Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேட்டி, வட இந்திய அதிகார வர்க்கத்தை, பிராமணிய குழுவை அசைத்துப்பார்த்து எரிச்சலடைய வைத்துள்ளது.

பேட்டி ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் நாட்டின் சுயநிர்ணய, சுயமரியாதைக்கான தேவையை, விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நுணுக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

பொறுமையாக பார்த்தால், இக்காணொளியை நிச்சயம் ரசிக்கலாம். 👌

 

 

 

நேர்காணலின் முடிவில் 'பல்வேறு கலாச்சாரம், மொழிகள், இனங்கள் கொண்ட இந்தியா ஒரு நாடாக இருப்பது அதிசயம், அது இன்னும் 25 கழித்தும் அது தொடருமா? என்பதை காலம்தான் சொல்லும்' என முத்தாய்ப்பாக முடித்துள்ளது சிறப்பு..!

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

மேலேயுள்ள காணொளிகளை பாருங்கள், ரசிக்கலாம், தெளியலாம். 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி.

பி டி ஆர் - சொல்வதுதான் உண்மை. இத்தனை வேறுபாடுகள் கொண்ட ஒரு நாடு, வாள்முனையில் அல்லாமல் (கஸ்மீர் தவிர்த்து) 75 ஆண்டுகள் நிலைத்ததே அதிசயம்தான்.

ஆனால் அதிசயங்கள் எல்லாம் முடிவுக்கு வருவதுதானே இயல்பு.

இந்திய அதிசயத்தை முடிக்க வந்த தூதர்கள்தான் சங்கிகள்.

இஸ்லாமியர்கள், தேசிய இனங்களுக்கான வெளியை சுருக்கி, சுருக்கி இனி இங்கே இருக்க முடியாது என்ற நிலைக்கு இந்தியாவை இட்டு போக கூடிய ஒரே சக்தி சங்கி கூட்டம்தான்.

அந்த வகையில் தமிழ் தேசியத்துக்கு இது உவப்பான செய்திதான்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி  இரா வன்னியன்,

மிகவும் நேர்த்தியான பேட்டி. 

🙏

4 hours ago, goshan_che said:

பகிர்வுக்கு நன்றி.

பி டி ஆர் - சொல்வதுதான் உண்மை. இத்தனை வேறுபாடுகள் கொண்ட ஒரு நாடு, வாள்முனையில் அல்லாமல் (கஸ்மீர் தவிர்த்து) 75 ஆண்டுகள் நிலைத்ததே அதிசயம்தான்.

ஆனால் அதிசயங்கள் எல்லாம் முடிவுக்கு வருவதுதானே இயல்பு.

இந்திய அதிசயத்தை முடிக்க வந்த தூதர்கள்தான் சங்கிகள்.

இஸ்லாமியர்கள், தேசிய இனங்களுக்கான வெளியை சுருக்கி, சுருக்கி இனி இங்கே இருக்க முடியாது என்ற நிலைக்கு இந்தியாவை இட்டு போக கூடிய ஒரே சக்தி சங்கி கூட்டம்தான்.

அந்த வகையில் தமிழ் தேசியத்துக்கு இது உவப்பான செய்திதான்.

PTR ஐ வளர விடாமல் பிரச்சனை எதிலும் மாட்டி, நாட்டைவிட்டு வெளியே அனுப்பி வைப்பார்களோ என்கிற நியாயமான பயம் எனக்குண்டு. 

அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். 

ஒரே கல்லில் இரு மாங்காய்கள். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kapithan said:

நன்றி  இரா வன்னியன்,

மிகவும் நேர்த்தியான பேட்டி. 

🙏

PTR ஐ வளர விடாமல் பிரச்சனை எதிலும் மாட்ட, நாட்டைவிட்டு வெளியே அனுப்பி வைப்பார்களோ என்கிற நியாயமான பயம் எனக்குண்டு. 

அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். 

ஒரே கல்லில் இரு மாங்காய்கள். 

ஓம். பிஜேபி செய்யாவிட்டாலும் தமக்கு ஆபத்து என நினைத்தால் குடும்பம் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். 

அப்படி இலகுவில் நடக்காது.. இவரின் பாட்டன் தான் நீதிக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவரை இழந்தால் இழப்பு திமுக க வுக்கு தான். தவிர உறவு முறையில் இவரும் சபரீசனும் சொந்தம் என்று கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பகிடி said:

அப்படி இலகுவில் நடக்காது.. இவரின் பாட்டன் தான் நீதிக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவரை இழந்தால் இழப்பு திமுக க வுக்கு தான். தவிர உறவு முறையில் இவரும் சபரீசனும் சொந்தம் என்று கேள்வி 

அரஜியலில் நிரந்தர நம்பனும்  இல்லீங்கோ, நிரந்தர ப்பகைவனும் இல்லீங்கோ. 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய நாட்டில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளித் தெளித்து வாக்குகளை கவரும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

இலவசங்களினால் அரசிடமுள்ள வரிப்பணம் வீணாவதாகவும், அவற்றை வேறு உபயோகமான முறைகளில் செலவழிக்கவும், தேர்தல் ஆணையத்தின் மூலம் இம்மாதிரி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும் சங்கிகளின் ஆதரவு ஊடகங்கள் எழுதி வருகின்றன.

அவ்வகையான ஒரு விவாத நிகழ்ச்சியில், ஆறு நாட்களுக்கு முன் 'இந்தியா டுடே' நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சரின் விளாசல் கீழே..

இதில் வேடிக்கை என்னவென்றால், வட மாநிலங்களிலும் இந்த இலவசங்களை ஆளும் பி.ஜே.பி அளித்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதானி, அம்பானி போன்ற கார்பொரேட் நிறுவனங்களின் நிலுவையிலிருக்கும் வங்கிக் கடன்களை ரத்து செய்ததும் பி.ஜே.பி அரசுதான்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒருமுறை ட்ரெண்டிங் செய்தியாகியுள்ளார்.

நிதியமைச்சராக அவர் பொறுப்பேற்றதும் முதன்முதலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு' என்று கூறி மாநிலங்களுக்கான உரிமைகள் பற்றி விரிவாக பேசினார். அவரது பேச்சு அனைத்து மாநிலங்களுக்குமான இருந்தது.

ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன், பாஜக மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தாலும், அசாரமல் பலவற்றை இடது கையால் கையாண்டும் வருகிறார்

பிடிஆர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின்னர், வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர், கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு, என அவர் பதிலளித்த விதங்கள் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டாலும், மற்றவர்களிடம் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என அவர் பேசினாலும், அவரது பேச்சும், விமர்சனங்களும் ஆழமாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

அந்த வகையில், இலவசங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடக விவாதம் ஒன்றில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்தே, அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

அதேபோல், பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுகு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ‘இலவசங்களும், சமூகநலத் திட்டமும் வேறு’ என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலவசங்கள் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது.

அதன்படி, வட இந்திய ஊடகம் ஒன்று இலவசங்கள் பற்றிய விவாதத்திற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அழைத்திருந்தது. நிகழ்ச்சியின்போது, 'இலவசம் தேவையில்லை, அது மக்களை பாதிக்கிறது என்று பிரதமர் மோடி சொல்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது,

“நீங்கள் சொல்வதை சொல்ல உங்களுக்கு அரசியலைப்பு அடிப்படை இருக்க வேண்டும். உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் அல்லது எங்களை விட சிறப்பாக நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் பொருளாதாரத்தை வளர்த்து விட்டீர்கள், கடனை குறைத்து விட்டீர்கள், தனிநபர் வருமானத்தை அதிகரித்து விட்டீர்கள், வேலைவாய்ப்பை உருவாக்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை கேட்கலாம். ஆனால், இதில் எதுவுமே இல்லாமல் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதை கேட்க வேண்டும். நான் கடவுளை நம்புகிறேன். நான் எந்த மனிதனையும் கடவுள் என்று நினைக்கவில்லை. நான் ஏன் ஒருவரின் பார்வையை ஏற்க வேண்டும்.

தேர்தலின் மூலம் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றிய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம். அடுத்த 3 ஆண்டுகளும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வோம். நாங்கள் ஒன்றிய அரசுகு அதிக நிதி பங்களிப்பை வழங்குகிறோம். நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 30/33 பைசாதான் திரும்ப கிடைக்கிறது. நாங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும். நாங்கள் எந்த அடிப்படையில் கேட்க வேண்டும்.

உங்களுக்கு அரசியலமைப்பு அடிப்படை உள்ளதா? இல்லை. நீங்கள் நிதி நிபுணரா? இல்லை. உங்களிடம் நோபல் பரிசு உள்ளதா? இல்லை. எங்களை விட சிறப்பாக செயல்பட்டீர்களா? இல்லை. எந்த அடிப்படையில் நான் உங்களுக்காக எனது கொள்கையை மாற்ற வேண்டும். இது என்ன வானத்தில் இருந்து வரும் கூடுதல் அரசியலைப்பு ஆணையா? என்ன பேசுறீங்க நீங்க?” என்று ஆவேசமாக பேசினார்.


பிடிஆரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், விவாதத்தின்போது, பிடிஆரின் உடல்மொழியும் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே, வட இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கருத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும் எனவும், மத்திய அரசை போன்று, தமிழகத்தை வட இந்திய ஊடகங்களும் சற்றி தள்ளி வைத்தே பார்க்கும் என்ற விமர்சனங்கள் உண்டு. அப்படி இருக்கையில், வட இந்திய ஊடக விவாதத்தில் பங்கேற்று பிடிஆர் பேசிய தொனியும் வைரலாகி வருகிறது.

சமயம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

PTR Speech: Freebies முதல் வானதியை Block செய்தது வரை; பிடிஆர் எதிர்கொண்ட சர்ச்சையும் பதில்களும்

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.