Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு,  நிதியுதவி: புடின் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மனித குலத்திற்கு எதிரானவர்கள்

ஐனநாயக பண்புகள் எதுவும் அற்றவர்கள்

(இது எனது நிலைப்பாடு மட்டுமே)

உங்களுக்கான புள்ளிகள் 0.5 மட்டுமே. (கேள்விக்கு விடை அளித்ததற்காக மட்டும் )

கேள்வியை முழுமையாக வாசித்து விளக்கம் அளிக்குக. 

  • Replies 58
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்கான புள்ளிகள் 0.5 மட்டுமே. (கேள்விக்கு விடை அளித்ததற்காக மட்டும் )

கேள்வியை முழுமையாக வாசித்து விளக்கம் அளிக்குக. 

உங்களிடம் இருந்து 0,5 புள்ளிகளே அதிகம்

பொதுக்கேள்விகளுக்கு நாம் படித்ததிலிருந்து கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்

ஆனால் ஆசிரியர் மனதில் உள்ள பதிலை அறியும் இயந்திரம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

புட்டின் உக்ரேனில் இறங்கியது போல, அமெரிக்கா வியட்னாமில் இறங்கியது போல் - இப்போ உங்களுக்கு நீங்கள் இந்த போரில் பிழையான பக்கத்தை ஆதரித்து விட்டீர்கள் என்பது விளங்கினாலும், இனி பின்வாங்க முடியாது என நினைக்கிறேன்.

கிரேக்க நாகரிக காலம்,எகிப்திய நாகரிக காலம்,புராணகதைகள் காலம்,அரசர் காலங்கள் தொடக்கம்  இன்று வரைக்கும் ஒரு இனத்தை இன்னொரு இனம் ஏதோவொரு நியாயப்படுத்தலுடன் ஆக்கிரமித்த வண்ணமே இருக்கின்றன.

இங்கு நியாய தர்மங்கள்,மனித இழப்புகளை பற்றி நான் எள்ளவும் சிந்திக்கவில்லை. ஏனெனில் என் இனம் நடுத்தெருவில் நிற்கும் போது உக்ரேன் இழப்பு எனக்கு பெரிதாக தெரியவில்லை.
ரஷ்ய தரப்பிற்கு நியாயமாக படுகின்றது. அதை நிறைவேற்றுகின்றார்கள்.மேற்குலகு தங்களுக்கு தேவையென்றால் அதை நியாயப்படுத்துவார்கள்.தேவையில்லை என்றால்  அதை சோடித்து வக்கிரத்தை விதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கிரேக்க நாகரிக காலம்,எகிப்திய நாகரிக காலம்,புராணகதைகள் காலம்,அரசர் காலங்கள் தொடக்கம்  இன்று வரைக்கும் ஒரு இனத்தை இன்னொரு இனம் ஏதோவொரு நியாயப்படுத்தலுடன் ஆக்கிரமித்த வண்ணமே இருக்கின்றன.

இங்கு நியாய தர்மங்கள்,மனித இழப்புகளை பற்றி நான் எள்ளவும் சிந்திக்கவில்லை. ஏனெனில் என் இனம் நடுத்தெருவில் நிற்கும் போது உக்ரேன் இழப்பு எனக்கு பெரிதாக தெரியவில்லை.
ரஷ்ய தரப்பிற்கு நியாயமாக படுகின்றது. அதை நிறைவேற்றுகின்றார்கள்.மேற்குலகு தங்களுக்கு தேவையென்றால் அதை நியாயப்படுத்துவார்கள்.தேவையில்லை என்றால்  அதை சோடித்து வக்கிரத்தை விதைப்பார்கள்.

இதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.

27 minutes ago, விசுகு said:

ஆனால் ஆசிரியர் மனதில் உள்ள பதிலை அறியும் இயந்திரம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை 😂

100/100 😆

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

100/100 😆

 

16 hours ago, விசுகு said:

ஆனால் ஆசிரியர் மனதில் உள்ள பதிலை அறியும் இயந்திரம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை 😂

அதற்காகத்தான் Marking Scheme ஐ அறிமுகப்படுத்தினார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

 

அதற்காகத்தான் Marking Scheme ஐ அறிமுகப்படுத்தினார்கள்!!

பழச எல்லாம் நியாபகபடுத்தாதீக 🤣

பைலம் சீலந்திரேட்டாவின் குணவியல்புகளை கூறுக? (10 புள்ளிகள்).

புத்தகத்தில வெள்ளைகாரன் 40 இயல்புகளை பட்டியலிட்டிருப்பான். ஆனால் மார்கிங் ஸ்கீமில இல்லாத 30 எழுதினாலும் புள்ளி 0/10 தான்😆

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2022 at 17:27, விசுகு said:

அதுக்கு முதலில் எம்மவர்களே இதை மேற்கு நாடுகளில் விதைத்தார்கள். இன்றும் புலிகளை இவ்வாறு சொல்வோர் தாயகத்திலும் இருக்கிறார்கள் 😭 

அங்கிருந்து தான் இதற்கான களை எடுத்தலை தொடங்கணும்?

 

நம்புகிறோமோ இல்லையோ இது மட்டுமே இன்றிருக்கும் ஒரேயொரு துரும்பு 

ம்ம் விரல் சூப்பும் ஐரோப்பியர் எம்மவர் சொல்லை கேட்டு புலிகளை பயங்கரவாதி ஆக்கினார்கள். நம்பீட்டம்.
புலிகள் ஆனையிறவை அடிக்க முடியாது என்று சொன்ன ஐரோப்பிய இராணுவ தளபதிகளின் படம்  ஈழத்தில் எடுக்கப்பட்டது பார்க்கவில்லையா நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2022 at 17:54, goshan_che said:

புலிகளை பயங்கரவாதிகள் மட்டும் ஆக்கவில்லை.

எமது மக்களை ஒரு குறு நிலப்பரப்பில் அநாதரவாக சூட்டுக்கு இலக்குகளா விட்டு விட்டு, லாவகமாக “நடவடிக்கைகளை நிறுத்தி” வெளியேறியவர்கள்தான் இவர்கள்.

என்ன நடக்கிறது என எடுத்து சொல்லி நாம் அவர்கள் அலுவலக வாசல்களில் நின்று கதறிய போதும், கைகளை பிசைந்தபடி தம்மால் எதுவும் முடியாதது போல நாடகமாடியவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் செய்த எதுவும் நெஞ்சை விட்டகலவில்லை. அவற்றை மறப்பதற்கும் இல்லை, மன்னிப்பதற்கும் இல்லை.

ஆகவேதான் இங்கே யாரும் மாண்புமிகு பைடன். கருணை தெய்வம் பொரிஸ் எண்டு எழுதுதுவதில்லை.

ஆனால் இவர்கள், 2009 ற்கு பின் நாம் பயன்படுத்த தக்க வகையில் (தம் சுய நலத்தில்) சிலதை செய்கிறார்கள்.

இவ்வளவு ரைட்டு.

ஆனால் ரஸ்யா? இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையின் நண்பன் மட்டுமே.

இன்னும் விளக்கமான சூத்திரம் கீழே

1. ரஸ்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றுதான் எப்போதும் கருதியது

ஆனாப்பட்ட கியூபாவே எமக்கு எதிராக வாக்களித்தது(ஜெனிவாவில்). எமது பக்கம் அவர்களை திருப்பாதது எமது பிழை. ஜெனிவாவில்

2. மேற்கு 1998 க்கு பின் புலிகளை பயங்கரவாதிகள் என்று கருதியது

பாவிகள் தருணம் பார்த்து எம்மீது குத்துவதற்கு காத்திருந்தார்கள். அகதிகளாக வந்தவர்களிடம் (மேற்குக்கு) புலிகளை பற்றி அடுக்கிய கேள்விகள் இவற்றுக்கு நல்ல சான்று.

3. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் ரஸ்யாவின் நிலைப்பாடு - அது இலங்கையின் உள் வீட்டு விவகாரம் நாம் கருத்து சொல்லவே முடியாது.

எவ்வித சம்பந்தமும் எம்மோடு இல்லாத நாடு அப்படித்தானே இருக்கும். 

4. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் மேற்கின் நிலைப்பாட்டுக்கு இடையே கணிசமான வேறுபாடு உண்டு.

30 வருடத்துக்கு மேலாக  சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை இல்லை.(கனடாவில் சில அரசியல்வாதிகளை தவிர). யூக்ரேனில் போர் தொடங்கி இரண்டாம் நாளே மேற்கூடகங்கள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை  இனப்படுகொலை என்று சொல்லியபடியே உள்ளார்கள்.

தற்போதைய மேற்கின் நிலைப்பாடு ரஸ்யாவின் நிலைப்பாட்டை விட எமக்கு பல மடங்கு அனுகூலமானது (அதை நயம்பட பாவிக்கும் தலைமை, ஊரிலும், வெளிநாட்டிலும் எமக்கு இல்லை என்பது எமது பிழை). 

ஒரு யூக்ரேனியரும் மேற்குக்கு சொல்லவில்லை எப்படி செய்ய வேண்டும் என்று. மேற்கே செய்கிறது. அவர்கள் விரும்பினால் தாராளமாக செய்யலாம் என்பதே செய்தி. எத்தனையோ விதத்தில் எமது மக்கள் மேற்குக்கு மிக நல்ல சேவைகளையே செய்கிறார்கள். அதற்கு பிராயதனமாகவாவது எமக்கு நிறைய செய்திருக்கலாம்.

ஆகவேதான் முன்னர் ஒரு முறை எழுதினேன் ஹிரோசிமா, நாகசாக்கிக்கு பின் ஜப்பான் கொண்ட அமெரிக்க அணுகுமுறையே நமக்கு ஏற்றது.

அதனால்தான் சொல்கிறேன் நான் மேலே கொடுத்துள்ள (மேற்கை போல) draft இன் அடிப்படையில் ரஸ்யாவை ஒரு அறிக்கை விட வையுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

மேற்கை ஒரு துரும்பையாவது எமக்காக நகர்த்த சொல்லுங்கள் பார்க்கலாம்.

சும்மா வன்மத்திற்காக, எமது எதிரியை ஒரு போதும் கைவிடாத ஒரு நாட்டுக்கு ஆலவட்டம் பிடிப்பது சுத்த பைத்தியகாரத்தனம்.

இப்படி மொட்டையாக ஒரு பக்க கருத்து என்பதே ஒரு பச்சோந்தி தனம். நேட்டோ என்ற கும்பல் இருக்கும் வரை அதற்கு எதிரான கருத்து தொடரும். 

நடந்தவற்றுக்கு வன்மம் தீர்ப்பதை விட, இனி நடப்பவற்றில் நமக்கு பயன்பட கூடியவர் யார் என கண்டு நடவுங்கள்.

யாருமே எமக்கு உதவ மாட்டார்கள். எம்மை தவிர. இதை தான் தேசியதலைவர் சொன்னார். செயலில் காட்டினார்.

சும்மா பைத்தியகாரதனமாக எம்மை தூதரக வளவுக்குள் கூட எடுக்காதோருக்கெல்லாம் ஆலவட்டம் பிடியாமல்.

ஆலவட்டமும் சாமரையும் வீச இது நல்லூர் திருவிழா இல்லை. சுத்துமாத்து,பாசாங்குதன உலகில் வாழ்கிறோம் என்பதை புரியுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2022 at 07:14, தமிழ் சிறி said:

புடின் அறிவிப்பு.

இலங்கையைத் தமிழின அழிப்பு விடயத்தில் அதிகம் காப்பாற்றிவரும் நாடுகளென்று பார்த்தால் இந்தச் சிவப்புச்சாயம் பூசிய  நாடுகள்தான்.  அதற்காக இந்த மேற்குலகு ஒன்றும் தர்மவான்கள் கிடையாது. அவர்கள் சரியானவர்களாயின் டேவிட் மிலிபான்ட் காலத்திலேயே ஒரு காத்திரமான தீர்வுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், நாங்களும் உங்கள் விடயங்களில் அக்கறைகாட்டுகிறோம் என்ற தோற்றப்பாட்டைக் காட்டியதோடு சரி.  இதில் நாம் என்னதான் சொன்னாலும் தத்தம் நாடுகளின் நலன்களின் ஊடாக மட்டுமே எல்லா நாடுகளும் நோக்கும் என்பது புவியியலும், பொருண்மியமும் கற்கையாக உள்ளது. இதில் அண்ணளவாகப் புலத்திலும் தாயகத்திலுமாக அரைமில்லியன் மக்களைக் கொண்ட தமிழீழத்தவரால் என்ன இலாபம் என்பதையும் கவனத்தில் கொள்வார்கள்தானே. 2009க்கு முன்பு ஆயுதபலத்துடன், நிலப்பகுதிகளையும் கட்டுபாட்டுக்குள் கொண்டிருந்த கரணியத்தால் தமிழரோடு பட்டும்படாத நகர்வுகளின் தேவை அவர்களை ஒடுக்கும்வரை இருந்தது. இன்று அந்தத் தேவையே இல்லையென்றாகிவிட்டபின் தமிழரை யாருக்குத் தேவை என்ற நிலையே உள்ளது. மேற்கோ-கிழக்கோ-வடக்கோ-தெற்கோ, முதலாளித்துவமோ-நவதாரளவாதமோ-சனநாயகமோ-கொம்மியூனிசமோ எதுவாக இருந்தாலும் சிறிலங்கா செய்த இனஅழிப்பையே இதுவரை ஏற்றுள்ளார்களா?(தயவுசெய்து சும்மந்திரன் ஏற்றாரா என்று கேட்கவேண்டாம்)  போர்குற்றம், மனித உரிமைமீறல் என்று சொற்சிலம்பம் ஆடித்திரிகிறார்கள். காணாமற்போன உறவுகளைத் தேடியவாறு கண்ணீரோடு 2000ஆயிரம் நாட்களைக் கடந்து மக்கள் போராடுகிறார்கள்.ஐரோப்பிய-ரஸ்ய-சீன-இந்திய-உக்ரேனியத் தூதரகங்கள் இலங்கையில் இருக்கின்றதானே? இங்கே எமக்கான நீதிக்கான வழியென்ன என்று தெரியாமல் ஒரு உறுதியான தலைமையும் இல்லாமல் தத்தளிக்கின்றோமென்ற உணர்வுநிலையில் இருந்து விழித்தல் நிகழ்வது எப்போது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.