Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஜனாதிபதி பதவிக்கு  போட்டியிட்ட  டலஸ் அழகப்பெருமவுக்கு  82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும்  வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால்,  பதவி காலம் முடிவடைவதற்கு   இரண்டவரை வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் – ஜுலை 14 ஆம் திகதி அவர் பதவி விலகினார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனால் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் பொறுப்பு, நாடாளுமன்றம் வசமானது.

இதன்படி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் நேற்றுமுந்தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல்  செய்தனர்.

போட்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்வாங்கினார்.

தமது கட்சி – கூட்டணியின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு என அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நேற்றுமுந்தினம் போலவே நாடாளுமன்றத்தை சூழ நேற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெற வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவிப்பு விடுத்தார்.

வாக்குச்சீட்டை படமெடுப்பதும், காட்சிப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற மரபுகளை முறையாக பின்பற்றி, வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

சபைக்குள் தொலைபேசி பயன்பாட்டுக்குள் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற செயலாளரே நேற்று தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டார். வாக்களிப்பு நடைமுறைகளை அவர் விவரித்தார். அதன்பின்னர்  முற்பகல் 10.24 மணியளவில் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது.

11.45 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. அதன்பின்னர் வாக்கெண்ணும் பணி இடம்பெற்றது.

நண்பகல் 12.40 மணியளவில்  தேர்தல் முடிவை  தெரிவத்தாட்சி அலுவலராக, நாடாளுமன்ற செயலாளர் சபைக்கு அறிவித்தார்.

இதற்கமைய 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் மேல் ரணில் பெற்றதால், அடுத்த தேர்வுகளுக்கு செல்ல வேண்டிய தேவை எழவில்லை.

வாக்கெடுப்பு தினத்தில் சபைக்கு கட்டாயம் வருமாறு தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிகள் பணிப்புரை விடுத்திருந்தன.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் 1993 இல் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றம் வசமானது.

பதில் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291795

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வு நேரலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் பதவிப் பிரமாணம்

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்தார் ரணில் 

spacer.png
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.

இதனையடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் 9ஆம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மக்களின் எதிர்ப்பினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார். 
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பாராளுமன்றில்-பதவிப்பிரமாணம்-செய்தார்-ரணில்/175-300849

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் பதவிப் பிரமாணம்

உந்த பதவியேற்பு,பண்டமாற்று எல்லாம் எங்களுக்கு புதிசு இல்லை சிறித்தம்பி.....அந்த ஜெனாதிபதி மாளிகை எல்லாம் கழுவி துடைச்சு வெள்ளை அடிச்சாச்சோ எண்டொருக்கால் விசாரியுங்கோ.....

சனமெல்லாம் உருண்டு பிரண்ட கட்டிலைதான் படுப்பாரோ?
சனம் சவுக்காரம் போட்டு குளிச்ச குட்டையிலை தான் குளிப்பாரோ?

Selfies at the symbol of power in Sri Lanka - The Gal Times

 

Sri Lanka president blocked by airport staff during attempt to flee country  after protesters break into home

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதியின்.... பதவிப் பிரமாண நிகழ்வின் போது, ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏனைய தொலைக்காட்சி சேவைகள் குறித்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்படும் போது, மின்பிறப்பாக்கிகள் இரண்டு முதல் மூன்று வினாடிகளுக்குள் இயக்கப்படும்.

எனினும், புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் போது குறைந்தது 10 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வினை நேரலையில் ஒளிபரப்ப தேசிய தொலைக்காட்சி வலையமைப்பினால் முடியவில்லை.

இந்தநிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இது திட்டமிட்ட நாசகார நடவடிக்கையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1291893

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு அணைந்தால் அபசகுனமாமே,  சொல்கிறார்கள்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

விளக்கு அணைந்தால் அபசகுனமாமே,  சொல்கிறார்கள்.   

கோத்தா மாதிரி... இடையிலை போகப் போறார். 🤣
ஏற்கெனவே... காலிமுகத்திடல் போராட்டக் காரர்கள்... 
இவருக்கு இரண்டு கிழமை அவகாசம் கொடுத்துளார்கள்.

இல்லாவிடில்... பாராளுமன்றம் எரிந்தால் தாம் பொறுப்பல்ல... என்று  சொல்லியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த பதவியேற்பு,பண்டமாற்று எல்லாம் எங்களுக்கு புதிசு இல்லை சிறித்தம்பி.....அந்த ஜெனாதிபதி மாளிகை எல்லாம் கழுவி துடைச்சு வெள்ளை அடிச்சாச்சோ எண்டொருக்கால் விசாரியுங்கோ.....

சனமெல்லாம் உருண்டு பிரண்ட கட்டிலைதான் படுப்பாரோ?
சனம் சவுக்காரம் போட்டு குளிச்ச குட்டையிலை தான் குளிப்பாரோ?

Selfies at the symbol of power in Sri Lanka - The Gal Times

 

Sri Lanka president blocked by airport staff during attempt to flee country  after protesters break into home

குமாரசாமி  அண்ணே...  ரணிலின், ஜனாதிபதி ஆசை நிறை வேறினாலும்,
அவர் ஜனாதிபதி மாளிகைக்குள் போய் குடியிருக்கிற ஆசை நிறைவேறாது. 😁

அந்த மாளிகைக்குள்.... இலங்கையின் எல்லா மாகாணங்களிலும்  இருந்து வந்து,
குளிச்சு, சமைச்சு, சாப்பிட்டு, படுத்து எழும்பி...    
கக்கூசுக்கு,  இருந்திட்டும் போயிருக்கிறார்கள்.  😂

நீல நிறத்தில் இருந்த...  நீச்சல் குளம்,
பிறகு...  புல்லுக்குளம், ஆரிய குளம் மாதிரியான நிறத்திலை இருந்தது.  😬

உதை திருத்தி... வெள்ளையடித்து முடிய இரண்டு வருசம் எடுக்கும்.
அதுக்குள்ளை... ரணிலின் பதவிக்காலம் முடிந்து விடும். 😜

அவருக்கு இப்ப சொந்த வீடும் இல்லை, புகுந்த வீடும் இல்லை. 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

 

May be an image of 7 people and people standing

 

May be an image of 7 people, people standing and people sitting

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு படங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உந்த பதவியேற்பு,பண்டமாற்று எல்லாம் எங்களுக்கு புதிசு இல்லை சிறித்தம்பி.....அந்த ஜெனாதிபதி மாளிகை எல்லாம் கழுவி துடைச்சு வெள்ளை அடிச்சாச்சோ எண்டொருக்கால் விசாரியுங்கோ.....

சனமெல்லாம் உருண்டு பிரண்ட கட்டிலைதான் படுப்பாரோ?
சனம் சவுக்காரம் போட்டு குளிச்ச குட்டையிலை தான் குளிப்பாரோ?

Selfies at the symbol of power in Sri Lanka - The Gal Times

 

Sri Lanka president blocked by airport staff during attempt to flee country  after protesters break into home

 

அண்ணை

பொடியள் தானே பிரண்டார்கள்

அவருக்கு அது  சந்தோசம்  தானே???😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அண்ணை

பொடியள் தானே பிரண்டார்கள்

அவருக்கு அது  சந்தோசம்  தானே???😂

அந்த மெத்தையை… எறிய வேண்டாம் என்று, உத்தரவு போட்டுளாராம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அந்த மெத்தையை… எறிய வேண்டாம் என்று, உத்தரவு போட்டுளாராம். 😂 🤣

 

முதுலாவது  உத்தரவே

கம்பீரமா  இருக்குதில்லை?🤣

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

 

அண்ணை

பொடியள் தானே பிரண்டார்கள்

அவருக்கு அது  சந்தோசம்  தானே???😂

விசுகர்! நீங்கள் எங்கையோ போட்டியள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! நீங்கள் எங்கையோ போட்டியள் 🤣

 

பக்கத்து   பள்ளிக்கூடத்தில படித்த பழக்கம்  அண்ணை?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, விசுகு said:

 

பக்கத்து   பள்ளிக்கூடத்தில படித்த பழக்கம்  அண்ணை?🤣

நல்லகாலம் தப்பீட்டியள். அந்த கெட்ட காத்து உங்கடை பக்கம் வீசல... 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நல்லகாலம் தப்பீட்டியள். அந்த கெட்ட காத்து உங்கடை பக்கம் வீசல... 😂

 

வீசாம இருக்குமாண்ணை

நாங்க அதுக்கு  முதலே காப்பு  கையால  சாப்பிட  தொடங்கிட்டமே???😝

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்த மெத்தையை… எறிய வேண்டாம் என்று, உத்தரவு போட்டுளாராம். 😂 🤣

அந்த கோவணம் ப்ளீஸ் ?? 🤬 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

 

வீசாம இருக்குமாண்ணை

நாங்க அதுக்கு  முதலே காப்பு  கையால  சாப்பிட  தொடங்கிட்டமே???😝

தப்பினது தம்பிரான் புண்ணியம் 😂

5 hours ago, Nathamuni said:

அந்த கோவணம் ப்ளீஸ் ?? 🤬 

அந்த மெடலோட தொங்கினதையா சொல்லுறீங்க சார்? 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.