Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

முன்னர் ஆப்கானிஸ்தான், போலந்து, லத்வியா, ஜேர்மனி, ரொமேனியா, லித்துவேனியா, ஜோர்ஜியா விலும், பின்னர்  செச்னியா, ஜோர்ஜியாவிலும் ரஸ்யா செய்தமைக்கும் ஒரு தடையும் வரவில்லை.  2014 இல் கிரியாவின் பின் கூட சும்மா லுகுலுலா தடைகள்தான் போடப்பட்டன.

இல்லையே சிறிய சிறிய தடைகளாக பல தடைகள் ஐரோப்பிய யூனியனால் போடப்பட்டனவே. அதன் பாதிப்பை ஜேர்மனியில் உணர முடிந்தது. 

ரஷ்யாவுக்குள் நடக்கும் அரசியல்/சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கெல்லாம் ஏன் மேற்குலகு மூக்கை நுழைக்க வேண்டும்?

சரி விடுவோம். ரஷ்யா செச்சேனியாவிலும்,ஜோர்ஜியாவிலும் தாக்குதல் நடத்தும் போது  பேசாமல் இருந்த மேற்குலகு ஏன் உக்ரேனுக்கு மட்டும்  இனி இல்லையென்ற அக்கறை காட்ட வேண்டும்?
 
  • Replies 62
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

அதாவது, மற்றவர்களுக்கு நிகழும்போது நீதிபதிகளாக மாறும் நாம், எமக்கென்று வரும்போது வக்கீல்களாக வாதாடுவோம். ஒருவர் செய்தது அல்லது செய்வது பிழை என்று சுட்டிக்காட்டும்போது நம் கை சுத்தமாக இருக்கவேணும், இல்லையெனில் அதற்கான தகுதி நமக்கில்லை, நாம் சந்தற்பவாதியாகிறோம்.

சர்வதேச அரசியலில் கிரிபாட்டி முதல் அமெரிக்காவரை - கை சுத்தம் என்று யாரும் இல்லை.

சந்தர்ப்பவாதியாக இருப்பதுதான் அங்கே அடிப்படை தகுதியே.

6 hours ago, குமாரசாமி said:

இல்லையே சிறிய சிறிய தடைகளாக பல தடைகள் ஐரோப்பிய யூனியனால் போடப்பட்டனவே. அதன் பாதிப்பை ஜேர்மனியில் உணர முடிந்தது. 

அதான் சொன்னேனே அவை எல்லாம், சும்மா லுலுலுலா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சரி விடுவோம். ரஷ்யா செச்சேனியாவிலும்,ஜோர்ஜியாவிலும் தாக்குதல் நடத்தும் போது  பேசாமல் இருந்த மேற்குலகு ஏன் உக்ரேனுக்கு மட்டும்  இனி இல்லையென்ற அக்கறை காட்ட வேண்டும்?

என்ன அண்ணை விளையாடுரிங்களா? அப்போ G7 இல்லை ராஸ்யாவோடு சேர்த்து G8.

டேவிட் கமரனோடு டவுனிங் ஸ்டிர்ரிட்ட்டில் வந்து புட்டின் ஜொலி அடித்த காலம்😆.

நீங்கள் முன்னர் பகிர்ந்த புட்டினின் பண்டுஸ் ஸ்டாட் பேச்சுக்கு சற்றே பிந்திய காலம்.

அப்போ ரஸ்யா மேற்கின் ஒரு அங்கமாக புட்டினுக்கு பின் மாறி வருவதாக மேற்கு கனவு கண்ட காலம்.

பலத்த எச்சரிப்புக்களையும் புறம் தள்ளி ஐரோப்பாவின் தாய், ஜேர்மனியின் எரி சக்தி பாதுகாப்பை ரஸ்யாவில் மட்டுமே தங்கி இருக்கும் மடைத்தனத்தை செய்தகாலம்.

அமெரிக்கா, நேட்டோ, மேற்கு எல்லாருமே, புட்டினை, ரஸ்யாவை இன்னொரு இத்தாலி ஆக்கி தம்மோடு சேர்த்து கொள்ளலாம் என நகர்ந்த காலம்.

புட்டின் காலம் கனிய காத்திருந்த காலம்.

சிரியாவில் தான் “என் பெயர் விளடிமீர், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” எண்டு தன் நீண்டகால ரஸ்ய மீள் எழுச்சி, சாம்ராஜ்ய கனவை முதல் முதலில் வெளிகாட்டுகிறார் புட்டின்.

அடுத்து கிரைமியா.

அப்போதும் அமெரிக்கா இதை சில புட்டின் கூட்டு கொள்ளையர் மீது தடை போட்டு தடுக்கலாம் என அசமந்தமாகவே இருந்தது.

டிரம்பின் தேர்தல் வெற்றி, புட்டினை அவர் அதிகாரிகள் இன்றி சந்தித்தது, நேட்ட்டோவை டிரம்ப் உடைக்க விழைந்தது. பிரெக்சிற்.

இதன் பிந்தான் இவர்கள் புட்டினின் மாஸ்டர் பிளானை புரிந்து கொண்டார்கள்.

அந்த மாஸ்டர் பிளானின் இறுதி இலக்கு சாம்ராஜ்ய ரஸ்யாவை ஐரோப்பாவில் மீள நிறுவுவது என கண்டு கொண்டார்கள்.

அதன் பின் நடப்பவை எல்லாம் இந்த காலம் பிந்திய புரிதலின் எதிர் வினை.

6 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவுக்குள் நடக்கும் அரசியல்/சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கெல்லாம் ஏன் மேற்குலகு மூக்கை நுழைக்க வேண்டும்?

மேலே சொன்ன பிண்ணனியில், புட்டினும் 22 வருடமாக ஆட்சியில் இருப்பதால் அவரை உள்நாட்டில் வெல்ல முடியாது என்ற அவரின் மிதப்பை குறைத்தால், வெளிவிவகாரத்தில் அவர் அடக்கி வாசிக்க கூடும் என்ற நம்பிக்கையில் இதை செய்கிறார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@vasee ரஸ்யாவின் பாரப்புரைகளுக்கு அப்பால் சென்று ரஸ்யாவின் தற்போதைய பொருளாதார தரவுகளை ஆராயும் ஒரு ஆய்வு.

நானும் இன்னும் வாசிக்கவில்லை.

https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=4167193

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

@vasee ரஸ்யாவின் பாரப்புரைகளுக்கு அப்பால் சென்று ரஸ்யாவின் தற்போதைய பொருளாதார தரவுகளை ஆராயும் ஒரு ஆய்வு.

நானும் இன்னும் வாசிக்கவில்லை.

https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=4167193

நன்றி கோசான், வாசித்து பார்க்கிறேன். போரில் ஈடுபடும் நாடு அதனால் ஏற்படும் பொருளாதார நலன் அதிகமாக இருந்தாலே அதனை தொடர முற்படும் உதாரணமாக பெரும்பாலும் அமெரிக்காவின் யுத்தத்தங்கள் அவ்வாறானது.

இரஸ்சியாவின் தற்போதய போர் எந்தவித பொருளாதார முக்கியத்துவமோ அல்லது அரசியல் முக்கியத்துவமற்ற போர் இதனால் இரஸ்சிய பொருளாதாரம் நிச்சயமாகப்பாதிக்கும் என்பதில் இரண்டாம் கருத்தில்லை.

சீனாவும் இந்தியாவும் போரை இதனால்தான் தவிர்க்கின்றன.

சீனா புதிய உலக ஒழுங்கை யுத்தமின்றி சத்தமின்றி அமெரிக்காவிடமிருந்து எடுத்துகொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சீனா முயற்சிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சீனா முயற்சிக்கும்.

அமைதி வழியில்

அடக்கி வாசித்தபடியான முயற்சி

ஆனால். ..???

சீனா தனது தோல்விகளையும் அதேவழியில் சொல்லாமல் செல்லும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அமைதி வழியில்

அடக்கி வாசித்தபடியான முயற்சி

ஆனால். ..???

சீனா தனது தோல்விகளையும் அதேவழியில் சொல்லாமல் செல்லும்?

அதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/7/2022 at 17:22, goshan_che said:

என்ன அண்ணை விளையாடுரிங்களா? அப்போ G7 இல்லை ராஸ்யாவோடு சேர்த்து G8.

டேவிட் கமரனோடு டவுனிங் ஸ்டிர்ரிட்ட்டில் வந்து புட்டின் ஜொலி அடித்த காலம்😆.

நீங்கள் முன்னர் பகிர்ந்த புட்டினின் பண்டுஸ் ஸ்டாட் பேச்சுக்கு சற்றே பிந்திய காலம்.

அப்போ ரஸ்யா மேற்கின் ஒரு அங்கமாக புட்டினுக்கு பின் மாறி வருவதாக மேற்கு கனவு கண்ட காலம்.

பலத்த எச்சரிப்புக்களையும் புறம் தள்ளி ஐரோப்பாவின் தாய், ஜேர்மனியின் எரி சக்தி பாதுகாப்பை ரஸ்யாவில் மட்டுமே தங்கி இருக்கும் மடைத்தனத்தை செய்தகாலம்.

அமெரிக்கா, நேட்டோ, மேற்கு எல்லாருமே, புட்டினை, ரஸ்யாவை இன்னொரு இத்தாலி ஆக்கி தம்மோடு சேர்த்து கொள்ளலாம் என நகர்ந்த காலம்.

புட்டின் காலம் கனிய காத்திருந்த காலம்.

சிரியாவில் தான் “என் பெயர் விளடிமீர், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” எண்டு தன் நீண்டகால ரஸ்ய மீள் எழுச்சி, சாம்ராஜ்ய கனவை முதல் முதலில் வெளிகாட்டுகிறார் புட்டின்.

அடுத்து கிரைமியா.

அப்போதும் அமெரிக்கா இதை சில புட்டின் கூட்டு கொள்ளையர் மீது தடை போட்டு தடுக்கலாம் என அசமந்தமாகவே இருந்தது.

டிரம்பின் தேர்தல் வெற்றி, புட்டினை அவர் அதிகாரிகள் இன்றி சந்தித்தது, நேட்ட்டோவை டிரம்ப் உடைக்க விழைந்தது. பிரெக்சிற்.

இதன் பிந்தான் இவர்கள் புட்டினின் மாஸ்டர் பிளானை புரிந்து கொண்டார்கள்.

அந்த மாஸ்டர் பிளானின் இறுதி இலக்கு சாம்ராஜ்ய ரஸ்யாவை ஐரோப்பாவில் மீள நிறுவுவது என கண்டு கொண்டார்கள்.

அதன் பின் நடப்பவை எல்லாம் இந்த காலம் பிந்திய புரிதலின் எதிர் வினை.

பனிப்போர் முடிந்து விட்டது என அறிவித்த பின் அமெரிக்கா  ரஷ்ய எல்லை நாடுகளுக்குள் தனது படைகளையும் கொடிகளையும்  உலாவ விடாமல் விட்டிருந்தால் இந்த யுத்தங்கள் ஏற்பட்டிருக்காது. ஜோர்ஜியாவுக்குள் விஜயம் செய்த  ஜோர்ஜ்  புஷ் அவர்களின் உரையை கேட்டால் சகலதும் விளங்கும்.. புட்டின் ஒரு உளவாளி என்பதை மறந்து பல இடங்களில் கருத்து எழுதுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

மறுபடியும் முதலில் இருந்தா என யோசிக்க வேண்டாம். அவ்வப்போது ஒரு சிலவற்றை நினைவூட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2022 at 08:01, goshan_che said:

சீனா முயற்சிக்கும்.

உலக ஒழுங்கினை 3 கட்டங்களாக வகுக்கிறார்கள்.
1. எழுச்சி
2. உச்சநிலை
3. வீழ்ச்சி

அமெரிக்காவின் உலக ஒழுங்கு ஆரம்ப எழுச்சிநிலையில் ரோசவெல்ட் புரட்சி, சிறந்த தலமைத்துவம், சிறந்த கல்வி, பொருளாதாரம் என்ற நிலயிலிருந்து அடுத்து வந்த 50 வருடங்களில் (1933 பின்னர்) அதன் உச்சத்தினை தொட்டிருந்தது.

இப்போது அமெரிக்கா வீழ்ச்சிநிலையினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் சிறந்த தலமைத்துவம் அற்ற நிலை.

அமெரிக்காவினது அரசமைப்பு முறைமையினால் சிறந்த தலைவர்களை உருவாக்க முடியவில்லை.

என்னதான் ஜனநாயகம் என்று கூறினாலும் முன்னால் சீன அதிபர் சொன்ன மாதிரி வெள்ளை பூனையோ கருப்பு பூனையோ எலி பிடித்தால் சரி என்ற நிலையில் அமெரிக்கா இல்லை, தற்போது அமெரிக்காவினது தலைவர்கள் மக்களை கூறுபோட்டு நாட்டினை பலவீனப்படுத்க்கின்ற நிலையில் உள்ளார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ஆண்டு மொத்த உற்பத்த்யிலும் மேலாகக்கடன் வாங்கியுள்ள பொருளாதாரம் (இலங்கை மாதிரி,) சீனா அமெரிக்க அரசுக்குக்கடன் கொடுக்கும்நிலையில் உள்ளது.

இலங்கையில் தமிழர்களது எழுச்சி நிலையினை இத்துடன் ஒப்பிட முடியும்.

அமெரிக்க உலக வர்த்தகத்தின் வகிபாகம் இழக்கப்பட்டு அதனை சீனா கையகப்படுத்திவிட்டது.

உலக மேலாதிக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அளவிற்கு உலக அளவில் பாதுகாப்பினை மேற்கொள்ளுவதற்கு தேவையான பாதுகாப்பு செலவினை அமெரிக்காவினால் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத சூழ்னிலை உருவாகிவிட்டது.

அது தனது உலக வர்த்தக வகிபாகம் இழந்ததினூடாகவும் உலகத்தின் இருப்புக்காசு என்ற நிலையினை (பிரதீடு அற்ற) தற்போது ஏற்பட்டுள்ள உலக சூழலினால் இழந்துவிட்டது.

2 ஆம் உலக யுத்தத்தின் பின்ன்னரான காலகட்டத்தில் பிரித்தானியா உள்ள நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது.

வருமானம் மக்களிடையே சமமாகப்பிரிக்கப்படாமல் உள்ள நிலை ( செல்வந்தர்கள் ஒரு சிறு தொகுதியினர் பெருமளாவிலான நாட்டின் வருமானத்தினை தமதாக்குகின்ற நிலை) மற்ற நாடுகளை விட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது இதனால் பொருளாதார உறுதியின்மை ஏற்படுவதுடன் எழை மக்கள் கிளர்ச்சி நாட்டின் உள்நாட்டுக்கலவரங்களை உருவாக்கும், இவை இங்கிலாந்தின் வரலாற்றிலும் ஏற்பட்டுள்ளது, பிரன்சு புரட்சியிலும் ஏற்பட்டுள்ளது, அண்மையில் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் அமெரிக்கா இப்போது 3 வது கட்டமான வீழ்ச்சி பாதையில் செல்கிறது.

அமெரிக்காவிற்கு அதிக பட்சம் 50 வருடங்கள் உள்ளது.

உங்கள் எந்த சாம்ராஜ்யமும் எப்போதுக்குமாக நிலைத்திருப்பதில்லை என்ற தியரியோடு நான் உடன்பட்டாலும்.

உங்கள் கால அளவுகளை நான் ஏற்கவில்லை.

அமெரிக்காவின் எழுச்சி என நீங்கள் கிரேட் டிப்ரெசன் காலத்துக்கு அடுத்த காலத்தை குறித்தாலும், அதன் பின்னும், கென்னடியின் இறப்பின் பின், ரீகன் வரும் வரை அமெரிக்க இப்போ உள்ளது போன்ற ஒரு நிலையிலே இருந்தது. பொருளாதாரத்திலும், உலக அரங்கிலும் என்னை பொறுத்தவரை 1990 இல் சோவியத் உடையும் வரை அமெரிக்கா எழுச்சி என்ற நிலையை அடையவில்லை.

இப்போ ஒட்டு மொத்த மேற்கிலும் கடும் தலைமைதுவ பஞ்சம் என்பதையும் ஏற்கிறேன்.

ஆனால் ஜனநாயக நாடுகளின் பெரும் பலமும், பலீனமும் இதுவே. பிரதமாராகும் வரை தொடர் தோல்வியாளராக அறியபட்டவர் சேர்சில். ஜனாதிபதியாகும் வரை லிங்கனும் அப்படியே.  ஆனால் சந்தர்பங்கள் அவர்களை பெரும் தலைவர்கள் ஆக்கியது.

ஜனநாயக நாடுகளின் உள்ளக வலிமை ஒரு அந்தரிப்பில் ( crisis) இல் தெரியும். ஆனால்  சர்வாதிகார நாடுகளின் உள்ளோடும் பலவீனம் அதே அந்தரிப்பில் புலப்படும்.

கொவிட் ஒரு நல்ல உதாரணம். இன்று மேற்கில் இது ஒரு சாதாரண விடயம். ஆனால் சீனாவில் 4 பேருக்கு கொவிட் என்றால் பெரு நகரே பொது முடக்கம் ஆகிறது.

காரணம் - இறப்புகள் கூடினால் மக்கள் அரசை புரட்டி போடுவார்கள் என்ற பயம்.

அமெரிக்காவின் இன்னொரு அனுகூலம், அமெரிக்காவை அடுத்து இருக்கும் அத்தனை பொருளாதார சக்திகளும் யூகே, ஈயூ, ஜப்பான், கொரியா, அவுஸ் - சீனாவின் எழுச்சியால் பாதிக்கபடப்போவன.

அமெரிக்காவா, சீனாவா என்பது ஒரு வர்த்தக யுத்தம் மூலம் முடிவு செய்யபடும் என்றால் அமெரிக்காவின் பக்கம்தான் அத்தனை வளர்ந்த பொருலாதாரங்களும் நிற்கும், இந்தியா உட்பட. 

ஆகவே அமெரிக்காவின் வீழ்சியை அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் 50 வருடம் என்பது மிக குறுகியதாகவே எனக்கு படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நீங்கள் கூறுவது போல 50 வருடம் குறுகிய காலப்பகுதியாக உள்ளது என்பத்ற்கு வரலாற்றாளர்கள் இந்த ஒழுங்குகளின் கால அளவுகளை சராசரியாக 250 வருட காலம் என கூறுகிறார்கள் அதன் மூலம் பார்த்தால் நீங்கள் கூறுவது சரிதான்.

ஆனால்  டச்சு, பிரித்தானியா, மற்றும் அமெரிக்க உலக ஒழுங்கு 500 வருட காலப்பகுதிக்குள்ளாக அடங்கிவிட்டுள்ளது (அமெரிக்க உலக ஒழுங்கு தற்போதும் தொடர்கிறது என்பதை ஏற்றுகொள்கிறேன்).

அமெரிக்காவின் பொருளாதாரம், நாட்டின் ஒரு ஆண்டின் மொத்த வருமானத்தினை விட அதன் ஒரு ஆண்டின் பொது செலவு அதிகமாகவுள்ளது, இந்தநிலையில் அமெரிக்கா உலக Reserve currency நிலையினை இழந்தால் அமெரிக்காவினால் தனது உள்நாட்டு பொருளாதாரத்தினையே கட்டுப்படுத்த முடியாது, அவ்வாறான நிலையில் உலகளவில் தனது பாதுகாப்பு செலவிற்காக எவ்வாறு செலவிட முடியும்.

மற்றது அமெரிக்க தலமைகள், இராஜபக்ச  சகோதரர்கள் மாதிரிதான்.

இவற்றினை பார்க்கும் போது 50 வருடமும் அதிகமோ எனத்தோன்றுகிறது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.