Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

14 August 2022, 9:58 am

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார்.

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு).

மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும். 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

“தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இனை செயற்படுத்தஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன்.

தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல.

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

https://samugammedia.com/the-geneva-meeting-is-more-important-to-the-president-than-solving-the-problems-of-tamils-wigneswaran-pointed-out/#

டிஸ்கி

3 minutes ago, goshan_che said:

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

தேர்தல் மூலம் தெரிவாகும் மாகாண அரசை ஒதுக்கி, மத்திய அரசின் நியமன ஆளுனர் தலைமையில் ஒரு கண்துடைப்பு அதிகார பகிர்வை சிவி யிடம் விற்க நரி முயன்றுள்ளது.

5 minutes ago, goshan_che said:

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நரி பதில் எப்படி சொல்லும். பிறகு அடாத்தாக குடியேற்றம் செய்வது தடைப்படுமா இல்லையா?

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

அதாவது காசு மட்டும்தாங்கோ அதிகாரம் எல்லாம் கேட்காதேங்கோ.

இந்தியாவிடம் பெற்றோலை யாசகம் பெற்று விட்டு, சீன கப்பலை வர விடும் அதே அணுகுமுறை. 

8 minutes ago, goshan_che said:

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

ஒரு சந்திப்பின் பின் இப்படியான வெளிப்படை அறிக்கை விடுவது வரவேற்க வேண்டியது.

சும், சாணக்கியன் போல் படத்தை மட்டும் போட்டு, என்னை மதுரையில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என சீன் காட்டாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலுக்கு இவர் வாக்களித்து பெற்றுக்கொண்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம்.

2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம்.

இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம்.

2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம்.

இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?

முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.

100%

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதாவது காசு மட்டும்தாங்கோ அதிகாரம் எல்லாம் கேட்காதேங்கோ.

3 hours ago, goshan_che said:

ஒரு சந்திப்பின் பின் இப்படியான வெளிப்படை அறிக்கை விடுவது வரவேற்க வேண்டியது.

சும், சாணக்கியன் போல் படத்தை மட்டும் போட்டு, என்னை மதுரையில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என சீன் காட்டாமல்.

உண்மை. 

இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய நேரம். 

விக்கியின் அறிக்கை TNA க்குத்தான் பிரச்சனையைக் கொடுக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

விக்கியின் அறிக்கை TNA க்குத்தான் பிரச்சனையைக் கொடுக்கும்

புரியவில்லை,  எந்தவகையில் பிரச்சனையை கொடுக்கும் என்று. தான் ஏன் அழைக்கப்பட்டேன்? என்ன பேசினேன்? ஏன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது? எமது எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன? என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார், தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் பிரதிநிதியாய். இது பூட்டின அறைக்குள், என்ன பேசினார்கள்? எவ்வளவு கைமாறினார்கள் என்பது ஒன்றும் தெரியாது. நாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்! எங்களால் மட்டுமே மக்களை வைத்து பேரம் பேச முடியும் என்று கூவித்திரிவார்கள். பிறகு பாத்தால்; அரசு பதவி முடியும்போது த .தே .கூட்டமைப்பு தமிழரின் பிரச்சனைகளை தீர்க்க முயலவில்லை, தீர்க்கமான பேச்சுக்களை எடுக்கவில்லை என்று அவர்கள் பக்கம் அறிக்கை விடுவார்கள். இவர்களோ; நாங்கள் பேசினோம், அரைவாசி வரைபு படுத்தப்பட்டுவிட்டது, அதற்கிடையில் பதவி இழந்து விட்டார்கள் என்று சப்புகொட்டுவார்கள்.              

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

14 August 2022, 9:58 am

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார்.

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு).

மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும். 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

“தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இனை செயற்படுத்தஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன்.

தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல.

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

https://samugammedia.com/the-geneva-meeting-is-more-important-to-the-president-than-solving-the-problems-of-tamils-wigneswaran-pointed-out/#

டிஸ்கி

தேர்தல் மூலம் தெரிவாகும் மாகாண அரசை ஒதுக்கி, மத்திய அரசின் நியமன ஆளுனர் தலைமையில் ஒரு கண்துடைப்பு அதிகார பகிர்வை சிவி யிடம் விற்க நரி முயன்றுள்ளது.

நரி பதில் எப்படி சொல்லும். பிறகு அடாத்தாக குடியேற்றம் செய்வது தடைப்படுமா இல்லையா?

ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பை...  விக்னேஸ்வரன் அவர்கள்,
ஊடக அறிக்கை மூலம், தமிழ் மக்களுக்கு தெரியப் படுத்தியமை..
ஒரு முன்மாதிரியான செயல்.

இதனை... மற்றக் கட்சிகளும், ஒழிவு மறைவு இல்லாமல் பின்பற்ற வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

புரியவில்லை,  எந்தவகையில் பிரச்சனையை கொடுக்கும் என்று. தான் ஏன் அழைக்கப்பட்டேன்? என்ன பேசினேன்? ஏன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது? எமது எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன? என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார், தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் பிரதிநிதியாய். இது பூட்டின அறைக்குள், என்ன பேசினார்கள்? எவ்வளவு கைமாறினார்கள் என்பது ஒன்றும் தெரியாது. நாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்! எங்களால் மட்டுமே மக்களை வைத்து பேரம் பேச முடியும் என்று கூவித்திரிவார்கள். பிறகு பாத்தால்; அரசு பதவி முடியும்போது த .தே .கூட்டமைப்பு தமிழரின் பிரச்சனைகளை தீர்க்க முயலவில்லை, தீர்க்கமான பேச்சுக்களை எடுக்கவில்லை என்று அவர்கள் பக்கம் அறிக்கை விடுவார்கள். இவர்களோ; நாங்கள் பேசினோம், அரைவாசி வரைபு படுத்தப்பட்டுவிட்டது, அதற்கிடையில் பதவி இழந்து விட்டார்கள் என்று சப்புகொட்டுவார்கள்.              

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

வழமைபோல விக்கினேஸ்வரன் மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார்கள். முரண்டு பிடிக்கிறார், கோபமூட்டுகிறார், இணங்கிப்போக மறுக்கிறார், இனவாதத்தை தூண்டுகிறார்  இப்படிப்பல அடுக்குவார்கள். இனி உதெல்லாம் எடுபடாது.  சரி நீங்கள் இணங்கி, விட்டுக்கொடுத்து எழுபது வருடங்களாக எதை வாங்கினீர்கள் என்று கேட்டால்; எல்லாம் கிரமமாக காரியமாற்றுகிறோம் என்பார்கள். விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

. விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

100% உண்மை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

56 minutes ago, குமாரசாமி said:

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

37 minutes ago, satan said:

வழமைபோல விக்கினேஸ்வரன் மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார்கள். முரண்டு பிடிக்கிறார், கோபமூட்டுகிறார், இணங்கிப்போக மறுக்கிறார், இனவாதத்தை தூண்டுகிறார்  இப்படிப்பல அடுக்குவார்கள். இனி உதெல்லாம் எடுபடாது.  சரி நீங்கள் இணங்கி, விட்டுக்கொடுத்து எழுபது வருடங்களாக எதை வாங்கினீர்கள் என்று கேட்டால்; எல்லாம் கிரமமாக காரியமாற்றுகிறோம் என்பார்கள். விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான காலம் முடிந்து விட்டதாகவே நானும் உணர்கிறேன். அங்கே இருக்கும் ஒருவரை கூட இதயசுத்தி உள்ளவராக காண முடியவில்லை.

இதைவிட அதிகம் வேறுபட்டவர்கள் அல்ல சைக்கிள் காரரும்.

சி வி வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல்,  அடிப்படை கோரிக்கைகளை எப்போதும் வலியுறுத்துவதில் நன்றாக செயல்பட்டலும், வினைதிறன் அற்றவர் என்பதாக படுகிறது. அல்லது அப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. சுரேஸ் போன்றவர்கள் அவரை வைத்து லாபம் அடைய முனைவதும் உண்மை.

அடிப்படை கோரிக்கைகளை விட்டு கொடாமல், ரணில் போன்ற ஒருவருடன் டீல் பண்ணுவது மிக கடினமான பணி.

தலைவரின் பலத்தின் அடிப்படையில் பாலா அண்ணை போன்ற ஒரு ஆளுமை கூட ரணிலை சமாளிக்க பலத்த பிரயத்தன பட வேண்டி இருந்தது.

சி வி தன்னை சுற்றி நேர்மையாளரை வைத்து கொண்டு, வெளிப்படைதன்மையாக செயல்படுவது இன்றி அமையாதது.

புலம் பெயர் அமைபுக்களும் கூட சைக்கிள்காரரை விட்டு விட்டு, கோரிக்கைகள் அடிப்படையில் சீவியுடன் இணைந்து அவரது பாதையை தீர்மானிக்கும் சக்திகளாக வரவேண்டும்.

ஒரு புதிய தலைமையாக வர முடியாவிட்டாலும் அதற்கு வழி சமைத்து கொடுத்தவராக இருக்கும் தகுதி சிவிக்கு உண்டு.

நல்ல கருத்துக்கள்.

புதிய தலைமுறையை உருவாக்காமலும்,புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிக்காமலும் பழையதையே பேசிப் பேசி காலத்தை கடத்துகின்றார்கள்.மூன்று சந்ததியாக  இவர்களை தமிழ் அரசியல் தலைவர்களாக முன்னிறுத்தியது ஈழத்தமிழர்களின் தூர நோக்கற்ற பார்வையையே காட்டுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனை  தனிமைப்படுத்தி, எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சாட்டி, விமர்சிப்பதை விடுத்து எல்லோரும் அவரோடு  இணைந்து சுயநலமில்லாமல் உழைத்தால் நிறைய சாதிக்கலாம். ஆனால் சுயநலவாதிகள், இனவாதிகள் ஒன்றுபட விடமாட்டார்கள், தனித்து அழைத்து கொன்று விழுங்கி ஏப்பம் விடவே முயற்சிப்பார்கள். அவரிடம் அறிவு உண்டு ஆனால் அரசியல் நுணுக்கங்கள், சூழ்ச்சிகள் குறைவு ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒருவர்கையை மற்றவர் பலப்படுத்தாவிட்டால் குள்ளநரிகள் இடையில் புகுந்து நீலிக்கண்ணீர் விட்டு, உபதேசித்தபடியே விழுங்கவிடும் மந்தையை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருந்த வீடும், நாசமறுக்கும் நாலு பேரும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை ஆயுதம் ஏந்த உந்தியவர்கள் தாங்கள் தப்பித்துக்கொண்டதோடு, அவர்களை ஏதோ வன்முறையாளராக சித்திரிப்பது மிக கேவலம் இவருக்கு. ஜனநாயக வழியில் போட்டியிடு மக்களுக்கு எதை பெற்றுக்கொடுத்தார்கள்? அவர்களின் அடிமை வாழ்வை களைந்தார்களா? கோத்தா சொல்லிச்சே; புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், இனிமேல் தமிழருக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை, அவர்கள் வாழ விரும்பினால் எங்கள் சட்ட திட்டங்களுக்கு அமைந்து வாழலாம், தீர்வு என்று எதையும் கேட்க முடியாது. பொன்சேகா சொன்னார்; தமிழர் வந்தேறு குடிகள், அவர்களுக்கு தீர்வு கேட்கும் உரிமையில்லை. அப்போ எதற்கு புலிகள் இருக்கும்போது தீர்வு தருவதாக ஏன் பேச்சுக்களை நடத்தினர்? மனித உரிமைகளை, ஜனநாயகத்தை  மீறியதால் புலிகள் அழிக்கப்பட்டனராம். வாய் கூசாமல் சொல்கிறார் அந்த மக்களை நடுத்தெருவில் விட்டு தலைவர். அப்படியென்றால் இன்று, இந்த நாட்டுக்கு இந்த அவல நிலை வர காரணம் என்ன? யார் காரணம் என்பதையும் தெளிவு படுத்துவாரா? இவர் அன்று அவர் சொன்னதை, இன்று அவர் சிஷ்யன் திருப்பி கூறுகிறார். உறுதிப்படுத்துகிறார். கேவலமான அரசியல்வாதிகள்!                           

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.