Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனிய தானிய ஏற்றுமதி - உருவாகியது ஒப்பந்தம் - என்கிறது துருக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

அதனால் அமெரிக்கா கியூபா, தென்னமெரிக்க நாடுகள், வியட்னாம், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு நிலை எடுத்தால் அதற்கு எதிராண அணிக்கு இரஸ்சியா உதவியது.

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணும் என்பார்கள் அது போல.

உங்கள்  வாதத்தை  விவாதத்துக்காக ஒத்துக்கொண்டாலும்

சியா  உதவிய  நாடுகளின்  இன்றைய பொருளாதாரநிலை  என்ன??

அந்த  மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் தனிநபர் வருமானம்  என்ன???

இதை  மாற்ற இதுவரை  ரசியா  செய்த  உதவிகள்  என்ன???

(1 யூரோ  = 23 ஆயிரம் வியட்னாமிய பணம் Dong)

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • Replies 106
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

ரஸ்யாவின், இந்தியாவின், சீனாவின் ஆளுகையின் கீழ் வாழாத அனுபவ குறைபாட்டால், மேற்கின் ஜனநாயக உரிமைகளை அனுபவித்து taking it for granted ஆல் ஏற்பட்ட மெத்தனத்தால் விளைந்த கருத்து.

மேற்குலக/முதலாளித்துவ நாடுகளிலும் சமதர்ம மாற்றுக்கட்சிகள் உள்ளன என்பதை இங்கே அறியத்தருகின்றேன்.

இடையிடையே வரும் ஆங்கில  சொற்களை முடிந்தால் தவிர்க்கவும். ஏனெனில் எனக்கு ஆங்கிலம் தெரியாது.அது மட்டுமல்லை யாழ்களம் தமிழ், தமிழ் சார்ந்த கருத்துக்களம் என நினைக்கின்றேன். 🤣

3 minutes ago, விசுகு said:

உங்கள்  வாதத்தை  விவாதத்துக்காக ஒத்துக்கொண்டாலும்

சியா  உதவிய  நாடுகளின்  இன்றைய பொருளாதாரநிலை  என்ன??

அந்த  மக்களின் வாழ்க்கைத்தரம் தனிநபர் வரமானம்  என்ன???

இதை  மாற்ற இதுவரை  ரசியா  செய்த  உதவிகள்  என்ன???

(1 யூரோ  = 23 ஆயிரம் வியட்னாமிய பணம் Dong)

காசு,பணம் இல்லாவிட்டாலும்  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். சூழல் சுற்றாடல் தூய்மையாக இருக்கின்றது.அசுத்தமான காற்றை அவர்கள் சுவாசிக்கவில்லை. மனிதவலுவை  மதிக்கின்றார்கள்.

 மேலைத்தேய நாடுகளில் காசு காசு என அலைந்து கடைசியில் சாப்பிடக்கூட முடியாமல் அலைகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது போல தோன்றுகிறது, அனால் வரலாற்றில் இரஸ்சியா அணுகுண்டினை எவர் மீதும் போட்டமாதிரி தெரியவில்லை. அமெரிக்கா போட்டதுதான் அணுகுண்டு.

நான் அமெரிக்கன் apologist அல்ல. அணுகுண்டை போட்டது மிக மிலேச்சமான செயல். 

உலகின் மிக பெரும் குற்றங்கள் புரிந்த கறை உள்ள நாடு அமெரிக்கா.

ஆனால் உலக வரலாற்றில் எல்லா வல்லரசும், வல்லூறு அரசுதான்.

ஆனால் அதன் பின் அமெரிக்கா ஜப்பான் மீது எடுத்த அணுகுமுறைதான் ஏனைய வல்லூறு அரசுகளிடம் இருந்து அதை வேறு படுத்துகிறது. அமெரிக்கா நினைத்திருந்தால் ஜாப்பான் மொழியை, கலாசாரத்தை, அடையாளத்தையே வழித்து துடைத்திருக்கலாம். இதைதான் ஜோர்ஜியா, உக்ரேன் உட்பட பலநாடுகளில் ரஸ்யா செய்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உங்கள்  வாதத்தை  விவாதத்துக்காக ஒத்துக்கொண்டாலும்

சியா  உதவிய  நாடுகளின்  இன்றைய பொருளாதாரநிலை  என்ன??

அந்த  மக்களின் வாழ்க்கைத்தரம் தனிநபர் வரமானம்  என்ன???

இதை  மாற்ற இதுவரை  ரசியா  செய்த  உதவிகள்  என்ன???

(1 யூரோ  23 ஆயிரம் = வியட்னாமிய பணம் Dong)

இரஸ்சியா உதவிய நாடுகள் பெரும்பாலும் பொதுவுடமைப்பொருளாதாரத்தினை அடிப்படையாகக்கொண்ட சமத்துவத்தினை வலியுறுத்தும் கொள்கைக்கு.

இந்த சமத்துவ கொள்கையின் பிறப்பு உங்களது பிரான்ஸ் நாட்டின் பிரென்சு புரட்சியில்தான் ஆரம்பித்தது, அதனைதான் பின்னாளில் கார்ல் மாக்ஸ் தத்துவார்த்தமாக வெளியிட்டார்.

உங்களுக்கு பிரென்சு புரட்சி தெரியும், ஆட்சியாளர்கள் நாடு பொருளாதார நலிவு ஏற்பட்ட போதும் அவர்களது ஆடம்பரத்தினை நிறுத்தாது வேலை செய்யும் சாதாரண மக்களின் மேல் தமக்கு தேவையான பணத்தினை உழைக்காமல் வரிவிதித்து அவர்களை வாட்டிய்மையால் உருவானது.

இந்தியாவின் பொருளாதாரம் 2.26 ரில்லியன் ஆனாலும் அங்குதான் ஏழைகள் அதிகம் என் என்றால் செல்வம் தவறாக பிரிக்கப்பட்டு ஒரு சில செல்வந்தர்கள் கைக்கு செல்வதால்.

முதலாளித்துவம் ஏழை நாட்டில் பட்டினி சாவினை உண்டாக்கும், சமத்துவ பொருளாதாரம் அனைவரையும் ஒன்றாகப்பார்க்கும்.

அதனால் பட்டினி சாவு தவிர்க்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் அதன் பின் அமெரிக்கா ஜப்பான் மீது எடுத்த அணுகுமுறைதான் ஏனைய வல்லூறு அரசுகளிடம் இருந்து அதை வேறு படுத்துகிறது. அமெரிக்கா நினைத்திருந்தால் ஜாப்பான் மொழியை, கலாசாரத்தை, அடையாளத்தையே வழித்து துடைத்திருக்கலாம். இதைதான் ஜோர்ஜியா, உக்ரேன் உட்பட பலநாடுகளில் ரஸ்யா செய்தது. 

ஆங்கில மொழி எப்படி உலகம் முழுவதும் பரவியது?
கிறிஸ்தவ மதம் எப்படி உலகம் முழுவதும் பரவியது?

வற்புறுத்தி திணிக்காமலா?

Edited by குமாரசாமி
கடைசி வசனம் சேர்ப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

வாழ்க்கை முறைகளுக்கு இடையேயான மோதல் என எதனை குறிப்பிடுகிறீர்கள்.

முதலாளிதுவம், கம்யூனிசம் என்பன தனியே பொருளாதார கொள்கைகள் மட்டும் அல்ல, அவை ஒரு சமூகம் தன்னை எப்படி கட்டமைத்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கருத்தியலிலேயே நேரெதிரானவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஆங்கில மொழி எப்படி உலகம் முழுவதும் பரவியது?
கிறிஸ்தவ மதம் எப்படி உலகம் முழுவதும் பரவியது?

நேற்றே சொன்னேன், ஐரோப்பிய, பிரிடிஸ் சாம்ராஜ்யம் 100 வருடங்கள் முன்பு கைவிட்ட அணுகுமுறை இது. 

அமெரிக்கா ஒரு போதும் இப்படி நடந்ததில்லை. அவர்கள் குறி எப்போதும், இராணுவ நலன், லாபம் மட்டுமே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

இரஸ்சியா உதவிய நாடுகள் பெரும்பாலும் பொதுவுடமைப்பொருளாதாரத்தினை அடிப்படையாகக்கொண்ட சமத்துவத்தினை வலியுறுத்தும் கொள்கைக்கு.

இந்த சமத்துவ கொள்கையின் பிறப்பு உங்களது பிரான்ஸ் நாட்டின் பிரென்சு புரட்சியில்தான் ஆரம்பித்தது, அதனைதான் பின்னாளில் கார்ல் மாக்ஸ் தத்துவார்த்தமாக வெளியிட்டார்.

உங்களுக்கு பிரென்சு புரட்சி தெரியும், ஆட்சியாளர்கள் நாடு பொருளாதார நலிவு ஏற்பட்ட போதும் அவர்களது ஆடம்பரத்தினை நிறுத்தாது வேலை செய்யும் சாதாரண மக்களின் மேல் தமக்கு தேவையான பணத்தினை உழைக்காமல் வரிவிதித்து அவர்களை வாட்டிய்மையால் உருவானது.

இந்தியாவின் பொருளாதாரம் 2.26 ரில்லியன் ஆனாலும் அங்குதான் ஏழைகள் அதிகம் என் என்றால் செல்வம் தவறாக பிரிக்கப்பட்டு ஒரு சில செல்வந்தர்கள் கைக்கு செல்வதால்.

முதலாளித்துவம் ஏழை நாட்டில் பட்டினி சாவினை உண்டாக்கும், சமத்துவ பொருளாதாரம் அனைவரையும் ஒன்றாகப்பார்க்கும்.

அதனால் பட்டினி சாவு தவிர்க்கப்படும்.

நீங்கள் சொல்லும் சமதர்மமோ

சமத்துவமோ 

நீங்கள்  குறிப்பிடும் ரசியாவிலோ சீனாவிலோ இந்தியாவிலோ  இல்லை

அங்கே  தான் ஒரு  சில  பணமுதலைகளிடம் அத்தனை  பொருளாதாரமும் அமுங்கிப்போயள்ளது

மேலும் ஒரு  வண்டிப்பயணம் தான்  இனிச்சரி

இரு  வள்ளங்களில்  கால் வைப்பது???

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 minutes ago, vasee said:

இரஸ்சியா உதவிய நாடுகள் பெரும்பாலும் பொதுவுடமைப்பொருளாதாரத்தினை அடிப்படையாகக்கொண்ட சமத்துவத்தினை வலியுறுத்தும் கொள்கைக்கு.

இந்த சமத்துவ கொள்கையின் பிறப்பு உங்களது பிரான்ஸ் நாட்டின் பிரென்சு புரட்சியில்தான் ஆரம்பித்தது, அதனைதான் பின்னாளில் கார்ல் மாக்ஸ் தத்துவார்த்தமாக வெளியிட்டார்.

உங்களுக்கு பிரென்சு புரட்சி தெரியும், ஆட்சியாளர்கள் நாடு பொருளாதார நலிவு ஏற்பட்ட போதும் அவர்களது ஆடம்பரத்தினை நிறுத்தாது வேலை செய்யும் சாதாரண மக்களின் மேல் தமக்கு தேவையான பணத்தினை உழைக்காமல் வரிவிதித்து அவர்களை வாட்டிய்மையால் உருவானது.

இந்தியாவின் பொருளாதாரம் 2.26 ரில்லியன் ஆனாலும் அங்குதான் ஏழைகள் அதிகம் என் என்றால் செல்வம் தவறாக பிரிக்கப்பட்டு ஒரு சில செல்வந்தர்கள் கைக்கு செல்வதால்.

முதலாளித்துவம் ஏழை நாட்டில் பட்டினி சாவினை உண்டாக்கும், சமத்துவ பொருளாதாரம் அனைவரையும் ஒன்றாகப்பார்க்கும்.

அதனால் பட்டினி சாவு தவிர்க்கப்படும்.

வசி,

1990 க்கு பின்னான ரஸ்யா அமெரிகாவை விட மோசமான முதலாளிதுவ நாடு.

uncontrolled predatory capitalism தான் அங்கே. நாட்டின் அத்தனை வளங்களும் புட்டினை சூழ உள்ள oligarch பண முதலைகளிடம். அவர்கள் பில்லியன்கள் எல்லாம் இலண்டனில்.

நீங்கள் என்னப்பா லெனின், டிரோஸ்கி கால ரஸ்யாவை போல எழுதுகிறீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்லும் சமதர்மமோ

சமத்துவமோ 

நீங்கள்  குறிப்பிடும் ரசியாவிலோ சீனாவிலோ இந்தியாவிலோ  இல்லை

இப்போது இல்லைதான், ஆனால் நான் எழுதிய பதில் பனிப்போர் காலத்தில் இரஸ்சியா உதவின  நாடுகள் பற்றியது.

6 minutes ago, விசுகு said:

மேலும் ஒரு  வண்டிப்பயணம் தான்  இனளிச்சரி

இரு  வள்ளங்களில்  கால் வைப்பது???

எதனைக்குறிக்கிறீர்கள் இப்போதுள்ள உலக ஒழுங்கை பற்றியதா? அல்லது பொருளாதாரத்தினை பற்றியதா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

இப்போது இல்லைதான், ஆனால் நான் எழுதிய பதில் பனிப்போர் காலத்தில் இரஸ்சியா உதவின  நாடுகள் பற்றியது.

எதனைக்குறிக்கிறீர்கள் இப்போதுள்ள உலக ஒழுங்கை பற்றியதா? அல்லது பொருளாதாரத்தினை பற்றியதா?

உலக ஒழுங்கைப்பற்றியது

பொருளாதாரமும் அதனைச்சுற்றித்தானே???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உலக ஒழுங்கைப்பற்றியது

பொருளாதாரமும் அதனைச்சுற்றித்தானே???

இப்போது உலகு பயணிக்கும் ஒற்றை தலைமை கொண்ட உலக பொருளாதாரம் Fractal economy, அது மிக சிக்கலான பின்னலமைப்புடன் செல்லும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அது பெரிய பொருளாதார சுனாமியினை உருவாக்கும், அந்த பிரச்சினை சிறிதாக ஆரம்பத்தில் தோன்றி பின்னர் பெரிய பொருளாதார அழிவுகளை உண்டாக்கும். அதனை வண்ணத்து பூச்சியின் சிறகடிப்பு விளைவு என்பார்கள்.

இது சர்வாதிகாரத்திற்கு ஒப்பாகும் ஒரு தவறான முடிவு உலகை பாதிக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அமைப்புடைய உலகே அதனை தவிர்க்கும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அது  உங்கள் நிலைப்பாடு?

ஆனால் மிக நீண்டதூரம் போயாச்சு?

இனி  திரும்ப வரமுடியாது என்பது  எனது  நிலைப்பாடு

அத்தோடு நீங்கள் குறிப்பிடும் பன்முகத்தன்மையும் தோற்றுப்போனதொரு  நடைமுறை?

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

இப்போது உலகு பயணிக்கும் ஒற்றை தலைமை கொண்ட உலக பொருளாதாரம் Fractal economy, அது மிக சிக்கலான பின்னலமைப்புடன் செல்லும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அது பெரிய பொருளாதார சுனாமியினை உருவாக்கும், அந்த பிரச்சினை சிறிதாக ஆரம்பத்தில் தோன்றி பின்னர் பெரிய பொருளாதார அழிவுகளை உண்டாக்கும். அதனை வண்ணத்து பூச்சியின் சிறகடிப்பு விளைவு என்பார்கள்.

இது சர்வாதிகாரத்திற்கு ஒப்பாகும் ஒரு தவறான முடிவு உலகை பாதிக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அமைப்புடைய உலகே அதனை தவிர்க்கும் என கருதுகிறேன்.

Boom and bust are part of the cycle.  முதலாளிதுவம் வரமுதல் இருந்த ஆண்டான் அடிமை முறையிலும் இது வேறு வடிவில் இருந்தது. இனியும் இருக்கும். உலகம் “லாப நோகிகில்” இயங்கும் வரை இருக்கும்.

நீங்கள் சொல்லும் chaos theory (வண்ணத்து பூச்சி) ஒரு தியரிதான், ரூல் அல்ல. அப்படியே அது சரி என்றாலும் தனியே பொருளாதாரத்துக்கு மட்டும் அல்ல “இயங்கு நிலை” யில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலதுக்கும் அது பொருந்தும்.

ஆகவே வேறு ஒரு வடிவில் சமதர்ம பொருளாதாரத்திலும் இது நடக்கும் (நடப்பதென்றால்). 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

காசு,பணம் இல்லாவிட்டாலும்  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். சூழல் சுற்றாடல் தூய்மையாக இருக்கின்றது.அசுத்தமான காற்றை அவர்கள் சுவாசிக்கவில்லை. மனிதவலுவை  மதிக்கின்றார்கள்.

 மேலைத்தேய நாடுகளில் காசு காசு என அலைந்து கடைசியில் சாப்பிடக்கூட முடியாமல் அலைகின்றார்கள்.

அது  ஒரு  கனாக்காலம் அண்ணா

அது  முடிந்து  கனதூரம் போயாச்சு?

இப்போ  அந்த  மக்களே எப்போ  இன்றைய  உலகில் இணைவோம்  என்ற  அவாவுடன்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொர்பச்சேவோடு சோவியத்தில் ஏற்பட்டது கூட வண்ணாத்தி பூச்சி சிறகடிப்பு விழைவு என கருத இடமுண்டு.

1 hour ago, குமாரசாமி said:

காசு,பணம் இல்லாவிட்டாலும்  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். சூழல் சுற்றாடல் தூய்மையாக இருக்கின்றது.அசுத்தமான காற்றை அவர்கள் சுவாசிக்கவில்லை. மனிதவலுவை  மதிக்கின்றார்கள்.

 மேலைத்தேய நாடுகளில் காசு காசு என அலைந்து கடைசியில் சாப்பிடக்கூட முடியாமல் அலைகின்றார்கள்.

அங்கே போய் பார்தீர்களா? சும்மா ரஸ்யாவை பற்றி உங்கள் கற்பனையில் வந்ததை எல்லாம் இழுத்து விட்டு ஏதோ ரஸ்யா என்பது ஏவாள் அப்பிள் சாப்பிட முன்னம் இருந்த ஏதேன் தோட்டம் என்று அளந்து விடுகிறீகள்😆.

அவ்வலவு சொர்க்கம் எண்டால் இந்த புகை மண்டிய ஜெர்மனியை ஏன் கடைபிடித்து அழுகிறீர்கள் என நான் கேட்க்கவிலை அண்ணை🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவில் உள்ள சூழல் மாசு பற்றிய ஒரு சோறு பதம்👇.

https://www.nbcnews.com/news/amp/rcna6481

மன்னிக்கவும் ஆங்கிலத்தில் உள்ள மேற்கத்தைய ஊடக பதிவு. எனக்கு ரஸ்ய மொழி தெரியாது😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிக சதவீம் காபனீரொட்சைட் வெளியேற்றும் நாடுகள்👇

Characteristic Share of CO2 emissions
China 30.64%
United States 13.53%
India 7.02%
Russia 4.53%
Japan 2.96%
Iran 2.14%
Germany 1.85%
Saudi Arabia 1.79%
South Korea 1.71%
Indonesia 1.69%
Canada 1.53%
Brazil 1.34%
South Africa 1.29%

https://www.statista.com/statistics/271748/the-largest-emitters-of-co2-in-the-world/

இதென்னடா ஏதேன் தோட்டத்துக்கு வந்த சோதனை😆.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nunavilan said:

நீங்கள் தந்துள்ள தரவில் (வரைபடத்தில்) ரஸ்யா இருக்கவேண்டிய இடம் தனி வெள்ளையாக இருப்பதை (கிரைமியா சேர் உக்ரேன் வரைபடத்தில் உள்ளது) கவனிக்கும் போது எனக்கு பின்வருமாறு விளங்குகிறது.

Europe என்ற பதம் continental Europe, political Europe, geographical Europe (கண்ட, அரசியல், புவியியல்) என்ற பல நிலைகளில் பாவிக்கப்படும். இரெண்டு கண்டங்களில் பரந்து கிடக்கும் ரஸ்யாவும், எப்போதும் தனி ஆவர்தனம் வாசிக்கும் யூகேயும் அரசியல் ஐரோப்பா என்ற சொல்லாடலில் பொதுவாக அடங்குவதில்லை.

உங்கள் கட்டுரையில் கூட UK vs Europe என்ற ஒப்பீடு உள்ளதை காண்க. யூகே யும் ஈரோப்பில் அடங்குவதாக கருதின், UK vs Rest of Europe என்று வந்திருக்க வேண்டும்.

இது ஒன்றும் விதி அல்ல. வழக்கு.

அந்த வகையில் இதில் ரஸ்யா உள்ளடக்கபடவில்லை என நினைக்கிறேன். ஆனால் 90% ஆசிய கண்டத்தில் உள்ள துருக்கி உள்ளடக்கபட்டுள்ளது. 

மேலும் நான் கொடுத்தது மொத்தமாக CO2 வெளியிடும் -%.
இங்கே கொடுக்கபட்டிருப்பது per capita - அதாவது தனிநபர் வருமானம் போல 

மொத்த CO2 வை சனத்தொகையால் வகுத்து வரும் எண்.

https://www.cairn-int.info/article-E_POEU_064_0006--what-is-political-europe.htm

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உலகின் அதிக சதவீம் காபனீரொட்சைட் வெளியேற்றும் நாடுகள்👇

Characteristic Share of CO2 emissions
China 30.64%
United States 13.53%
India 7.02%
Russia 4.53%
Japan 2.96%
Iran 2.14%
Germany 1.85%
Saudi Arabia 1.79%
South Korea 1.71%
Indonesia 1.69%
Canada 1.53%
Brazil 1.34%
South Africa 1.29%

https://www.statista.com/statistics/271748/the-largest-emitters-of-co2-in-the-world/

இதென்னடா ஏதேன் தோட்டத்துக்கு வந்த சோதனை😆.

கோசான்,

உங்கள் வசதிக்குத் தகுந்தபடி விபரங்களை இணைக்கிறீர்கள். உது சரியான வேலை இல்லை. 

🤣🤣🤣
 
https://ourworldindata.org/contributed-most-global-co2

இந்தப் புள்ளிவிபரங்கள் 1751-2017 க்கானவை.

வளர்முக நாடுகள் Co2 வெளியேற்றத்தில் கொண்டுவரப்படும் ஒப்பந்தங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி காரணமாகவே அந்த ஒப்பந்தங்களில் ஒப்பமிடப் பின்னிற்கின்றன. 

இந்த உண்மையை இலகுவாக எல்லோரும் மறந்துவிடுகிறோம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

யாழ்கள வாசகர்களும் இந்த பிரட்டை நம்ப கூடாது என்பதால் இதை சொல்கிறேன்.

யாழ்கள வாசகர்களுக்கு இப்படியான விடயங்களை நீங்கள் விளக்கம் அளிப்பது பெரிய உதவியாக இருக்கும். உக்ரேனை புரின் ஆக்கிரமிக்க போர் தொடங்கியதில் இருந்து தமிழர்கள் தமிழர்களிடம் அவருக்கா செய்கின்ற பிரசாரங்களை பார்த்தால் உலகை இரச்சிக்க புரின் என்ற ஒரு நல்ல தலைவர் எங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறாரே என்று அப்பாவி தமிழர்களை ஏமாற வைக்கின்றற நிலையில் உள்ளது.

6 hours ago, விசுகு said:

ரசியாவை தேசிய  இனங்களுக்கு உதவும் நாடாக எப்பொழுதிருந்து?

மிகச் சரியான கேள்வி. ரஷ்யா தேசிய  இனங்களின் பாதுகாப்பாளன் என்று ஒரு கருத்து தமிழர்களிடம் தமிழர்களால் பரப்பபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அப்படி உருவாகினால் அது சீனா-ரஸ்யா தலைமை தாங்கும் அமைப்பாகவே அமையும். அப்போது அவுஸ்ரேலியா ஒரு சீன மாகாணம் ஆகி விட்டிருக்கும்😆.

அவுஸ்ரேலியா சீன மாகாணம் ஆகிவிட்டால் அங்கே உள்ள ரஷ்ய சீன ஆதரவு ஈழத்தமிழர்களின் நிலை என்ன வேறு ஒரு மேற்குலக கப்பிற்ரலிஸ்ட் நாட்டை தேட வேண்டுமே

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகச் சரியான கேள்வி. ரஷ்யா தேசிய  இனங்களின் பாதுகாப்பாளன் என்று ஒரு கருத்து தமிழர்களிடம் தமிழர்களால் பரப்பபட்டுள்ளது.

Vaasee சோவியத் யூனியனைக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். 

4 hours ago, vasee said:

இப்போது உலகு பயணிக்கும் ஒற்றை தலைமை கொண்ட உலக பொருளாதாரம் Fractal economy, அது மிக சிக்கலான பின்னலமைப்புடன் செல்லும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அது பெரிய பொருளாதார சுனாமியினை உருவாக்கும், அந்த பிரச்சினை சிறிதாக ஆரம்பத்தில் தோன்றி பின்னர் பெரிய பொருளாதார அழிவுகளை உண்டாக்கும். அதனை வண்ணத்து பூச்சியின் சிறகடிப்பு விளைவு என்பார்கள்.

இது சர்வாதிகாரத்திற்கு ஒப்பாகும் ஒரு தவறான முடிவு உலகை பாதிக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அமைப்புடைய உலகே அதனை தவிர்க்கும் என கருதுகிறேன்.

விசுகு தன்னை வியாபாரி எனக் கூறியுள்ளபடியால் அதனை மனதிலிருத்தி கருத்துரைப்பது நன்று.

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சியா  உதவிய  நாடுகளின்  இன்றைய பொருளாதாரநிலை  என்ன??

அந்த  மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் தனிநபர் வருமானம்  என்ன???

இதை  மாற்ற இதுவரை  ரசியா  செய்த  உதவிகள்  என்ன???

(1 யூரோ  = 23 ஆயிரம் வியட்னாமிய பணம் Dong)

நல்ல கேள்விகள். ரஷ்யா  உதவிய  நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.