Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்]

படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு

தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் தமிழ் அரசு அதனை தட்டிக்கழித்து வந்துள்ளது.

இந்த நிலையில் தாங்கள் சுயாதீனமாக உணவுப் பொருட்களை யாழப்பாணத்திற்கு கொண்டு செல்லப் வோதாக பழ நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து பழ நெடுமாறன் தலைமையிலான குழுவினர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்யுமாறு இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் கரையோர காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளன.

இதேவேளை இந்திய கரையோர காவல் துறையிடம் இருந்து தப்பி நெடுமாறன் தலைமையிலான குழுவனர் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தால் அவர்களை கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஸ்ரீலங்கா கடற்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

நெடுமாறன் குழுவினர் எப்போது தமது பயணத்தை மேற்கொள்வார்கள் என்பதை அறியும் முயற்ச்சியில் இந்திய மற்றும் இலங்கை புலனாய்வு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பதிவு

  • 3 weeks later...

முதலில் நெடுமாறன் இந்திய வந்த அகதிகளுக்கு இந்த உணவுப்பொறுட்களையும், துணிவைகளையும் கொடுக்கட்டும், படகில் சென்ரு உணவு போடப்போகிறாராம், வெற்று அரசியல், சுய விளம்பரம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா வெற்று அரசியல்????????? நெடுமாறன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.அவருக்கு என்றொரு கட்சியும் இல்லை.சுயவிளம்பரம் நீரும் தானே செய்கிறீர் இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன் என்று.எப்படி நெடுமாறன் ஐயா அவர்கள் உயிரை துச்சமாக மதித்து உணவு,உடுதுணி போன்றவற்றை கொடுப்பதன் மூலம் சுயவிளம்பரம் தேட முடியும்?

மற்றது ஒன்றில் தமிழை எழுத்து பிழையில்லாமல் எழுத பழகும்.பிறகு இந்தியனாக இருந்து மகிழும்.

முதலில் நெடுமாறன் இந்திய வந்த அகதிகளுக்கு இந்த உணவுப்பொறுட்களையும், துணிவைகளையும் கொடுக்கட்டும், படகில் சென்ரு உணவு போடப்போகிறாராம், வெற்று அரசியல், சுய விளம்பரம்.

சுயவிளம்பரமாகக் கூட இருக்கட்டும். இந்த நடவடிக்கை குடாநாட்டிற்குள் தொழிலின்றி போதிய உணவின்றி மக்கள் படும் துன்பத்திற்கு விமோசனம் ஏதாவது செய்யாதா? இந்திய அரசு வான்வழியாக உணவு போட்டால் உதவி, தனிமனிதன் இவ்வாறு முயற்சித்தால் சுய விளம்பரமா? இந்தியா ஈழத் தமிழருக்கு சார்பாயிருப்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன்

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலத்திலும் நெடுமாறன் ஐயாதான் ஈழதமிழர்களுக்கு உணவு கொடுக்க புறப்பட்டு அதன் பிறகு நடந்த நிகழ்வுகழை மறக்கமுடியுமா????????

எங்களுக்கு உணவு வேண்டாம் உணவு உண்பதற்குறிய நிலமையும் அமைதியும் சந்தோசத்தை எற்படுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த இந்தியன். மல்யுத்த வீரன் அண்டரேக்கரைப் போல இருக்கிறார். பஞ்ச் டயலாக்கெல்லாம் போட்டிருக்கிறார். பாவம் அவருக்குச் சுயவிளம்பரம், வெற்று அரசியலெல்லாம் தெரிந்திருக்கின்றது ஆனால் நெடுமாறன் போன்றோரின் தடா பொடாக்களுக்கெதிரான துணிவான செய்கைகளைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை. நெடுமாறனின் அரசியலைப் போய் அந்தமாதிரிக் கேலிசெய்யுமளவிற்கு அவர் எந்தச் சுயவிளம்பரமும் செய்யவில்லை. சேர்த்து வைத்திருக்கும் உணவு மருந்துகளை எப்படியாவது ஈழத்தமிழர்களிடம் சேர்த்துவிடப் பாடுபடுகிறார் அவ்வளவுதான்.

நெடுமாறன் ஐயா உணவுப்பொருட்களை சேகரிக்க தொடங்கியபோது யாழ்ப்பாணத்தில் கடும் உணவுப்பஞ்சம் நிலவியது உண்மை. அவரைநேரில் பார்த்தவர்கள் இப்படி எழுத மாட்டார்கள். அவர் காந்தியைப்போல மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்.ஏற்கனவே தாடாவில் சிறையில் வாடியவர். இந்த வயதில் கலைஞர் போல தன்வேலையை பார்த்துக்கொண்டிருந்திருக்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தமிழர் தியாகப் பயணம்

தமிழகத் தலைவர்கள் பங்கேற்பு

நாகை, இராமேசுவரத்திலிருந்து

உதவிப் பொருட்களுடன் யாழ் பயணம்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடத்தப்படும் பரப்புரைப் பயணத்திலும் படகுப் பயணப் போராட்டத்திலும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும்படி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

4-8-07 அன்று விழுப்புரம் மாநாட்டில் நாம் முடிவு செய்ததற்கு இணங்க 7-9-07 முதல் 11-9-07 வரை திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கியும், மதுரையில் இருந்து இராமேசுவரம் நோக்கியும் பரப்புரைப் பயணங்கள் நடைபெறும். செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய துறைமுகங்களிலிருந்து ஈழத் தமிழருக்கான மனித நேய உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுப் பயணப் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.

7-9-07 அன்று மாலை மதுரையில் நடைபெறும் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு. இராமதாசு அவர்களும், மரு. சேதுராமன் அவர்களும், அதே நாளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் கலந்து கொண்டு பயணக் குழுவினருக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிப்பார்கள்.

11-9-07 அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும் அதே நாளில் இராமேசுவரத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பஷீர் அகமது அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிப்பார்கள்.

செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய துறைமுகங்களிலிருந்து ஈழத் தமிழருக்கான மனித நேய உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுப் பயணப் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.

திருச்சி - நாகை பயணத்தில் திரு. பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்), திரு. வே. ஆனைமுத்து (மா. பெ. பொதுவுடைமைக் கட்சி), திரு. இளமுருகனார் (தமிழ்த் தேசியக் கட்சி), திரு. தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), திரு. கி. வெங்கட்ராமன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), திரு. பாவாணன் (தமிழர் கழகம்), திரு. பொன்னிறைவன் (உலகத் தமிழர் பேரமைப்பு), திரு. அரங்க. குணசேகரன் (தமிழக மனித உரிமைக் கழகம்), இரா. மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்). திரு. பூ. துரைசாமி (மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்), திரு. தி. அழகிரிசாமி, திரு. கே. செளந்திரராசன், திரு. இரா. அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), திரு. இரா. பத்மநாபன் (உலகத் தமிழர் பேரமைப்பு) உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை - இராமேசுவரம் பயணத்தில் திரு. மெல்கியோர் (உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்), திரு. பொழிலன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), திரு. குறிஞ்சி கபிலன் (தமிழ் தமிழர் இயக்கம்), திரு. இராசேந்திர சோழன் (தமிழ்த் தேசிய மார்க்சியக் கட்சி), திரு. முத்துக்குமார் (தமிழர் தேசிய இயக்கம்), தமிழப்பன், ஒவியர் சந்தனம், உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

7-9-2007 வெள்ளி மாலை 6 மணி

மதுரையில் தொடக்க விழா :

பா.ம.க நிறுவனத் தலைவர்

மரு. இராமதாசு

தொடக்கி வைக்கிறார்.

11-9-07 செவ்வாய் மாலை 6 மணி

இராமேசுவரத்தில் நிறைவு விழா

இந்திய தேசிய லீக் தலைவர்

பஷீர் அகமது

வாழ்த்தி வழியனுப்புகிறார்

7-9-2007 வெள்ளி மாலை 6 மணி

திருச்சியில் தொடக்க விழா

ம.தி.மு.க பொதுச் செயலாளர்

வைகோ

தொடக்கி வைக்கிறார்.

11-9-07 செவ்வாய் மாலை 6 மணி

நாகையில் நிறைவு விழா

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்

தொல். திருமாவளவன்

வாழ்த்தி வழியனுப்புகிறார்

-தென்செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழ.நெடுமாறன் யாழ்ப்பாணம் வருவதை நிறுத்துமாறு இலங்கை இந்தியாவிடம் கோரிக்கை

வீரகேசரி இணையம்

தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் படகு மூலம் யாழ்ப்பாணம் வருவதை தடுக்குமாறு இலங்கை அரசு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 12 ஆந் திகதி பழ நெடுமாறன் உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்திய கடற் ப்டை தடுத்தாலும் அதனையும் மீறி அத்தியாவசிய பொருட்களுடன் தான் இலங்கை வரவுள்ளதாக பழ நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் வருவாரேயாயின் அது இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான் நல்லுறவை பாதிக்கும் எனவே நெடுமாறனை இலங்கைக்கு வராது செட்ய்யுமாறு இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக இந்தியவிடம் கோரியுள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகபு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பாசில் ராஜபக்ஷ, மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர் மட்ட குழுவினர் இது தொடர்பக இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாட கடந்த சனிக்கிழமை இந்தியா விஜயம் செய்துள்ளனர். இக் குழுவினர் நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணனும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.