Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில்  தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது.

Dead_bodies_washed_ashore_after_popular_

 கொழும்பு நகரில்  காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில்,  கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ  நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

 இவ்வாறான பின்னணியில்,  வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில்  அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை கடலில், கடற்படை  காவலரணை அண்மித்து,  30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டதாக கருதபப்ட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரிக்கும்  நிலையில், இன்னும் அச்சடலத்தின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.

 அதன் பின்னர்  கடந்த ஜூலை 29 ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் சடலமொன்று கரை ஒதுங்கியது. குறித்த சடலம் ஹோமாகம - ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடையது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணை தொடர்கிறது,.

 இந் நிலையில் இன்று முதலாம் திகதி  காலி முகத்திடலில் மற்றொரு சடலம்  கரை ஒதுங்கியது. குறித்த சடலத்தில் கீழ் உள்ளாடையும் மேல் பகுதியில் நீல நிற ரீ சேட்டும் காணப்பட்ட நிலையில், அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. இந் நிலையில் கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை சவச்சாலையில் வைத்துள்ளனர். கோட்டை நீதிவான் திலின கமகேவும் சடலத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 இவ்வாறான பின்னணியில்  அடிக்கடி கரை ஒதுங்கும் சடலங்களால்  கொழும்பில் அச்ச  நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மூன்று சடலங்கள் தொடர்பிலான விடயங்களிலும் இதுவரை  பொலிஸ் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 
 

 

https://www.virakesari.lk/article/132696

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று மாதமாக… ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும்,
மகிந்த, பசில், கோத்தா என்று… இலங்கை அரசின் முக்கிய புள்ளிகள்,
மக்கள் எழுச்சி மூலம், பதவி நீக்கப் பட்ட அச்சத்தில்…
வருகின்ற 9‘ம் திகதியும் ஏதாவது நடந்து விடுமோ..
என்பதை தவிர்க்க…. முக்கிய இடங்களில் இந்த சடலங்கள்,
பொது மக்களின் பார்வையில் படும்படி வைத்து அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை ஒடுக்க பல வழிகளை கையாள்கிறது அரசு. பாதாளக்கோஷ்ட்டி மோதல், போலீசாரை தாக்கியதால் தற்காப்பு நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார், போதைப்பொருள் கடத்தல் காரர் என்று கதை முடியலாம். எத்தனை காரணங்கள் இருக்க கவலையெதற்கு? என்ன இது புதுசா இலங்கையில்? இனி சிங்கள மக்களும் தங்கள் உறவுகளை  தெருக்களில் தேடி அலையட்டும் எங்களோடு சேர்ந்து.

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing

மீண்டும்  தலையாட்டி. இம்முறை... சிங்களப் பகுதியில்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கடந்த மூன்று மாதமாக… ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும்,
மகிந்த, பசில், கோத்தா என்று… இலங்கை அரசின் முக்கிய புள்ளிகள்,
மக்கள் எழுச்சி மூலம், பதவி நீக்கப் பட்ட அச்சத்தில்…
வருகின்ற 9‘ம் திகதியும் ஏதாவது நடந்து விடுமோ..
என்பதை தவிர்க்க…. முக்கிய இடங்களில் இந்த சடலங்கள்,
பொது மக்களின் பார்வையில் படும்படி வைத்து அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அதுதான் உண்மை. ஆனால் யுத்தக்கதாநாயகர்களே துரத்தப்பட்டநிலையில் இந்தப்போக்கு நீடிக்க வாய்ப்பில்லை.

7 hours ago, satan said:

போராட்டத்தை ஒடுக்க பல வழிகளை கையாள்கிறது அரசு. பாதாளக்கோஷ்ட்டி மோதல், போலீசாரை தாக்கியதால் தற்காப்பு நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார், போதைப்பொருள் கடத்தல் காரர் என்று கதை முடியலாம். எத்தனை காரணங்கள் இருக்க கவலையெதற்கு? என்ன இது புதுசா இலங்கையில்? இனி சிங்கள மக்களும் தங்கள் உறவுகளை  தெருக்களில் தேடி அலையட்டும் எங்களோடு சேர்ந்து.

மேன்மைதங்கியி பிரேமதாச காலத்தை நினைவூட்டுகிறது. அது சரி அவரது சகபாடிகளாக இருந்தவர்களில் ஒருவர்தானே இந்து நரியரான ரணில். மற்ற இனவாதிகள் முறைத்துக்கொண்டு செய்ததை, இந்த இனவாதி சிரித்துக்கொண்டு செய்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அதுதான் உண்மை. ஆனால் யுத்தக்கதாநாயகர்களே துரத்தப்பட்டநிலையில் இந்தப்போக்கு நீடிக்க வாய்ப்பில்லை.

 அது சரி அவரது சகபாடிகளாக இருந்தவர்களில் ஒருவர்தானே இந்து நரியரான ரணில். மற்ற இனவாதிகள் முறைத்துக்கொண்டு செய்ததை, இந்த இனவாதி சிரித்துக்கொண்டு செய்கிறான். 

  அதுதான் நரியாரில் உள்ள விஷம் சே ... விஷேஷம்!

யுத்த கதா நாயகர்களை காக்கும் கரம் அது, அதற்காக ....... இருக்கலாம், அல்லது தன்னை நிலைநிறுத்துவகற்காக அவ்வழியை பின்பற்றலாம். இறந்த ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? - ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர் கேள்வி

(நா.தனுஜா)

 

 

நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த சில தினங்களாக காலிமுகத்திடலில் கரையொதுங்கிவரும் சடலங்கள் மூலம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டும் என்றும், முறையற்ற பொருளாதார நிர்வாகத்தையும் தவறான தீர்மானங்களையும் மேற்கொண்ட ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 4 மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது நாட்டில் பல்வேறு அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

இருப்பினும் அப்போராட்டங்களின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்கள் பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டும், தேடப்பட்டும் வருகின்ற பின்னணியில் அமைதிவழிப்போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு, மருதானையிலுள்ள சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அங்கு ஒவ்வொரு பிரதிநிதிகளாலும் வெளியிடப்பட்ட முக்கிய கருத்துக்கள் வருமாறு:

சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர்

தற்போதைய அரசாங்கத்தினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையையும் போராட்டக்காரர்களை பாசிஸவாதிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களென முத்திரை குத்தி அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கும், எதிர்ப்பை வெளியிடுவதற்கும் தாம் கொண்டிருக்கின்ற உரிமையைப் பயன்படுத்துபவர்களை கைதுசெய்வதற்கும், அவர்களுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் இந்த அடக்குமுறை உத்திகள் எமக்குப் புதிதல்ல. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த ஜனநாயக மற்றும் அமைதிவழிப்போராட்டங்களை அடக்கியதில் இலங்கை அரசாங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. 

குறிப்பாக கடந்த காலங்களில் வட, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடிப் போராட்டங்களை முன்னெடுத்துவந்தவர்களும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டிலுள்ள முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாகப் பல்வேறு சட்டங்களின்கீழ் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன.

எனவே கடந்த காலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

சட்டத்தரணி ரணிதா ஞானராஜா

கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதியைக்கோரி முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்களுக்கு பாசிஸவாதச் சாயம் பூசப்பட்டு, அவை பல்வேறு அரசாங்கங்களாலும் அடக்கப்பட்டமையை அவதானித்துவந்திருக்கின்றோம். குறிப்பாக 1989 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவசரகாலச்சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் உச்சளவில் பயன்படுத்தப்பட்டன. அதன்விளைவாகத் தற்போது பல பெண்கள் தமது தகப்பன், கணவன் உள்ளிட்ட அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகவும் நீதியைக்கோரியும் தொடர்ந்து போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை நாட்டுமக்களின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கின்றோம். இருப்பினும் அதற்கு அப்பால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கும் நிறைவேற்றதிகாரம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதே எமது கூட்டு நிலைப்பாடாக இருக்கின்றது.

அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் எமது பிரச்சினைகள் தொடர்பில் வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனெனில் பல வருடங்களுக்கு முன்னர் கையடக்கத்தொலைபேசி மற்றும் சமூகவலைத்தள வசதிகள் போதியளவிற்குக் காணப்படாமையினால் அப்போதைய மனித உரிமைகள் மீறல்களை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தவோ அல்லது அவற்றின் தீவிரத்தன்மையை உணர்த்தவோ இயலாத நிலை காணப்பட்டது. 

ஆனால் இப்போது அண்மைக்காலங்களில் பதிவாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் என்பன காணொளிகள் வடிவில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவை பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்திருக்கின்றன. எனவே எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இவற்றுடன் இணைந்ததாக தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி

தீவிர பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டுமக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்ற பலர்மீது தற்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. 

எம்மிடமுள்ள தகவல்களின்படி கடந்த 4 மாதகாலத்தில் போராட்டத்தில் பங்கேற்ற 300 இற்கும் மேற்பட்டோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சுமார் 15 பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி 300 - 600 பேரின் வீடுகளுக்கு பொலிஸார் சென்றிருப்பதுடன் வாக்குமூலம் வழங்குமாறு அவர்களிடம் கோரப்பட்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி கடந்த சில நாட்களாக காலிமுகத்திடலில் பல சடலங்கள் கரையொதுங்கிவருகின்றன. இதுகுறித்து உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதன்மூலம் போராட்டக்காரர்களை உளவியல் ரீதியில் அச்சுறுத்தவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களை கடந்த 1981, 1989 ஆம் ஆண்டுகளில் அடக்கியதைப்போன்று அடக்கவேண்டும் என்று பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ள சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு  எதிராக இன்னமும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதுஎவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட

குறிப்பாக பெருமளவான இளைஞர், யுவதிகள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டத்தின்மீது அரசாங்கத்தினால் இப்போது பல்வேறு வடிவங்களிலும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அமைதிவழிப்போராட்டக்காரர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுடன்கூடிய மிகமோசமான கருத்துக்களை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே இவ்வாறானதொரு அடக்குமுறைக் கலாசாரத்தை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்துகின்றேன். அதேவேளை காணாமலாக்கப்பட்ட எனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவிற்கு (ஊடகவியலாளர்) என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிந்து, அவருக்குரிய நீதியை நிலைநாட்டுவதற்காக நாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் போராடுவேன் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். 
 

https://www.virakesari.lk/article/132731

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அமைதிவழிப்போராட்டக்காரர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுடன்கூடிய மிகமோசமான கருத்துக்களை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

யார் எடுப்பார் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? சுத்த அப்பாவிகளாய் இருக்கிறார்களே!

  • கருத்துக்கள உறவுகள்

ரனில் தான் பின்னணியில்  இருந்து  செயற்படுகிறார். அல்லது அவருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவரிடம் போய் முறையிட்டால் தட்டிக்களிப்பு தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

ரனில் தான் பின்னணியில்  இருந்து  செயற்படுகிறார். அல்லது அவருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவரிடம் போய் முறையிட்டால் தட்டிக்களிப்பு தான் நடக்கும்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவரது ஆணையின்படி அரங்கேறியவை அவை,  அதை நிஞாயப்படுத்தியும் உள்ளார். அவர் அதில் சபந்தமில்லாதவராக இருந்தால் ஏன் தடுக்கவில்லை? முடியாவிட்டால் அவர் ஜனாதிபதியாக இருப்பதில் எந்த பயனுமில்லை.  கொலை செய்தவனிடம் நிஞாயத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழியுமில்லை.

இதுவரைக்கும் பல சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது சந்தேகத்தை வரவழைக்கின்றது. இச் சடலங்கள் காணாமல் போன தமிழ் இளைஞர்களின் சடலங்களாக இருக்க வாய்ப்புள்ளது. நிலவறைகளிலும் கடும் சிறைகளிலும் இன்னும் மிச்சமிருக்கும், முள்ளிவாய்க்காலில் இருந்து காணாமல் ஆக்கடிக்கப்பட்ட தமிழர்களில் சிலரை தெரிவு செய்து படுகொலை செய்து கடலில் போட்டு சிங்கள மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கின்றனரோ என நினைக்கின்றென். 

ஈஸ்டர் தாக்குதலில் பெரும்பாலும் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களாக இருந்தவர்கள் என்பதைப் போன்று இப்போதும் கொல்லப்படுவது தமிழர்கள்; லாபமடைவது சிங்கள பெளத்த அரசு என்ற சமன்பாடு மீண்டும் அரேங்கேற்றப்படுகின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பச்சைப்புலிகளான ஈபிடிபியை ரணில் அழைத்த போதே இப்படி நிகழும் என்று எழுதிவிட்டோம் இங்கே யாழில்.

சிங்களவர்களோ தமிழர்களோ..  சிங்கள அரச ஆதரவு தமிழ்.. முஸ்லிம் கூலிக்குழுக்களாலும் சிங்கள முப்படைக்காடைகளாலும் கொல்லப்படுவதும்.. உலகம் பராமுகமாக இப்படுகொலைகளுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நடித்து விலகிச் செல்வதும்..

இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாவதற்கு காரணங்களாகும்.

மத்திய கிழக்கு.. ஐரோப்பாவில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால்.. இப்ப முழு தலையீட்டுக்கு மேற்கு நாடுகள் முயன்றிருக்கும். ஆனால்..

இலங்கையில்.. தமிழினப்படுகொலை என்றால்.. என்ன.. ஜே விபி.. மற்றும் அரசியல் படுகொலைகள் என்றால் என்ன உலகம் பாராமுகமாகக் கடந்து செல்வதே நீடிக்கிறது. இது இலங்கைக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல. இலங்கை உலகிற்கு தொடர்ந்து தவறான உதாரணமாகிக் கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதுவரைக்கும் பல சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது சந்தேகத்தை வரவழைக்கின்றது. இச் சடலங்கள் காணாமல் போன தமிழ் இளைஞர்களின் சடலங்களாக இருக்க வாய்ப்புள்ளது. நிலவறைகளிலும் கடும் சிறைகளிலும் இன்னும் மிச்சமிருக்கும், முள்ளிவாய்க்காலில் இருந்து காணாமல் ஆக்கடிக்கப்பட்ட தமிழர்களில் சிலரை தெரிவு செய்து படுகொலை செய்து கடலில் போட்டு சிங்கள மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கின்றனரோ என நினைக்கின்றென். 

ஈஸ்டர் தாக்குதலில் பெரும்பாலும் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களாக இருந்தவர்கள் என்பதைப் போன்று இப்போதும் கொல்லப்படுவது தமிழர்கள்; லாபமடைவது சிங்கள பெளத்த அரசு என்ற சமன்பாடு மீண்டும் அரேங்கேற்றப்படுகின்றதா? 

நிழலி கூறுவதுதான்... நடக்கின்றது போலுள்ளது.
அடையாளம் காணப்படாத சடலங்கள் எல்லாம், தமிழருடையது என்றே கருத வேண்டியுள்ளது.
நமக்கு வாய்த்த... பாராளுமன்ற உறுப்பினர்களோ.. அதனைப்பற்றிய 
ஆராய்வு எதுவும் இன்றி, கிணற்றுத் தவளைகளாகவே உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.