல்லை.

யுத்தம் முடிந்த உடன் சரத் சொன்னார்: இங்கே பெரும்பான்மை சிங்களவர்களுடன் வாழ விரும்பாத தமிழர்கள் தென் இந்தியா போகலாம், முஸ்லிம்கள் சவூதி போகலாம் (இதனை நினைவு படுத்தியவர் அசாத் சாலி)

இன்று நான் இணைத்த காணொளியில் சிவாஜிலிங்கம் நினைவு படுத்தினார், சஜித்துடன் பேசும் போது, அவரது தொனியில், தனது தந்தை மரணத்துக்கு காரணம் புலிகளும், தமிழர்களும் என்று தெரிந்ததாக. (ராகுல் காந்தியின் உணர்வு நிலை - அவர்கள் மத்திய அரசில் இருக்கும் போது என்ன செய்தார்கள் என்று முள்ளிவாய்க்கால் சொல்லும்)

ஆகவே இவர்கள் ஆபத்தானவர்கள். ஆனால் இருவருக்குமே வாக்களித்திருக்கிறோம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான கருத்து நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு அரசியல் உறுதிப்பாடு வேண்டும். அது இல்லாவிடில், நாட்டு நிலைமை மிக, மிக மோசமாகிவிடும்.

இப்படி இலங்கை நாசமாய் போவதுதான் நமது விடிவுக்கான வழி என ஒருசாரார் சொல்கிறார்களே? இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள்?

2 hours ago, Nathamuni said:

இன்று உள்ள நிலையில் கப்பலை செலுத்தி கரை சேர்க்க கூடிய, அனுபவமும், அறிவும், இலங்கையில் வேறு யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன்.

கப்பல் உடைஞ்சால், நமது பலகையை தூக்கி கொண்டு நாம் கிளம்பலாம்?

2 hours ago, Nathamuni said:

ரணில் எமக்கு தீர்வு தருவார், கிளிப்பார் என்று நம்பவில்லை.

நீங்கள் சொல்வது போல், கோட்டாவை, யாப்பாவை, ரணிலை, போராட்டகாரரையும் இயக்குவது அமெரிக்காதான் என்றால் - அவர்கள் விருப்பபடி ரணிலை வெல்ல வைத்து - எமக்கான தீர்வை அமெரிக்காவிடம் பெற முயற்சிக்க கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

மனநிலை - இதை பார்க்க போனால் - இவர்கள் எல்லாரையும் விட மோசமான பெளத்த சிங்கள இனவாதி ரணில் அல்லவா? யாழ் நூலக எரிப்பில் காமினிக்கு அடுத்து ஈடுபாடு உள்ளவர். 83 கலவரத்தை நடத்திய ஜேஆர் க்கு துணை நின்ற மருமகன்.

தமிழர்கள் கோரிக்கைகளை (இயக்கத்தை அழித்தது போல) தலையை தடவி அழிக்க கூடிய ரணில்.  ஏனையோரை விட ஆபத்தானவர் அல்லவா?

பிகு

எல்லா பக்கமும் கதைக்கவில்லை. எனக்கு யார் இப்போ ஜனாதியானல் எமக்கு ஒப்பீட்டளவில் நல்லம் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. அதுதான் கேட்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இப்படி இலங்கை நாசமாய் போவதுதான் நமது விடிவுக்கான வழி என ஒருசாரார் சொல்கிறார்களே? இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள்?

நேற்று சொல்லி விட்டேனே.... இலங்கையில் இந்த அரசியல் சண்டை தொடர்வது நமக்கு நல்லது. 🤗

 

27 minutes ago, goshan_che said:

கப்பல் உடைஞ்சால், நமது பலகையை தூக்கி கொண்டு நாம் கிளம்பலாம்?

கப்பல்... உடையாமல் கரை சேர்க்க, கடன் வாங்கிக் கொண்டே இருக்க முடியாது. புலம் பெயர் தமிழர் பேருதவி தேவை. அந்த உதவி சும்மா வராது. நிபந்தனையுடனே வரும். இல்லாவிடில் கப்பல் உடைஞ்சு போய் விடும். உடைந்து போகையில், நமது பகுதி கடனில்லாத பகுதியா இருக்குமில்லே..... இலகுவா முன்னேறும்.

27 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது போல், கோட்டாவை, யாப்பாவை, ரணிலை, போராட்டகாரரையும் இயக்குவது அமெரிக்காதான் என்றால் - அவர்கள் விருப்பபடி ரணிலை வெல்ல வைத்து - எமக்கான தீர்வை அமெரிக்காவிடம் பெற முயற்சிக்க கூடாதா?

அதைத்தான் சொல்ல வாறேன். சிங்களத்தினை நம்ப ஒரு நியாயமும் இல்லை. கழுதை விட்டதில், முன் விட்டை, பின் விட்டை இரண்டும் ஒன்றுதான். ஆனால் வெளிநாட்டு அழுத்தம் உள்ளது தெளிவாக தெரிவதால், ஒரு நம்பிக்கையும் வருகிறது. ஏனெனில், சிங்களமும் பொருளாதார ரீதியில் desperate.

🙏

நமக்கு இழக்க எதுவுமில்லை. சிங்களவர்களுக்கு (கடன் காரரிடம்) இழக்க இலங்கை நாடு உள்ளது. ஒன்று அதனை சீனாவிடம் முழுவதுமாக கொடுத்து விடட்டும். நாம் எமது பகுதியை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது எம்முடன் ஒரு டீலுக்கு, சர்வதேச மத்தியஸ்துடன் வந்து, தமதையும் காத்துக் கொள்ளட்டும்.

என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நடக்கும் விடயங்களை யார் நடத்துகிறார்கள், என்ன நடக்கிறது, யார் யாரின் ஆள் - இவை பற்றிய எந்த தெளிவும் எனக்கு இப்போ இல்லை நாதம். யாருக்கும் இருக்கும் என நான் நம்பவில்லை.

இதே போல் நிலையில் தவறான அனுமானங்களுடன் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிய அனுபவம் எமது தரப்புக்கு முன்பும் உண்டு.

எம்மை விடுங்கள். தமிழர் தலைவர்கள் கூட அடுத்து எப்படி நகர்வது என அறிய - இப்போ தேவைப்படுவது - புலனாய்வுத்தகவல்கள்.

தகவல்கள் இல்லாத இந்த வெளியில் சொல்வது எல்லாம் ஊகமாயே இருக்கும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

நடக்கும் விடயங்களை யார் நடத்துகிறார்கள், என்ன நடக்கிறது, யார் யாரின் ஆள் - இவை பற்றிய எந்த தெளிவும் எனக்கு இப்போ இல்லை நாதம். யாருக்கும் இருக்கும் என நான் நம்பவில்லை.

இதே போல் நிலையில் தவறான அனுமானங்களுடன் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிய அனுபவம் எமது தரப்புக்கு முன்பும் உண்டு.

எம்மை விடுங்கள். தமிழர் தலைவர்கள் கூட அடுத்து எப்படி நகர்வது என அறிய - இப்போ தேவைப்படுவது - புலனாய்வுத்தகவல்கள்.

தகவல்கள் இல்லாத இந்த வெளியில் சொல்வது எல்லாம் ஊகமாயே இருக்கும் என நினைக்கிறேன்.

சரிதான்... நாளை வரை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான தகவலை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் தகவல் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆலோசனை நடத்தி வருதவாக அவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தாள் எது செய்தாலும் வில்லங்கமாய்த்தான் செய்வார் போலுள்ளதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.